ப. சிதம்பரம் பார்வை : துணைநிலை ஆளுநருக்கு பாஜக தந்த உதவியும் ஆலோசனையும்!

பின்பக்கமாக வந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த மத்திய அரசு

டெல்லியின் அதிகாரம் யார் கையில் என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் மிகவும் சரியான தீர்ப்பினை கொடுத்தது. ஆனால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டத்தினை யாராவது மீண்டும் நமக்கு ஞாபகப்படுத்தும் போது அவை நமக்கு புதிதாக தெரிகிறது.

ஒரு குடியரசு நாட்டில் இருக்கும் வழக்குரைஞர்கள், நீதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், மந்திரிகள் என அனைவருக்குமே தெரியும், ஆட்சியின் மையம் எது என்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் கையில் தான் அதிகாரம் என்பதே இருக்கிறது. இங்கே மற்றொரு வகையான அமைப்பு அரசின் மையக் கருத்தோடு இணைந்து அது ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் பொறுப்பில் செயல்படுகிறது.

இங்கு அதிகாரம் யார் கையில் என்பதனை “உதவியும் ஆலோசனையும்” என்ற ஒரு வாக்கியம் தவறுதலான புரிதலுக்கு வழிவகுக்கிறது. அதாவது உதவியும் ஆலோசனையும் தருபவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள், உதவியும் ஆலோசனையும் பெறுபவர்கள் அதனை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கிறார்கள் என்றும் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய அரசிலமைப்புச் சட்டம் 239AA(4) – டெல்லிக்கான சிறப்பு அந்தஸ்தினை தரும் சட்டம். “அங்கு முதலமைச்சருடன் கூடிய அமைச்சர்களின் கூட்டமைப்பு இருக்கலாம். ஆனால், முதலமைச்சர் தான், ஆளுநருக்கு அவருடைய கடமைகளை செய்ய முறையான உதவியும் ஆலோசனையும் வழங்க வேண்டும்” என்று கூறுகிறது.

அரசியலமைப்புச் சட்டம் 44(a) இந்திய தலைநகரம் டெல்லிக்கான சட்டம் 1991, ஆளுநரின் பணிகள் என்ன என்பதை தீர்மானிக்கிறது. அதன்படி, மாநில அமைச்சர்களுக்கான பணி இது தான் என்பதையெல்லாம், அவரால் தீர்மானிக்க இயலும் என்பதாகும். அங்கு அவருடைய ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப்படும்.

நஜீப் ஜங் மற்றும் அனில் பைஜால் இருவருக்கும் இந்த சட்டம் ஒன்றும் புதிதல்ல. அவர்கள் இருவரும் ஆட்சியாளராக பணியாற்றியவர்கள். நஜீப் சில வருடங்கள் ஜமியா மிலியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்தார். பைஜாலும் உள்துறை அமைச்சகத்தில் வேலை செய்தார். அவர்களுக்கு நன்றாகவே தெரியும், டெல்லிக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று. அவர்கள் எதையும் அறியாமையோடு செய்யவில்லை. அவர்கள் குடியாட்சியின் அடிப்படையை கொலை செய்த பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பிரபுகள் போல் செயல்பட்டார்கள்.

உச்சநீதிமன்றம் நிராகரித்த மத்திய அரசின் கோரிக்கைகள்

உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பில் முக்கியமாக கூறியது “நிலம், மக்கள், மற்றும் காவல்துறை நிர்வாகம் தவிர அனைத்துவிதமான அதிகாரப் பொறுப்பும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கையில் தான் இருக்கிறது. இதில் மத்திய அரசு எதிர்பார்த்த எந்த துறையும் வரவில்லை.

டெல்லியின் முழு ஆட்சிக் கட்டுப்பாடும் குடியரசுத் தலைவர் கையில் தான் இருக்கிறது என்று வைத்த விவாதம் நிராகரிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டம் 239AAவின் படி, இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்டியலில் வரும் துறைகள் அனைத்தையும் மாநில அரசு தான் செயல்படுத்த வேண்டும் ஆனால் குடியரசுத் தலைவரின் கீழ் தான் அதிகாரம் செல்லுபடியாகும் என்று வைத்த விவாதம் நிராகரிக்கப்பட்டது.

துணை நிலை ஆளுநர் கையில் தான் முழு அதிகாரம் இருக்கிறது. அமைச்சர்கள் கவுன்சில் கையில் அதிகாரம் இல்லை என்று வைத்த விவாதம் நிராகரிக்கப்பட்டது.

உதவி மற்றும் ஆலோசனை என்பது அமைச்சர்களுக்கு மட்டும் தான் அது துணை நிலை ஆளுநருக்குப் பொருந்தாது என்று வைத்த விவாதம் நிராகரிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டம் 239AAவின் படி, மாநில அரசு எடுக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் கேள்வி கேட்கலாம் என்று வைக்கப்பட்ட விவாதமும் நிராகரிக்கப்பட்டது.

பின்பக்கம் வழியாக வந்து ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசு

அதிகார நகர்வு தொடர்பான சிக்கலில் தீர்வு டெல்லி அரசிற்கு சாதகமாக அமைய, டெல்லியினை பைஜால் மூலம் கைப்பற்றலாம் என்ற திட்டத்துடன் செயல்படுகிறது மத்திய அரசு. தீர்ப்பு வந்த பின்பு மூன்று முக்கியமான அதிகாரிகளை பணியிடம் மாற்றி இருக்கிறார் பைஜால். இது பைஜால் எடுத்த மிகவும் தவறான முடிவுக்கு உதாரணம். இவருடைய தவறான முடிவே, இவர் பாஜகவிற்காக வேலை பார்க்கிறார் என்பது தெளிவாகிறது.

இந்த தீர்ப்பு தொடர்பாக பல்வேறு கட்டுரைகள் வெளிவந்த வண்னம் இருக்கின்றன. அதில் ஒன்று அருண் ஜெட்லி அவருடையது. அவர் கூறுகிறார் “மொத்த தீர்ப்பும், டெல்லி அரசுக்கு சாதமாக வந்திருப்பது தவறு. டெல்லியில் எடுக்கப்படும் சட்ட ரீதியான முடிவுகள் அனைத்தையும் டெல்லி அரசே கையாளும் என்று கூறுவது தவறு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் அருண் ஜெட்லி, டெல்லி அரசு என்பது வெறும் மக்களுக்கான பணியை மட்டும் நடைமுறைப்படுத்தவா உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஆட்சியாளர்களாக பணியாற்றும் அதிகாரிகளின் போக்கினை காண்காணிக்க மற்றும் முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை இல்லைய்யா என்ன?

முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில் நித்யா பாண்டியன்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close