பண மதிப்பிழக்க நடவடிக்கை : 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழக்கம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால் அதன் தாக்கம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை. 2017-18ம் ஆண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை மோடியின் இத்திட்டத்தை மேலும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது.
நல்ல காரணத்திற்காகத் தான் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த திட்டம் சரியாக செயல்படவில்லை. நல்ல காரணத்திற்காகத் தான் என்றும் கூற முடியாது. காரணம் பண மதிப்பிழக்க நீக்கத்திற்கு முன்பு இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் பட்சத்தில் அப்படி கூறுவதும் இயலாது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி இந்திய அரசு ஆர்.பி.ஐக்கு 500 மற்றும் 1000 ரூபாய் பண மதிப்பிழப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை ஒன்றை அனுப்பியது. ஆர்.பி.ஐக்கு இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஏற்படப் போகும் பின்விளைவுகள் பற்றி ஆராய ஆர்.பி.ஐக்கு கால அவகாசமே தரவில்லை. அடுத்த நாள் நவம்பர் மாதம் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
முதன்மை நிதி அலோசகர் அச்சமயத்தில் கேரளாவில் இருந்தார். முறையாக அவரிடமும் ஆலோசனை மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சகத்திடமும் இது குறித்து ஒரு அறிவிப்பினையும் வெளியிடவில்லை.
பண மதிப்பிழக்க நடவடிக்கை தோல்வியுற்றது எங்கே?
பண மதிப்பிழக்க நடவடிக்கை கறுப்புப் பணத்தினை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டுகளின் புழகத்தினை தடுப்பதற்காகவும், பொருளாதார தீவிர வாதத்தினை ஒழிப்பதற்காகவும் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த இலக்குகள் எதையுமே எட்டாமல் தோல்வியுற்றது பண மதிப்பிழக்க நடவடிக்கை.
புதிதாக அச்சிடப்பட்ட பணத்தில் இருந்தும் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. கள்ள நோட்டுகளும் புதிதாக அச்சிடப்பட்டு புழக்கத்தில் இருந்து தான் வருகிறது. அதே போல் பொருளாதார தீவிரவாதமும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே தான் இருக்கிறது.
கேஷ்லெஸ் எக்கானமி :
இந்தியாவில் பணப் புழக்கத்தினை கட்டுப்படுத்தி கேஷ்லெஸ் இந்தியாவினை உருவாக்குவதும் மிக முக்கியமான இலக்காக இருந்தது இந்த பண மதிப்பிழக்க நடவடிக்கையில். அக்டோபர் 28, 2016ம் ஆண்டு இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பண மதிப்பானது ரூபாய் 17,54,022 கோடியாகும் . ஆகஸ்ட் 17, 2018 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பண மதிப்பானது ரூபாய் 19,17,129 ஆகும். ஆகவே இந்த இலக்கினையும் எட்டவில்லை பண மதிப்பிழக்க நடவடிக்கை.
இந்தியர்களும் கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளும்
- இந்திய மக்கள் பணத்தினை அதிகம் நம்புகிறார்கள். 2016ல் இருந்ததை விட தற்போது மக்கள் அதிகமாக பணத்தினை உபயோகிக்கிறார்கள்.
- வீட்டில் சேமித்து வைக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போதோ அந்த சேமிப்பின் மதிப்பு 8.1ல் இருந்து 7.1ஆக குறைந்தது.
- வீட்டின் சேமிப்பு மதிப்பு குறைவானதால் க்ராஸ் ஃபிக்ஸ்ட் கேபிடல் ஃபார்மேசன் குறைந்தது.
- க்ராஸ் ஃபிக்ஸ்ட் கேபிடல் ஃபார்மேசன் குறைந்ததால் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- நிலைமை இப்படியாக இருக்க பணமதிப்பிழக்க நடவடிக்கை வெற்றியின் பாதையில் பயணிக்கிறது என்று தங்களுக்குள் கொண்ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் வருமான வரி அதிகமாக வந்திருக்கிறது என்று கூறிவருகிறார்கள் உண்மை.
- சுமார் 5.42 கோடி இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் ஃபைல் ஆகியுள்ளது. ஆனால் சுமார் 1 கோடி ஃபைலர்ஸ் 'நில்’ என்றும் வருமான வரி ரிட்டர்னஸ் தாக்கல் செய்துள்ளனர். பல்வேறு போலி வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டிருக்கிறது என்று அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் முடிவு எப்போது எட்டப்படும்?
- அடுத்தது, இணையம் மூலமாக பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த நான்கு வருடங்களில் 14.3, 10.7, 9.1, 24.4 மற்றும் 12 என்ற ஏற்ற இறக்கங்களுடன் தான் காணப்பட்டு வருகிறது.
- இவை அனைத்தைக் காட்டிலும் மிக முக்கியமான ஒன்று 15,31,000 கோடி ரூபாய் பணமும் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டது என்று ஆர்.பி.ஐ ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. பண மதிப்பிழக்க நடவடிக்கை மூலம் தன்னிடம் இருந்த அனைத்து கறுப்புப் பணத்தினையும் வெள்ளைப் பணமாக மாற்றிவிட்டார்கள். இந்த நடவடிக்கைகளால் இது தான் நடந்தது.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் 09/09/2018 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.