ப. சிதம்பரம்
வளர்ச்சியை அளவிடுவது ஒரு சிக்கலான பிரச்சினை. ஆட்டத்தின் விதிகளை மாற்றினால் அது இன்னும் பெரிய பிரச்சினையாகும்.
ஜிடிபி என்பது, உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு நிதியாண்டில் ஒரு நாட்டின் பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தி குறித்த அளவீடு அது. இந்த அளவிடு, தற்போதைய விலை மற்றும் பணவீக்கத்துக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படும் நிலையான விலையையும் கணக்கில் சேர்த்து கணக்கிடப்படுகிறது. ஒரு ஆண்டின் நிலையான விலையை அளவிட, ஒரு புள்ளி விபர நிபுணர் அடிப்படை நிதியாண்டை எடுத்துக் கொள்வார். 2004-05 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஆண்டு. ஜிடிபி 1999-2000ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது.
சில ஆண்டுகள் கழித்து, 2004-05 அடிப்படை ஆண்டாக கணக்கிடப்பட்டது. ஆனால் கணக்கிடும் முறை மாறவேயில்லை.
பெரும் பிழைகள்.
2014-15ம் ஆண்டில் பிஜேபி அரசு, மதிப்பிடும் ஆண்டை 2011-12ஆகவும், மதிப்பிடும் முறையையும் மாற்றியது. அதற்குள் விரிவாகச் செல்ல விரும்பவில்லை. மத்திய புள்ளி விபரத் துறை அலுவலகம், 7.5 சதவிகித வளர்ச்சி விகிதம் என்று அறிவித்தால், அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்த முறையின்படி, 5.5 சதவிகிதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த குழப்பத்தை தெளிவாக விளக்க வேண்டிய கடமை மத்திய புள்ளி விபர அலுவலகத்துக்கு உள்ளது. புதிய முறைப்படியும், பழைய முறைப்படியும் கணக்கிட்டால், வளர்ச்சி விகிதம் 2004-2005 முதல் வருட வாரியாக வெளியிட்டால், மக்கள் எது சரியான முறை என்பதை புரிந்து கொள்வார்கள். ஆனால், எந்த காரணமும் இல்லாமல், இதை மத்திய அரசும், மத்திய புள்ளி விபர அலுவலகமும் விளக்க மறுக்கிறது. இதனால் இந்த விபரங்களின் மீதான சந்தேகம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
அது ஒரு புறம் இருக்கட்டும். நாடு இன்று 7.5 சதவிகித அளவு வளர்ந்து வருகிறதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மற்றொரு புள்ளி விபரம் இதற்கு நேரெதில் திசையில் முடிவுகளை தருகிறது. கடந்த நான்காண்டுகளாக விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் 2.7 சதவகிதம் மட்டுமே. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்த வளர்ச்சி விகிதம் 4 சதவிகிதம். தற்போது விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளார்கள். அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, “விவசாயத்தின் ஜிடிபி மற்றும் விவசாய வருமானம், கடந்த நான்காண்டுகளாக ஒரே நிலையாக இருந்து வருகிறது” என்பதிலிருந்தே இதை புரிந்து கொள்ள முடியும்.
சரக்கு ஏற்றுமதி கடந்த நான்காண்டுகளாக 2013-14ல் இருந்த 314 பில்லியன் டாலர்களை தாண்டவேயில்லை. மூலதன உருவாக்கம், 2013-14ல் 31.3 சதவிகிதமாக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், 28.47, 28.53, மற்றும் 28.49 ஆக கடந்த நான்காண்டுகளாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
மாற்று சித்தாந்தம்.
யதார்த்தத்தில், பொருளாதாரம் மந்தமாக இருப்பதற்கான காரணம் வெளிப்படையாக இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. புதிய வேலை வாய்ப்புகள் இல்லை. 7.5 சதவிகிதமாக இருக்கும் வளர்ச்ச விகிதத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பில்லை என்றும், வளர்ச்சி விகிதம் 10 சதவிகிதத்தை எட்டினால் மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியதோடு, வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்த ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதையும் காட்டினார். வேலை வாய்ப்புகளை உருவாக்காத 7.5 சதவிகித வளர்ச்சி விகிதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அடுத்த 12 மாதங்களுக்கு இந்த அரசால் எதையும் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. அடுத்த அரசாங்கத்தை எதிர்ப்பார்க்கத் தொடங்கியுள்ள மக்கள், மாற்று சித்தாந்ததை தேர்ந்தெடுக்க ஆவலாக காத்துள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், கடந்த வாரம் “காங்கிரஸ் கட்சி, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி காங்கிரஸ் கட்சியின் நோக்கம். தனியார் மூலமாக பொருளாதாரத்தை வளர்க்கும் அதே நேரத்தில், வலுவான பொதுத்துறை நிறுவனங்களை ஒதுக்கி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, சமூக பாதுகாப்போடு கூடிய மக்கள் நலன் காக்கும் அரசை உருவாக்குவோம்” என்று கூறப்பட்டது. ஆனால் பிஜேபியோ, நெருக்கடியான பொருளாதாரத்தின் காரணமாக, சிலர் மட்டும் பயனடையக் கூடிய வகையில், நடுத்தர மக்களுக்கு லேசான பயன் கிடைக்கும் வகையிலும், ஏழைகளும், அடித்தட்டு மக்களும், அவர்களின் நலனை அவர்களே பாதுகாக்காத ஒரு பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வருகிறது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டு விதைக்கப்பட்ட பல விதைகள், அகில இந்தியா காஙகிரஸ் ப்னீரி சொல்யூசன்.
புதிய யோசனைகள், புதிய அழுத்தங்கள்.
அரசு, நல்ல கல்வி மற்றும் சுகாதாரம் வழங்குவதில் அதிக பங்கு வகிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. ஆரம்ப சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தப்படும்.
புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தனியார் மூலமாகவும், வணிகம், உற்பத்தி, கட்டுமானம் மற்றும் ஏற்றுமதியின் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
காங்கிரஸ் கட்சி, தொழில் முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், ஆகியோரை, தேவையற்ற மிரட்டல்களில் இருந்து பாதுகாத்து, நிலையான தொழில் முனையும் சூழல் உருவாக்கப்படும்.
நாடு அடுத்து எதிர்நோக்கியிருக்கும் சவால்களாக கீழ்கண்டவை அடையாளம் காணப்பட்டன.
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள். கடன் வளர்ச்சி அதிகரிப்பு, புதிய முதலீடுகளை ஊக்குவித்தல், உற்பத்தியை ஊக்கப்படுத்துதல், உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு சந்தைகளுக்கு ஏற்ற உற்பத்தியை ஊக்கப்படுத்துதல்.
காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் கீழ்கண்டவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு ஆகியவற்றில், அதிக முதலீடு. சிறந்த பொது விநியோக முறை உருவாக்குதல்.
தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் நம்பிக்கையை உருவாக்குதல், உத்தரவாதத்தோடு கூடிய வேலை வாய்ப்பு.
இவற்றில் பல வார்த்தைகள் ஏற்கனவே கேட்டது போல இருக்கலாம். ஆனால் இதில் தரப்படும் அழுத்தம் வேறு. பல்வேறு புதிய வார்த்தைகளும் வாக்கியங்களும் உள்ளன. அவையும் வேறு முறையில் முளைக்கலாம். இந்தியாவின் தனியார் துறைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். நல்ல தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம். வணிகம், உற்பத்தி, கட்டுமானம், ஏற்றுமதி ஆகியவை முக்கிய துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பொருளாதார சுதந்திரத்தை நமது தொழில் முனைவோருக்கு மீட்டுத் தருதல் முக்கியமான வாக்குறுதி.
அரசுத் துறைகளால் நெருக்கடிக்கு ஆளாக்கப்படும் தொழில் முனைவோரின் அச்சத்தை போக்குதல் ஒரு முக்கிய நோக்கம். வரி விதிப்பாளர்களை வைத்து அனைவரையும் மிரட்டுவது தவிர்க்கப்படும்.
சுதந்திரமாக, அச்சமின்றி தொழில் நடத்தும் சூழல் உருவாக்கப்படும். மாற்றங்கள் வார்த்தைகளில் இருந்தும், புதிய சிந்தனைகளில் இருந்தும் தொடங்குகிறது என்று நான் நம்புகிறேன்.
தமிழில் ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.