Advertisment

சிதம்பரம் பார்வை : வாதம், விவாதங்கள், பதிலில்லா கேள்விகள்!

90 நிமிட மோடியின் பேச்சு தன்னைப் பற்றிய விளக்க உரையாகவே இருந்தது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நம்பிக்கையில்லா தீர்மானம், Nambikkaiyilla theermaanam

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம்

Advertisment

நம்பிக்கையில்லா தீர்மானம், இந்த நான்கு வருடம் இரண்டு மாதம் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை.

நிறைய நிறைய கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தார்கள். நானும் உங்களைப் போலவே பிரதமர் நரேந்திர மோடியின் பதில்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மோடியின் 90 நிமிட பேச்சானது நம்மை சோர்வடைய வைத்துவிட்டது. மறுபடியும் மறுபடியும் கூறப்படும் அதே பதில்கள், நான் ஏழைத் தாயின் மகன், நான் ஏழை, நான் உங்களில் ஒருவன், இளைஞர்களின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் நண்பன் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார் மோடி. ஆனால் அந்த கேள்விகளுக்கு பதில் என்ன? நம்பிக்கையில்லா தீர்மானம் நமக்கு அளிக்காத பதில்கள் அனைத்தும் இவை தான்.

கேள்விக்குறியாகும் இந்திய பொருளாதாரம்:

நரேந்திர மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்த ஆண்டு எது?

2017 - 2018ம் ஆண்டு, நிறைய புதிய கோட்பாடுகள் மட்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததின் விளைவாக விலைவாசி, இறக்குமதி, வரி, தட்டுப்பாடு ஆகியவை ஏற்பட்டது இந்த நிதி ஆண்டில் தான்.

இதில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் எந்த அளவில் உள்ளன?

காங்கிரஸ் ஆட்சியின் கடைசி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 31.3% ஆக இருந்தது. ஆனால் கடந்த நான்காண்டுகளாக 28.5% என்ற அளவிலேயே இருக்கிறது. மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.

உற்பத்தி துறையில் முன்னேற்றம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?

உற்பத்தி சார் தொழில்துறையில் டிசம்பர் 2016 முதல் அக்டோபர் 2017 வரை மந்த நிலையில் தான் செயல்பட்டு வந்தது. 2.6% என்ற நிலையில் தான் அதன் வளர்ச்சி வீதம் இருந்தது. பின்பு நவம்பர் 2017 முதல் பிப்ரவரி 2018வரை அதன் நிலை ஓரளவுக்கு சீரானாலும் மீண்டும் மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் 4.6%, 4.8% மற்றும் 3.2% என்று குறையத் தொடங்கியது.

குறைவான முதலீடு, வேலையில்லா திண்டாட்டம்

பொருளாதார வளர்ச்சியின் குறைவு அதிர்ச்சி தரும் வகையில் இருக்கிறதா? இல்லை. வளர்ச்சி என்பது, வங்கிகளில் இருந்து தொழிற்துறைக்கு அளிக்கப்படும் கிரெடிட்டே நிர்ணயம் செய்கிறது. நிறைய மாதங்களில் அதன் மதிப்பு வெறுமனே 1% என்ற அளவில் தான் இருக்கிறது. இதனால் மிகவும் பாதிப்படைந்தவர்கள் சிறு-குறு தொழில் முனைபவர்கள் தான்.

ஏன் இத்தகைய பாதிப்பு உருவானது?

ஒரு முதலீடு அல்லது வளர்ச்சி என்பது நாட்டில் இருக்கும் வங்கிகளில் நிலை குறித்து தான் முடிவு செய்ய முடியும். ஆர்பிஐ சமர்பித்த அறிக்கை ஒன்றின் படி வங்கிகளின் செயல்பாட்டில் இல்லாத சொத்துகளின் மதிப்பு செப்டம்பர் 2017ல் 10.2 % இருந்து மார்ச்சில் 11.6%ஆக உயர்ந்துள்ளது. வரி செலுத்துபவர்களின் பணம் அனைத்தையும் திவாலாகும் வங்கிகளுக்கு மாற்றம் செய்தால் இப்படியாகத் தான் இருக்கும்.

முதலீடு தற்போது எந்த நிலையில் இருக்கிறது?

2017 - 2018ல் தொடங்கப்பட்ட திட்டங்களிற்கான முதலீடு 38.4% உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டங்களின் முதலீடு 26.8% ஆகும். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு முதலீடு செய்வதும் 15%மாக குறைந்துள்ளது.

வேலை வாய்ப்புகள் குறித்து

புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டனவா?

இல்லை. 2017-18ல் 406.2 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டதாக கணக்கில் இருக்கிறது. ஆனால் 2016-17ல் 406.7 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கூறுகையில் 2017-18ம் ஆண்டு மட்டும் பணமதிப்பிழக்க நீக்கத்தால் சுமார் 50,000 குறுந்தொழில்கள் நஷ்டப்பட்டிருக்கிறது. 5,00,000 பேர் வேலைகளை இழந்துள்ளனர்.

விலைவாசி ஏற்றம் பற்றிய கருத்து என்ன?

மொத்த விற்பனை பகுதியில் விலைவாசி சுமார் 5.8% அதிகரித்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டுகளில் இது தான் மிகப் பெரிய விலைவாசி ஏற்றம். நுகர்வோர்களுக்கான விலைவாசி ஏற்றமும் ஜூனில் 5%மாக இருந்துள்ளது.

வேளாண் துறை வளர்ச்சி

இந்த நான் காண்டுகளில் அப்படி ஏதும் நடக்கவிலை. 2014ம் ஆண்டு வேளாண்துறையில் இருந்த வருவாயே இன்று வரை நீடித்து வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து அறிவித்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்ரோ - எக்கனாமிக் நிலை

நிதி பற்றாக்குறை 1.87%மாக உயர்ந்துள்ளது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் சுமார் 2% எட்டலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வர்த்தக போர் நிலை வருமானால் இந்தியாவின் பொருளாதார நிலை இன்னும் மோசமாகும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.50 ரூபாயில் இருந்து 69.05ரூபாயாக அதிகரித்து உள்ளது.

இந்திய பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. பாஜகவின் ஆட்சி தொடருமானால் அதன் பாதிப்புகள் அதிகமாகும். தேசப்பற்று என்று நெஞ்சை நிமிர்த்தி பேசிக் கொண்டு சிறுபான்மையினரை காயப்படுத்தி அதில் பயணம் மட்டுமே செய்வார்கள்.

நரேந்திரமோடியின் மீதான நம்பிக்கையை மக்கள் அந்த 90 நிமிட பேச்சில் இழந்துவிட்டார்கள்.

முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிற்காக எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு

தமிழில் நித்யா பாண்டியன்

Nithya Pandian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment