தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகள் : சில தினங்களுக்கு முன்பு பாஜக ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் குறித்து செய்தித்தாளில் கட்டுரை ஒன்று வெளியானது. அதில் அருண் ஜெட்லிக்கு நன்றிகளும் கூறியிருந்தார் பாஜக அபிமானி ஒருத்தர்.
அக்கட்டுரையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒற்றை ஆட்சி செய்யும் போது கட்சியினையும் கூட்டணியையும் சீர்திருத்தம் செய்யவில்லை என்று. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒற்றை ஆட்சி முறை செய்யவில்லை மாறாக 10 வருடம் ஒரு நாட்டினை மிகவும் அழகாக நிர்வாகம் செய்தது. இந்தியாவின் பொருளாதாரத்தினை இரட்டை மடங்கு வளர்ச்சி அடைய வைத்தது. அந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி என்பது வருடத்திற்கு 8% ஆகும்.
வரலாற்றில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செய்த சாதனைகள் மிகவும் பெரியது. அதனை நாம் ஒன்றொடு ஒன்றாக ஒப்பீட்டு பார்த்துக் கொள்ளலாம். இந்தியா சுதந்திர நாடாக மாறிய பின்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சி கண்டது அந்த பத்து வருடங்களில் தான். காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வெளியேறிய பின்பு சந்தை வளர்ச்சி 14% த்தில் இருந்து 6.39% என குறையத் தொடங்கியது.
2013-14ம் ஆண்டிற்கான க்ராஸ் கேபிட்டல் ஃபார்மேசன் என்பது 31.3 சதவீதமாக இருந்தது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் மதிப்பு 315 பில்லியன் அமெரிக்க டாலர் என இருந்தது.ஃபாரீன் எக்ஸ்சேஞ் 304 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என இருந்தது.
அதற்கு பின்பு தேசிய ஜன்நாயக கூட்டணி ஆட்சிகு வந்தது. வந்தவுடன் பெட்ரோலியம் மற்றும் இதர பொருட்களின் விலையில் பெரிய மாற்றாங்கள் ஏற்பட்டது. இந்த சமயத்தை பயன்படுத்தி நல்ல லாபம் அடைந்திருக்க வேண்டிய நிலையினை அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ளாவில்லை.
முதல் வருடத்தில் எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்த நிலையில், இரண்டாம் ஆண்டு பணமதிப்பிழக்க நடவடிக்கை எடுத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை மொத்தமாக கேள்விக் குறியாக்கியது மோடி அரசு. அதன் பின்னர் மெல்ல சீராகி தலை தூக்க ஆரம்பித்த நிலையில் மூன்றாம் ஆண்டு ஜிஎஸ்டி என்ற பெரிய வரி விதிப்பினை அறிமுகப்படுத்தி மேலும் குழப்பத்தை உண்டாக்கியது தேசிய ஜனநாயக கூட்டணி.
முக்கிய சீர்திருத்தம் எதுவாக இருக்க வேண்டும் ?
ரீஃபார்ம் என்பதற்கு பொதுவாகவே பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால் பொருளாதார ரீதியான மாற்றம் என்பது பொருளாதாரம் சாராத பல்வேறு துறைசார் மாற்றங்களை நம்பியே இருக்கிறது. எடுத்துக்காட்டாக மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டினை கல்வி நிறுவனங்களில் அதிகப்படுத்தினால் நாட்டு மக்கள் தொகையில் சுமார் 52% பேர் உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு உருவாகும். அதனை காங்கிரஸ் அரசு 2006ம் ஆண்டு செய்தது.
2015ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரை ஒன்றில், 1991ம் ஆண்டிற்கு பின்னால் இந்தியாவில் ஏற்பட்ட 11 முக்கிய மாற்றங்களை பட்டியலிட்டிருந்தேன். அதில் தனியார் மற்றும் அரசு ஸ்தாபனங்களிற்கிடையான உறவுமுறை குறித்தும் எழுதியிருந்தேன். தனியார் தேவைகளுக்காகவும் பயன்படும் அரசுசார் திட்டங்களான ஆதார் கார்ட் அதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். இதையும் காங்கிரஸ் ஆட்சி தான் அறிமுகம் செய்தது.
இது போன்ற பொருளதார மாற்றங்கள் அனைத்தும் நிதி மற்றும் பட்ஜெட் மேலாண்மை கீழ் வரும். வாட் வரியினை அறிமுகப்படுத்தியதும், அதன் பின்னால் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்தல் போன்ற சிறப்பு சட்டங்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்தியத்தும் தேசிய முற்போக்கு கூட்டணி தான். 2017ம் ஆண்டு முடிவில் இந்தியாவில் 222 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இருந்தன. அவை தான் இந்தியாவின் வளர்ச்சியை எங்கள் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் உறுதி செய்தது.
தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள்
Right to Information, Right to Education and Right to Food என இது மூன்றும் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசிய தோட்டக்கலை மிஷன், ராஷ்ட்ரிய விகாஸ் யோஜனா மற்றும் தேசிய ஊர்ப்புற ஆரோக்கியம் தொடர்பான மிஷன், ராஷ்ட்ரிய ஸ்வாஸ்திய பீமா யோஜனா போன்றவற்றை அறிமுகம் செய்யப்பட்டது.
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், பெண்கள் இட ஒதுக்கீடு, சிவில் நியூக்கிளியர் அக்ரீமெண்ட் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தினோம்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்