ப.சிதம்பரம்
தற்போது உலகில் ஒரு புதிய பனிப் போர் தொடங்கியுள்ளது. அது அமெரிக்க மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையே, யார் சூப்பர் பவர் என்பதற்கான போர் அல்ல. யார் வலுவான நாடு என்று புஜபலம் தட்டும் போர் அல்ல. அது அமேரிக்க மற்றும் சீனாவுக்கு இடையேயான போர் அல்ல. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடக்கும் வர்த்தகம் அடிப்படையிலான பனி போர் அல்ல. அது உலக வர்த்தக விதிகளின் அடிப்படையில் தீர்த்துக் கொள்ளப்படும்.
இந்த புதிய பனிப்போர் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயானது. இது அடிப்படையான இரண்டு காரணங்களினால் உருவாகிறது. இந்தியா சீனாவை பொறாமையோடு பார்க்கிறது. சீனாவோ இந்தியாவை ஏளனமாக பார்க்கிறது. இந்தியா சீனாவை ஆதிக்க சக்தியாக பார்க்கிறது. சீனாவோ, இந்தியாவை இப்போதுதான் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாக பார்க்கிறது. மோடியின் கட்டிப்பிடி வைத்தியமோ, குஜராத் விருந்தோம்பலோ எதுவும் வேலை செய்யவில்லை.
பொறாமை அர்த்தமற்றது.
இதை புரிந்து கொள்ள, நாம் சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு நாடுகளில் எது வளமான நாடு என்பதிலும், எது வலிமையான நாடு என்பதிலும் விவாதம் தேவையில்லை. இரண்டு நாடுகளுமே நடுத்தர வருவாய் உடைய நாடுகள் என்றும், வறுமையை ஒழித்து விட்டோம் என்றும் அறிவித்துக் கொள்வதற்கு சில ஆண்டுகள் ஆகும். ஆனால் வறுமை ஒழிப்பில், சீனா நம்மை விட முன்னேறியுள்ளது.
சீனாவின் பெரும் திட்டம்.
பொருளாதார விவகாரத்தில் சீன அரசுக்கு பெரும் திட்டம் உள்ளது. அத்திட்டத்தின் ஒரு பகுதியென்பது, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் தன் மேலாதிக்கத்தை செலுத்துவது. வளர்ந்து வரும் நாடுகளில், சீனா தான்தான் நம்பர் ஒன் என்ற எண்ணத்தோடு இருக்கிறது. இதற்கு முன்பு, சோவியத் ஒன்றியம் எப்படி முயன்றதோ, எப்படி சில ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள், ட்ரம்ப்புக்கு முன்னதாக அமெரிக்காவை பார்த்தார்களோ, அது போல.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் சில தென் கிழக்கு ஆசிய நாடுகள், சீனாவை ஆதிக்க சக்தியாக பார்க்கின்றன. ஆனால் சீனா இதை மறுக்கிறது. சீனாவின் சாலை கட்டமைப்புத் திட்டம், அதன் அதிகர் ஜி அவர்களின் திட்டம். இந்தியா மற்றும் பூட்டான் போன்ற சில நாடுகளே, சீனாவின் சாலை அமைக்கும் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தியாவை சுற்றியுள்ள பங்களாதேஷ், மாலத்தீவுகள், மியான்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளோடு, சீனா, வலுவான வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்நாடுகளில் சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளது. பங்களாதேஷோடு அதிக வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளில் முதன்மையானது சீனா. இலங்கையின் இறக்குமதி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இலங்கை. சீனா, பாகிஸ்தானில் அதிக அளவில் முதலீடு செய்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. க்வாடார் துறைமுகம் இதில் முக்கியமானது. இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் பெரும் பகுதி பங்குகளை 70 சதவிகிதம் – சீனாவுக்கு அளித்து விட்டது. இத்துறைமுகம் நாளடைவில், ஜிபவுத்தி கடற்படை தளமாக மாறக் கூடும். அக்டோபர் 2016ல், சீனா மியான்மார் நாட்டில், க்யாக்ப்யு என்ற இடத்தில் ஆழ்கடல் துறைமுகம் அமைக்க 25 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நேபாள நாட்டின் கே.பி.ஒலி அரசு, நேபாள மார்க்சிஸ்ட் கடசியின் அழுத்தத்தின் காரணமாக, சீன ஆதரவு நிலைபாடு எடுக்க உள்ளது. மாலத்தீவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கலின் காரணமாக இந்தியா தலையிடும் அளவுக்கு தனக்கும் உரிமை உள்ளது என்பதை நிலை நாட்டியதன் மூலம், இந்தியா மாலத்தீவு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தடுத்துள்ளது.
இந்தியா எப்படி தோல்வியடைந்தது ?
இந்தியா பல்வேறு தவறுகளை தொடர்ந்து செய்து வந்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மிக மிக முக்கியமான தவறு, வெளியுறவுக் கொள்கை என்ற பெயரில், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து, பாகிஸ்தானை சீனாவின் அரவணைப்புக்குள் தள்ளியது. மீண்டும் ஒரு போர் வருமேயானால், அது ஒரு நாட்டோடு நடக்கும் போராக இருக்காது. அது இருமுறைப் போராக இருக்கும். நேபாளத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தியா குறைகளை கண்டறிந்ததன் மூலம், நேபாளம் முழுக்க இந்தியாவுக்கு எதிரான ஒரு உணர்வை தோற்றுவித்தது. குறிப்பாக ஆளும் கேபி.ஒலியின் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்த காயம் ஆற பல காலம் பிடிக்கும்.
மாலத் தீவில், இந்தியா சத்தமில்லாமல் பின் வாங்கியுள்ளது. அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்தியாவின் இந்த பின்வாங்கலை வியப்போடு பார்க்கின்றன. இலங்கையில் ஆளும் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் ரணில் விக்ரமசிங்கே கூட்டணி, இந்தியா சிறுமைப் படுத்திவிட்டதாக உணர்கின்றனர். மீண்டும் பலம் பெற்று வரும், மகிந்தா ராஜபக்சே, இந்தியா மீது வெளிப்படையாகவே வெறுப்புணர்வை வெளிப்படுத்துகிறார்.
மீதம் உள்ளது பங்களாதேஷ் மட்டுமே. பங்களாதேஷில் கடுமையாக மோதிக் கொள்ளும் இரு பெரும் எதிர்க்கட்சிகள் இந்தியாவை வெறுப்புணர்வோடே பார்க்கின்றன. இதனால் இந்தியாவை ஒரு நடுநிலையான அண்டை நாடு என்று இரு கட்சிகளுமே பார்க்க வாய்ப்பில்லை. இந்தியாவின் முக்கியமான அண்டை நாடான சீனாவில், வலுவான எதிர்க்கட்சிகள் கிடையாது. ஏராளமான வளங்கள் சீனாவில் உள்ளன. வலுவான அதிபர் இருக்கிறார். இந்தியா மீது சீனாவுக்கு அதிக அளவில் வெறுப்புணர்வு உள்ளது. சீன அதிபர் ஜி, இந்திய பிரதமர், மோடி தன்னை கட்டிப் பிடிக்க வேண்டியதில்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணு சக்தி பொருட்களை வழங்கும் நாடுகளின் பட்டியலிலும், ஐக்கிய நாடுகள் நிரந்தர உறுப்பினர் நாடுகள் பட்டியலிலும், இந்தியா இணைவதை சீனா ஒரு போதும் அனுமதியாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உதவியோடு, ஆசியாவின் உண்மையான சூப்பர் பவராக உருவாக சீனா முயற்சித்து வருகிறது. அமெரிக்காவுக்கு நிகராகவும் வளர விரும்புகிறது.
இந்தியா ஒரு நீண்டகால யுத்தியை கையாளலாம். சீனாவுக்கு நிகரான பொருளாதார சக்தியாக உருவாக முயலலாம். ஆனால் இதற்கு, சிறந்த பொருளாதார கொள்கைகள், ஸ்திரமான சீர்திருத்தங்கள், கொள்கையில் விரைவான மாற்றங்கள், உறுதியான அமலாக்கம் ஆகியவற்றால், இந்தியா 8 முதல் 10 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். அடுத்த 20 ஆண்டுகளில் இதை அடையலாம். ஆனால், நரேந்திர மோடி என் ஒரு நபர் இசைக்குழுவால் அதை செய்ய முடியாது.
தமிழில் ஆ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.