Advertisment

ப. சிதம்பரம் பார்வை : ஏழைகள் கனவு காணக் கூடாது

ஒரு திட்டம் கைவிடப்படுகையில் அதனால் பாதிக்கப்படுவது, அதிகார வர்க்கத்தோடு தொடர்பு இல்லாத ஏழைகள் மட்டுமே என்கிறார், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

author-image
WebDesk
Jul 31, 2017 15:02 IST
ப. சிதம்பரம் பார்வை : ஏழைகள் கனவு காணக் கூடாது

ப.சிதம்பரம்

Advertisment

அரசாங்கத்தில் எல்லாவற்றுக்கும் கொள்கை உண்டு. ஆனால் இந்த எல்லா கொள்கைகளும், புரிந்து கொள்ள முடியாத வார்த்தைகளால் உருவாக்கப்பட்டவை. இதற்கு உதாரணமாக 1991-92 வரை இருந்த ஏற்றுமதி இறக்குமதி கொள்கையை கூறலாம். இந்தப் பின்னணியில் பார்த்தால், அரசும், பொதுத்துறை வங்கிகளும், கல்விக் கடன்கள் தொடர்பாக தங்கள் வசம் கொள்கை இருந்தது என்று கூறுவது வியப்பை அளிக்கவில்லை. இந்தக் கொள்கை உண்மைதான் என்றாலும், நடைமுறையில் கடனுக்கு உத்தரவாதமாக சொத்துக்களை அளிக்கக் கூடிய உயர் வகுப்பினருக்கு மட்டுமே கல்விக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. உத்தரவாதம் அளித்து கல்விக் கடன்கள் பெரும் பெரும்பான்மையான மாணவர்கள், வசதியானவர்கள். ஏழைகளுக்கு வங்கிகளின் கதவுகள் அடைக்கப்பட்டன.

ஏழைகள் எப்படி ஒதுக்கப்பட்டார்கள்?

2005ம் ஆண்டு முதல், கல்விக் கடன்களின் கொள்கை என்ன என்பது குறித்து தீவிரமாக ஆராயத் தொடங்கினேன். ஏழைகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படுவதேயில்லை என்பதை உணர்ந்தேன். நல்ல மதிப்பெண்களைப் பெற்ற ஏழை மாணவர்கள் பெரும்பாலும், கல்வி ஊக்கத்தொகையை நம்பியே இருந்தார்கள். அது கிடைக்காதவர்கள், தங்களின் நிலங்களையும், நகைகளையும் விற்றனர். வங்கி நிர்வாகங்கள், கல்விக் கடன் வழங்குவதற்காக மேலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமையை ரத்து செய்து, மண்டல மேலாளர்கள் அல்லது தலைமை அலுவலகம் மட்டுமே கல்விக் கடன்களை வழங்க முடியும் என்று புதிய விதியை உருவாக்கினர்.

publive-image

கடன்களை நிராகரிக்க வங்கி மேலாளர்கள் எப்போதும் தரும் பதில், மனுதாரரின் இல்லமோ அல்லது கல்லூரியோ, வங்கிக் கிளையின் வரம்புக்குள் வரவில்லை என்பதே. இது போல எல்லா தடைகளையும் தாண்டி ஒரு மனுதாரர் பிடிவாதமாக கடன் கேட்டார் என்றால், வங்கி மேலாண்மைகள் சொல்லும் பதில், உத்தரவாதமாக சொத்து வேண்டும் என்பதே. இந்த உத்தரவாதத்தையும் அளித்து ஒரு மாணவர் கடன் கேட்டார் என்றால், ஏதாவது ஒரு விதியை சுட்டிக்காட்டி, அவர் கேட்ட கடனில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த நிலையை மாற்ற, பிடிவாதமாகவும், உறுதியாகவும் நிலைமையை மாற்றினோம். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கல்விக் கடன்களின் அளவு, விகிதம், அதிகரித்தது. வங்கிகள் கட்டாயமாக கல்விக் கடன்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டோம். கல்விக் கடன்கள் ரூபாய் 7,50,000த்தை தாண்டினால் மட்டுமே உத்தரவாதம் கேட்க வேண்டும் என்று விதிகளை மாற்றினோம். வங்கிகளின் சேவையின் எல்லை அதிகரிக்கப்பட்டது. நிலைமை மெதுவாகவும், நிலையாகவும் மாறியது. 2007-08 முதல் 2013-14 வரையிலான காலத்தில், கல்விக் கடன்கள் வழங்கும் வளர்ச்சி விகிதம் 20 சதவிகிதமாக அதிகரித்தது.

சமூக மற்றும் பொருளாதார அளவுகோள்கள் மாறின

வழங்கப்பட்ட கல்விக் கடன்களின் சராசரி அளவை விட, மாணவர்களின் சமூக மற்றும் பொருளாதார அளவுகோள்கள் மாறின. ஆயிரக்கணக்கான முதல் தலைமுறை மாணவர்கள் பயன் பெற்றார்கள். சாலையில் இட்லி விற்பனை செய்பவர்கள் உள்ளிட்ட, கடைநிலை அரசு ஊழியர்கள், தினக் கூலிகள், விவசாய தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் உள்ளிட்டோனி பிள்ளைகள் பயன் பெரும் வகையில் வங்கிகள் கல்விக் கடன் முகாம்களை நடத்தின. இவ்வாறு பயன்பெற்றவர்களின்ல தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பெண்கள் அடங்குவர். ஒரு குடுகுடுப்பைக்காரன் தனது மகனுக்கு பொறியியல் கல்லூரியில் படிக்க கல்விக் கடன் கிடைத்துள்ளது என்று அறிவித்த செய்தி என் மனதில் நீங்காமல் பதிந்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவியிழந்த பிறகு, திரும்ப வசூலிக்கப்படாத கடன்களின் எண்ணிக்கை 31 மார்ச் 2014 அன்று உள்ளபடி, 7,66,314 என்றும், வசூலாகாத தொகை 58,441 கோடி என்றும், இருந்தது. இதற்கு முன்பான 10 ஆண்டு காலத்தில் வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்ட கடன் எண்ணிக்கைகளும் இதில் அடக்கம். இந்த கல்விக் கடன் திட்டம், நூற்றுக்கணக்கான குடும்பங்களின் கல்வி கனவுகளை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

துரதிருஷ்டவசமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் இந்தக் கனவு சிதையத் தொடங்கியது. கடந்த மூன்றாண்டுகளில் கல்விக் கடன்களின் சராசரி வளர்ச்சி விகிதம் 5.3 சதவிகிதம் மட்டுமே. ஒரு திட்டம் கைவிடப்படுகையில் அதனால் பாதிக்கப்படுவது, அதிகார வர்க்கத்தோடு தொடர்பு இல்லாத ஏழைகள் மட்டுமே. கல்விக் கடன்கள் இந்த அரசின் முக்கிய திட்டங்களில் இல்லை என்ற செய்தி பரவியது. புதிய வேலை வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், கல்விக் கடன் பெற்று பட்டதாரியானவர்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்பதை, ஆட்சியாளர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதற்காக கூறப்படும் காரணம், வாராக் கடன்களில் கல்விக் கடன்களின் சதவிகிதம் அதிகம் என்பதே. வங்கிகளுக்கு புதிய அறிவுரை கிடைத்த பிறகு, கல்விக் கடன் செலுத்தாதவர்களின் பின்னால் கந்து வட்டிக் காரர்களைப் போல விரட்டத் தொடங்கினார்கள். அடமானம் வைத்த சொத்துக்களை பறிக்கத் தொடங்கினார்கள்.

செல்வந்தர்களுக்கு மட்டுமே நிவாரணம்

வாராக்கடன்களில் கல்விக் கடனின் சதவிகிதம் அதிகம் என்பது மட்டுமே என்னை கோபப்படுத்துகிறது. 31 டிசம்பர் 2016 அன்று உள்ளபடி, வாராக்கடன்களின் மொத்த அளவு 6,336 கோடி என்று வைத்துக் கொள்வோம். இந்த எண்ணிக்கையை கடனை செலுத்த முடியாமல் திவால் என்று அறிவித்த 12 பன்னாட்டு கம்பெனிகளின் 250,000 கோடியோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த 25,000 கோடியில் 60 சதவிகிதம் வாராக் கடன்கள். திவாலான இந்த 12 பன்னாட்டுக் கம்பெனிகளிடமிருந்து வங்கிகள் எவ்வளவு முயற்சி செய்து கடனை வசூலிக்க முயன்றாலும், 30 முதல் 40 சதவிகிதம் இழப்பை மட்டுமே சந்திக்கும். இந்த இழப்பின் உத்தேச மதிப்பீடு எவ்வளவு தெரியுமா ? 75,000 முதல் 125,000 கோடிகள். இது நிதி சீரமைப்பு என்று கூறப்படுகிறது. இத்தகைய நிறுவனங்களில் முதலீடுகளை செய்தவர்களின் முதலீடு காலாவதியாகி விடும். ஆனால் இந்த நிறுவனங்களுக்கு மீண்டும் கடன் வழங்கப்படும்.

ஆனால் கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத குடும்பங்களால் அரசுக்கு ஏற்படும் இழப்பு 6,336 கோடி மட்டுமே (அதிகபட்சம் 10,000 கோடி என்றே வைத்துக் கொள்வோம்). ஆனால் இந்த கல்விக் கடன்களுக்காக எந்த ஒரு திட்டமும் அரசு வசம் இல்லை. இவை அனைத்தும் 'நிதிப் பேரழிவு' என்று வர்ணிக்கப்படும். அனைத்து கல்விக் கடன்களும் நிறுத்தப்படும்.

மக்கள் நலனில் அக்கறை உள்ளது என்று அறிவித்துக் கொள்ளும் அரசின் உண்மை முகம் உங்களுக்கு தெரிகிறதா ?

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ‘இந்தியன் எக்ஸ்பிரஸில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.  http://indianexpress.com/article/opinion/columns/the-poor-shall-not-dream-p-chidambaram-opinion-column-on-education-loans-policy-on-granting-education-loans-policy-on-education-loans-poors-dont-get-loans-4762806/)

தமிழில் : ஆ. சங்கர்

#P Chidambaram #Upa #Nda
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment