Advertisment

தார்மீக பொறுப்புடன் ராஜினாமா: லால்பகதூர் சாஸ்திரி உருவாக்கி வைத்த அழுத்தம்

சாஸ்திரியின் ராஜினாமா டிசம்பர் 7, 1956 முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவருக்குப் பதிலாக ஜக்ஜீவன் ராம் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
After every railway tragedy the burden of Shastris moral responsibility

பண்டிட் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, பெருந்தலைவர் காமராஜர்

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். ரயில் விபத்து பணிகள் நடைபெற்றபோது, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

Advertisment

ஒவ்வொரு ரயில் விபத்தின்போதும் அமைச்சர் பதவி விலக வேண்டும் என லால் பகதூர் சாஸ்திரி தறபோதும் உதாரணமாக காட்டப்படுகிறார்.

லால் பகதூர் சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபோது, 1956ல் செப்டம்பர்-நவம்பர் வரை 3 மாத இடைவெளியில் 2 பெரிய விபத்துகள் நடந்தன.

லால் பகதூர் சாஸ்திரி, பண்டிட் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில், மே 13, 1952 அன்று ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சராகப் பதவியேற்றார்.

ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. செப்டம்பர் 2, 1956 அன்று, செகந்திராபாத்-துரோணாசலம் பயணிகள் ரயில், தெலுங்கானாவில் உள்ள ஜட்செர்லா மற்றும் மகபூப்நகர் இடையே விபத்துக்குள்ளானது.

உடனடியாக சாஸ்திரி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பாலங்களை ஆய்வு செய்து மக்களவையில் அறிக்கையை சமர்பித்தார். அப்போது, “இந்த விபத்து என்னை காயப்படுத்தியது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 117-ஐ எட்டியுள்ளது. இந்த நினைவு நீண்ட நாள்களுக்கு என்னை காயப்படுத்தும்” என்றார்.

இந்த நிலையில் சாஸ்திரி மிகவும் விமர்சிக்கப்பட்டார். இந்த விபத்துக்கு ரயில்வே நிர்வாகமும் அமைச்சகமும் பொறுப்பு என இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. ஆனந்த நம்பியார் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நேருவிடம் சாஸ்திரி வழங்கினார். ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டார். எனினும் அதுவும் நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, மற்றொரு சோகம் ஏற்பட்டது. நவம்பர் 23, 1956 அன்று தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் மருதையாற்றில் கவிழ்ந்தது. 150 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அப்போது புதுக்கோட்டை எம்.பி முத்துசாமி வல்லத்தரசு, ஜே.பி. கிர்பானி ஆகியோர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

அப்போது, “தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டை மேற்கொள் காட்டி 200 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். அவர்கள் இன்னமும் மீட்கப்படவில்லை” என்று கூறினர்.

தொடர்ந்து, நவம்பர் 26, 1956ல் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகலை நேரு அறிவித்தார். அப்போது, “நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை உருவாக்கும் வகையில் நமது ரயில்வேயை இயக்குவதற்கு சாத்தியமான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும் நேரு, “அவரின் மனதில் ஆற்றொண்ணா துயர் உள்ளது. அவரிடம் பேசினேன். அவரின் ராஜினாமா முடிவை ஏற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தேன்” என்றார்.

சாஸ்திரியின் ராஜினாமா டிசம்பர் 7, 1956 முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவருக்குப் பதிலாக ஜக்ஜீவன் ராம் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனால், நேரு அமைச்சரவையில் சாஸ்திரி அங்கம் வகிக்காமல் போனார். 1966 இல் அவர் மறையும் வரை, சாஸ்திரி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை.

இந்த இரண்டு ரயில் விபத்துக்களுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஏப்ரல் 17, 1957 அன்று இரண்டாவது மக்களவையில் தனது புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டபோது ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தை இரண்டாகப் பிரிக்க நேரு முடிவு செய்தார்.

சாஸ்திரிக்கு போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் வழங்கப்பட்டது. அவர் மீண்டும் ரயில்வே அமைச்சராகவில்லை. இந்த ரயில் விபத்துக்களின் தார்மீக பொறுப்பு சாஸ்திரியிடம் மட்டும் இருக்கவில்லை.

ஆனால் சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் வழக்கு. மேலும் அவரது ராஜினாமா ஒவ்வொரு ரயில்வே அமைச்சரையும் வேட்டையாடுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய ரயில் விபத்து நிகழும்போது, சாஸ்திரியின் "தார்மீகப் பொறுப்பு" எதிர்க்கட்சிகளால் மேற்கோள் காட்டப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamarajar Odisha Jawaharlal Nehru Railway Minister
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment