விவசாயத்தின் மீது கொண்டு வரப்பட்டுள்ள அவசரச்சட்டங்கள் விவேகமில்லாத அவசரத்தைக் காட்டுவதுடன், நல்ல அம்சங்களுடன் தீங்கும் செய்யலாம் என்று கருதப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சந்தையைச் சரி செய்ய மாநிலங்கள் நிதி ரீதியாக இணைவதை விடவும் ஒரு முறைசாரா சந்தையிடல் வாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளது. அங்கே 15 கோடி விவசாயிகள் வர்த்தகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகக் கூடும். நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் செபி ஆகியவை இதேபோல் தேவையில்லாமல் செயல்பட்டால் சந்தையில் குளறுபடி ஏற்படுவதாக கற்பனை செய்து பாருங்கள்.
அஜய் வீர் ஜாஹார்
வெறுமனே அனைத்து அவசர சட்டங்களும் மறுசீரமைப்பு ஆகாது. அனைத்து மறு சீரமைப்புகளும் 1991 காலகட்டத்தைப் போல இருக்காது. விவசாய உற்பத்தியில் வர்த்தக வசதியை அளிக்கும் வகையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட அவசரச் சட்டங்கள் கடந்த காலங்களில் அதிகாரிகள் மற்றும் மாநிலங்களால் தடுக்கப்பட்டன. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து விரக்தியை ஏற்படுத்தியதுடன் அவர்களின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டன. உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்ற பிரதமர் அலுவலகத்தின் அழுத்தத்தால், மசோதாக்களை விடவும் அமைப்பானது அவசரச் சட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
மசோதாக்கள் பொது வெளியில் முன் வைகப்படவேண்டிய தேவை இருக்கிறது. விவசாயிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்படும். மாநிலங்களின் அதிகாரம் மற்றும் வருவாய் குறைக்கப்படுவதாக இருந்தால், அது குறித்து கவனிக்கப்பட வேண்டும். அவசர சட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள அவசரம், வேளாண் உற்பத்தி வத்தகம் மற்றும் வர்த்தக(முன்னெடுப்பு மற்றும் வசதி ஏற்படுத்துதல்) அவசர சட்டம் 2020 என்பதானது குளிக்கும் தண்ணீரில் இருந்து ஒரு குழந்தை வெளியே தூக்கி எறியப்பட்டது போல இருக்கிறது.
இடைத்தரகர்கள் மற்றும் அவரகளது நிதி செல்வாக்கை ஒன்றிணைப்பதன் மூலம், விவசாயிகள் நியாயமான விலையை பெறுவதை உறுதி செய்யும் வகையிலான சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு மாநிலங்களில் உள்ள சுரண்டலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் விவசாயச் சந்தை தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதில் தயக்கம் காட்டினர். சந்தையை சரி செய்ய மாநிலங்களை நிதி ரீதியாக இணைப்பதை விடவும் ஒருமுறைசாரா சந்தையிடல் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே 15 கோடி விவசாயிகள் வர்த்தகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகக் கூடும். நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் செபி ஆகியவை இதேபோல் தேவையில்லாமல் செயல்பட்டால் சந்தையில் குளறுபடி ஏற்படுவதாகக் கற்பனை செய்து பாருங்கள்.
பஞ்சாப்பின் வெற்றிகரமான விவசாய மண்டி மாடல் முறையை பிரதிபலிப்பதற்கு பதில், கிராமக் கட்டமைப்பை சரி செய்து, தரம் உயர்த்தினாலும் கூட மாநிலங்கள் முக்கியமான வருவாயை இழக்க நேரிடும். அரசியலமைப்பின் அதீத ஆதிக்கம் காரணமாக இந்த அவசரச் சட்டத்தை மாநிலங்கள் எதிர்க்கக்கூடும். ஆனால், இன்னொருபுறம், காலகாலமாக நாட்டின் பெரும் முறைசாரா துறையான விவசாயத்தை முறைப்படுத்தும் பணிகளைத் தொடங்கி இருக்கின்றனர். புதிய தொழில் முறை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். வித்தியாசமான இனமாகக் கருதப்படும் இடைத்தரகர்கள் உள்ளூர் வர்த்தகர்களின் தற்போதைய ஏகபோகத்துக்கு மிகவும் தேவையான போட்டியை உருவாக்குவார்கள்.
கூடுதலாக, இனிமேல், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு வெளியே விற்கும்போது, விளைபொருட்கள் மீது சட்டரீதியான கமிஷன் அவர்களுக்கு விதிக்கப்படாது. தொடர்ந்து நீடித்திருக்க, நாடு முழுவதும் உள்ள விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் தீவிரமாக தங்களைத் தரப்படுத்திக் கொள்ள வேண்டும். மண்டி கட்டண அமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். விவசாயிகளின் பொருட்களை விற்பனை செய்கையில் வணிகர்கள் வசூலிக்கும் கமிஷனை கட்டுபடுத்த வேண்டும்.
இதில் என்னுடைய கருத்து என்னவெனில், இந்தச் சட்டத்திருத்தம் மாநிலத்தின் அதிகாரம் மற்றும் வருவாயைக் கட்டுபடுத்துகிறது, மற்றும் விவசாயத்துறை மட்டுமின்றி, மத்திய அரசின் செயலானது ஒரு காயத்துக்கு அறுவை சிகிச்சை ஒன்றே போதுமானதாக இருக்கும் நிலையில், காயம்பட்ட உறுப்பையே துண்டிப்பது போல அவசரம் காட்டுவதாக இருக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ல் ஒரு துண்டித்தல் என்பது தேவைப்படுகிறது. அங்கே ஒரு காயத்துக்கு மருந்திட்டுக் கட்டப்படுகிறது. இந்த சட்டத்திருத்தமானது, அதிகாரத்தின் கடுமையான சக்திகளில் இருந்து வெளியேறி உடைமைகளை வைத்திருப்பதற்கான வரம்பு உள்ளிட்டவற்றில் எதேச்சிகாரத்தைக் கொண்டு வருதல் போன்ற வர்த்தகர்களின் உண்மையான அச்சங்களை தீர்க்க வேண்டும். பெரும் நலனுக்காக சொந்த அதிகாரம் முன்கூட்டியே போவதை விடவும், சட்டத்திருத்தத்தின் நிபந்தனைகள், தெளிவற்றதாக இருக்கிறது. முன்பு போலவே விசித்திரமான விளக்கங்களுக்கான இடத்தை விட்டுச் செல்கிறது. வணிகர்களின் நிச்சயமற்ற தன்மை, தன்னிச்சையான இறக்குமதி-ஏற்றுமதி கொள்கை முடிவுகளால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது சட்டத்திருத்தத்தின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்கிறது.
கடைசியாக, விவசாயிகளுக்கான விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை சேவைகள் (அதிகாரம் அளிக்கும் மற்றும் பாதுகாக்கும்) ஒப்பந்த அவசரச் சட்டம் 2020(The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Ordinance 2020) என்பது வெறுமனே ஒப்பந்தப் பண்ணை அவசரச் சட்டம் 2020 என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது விவசாயிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என இரண்டு தரப்பினரிடம் நிலவும் அச்சங்களை சமதானப்படுத்த முயற்சிக்கிறது. விவசாயிகளைப் பொறுத்தவரை, சட்ட உதவியை நாடுதல் ஒருபோதும் நடைமுறை விருப்பமாக இல்லை. இடைத்தரகர்களின் ஆழ்ந்த பைகளில் தூண்டக்கூடிய சக்தியாக, நிவாரண செயல் மீது ஒரு கரு நிழல் வடிவத்தில் இருக்கின்றனர். அதைப்போல, கடினமான நீட்சியான சட்ட நடைமுறைகள் நிவாரணம் தேடவோ அல்லது சாதகமற்ற விதிமுறைகளுக்கு தீர்வு காணவோ முடியாமல் போதுமான விலகலைக் கொண்டிருக்கின்றன.
ஒப்பந்தப் பண்ணை முறை செயல்பாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எந்த ஒரு தடங்கல் சட்டங்களுக்கும் கட்டுப்படுத்தப்படாது என்பது ஒரு நல்ல முயற்சி. விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் புதிய இடைத்தரகர்கள் இந்த சட்டங்களால் ஊக்கம் பெறுவார்கள். கிராம்பபுறங்களில் சில சிறிய மூலைகளில் செழிப்புக்கு வழிவகுக்கும். அவசரச்சட்டத்தில் துளிர்விடும் பசுமை இருக்கிறது. ஆனால், இதில் எதிர்மறையானது வெளிச்சமாக சாதகமான அம்சமாகத் தோன்றுகிறது.
இந்த மூன்று அவசர சட்டத்திருத்தங்களின் ஐக்கியமானது , சாந்தா குமார் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதுபோலத் தோன்றுகிறது. இந்தப் பரிந்துரைகள் இந்திய உணவு கழகம், குறைந்தபட்ச ஆதாரவிலை & பொது விநியோகத்துறை ஆகியவற்றை நீர்த்துப்போகவும் மற்றும் கலைத்து விடவும் சொல்கிறது. இவை விவசாயிகளை வறுபடுவதில் இருந்து தீயை நோக்கித் தள்ளுவதாக இருக்கும். இப்போது சர்க்கரைத் தொழில் துறையானது, கரும்புக்கான மத்திய அரசின் நிலையான குறிப்பு விலையை அல்லது மாநில அரசின் விவசாய திட்டத்தின்படி விவசாயிகளுக்குப் பணம் தரவேண்டியதில்லை என்பதை விளக்கிச் சொல்வதாக இருக்கிறது. இந்த வழியில் இந்த உருவாக்கம் இந்த அவசரச் சட்டங்களை தள்ளிவிடுவதாக இருக்கிறது. அரசானது, அதன் தீவிர ஆதரவாளர்களிடையேகூட தார்மீக ரீதியிலான அரசியல் தளத்தை இழந்து விட்டது.
ஷேக்ஸ்பியர் சொல்லி இருக்கிறார்; “மனிதர்களின் தீங்கு அவர்களுக்குப் பின்னாலும் நீடித்திருக்கம். நல்லவை, பெரும்பாலும் அவர்களின் எலும்புகளுடன் ஒன்றிணைக்கப்படுகிறது.” கடந்த காலங்களில் அரசின் முயற்சிகள் நல்ல பலன் தருவதாக இல்லை. கிராமப்புற துயரங்களின் ஒரு காயம் போலதான் இருக்கிறது. மூத்த அதிகாரிகள் கொள்கைளை உருவாக்கி விட்டு ஓய்ந்து விடுவார்கள். அவர்கள் விட்டுச்செல்லும் குழப்பங்களுக்கு பொறுப்பு ஏற்பதில் தோல்வியே விஞ்சும்.
இந்த கட்டுரை முதலில் 18-ம் தேதியிட்ட நாளிதழில் ‘Unpacking the reform’ என்ற தலைப்பில் வெளியானது கட்டுரையின் எழுத்தாளர் பாரத் கிஷாக் சமாஜின் தலைவர் ஆவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.