ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கு நேரு பரிந்து பேசியதை ஏற்றுக்கொள்ள அம்பேத்கர் தயங்கினார். தேசத்தை ஒன்றிணைக்கும் பொறுப்பை சர்தார் பட்டேல் ஏற்றுக்கொண்டு, அதன்படி அவர் 545 சுதேச மாநிலங்களை இந்திய ஒன்றியமாக நியமித்தார்.
அர்ஜீன் ராம் மேஹ்வால், கட்டுரையாளர்.
தாங்கள் பிறந்த சமூகத்தை மாற்றியமைப்பதன் மூலம் சிலர் தங்களின் சுவடுகளை வரலாற்றில் விட்டுச்செல்வார்கள். அதுபோன்ற ஒருவர்தான் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அவரின் சமூக, அரசியல், பொருளாதார பார்வைகள் எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்திய தேசம் அவரின் பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடியது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவை ஒரு சமுதாயமாகவும், தேசிய ஒற்றுமை பலப்படுத்தி, இறையாண்மையை காப்பதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராக அம்பேத்கர் உத்தமமான அணுகுமுறையை கொண்டிருந்தார். அவரின் ராஜதந்திரம், ஜம்மு – காஷ்மீரின் புத்தம் மற்றும் இந்து மக்களின் மீதான பரிதாபமான அணுகுமுறை மற்றும் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடனான கருத்து வேறுபாடு ஆகியவற்றில் எதிரொலித்தது.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கு நேரு பரிந்து பேசியதை ஏற்றுக்கொள்ள அம்பேத்கர் தயங்கினார். தேசத்தை ஒன்றிணைக்கும் பொறுப்பை சர்தார் பட்டேல் ஏற்றுக்கொண்டு, அதன்படி அவர் 545 சுதேச மாநிலங்களை இந்திய ஒன்றியமாக நியமித்தார். ஜம்மு – காஷ்மீரைப் பொருத்தவரையில், நேரு அதன் மீது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார். ஜம்மு – காஷ்மீரின் மகாராஜா ஹரிசிங்கிற்கு எழுதிய கடிதத்தில் அவர், இந்தியா முழுமையாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒற்றுமை கொள்கை ஜம்மு – காஷ்மீருக்கு ஏன் பொருந்தாது என்பது குறித்து விளக்கியிருந்தார். ஜம்மு – காஷ்மீர் ராஜ்ஜியம் மற்ற சுதேச மாநிலங்களிலிருந்து விதிவிலக்கு பெற்றது. ஏனெனில், அதன் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள், ஆனால் அங்கு ஒரு இந்து ஆட்சி செய்கிறார். இந்தியாவுடன் இணைவதை ஜம்மு – காஷ்மீரின் முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள் என்று நேரு நினைத்தார். முரணாக, பாகிஸ்தான் வழக்கை தள்ளிப்போட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் லீக் காங்கிரசிடம் மாகாண தேர்தலில், கைபர் பக்துன்க்வா என்ற முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியிலேயே தோற்றது மற்றும் பஞ்சாபிலும் தோற்றது. இந்த இரண்டு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளுமே முஸ்லிம் லீகை நிராகரித்தபோது, ஜம்மு – காஷ்மீரின் முஸ்லிம்கள் ஏன் பாகிஸ்தானுடன் ஒருங்கிணைய வேண்டும் என்று வாதிட்டனர்.
சில வரலாற்றாசிரியர்கள், நேரு, தான் ஒரு தாராளவாத அரசியல்வாதி என்ற பிம்பத்தை மெருகேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பை பார்த்துக்கொண்டிருந்தார் மற்றும் ஷேக் அப்துல்லாவுக்கு ஆதரவாக ராஜா ஹரி சிங்கை ஓரங்கட்டிவிட்டு, ஒரு உலக தலைவராக தன்னை ஆக்கிக்கொண்டார் என்று வாதிடுகின்றனர். அவரும் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வலியுறுத்தினார். அதற்கு தனி கொடி மற்றும் அரசியலமைப்பும் வழங்கப்பட்டது. இந்த அணுகுமுறை மாநிலத்திற்கு பேரழிவு தரும் ஒன்றாக மாறியது.
பின்னர் நேரு தனது நம்பிக்கைக்குரிய, இடைக்கால அரசில் எந்த இலாகாவும் இல்லாத அமைச்சராக இருந்த, என். கோபாலசுவாமி அய்யங்காரை, ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க தேவையான சட்டத்தை தயாரித்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஷேக் அப்துல்லா, மிர்சா முகம்மது அப்சல் பேக், மவுலானா முகம்மது சையது மசூதி மற்றும் மோட்டி ராம் பய்க்ரா ஆகியவர்களுடன் ஆலோசனை நடத்தி, அய்யங்கார் சட்டப்பிரிவு 306 ஏ வரைவை கொண்டுவந்தார், அது ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. 1949ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, நேரு அமெரிக்காவில் இருந்தபோது, அய்யங்கார் அந்த தீர்மானத்தை, சட்டப்பிரிவு 306 ஏ வை சட்டப்பேரவையில் சேர்ப்பதற்காக அறிமுகப்படுத்தினார். அன்றே விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் திருத்தப்பட்டபோது அது சட்டப்பிரிவு 370 என்று எண் மாற்றப்பட்டது.
அம்பேத்கர் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்தார். 1951ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசும்போது, நேருவின் வெளியுறவுக்கொள்கைகளை விமர்சித்தார். குறிப்பாக ஐநாவிற்கு, ஜம்மு – காஷ்மீரின் நிலையை எடுத்துச்செல்லும் முடிவையும் அவர் விமர்சித்தார். அன்று முதல் அமைச்சரவையில் இருந்து விலகினார். அப்போது அம்பேத்கர், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் இன்று நமது நட்பு நாடாகும். நான்காண்டுகளுக்குப்பின்னர், நம் நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிடுவர். நமக்கு அப்போது நண்பர்களே இருக்க மாட்டார்கள். நாம் நம்மை தனிமைப்படுத்திக்கொண்டோம். ஐநா சபையில் நமது தீர்மானங்களை வழிமொழிவதற்குக்கூட ஆளில்லை. நாம் தனியாக உள்ளோம். நமது வெளியுறவுக்கொள்கைகளை நினைக்கும்போது, எனக்கு பிஸ்மார்க் மற்றும் பெர்னாட்ஷா ஆகியோர் கூறியது நினைவுக்கு வருகிறது. அரசியல் சரியானதை உணரும் விளையாட்டு அல்ல, அது சாத்தியங்களின் விளையாட்டு என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். பெர்னார்ட் ஷா கூறியது நீண்ட நாட்களுக்கு முன் கூறியதல்ல, சரியாக இருப்பது நல்லதுதான், ஆனால், அதிக சிறந்ததாக இருப்பதும் ஆபத்துதான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இவ்விரு ஞானிகளின் இந்த வார்த்தைகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது நமது வெளியுறவுக் கொள்கைகள் என்று கூறினார்.
அம்பேத்கர், ஜம்மு – காஷ்மீரின் இந்து மற்றும் புத்த மதத்தினருக்காக அனுதாபப்பட்டார். அவர், நான் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்பு குறித்து எதற்காக வருந்துகிறேன் என்றால், இது ஒட்டுமொத்த வாக்கெடுப்பு, காஷ்மீரின் இந்துக்களும், புத்த மதத்தினரும் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுக்கு இழுத்துச்செல்லப்பட்டனர் என்றால், நாம் இன்று கிழக்கு வங்காளத்தில் சந்திக்கும் அதே பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.
ஜம்மு – காஷ்மீருக்கு கொடுக்கப்படும் இந்த சிறப்பு அந்தஸ்தால், இந்தியா இறையாண்மைக்குள் மீண்டும் ஒரு இறையாண்மையை உருவாக்கும். அது இந்தியா குடியரசின் நேர்மைக்கும், ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும். தன்னாட்சி, பிரிவினைவாதம், சுயாட்சி, மாநில தன்னாட்சி இளைஞர்களை தவறாக வழிநடத்தி, அதுவே தீவிரவாதம் பிறப்பதற்கு காரணமாக இருக்கும், லஞ்சம் மற்றும் ஜம்மு – காஷ்மீரில் தவறான ஆட்சி ஆகியவை சட்டப்பிரிவு 370ஐ நிறைவேற்றினால் ஏற்படும் என்று அம்பேத்கர் நினைத்தார்.
2019ம் ஆண்டு, மோடி அரசு துணிச்சலாக சட்டப்பிரிவு 370ஐ நீக்கி, வரலாற்று பிழையை சரிசெய்தது. முன்எப்போதும் இல்லாத அளவுக்கு ஜம்மு – காஷ்மீர் மக்கள் தற்போது ஒரு புதிய வளர்ச்சியை அனுபவிக்கிறார்கள். இது 9 அரசியலமைப்பு திருத்தம் மற்றும் 106 மற்ற சட்டங்களை ஜம்மு – காஷ்மீரில் நிறைவேற்றுவதற்கு வழி அமைத்துக்கொடுத்துவிட்டது. கல்வி உரிமை சட்டம், விசில் ப்ளோவர் ப்ரொட்டக்சன் ஆக்ட் சட்டம் எனப்படும் பொதுசேவையாளர்களின் அதிகார துஷ்ப்ரயோகம் மற்றும் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் சட்டம், தூய்மை பணியாளர்களுக்கு தேசிய கமிஷன், எஸ்சி, எஸ்சி பிரிவினருக்கு அரசியல் இடஒதுக்கீட்டை உறுதிசெய்வது போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால், மக்களுக்கு சிறந்த வாழ்க்கையும், வாய்ப்புக்களும் கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது.
இக்கட்டுரையை எழுதியவர் அரஜீன் ராம் மேஹ்வால், நாடாளுமன்ற வெளியுறவுக்கொள்கை மற்றும் கனரக தொழிற்சாலை மற்றும் பொதுநிறுவனங்கள் துறை இணை அமைச்சர்.
தமிழில்: R.பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.