scorecardresearch

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ​​பி.ஆர் அம்பேத்கர் எதிர்த்தார்

வரலாற்று தவறுகளை சரிசெய்ய நரேந்திர மோடி எடுத்த இந்த நடவடிக்கை பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கருக்கு செலுத்தப்படும் ஒரு தாழ்மையான அஞ்சலி என்றே தெரிகிறது. 

amdekar and Article 370
amdekar and Article 370

ARJUN RAM MEGHWAL

கட்டுரை ஆசிரியர் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார மத்திய இணை அமைச்சராக உள்ளார்

ஆகஸ்ட் 6 ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 வது பிரிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது.  இந்த ரத்து நடவைக்கைக்கு ஆதரவான கருத்துக்கள் இன்று நம்மில் சிதறியி வகையிலே உள்ளன.  உண்மையில், சொல்ல வேண்டும் என்றால்  இன்றைய 370  ஆரம்பக் காலத்தில் பிரிவு 306ஏ என்ற  கருத்தாக்கத்தில் இருக்கும்போதே, ​​பி.ஆர் அம்பேத்கர் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இடையூறாக இருக்கும் என்று  திட்டவட்டமாக எதிர்த்தார்.

அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர் 1948 பிப்ரவரி 21 அன்று இந்தியாவின் வரைவு அரசியலமைப்பை  ராஜேந்திர பிரசாத்திடம் ஒப்படைக்கும் போது, ஜம்மு-காஷ்மீரீக்கு என்று தனியான  சிறப்பு அந்தஸ்து என்று அதில் எதுவும் இல்லை. மேலும்,  ஷேக் அப்துல்லாவுடனான தனது சந்திப்பின் போது ” இது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் உடைக்க வழிவகுக்கும்” என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் , ” இந்தியா காஷ்மீரைப் பாதுகாக்க வேண்டும், அதன் மக்களுக்கு உணவளிக்க வேண்டும், காஷ்மீரிகளுக்கு இந்தியா முழுவதும் சம உரிமைகளை வழங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் காஷ்மீரில் இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் அனைத்து உரிமைகளையும் மறுக்க விரும்புகிறீர்கள். நான் இந்திய சட்ட அமைச்சராக இருப்பவன், இதுபோன்ற தேசிய விரோத செயல்களில் என்னை கைப்பாவையாக மாற்றாதீர்கள்” என்று கூறி  சிறப்பு அந்தஸ்துக்கான கோரிக்கையை அவர் முழுவதுமாக நிராகரித்தார்.

ஆனால், ஜவஹர்லால் நேரு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை  கடுமையாக ஆதரித்து வந்தார். அம்பேத்கரின் நிலைப்பாடை அறிந்த  நேரு, தனது  நம்பிக்கைக்குரிய, என் கோபாலசாமி அய்யங்கரை, இடைக்கால அரசாங்கத்தில் போர்ட்ஃபோலியோ இல்லாத அமைச்சராய் நியமித்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் வரைவு மசோதாவை ஏற்பாடு செய்ய வைத்தார். அரசியலமைப்பு சபைக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து பிரதிநிதிகளை மாற்று முறையில் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானத்தை அய்யங்கர்  மே 27, 1949 இல் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், அம்மாநில பிரதமர்(அப்துல்லா ) பரிந்துரையின் பெயரில் நான்கு நபர்கள் இந்திய அரசியலமைப்பு சபையில் கலந்து கொள்வார்கள்.

அப்துல்லா தலைமையிலான இடைக்கால அரசாங்கம்  மிர்சா முகமது அப்சல் பேக், மௌலான முகமது சையத் மசூதி மற்றும் மோதி ராம் பைக்ரா ஆகியோரை பரிந்துரைத்தது. நான்காவது நபராக அப்துல்லா தன்னைத் தானே பரிந்துரை செய்து கொண்டார். இந்த நான்கு தேசிய மாநாட்டுத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து தான்  306 ஏ(தற்போது நீக்கப்பட்ட பிரிவு 370) என்ற பிரிவின் வரைவை அய்யங்கர் கொண்டு வந்தார்.

அக்டோபர் 17, 1949 இல், நேரு அமெரிக்காவில் இருந்ததால், அய்யங்கருக்கு  306 ஏ பிரிவை  சபையில் தீர்மானமாகக் கொண்டுவரும் கடமை ஒப்படைக்கப்பட்டது. அய்யங்கார் தீர்மானத்தை அறிமுகப்படுத்திய பின்னர், மௌலான  ஹஸ்ரத் மோகானி சிறப்பு அந்தஸ்த்தை எதிர்க்க முயன்றும், இந்த தீர்மானம் ஒரே நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், இதே 306 ஏ பிரிவு தான் மறுபெயரிடப்பட்டு 370-வது பிரிவாக  அரசியயலமைப்பில் இடம் பெற்றது. இந்த நடவடிக்கைக்கு அம்பேத்கரின் எதிர்ப்பு  தெரிவிக்கும் வகையில் ,தீர்மானம்  நிறைவேற்றிய அமர்வில் கலந்து கொள்ள கூட அவர் மறுத்துவிட்டார் .

அவ்வப்போது மற்றும் பல்வேறு தளங்களில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான நேரு அரசாங்கத்தின் கொள்கைகளை அம்பேத்கர் எதிர்த்தார். 1951 ஆம் ஆண்டில், அம்பேத்கர் உருவாக்கிய  பட்டியல் சாதி கூட்டமைப்பு கட்சியின் தேர்தல் அறிக்கையில்: “ஜம்மு- கஷ்மிர்க்கு சிறப்பு அந்தஸ்து கொள்கை  தொடர்ந்தால்  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிரந்தர பகைமையை உருவாக்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் சாத்தியத்திற்கும் அது வழிவகுக்கும்.” என்று இருந்தது.

இது அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை என்றே சொல்ல வேண்டும்.  அவரது வார்த்தைகள் நிஜமாகின, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று வரை மூன்று போர்கள் நடந்துள்ளன.

1952-53-ம் ஆண்டு   பட்ஜெட் (பொது) கலந்துரையாடலின் போது  ஜம்மு-காஷ்மீர்  பிரச்சினை குறித்து நேரு அரசாங்கத்தை விமர்சிக்கும் பொது, காஷ்மீர் குழப்பத்தின் காரணமாக  பட்ஜெட்டில் நாட்டின்  பாதுகாபிற்காக நீங்கள் தேவை இல்லாமல் ரூ .50 கோடியை கூடுதலாக செலவு செய்துக் கொண்டு இருக்கீர்கள் என்று உன்னிப்பாகக் குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்பு அமைச்சராக இருந்த அய்யங்கரிடம் , காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு 370 வது பிரிவை ரத்து செய்வது தான் என்பதை  நினைவுபடுத்தினார்.

நேருவின் செல்வாக்கையே சார்ந்து  இருந்த இந்திய அரசாங்கம் இந்த ஆலோசனையை கவனிக்கவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில், 370 வது பிரிவு மீதான விவாதத்தின் போது, ​​நேருவே இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும், அதன்அழுத்தம்  படிப்படியாக குறையும் என்றும் சபைக்கு தெரிவித்தார். ஆனால் பிரிவு 370-ன் அழுத்தம் குறையவே இல்லை. இது பலமடைந்தது, முந்தைய ஜம்மு-கஷ்மீர்  மாநிலத்தில் பொதுவான குடிமக்களின் வாழ்க்கையை கடினமாக்கியது.

ஜம்மு- காஷ்மீரின்  சிறப்பு அந்தஸ்து இந்தியாவின்  இறையாண்மையை கேள்விகுறியாக்கும் என்பதை அம்பேத்கர் தீர்க்கமாகவே  உணர்ந்தார்.அம்பேத்கர் மற்றும் சியாமா பிரசாத் முகர்ஜி  ஆகியோர் நேரு தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் (1947-52) காங்கிரஸ் அல்லாத இரண்டு அமைச்சர்களாக இருந்தனர். ஜம்மு- காஷ்மீர் தொடர்பான பிரச்சினைகளில்,  இந்த இரு மனிதர்களின்  கருத்துக்களிலும் ஒத்துழைப்பு தெளிவாகத் தெரியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் பொதுத் தேர்தலின் போது (1951-52), முகர்ஜி தலைமையிலான பிரஜா பரிஷத் மற்றும் ஜன சங்கம், அம்பேத்கரைப் போன்ற ஒரு நிலைப்பாட்டைத் தான்  ஏற்றுக்கொண்டனர். இவ்வளவு ஏன்….. 1964 இல், ஒரு சில காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை  ஆதரித்தனர்.

இப்போது, ​​370 வது பிரிவை அகற்றுவதன் மூலம், நாடு ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய நாடுகளில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. வரலாற்று தவறுகளை சரிசெய்ய நரேந்திர மோடி எடுத்த இந்த நடவடிக்கை பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கருக்கு செலுத்தப்படும் ஒரு தாழ்மையான அஞ்சலி என்றே தெரிகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Ambedkars views on kashmir