உலகிலேயே முதன்முதலாக சமத்துவத்தை தோற்றுவித்தோம் என்று மார்தட்டிக் கொள்ளும் நாட்டில் கருப்பினத்தவர்களின் வாழ்க்கை ஏன் மிகவும் மலிவாக இருக்கின்றது. அமெரிக்க வாழ் கருப்பர்களை மிருகத்தனமாக நடத்துவதற்கு பதில், என்றைக்காவது அவர்கள் வெள்ளையர்களுக்கு சமமாக, கவுரமாக நடத்தப்பட்டிருக்கின்றார்களா?
அசுதோஷ் வர்ஷினி
அமெரிக்கா மீண்டும் பற்றி எரிகிறது; உண்மையில் சொல்ல வேண்டும் எனில் ஒரு பகுதியில் வன்முறை வெடித்தது. போலீஸ்காரர்கள் மட்டுமின்றி, அவர்களின் வாகனங்களும் தாக்கப்பட்டன. கடைகள், அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இன்னொரு பகுதியில் அடையாளப்பூர்வமாக பெரும் அளவிலான வன்முறையற்ற 10-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுரை எழுதப்படும் வரையில் 75-க்கும் மேற்பட்ட நகரங்களில்போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அமெரிக்க கருப்பர்கள், போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர். பெரும் அளவிலான வெள்ளையின இளைஞர்கள் பங்கேற்ற இந்த போராட்டங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி இனங்களுக்கு இடையேயானது. 1960-களில் இருந்து அமெரிக்காவின் முறைக்கு எதிரான கோபம் மற்றும் விரக்தியின் மகாத்தான காட்சியாகவே இது ஏற்கனவே மாறி இருந்தது. மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு மார்ட்டின் லூதர் கிங்கால் வன்முறையற்ற பொது உரிமை இயக்கமாக அது முன்னெடுக்கப்பட்டபோது நாடு கொந்தளிப்புக்கு உள்ளாகி, அமெரிக்க கருப்பர்களுக்கு பொது மற்றும் ஒட்டு உரிமைகளை வென்றெடுப்பதாக அமைந்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்த அனைத்தும் கோவிட்-19 பெரும் தொற்றின் போது நடந்திருக்கின்றது. உலகின் வேறு எங்கேயும் விட அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றுக்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருகிகன்றனர். கருப்பர்கள் அளவுக்கு அதிகமாகவே இறந்திருக்கின்றனர். சமூக விலகல் அறிவுறுத்தல் இன்னும் அமலில் இருக்கின்றது. ஆனால், மினிசோட்டாவில் மினியா போலிஸ் நகரில் டெரெக் சவுவின் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி மே 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கருப்பரை கொன்றதற்கு எதிரான நீதிக்கு மாறான, கிளர்ச்சி உணர்வின் காரணமாக ஆபத்தான நோய் தொற்றுக்கு அபாயத்துக்கு இடையேயும் ஆயிரகணக்கானோர் பெரும் அளவில் வீடுகளில் இருந்து வெளியேறி தெருவில் குவிந்தனர்.
ஜார்ஜ் ஃபிலாய்ட் வன்கொடுமை செய்யப்பட்டதை பார்த்தவர்கள் அந்த காட்சியை தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதனை லட்சக்கணக்கானோர் பார்த்தனர். போலீஸ் உடையில் டெரெக் சவுவின், தன் முழங்காலை ஃபிலாய்ட் கழுத்தில் வைத்து அவர் மூச்சுத்திணறும் அளவுக்கு ஒன்பது நிமிடங்கள் வரை அழுத்தினார். அப்போது ஃபிலாய்ட் , “என்னால் மூச்சு விடமுடியவில்லை. தயவு செய்து, தயவு செய்து விட்டு விடுங்கள்” என்று கருணையோடு கெஞ்சுகிறார். ஆனால், டெரெக் சவுவின் தமது சக மூன்று போலீஸ்காரர்கள் உதவியுடன் அவரை போக அனுமதிக்கவில்லை. ஒரு மணி நேரம் கழித்து ஃபிலாய்ட் இறந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறார்.
ஏன் இத்தனை பேர் போராடுகின்றனர்?
இது வெறுமனே கருப்பினத்தவர் மரணம் மட்டும் அல்ல. உண்மையான அமெரிக்காவின் அரசியலமைப்பு ஆன்மாவின் இன்னொரு தருணம். தேசத்தின் கட்டமைப்புகள் மற்றும் முரண்பாடுகளுக்குள் ஒரு ஆழ்ந்த வேதனையான வீழ்ச்சியாகும். அமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி கேட்கப்படுகின்றது. உலகிலேயே முதன்முதலாக சமத்துவத்தை தோற்றுவித்தோம் என்று மார்தட்டிக் கொள்ளும் நாட்டில் கருப்பினத்தவர்களின் வாழ்க்கை ஏன் மிகவும் மலிவாக இருக்கின்றது. அமெரிக்க வாழ் கருப்பர்களை மிருகத்தனமாக நடத்துவதற்கு பதில், என்றைக்காவது வெள்ளையர்களுக்கு இணையாக அவர்கள் சமமாக, கவுரமாக நடத்தப்பட்டிருக்கின்றார்களா?
சம உரிமை மற்றும் சுதந்திரம் என்ற அரசியலமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்ட வாக்குறுதியுடன் அமெரிக்கா பிறந்தது. ஆனால், 1865-1877 மற்றும் 1964-65 என்ற இரண்டு காலகட்டங்களைத் தவிர இன்று வரைக்கும், அமெரிக்க கருப்பர்கள் ஒருபோதும் அமெரிக்க வெள்ளயர்களுக்கு சமமாக ஒரு போதும் நடத்தப்பட்டதில்லை. மாறாக, அமெரிக்காவின் அரசியல் மற்றும் சட்டம், பெரும்பாலான அமெரிக்க வரலாறு ஆகியவை, அரசியல் அறிவியல் அறிஞர் ரோஜர்ஸ் ஸ்மித் கூறுவதைப் போல, ‘சமூக வர்க்கத்தில் வெள்ளையர்கள் உயர் நிலை’, ‘அமெரிக்கா என்பது வெள்ளையர் தேசம்’ என்ற உணர்வுப்பூர்வமான நம்பிக்கைகள் வெளிப்படுவதாக இருக்கின்றன.
அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாற்று ரீதியான ஆதாரத்தின்படி 1790ல், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் பிறந்த ஒரு ஆண்டு கழித்து 19.3 சதவிகித அமெரிக்க கருப்பினத்தவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால், சுதந்திரம் பெற்றவர்களாகவோ, சம உரிமை பெற்றவர்களாகவோ இல்லை. அமெரிக்க கருப்பர்கள் அடிமைகளாகத்தான் இருந்தனர். வெள்ளையர்களின் சொத்துகளாக, வெள்ளை முதலாளிகளிடம் அடிமைகளாக இருந்தனர். சந்தையில் பொருட்கள் விற்பது வாங்குவதுபோலத்தான் அவர்கள் விற்கவும், வாங்கவும் பட்டனர். எந்த ஒரு குடிமகனுக்கான உரிமையையும் அவர்கள் அனுபவிக்கவில்லை.
6 லட்சம் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, 1865-ம் ஆண்டு அடிமைத்தனத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 13-வது சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட 14-வது, 15-வது திருத்தங்களில் குடியுரிமை, ஓட்டு உரிமையில் வெள்ளையர்களுக்கு நிகராக கருப்பர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டன. 1866 மற்றும் 1876-ம் ஆண்டுக்கு இடையே, கருப்பர்களின் வாக்கு பதிவு 85-90 சதவிகிதமாக உயர்ந்தது. சுதந்திரம் பெற்ற பெரும்பாலான கருப்பர்கள் அரசியலில் ஈடுபட்டனர். உள்ளூர் அரசாங்கத்தில் மட்டுமல்ல, அமெரிக்க செனட் சபை மற்றும் அமெரிக்க அவையிலும் பிரதிநித்துவம் பெற்றனர்.
இந்த மறு சீரமைப்பு காலகட்டமானது 1877-ல் மீண்டும் வீழ்ந்தது. இதன் பின்னர், தெற்கு பகுதியில் இருந்த மாநிலங்கள் பெரும்பாலான கருப்பர்களுக்கு இருந்த ஓட்டு உரிமையை பறித்தன. எங்கே அவர்கள் வசிக்கவேண்டும் வழிபடவேண்டும்,உண்ண வேண்டும், குடிக்க வேண்டும், எப்படி அவர்கள் பயணிக்க வேண்டும் என்பது உட்பட கருப்பர்களின் பொது உரிமைகள், இனரீதியாக மறுசீரமைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பிளெஸி, பெர்குசன் (1896) இடையே நடந்த வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருப்பர்கள், வெள்ளையர்கள் இனரீதியாக வேறுபட்டவர்கள், தீவிரமாக வெவ்வேறு பண்புக்கூறுகளைக் கொண்டவர்கள் என்று கூறி இனரீதியான பிரிவினையை நியாயப்படுத்தியது.
இனரீதியாக அனுமதிக்கப்பட்ட எல்லைகளை மீறி நடந்து கொண்டதற்காக அமெரிக்க கருப்பர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். இது போதுமானதாக இல்லாதபட்சத்தில் கொடிய பரிணாமத்தைக் கொண்டிருந்தது. வரலாற்று ஆய்வாளர் ரிச்சர்ட் ஒயிட் எழுதியுள்ளபடி, தூக்கிலிடப்படுவதை விட அடித்துக் கொல்லப்படுவது அதிகமாக இருந்தது என்று தெரியவருகின்றது. பெரும் கூட்டத்துக்கு மத்தியில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக பொதுக்காட்சிகளாக இவை இருந்தன. வெள்ளையர்கள் கருப்பர்களை துன்புறுத்தினர். கருப்பர்களின் கைகால்களை துண்டித்தனர். அவர்களை ஆண்மையற்றவர்களாக்கினர். எரித்துக் கொன்றனர். இந்த கொலைகளை நினைவு கூறும் வகையில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இந்த புகைப்படங்கள் எல்லாம் போஸ்ட் கார்டுகளாக பலருக்கு விற்பனை செய்யப்பட்டன.
பல ஆண்டுகளாகத்தொடர்ந்த இன அடிபணிதல் , மறுக்கப்பட்ட உரிமைகள் 1950கள்-1960-களுக்கும் மத்தியில் ரத்து செய்யப்பட்டன. ஆனால், சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும் பொருளாதார இடைவெளி என்பது மேலும் மோசமாக அதிகரித்தது. அவ்வபோது கருப்பர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தன. கொல்லும் கும்பல்கள், கொலையை கைவிடவில்லை. பழைய முறையிலான வன்முறைகள், படுகொலைகள் காணாமல் போயின. ஆனால், அமெரிக்க கருப்பர்களுக்கு எதிரான போலீஸாரின் வன்முறைகள் ஆண்டுமுழுவதும் தொடர்ந்தன. கருப்பர்களை சிறைவைப்பது அபாயகரமான அளவு அதிகரித்தது. அமெரிக்காவில் இப்போது கருப்பர்கள் 12 சதவிகிதம் இருக்கின்றனர். ஆனால், இதில் 38 சதவிகிதம் பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். குற்றவியல் என்பது கருப்பர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டிருக்கின்றது.
பெரும்பாலும் வெள்ளை போலீஸாரால் இன வன்முறை மேற்கொள்ளப்படுகின்றது. தவிர, தொடர்ந்து இந்த சம்பவங்கள் தண்டிக்கப்படாமல் தொடர்கின்றன. போலீஸ் சங்கங்கள் வலுவாக இருக்கின்றன. அரசு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளை சந்தேகம் என்ற நற்பலன்களுக்குள் கொண்டு வந்து விடுகின்றனர். துப்பாக்கியை எடுத்ததற்கான கடைசி நிமிட முடிவைப்பற்றிய அவர்களின் வாதங்களை மிக எளிதாக ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்த இடைவிடாத வரலாற்றின் வன்முறை மற்றும் பாதிப்புகள், ஜார்ஜ் ஃபிலாய்ட்டின் பயமுறுத்தும் கொலை இந்த சூழ்நிலைகளின் முக்கியமான புள்ளியாகும். அமெரிக்காவின் இனமோதல் தொடர்பான கிளாடின் கே என்ற முன்னணி அறிஞர், “பல தரப்பட்ட முறைகள் இங்கே நாம் முன்பும் இருந்தோம். இந்த தருணத்தின் சீற்றம் அந்த பரிச்சயம் இதயத் துடிப்பின் ஒரு பகுதியாகும். கருப்பர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் சமத்துவமின்மையின் நீடித்த மரபுகளை பழைய வெறுப்புகளை மீண்டும் நாம் எதிர்கொள்கின்றோம்” என்று சொல்லி இருக்கின்றார்.
வெறுமனே இந்த நாடு எங்கே போய்கொண்டிருக்கின்றது. பீதியை அமைதிப்படுத்துவதற்கு பதில், அதிபர் டிரம்ப், மிகவும் பாரபட்சமான மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் தலையிடுகின்றார். வலது சாரி வன்முறை கும்பல்கள், பயமுறுத்தும் துப்பாக்கிகளுடன் மிச்சிகன் மாநில அவையில் நுழைந்த போது. அவர்களை அவர் நல்லவர்கள் என்று அழைக்கிறார். இப்போதைய போராட்டத்தில் சில இடங்களில் சொத்துகள் எரிக்கப்பட்டபோது, அவர்களை குண்டர்கள் என்று அழைக்கிறார். அனைத்து போராட்டக்காரர்களுக்கு எதிராகவும் வன்முறை எச்சரிக்கை விடுக்கிறார். பல்வேறு அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் சில வன்முறை போராட்டக்காரர்களுக்கு இடையே அவர் வேறு பாடு காண்பதில்லை. வீதிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில் ராணுவத்தைப் பயன்படுத்துவேன் என்று அண்மையில் உரையாடிய பின்னர், வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள தேவாலயத்துக்கு கைகளில் பைபிளை வைத்துக் கொண்டு அவர் சென்றார். துக்கத்தில் இருக்கும் கருப்பின சமூகத்தினரை சந்தோஷப்படுத்துவதற்கு பதில், இனத்துருவப்படுத்துதல் என்ற வெளிப்படையான கணக்கீட்டில் டிரம்ப், மீண்டும் தாம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இயக்கத்தை தொடங்கி இருக்கின்றார். வன்முறையை சார்ந்து, சுவிஷேச கிறிஸ்தவர்கள் ஆதரவு அவர் தேர்வு செய்யப்படுவதை எளிதாக்கும். துப்பாக்கிகளும், பைபிளும் தேர்தல் பிரசாரத்தை வரையறுக்கின்றன.
அமெரிக்கா ஒரு கடுமையான உக்கிரமான கோடைகாலத்தை நோக்கிச் செல்கின்றது. மற்றும் இந்த பெருந்தொற்று, குறைவதற்கு பதிலாக மேலும் உக்கிரமடையக் கூடும்.
இந்த கட்டுரை முதலில் கடந்த 3-ம் தேதியிட்ட நாளிதழில் ‘Getting away with murder’ என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் அமெரிக்காவின் புரோவிடன்ஸில் உள்ள ப்ரவ்ன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் மற்றும் சோல் கோல்ட்மேன் சர்வதேச ஆய்வுகளுக்கான பேராசிரியராகவும் இருக்கின்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.