ஆர்கனைசர் இதழில் ஒரு தலையங்கத்தில், கம்யூனிஸத்தின் ஏகத்துவம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் இயல்பான அனுமானம் வரலாற்றை சிதைப்பதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்...
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசார பீரங்கியான ஆக்னைசரின் அண்மை இதழ், ஒரு நிகழ்வில் கேரள கவர்னர் ஆரீப் முகமது கானை இடைமறித்து பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட இர்பான் ஹபீப் பற்றிய சர்ச்சைகளுக்காகவே அர்பணிக்கப்பட்டிருக்கிறது. ஆர்கனைசர் இதழில் ஒரு தலையங்கத்தில், கம்யூனிஸத்தின் ஏகத்துவம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் இயல்பான அனுமானம் வரலாற்றை சிதைப்பதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
“கேரள கவர்னர் ஆரீப் முகமது கான் இடைமறிக்கப்பட்டது, ஏதோ ஒரு வரலாற்று ஆய்வாளரின் வெறுமனே ஒரு எதிர்ப்பு மட்டுமல்ல. பாரதிய வரலாற்றின் அனைத்து அழிவுகளுக்கும் முதன்மையானதாக பேராசிரியர் இர்பான் ஹபீப் பின் விரக்தியின் அப்பட்டமான காட்சியாக இருந்தது. இது வெறுமனே குடியுரிமை திருத்த சட்டம்அல்லது வேறு ஏதாவதற்காக நடந்ததா? ஆரீப் முகமது கான், இர்பான் ஹபீப் என்ற இரண்டு பிரபலங்களை அடுத்தடுத்து வைக்கிறோமா. இந்தக் கடைசி சதிக்கு நாம் விடைபெறுவோம்,” என்று அந்த தலையங்கம், பிரபுல்லா கேட்கார் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை, இஸ்லாமிய ஆக்கிரமிப்பைப் புகழ்ந்த பரம்பரை வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப் , முஸ்லீம் சீர்திருத்தவாதி மற்றும் அரசியல்வாதி ஆரீப் முகமது கான் இருவரையும் ஒப்பீடு செய்துள்ளது.
அதன் முடிவில், “காங்கிரஸின் ஏகபோக வரலாற்றுத் தளத்தில், தவிர கம்யூனிஸ்ட்டின் குகையான கண்ணூரில்“இது போன்ற முரண்பாட்டில், ஆரீப் சாகிப் குடியுரிமை திருத்தசட்டம் குறித்து தமது கருத்தை துணிச்சலாக சொல்லியிருக்க வேண்டும். அவுரங்க சீப் தமது சொந்த நீதிமன்றத்தில் சிவாஜியால் அவமதிக்கப்பட்டபோது எதிர்கொண்டதற்கு கொஞ்சமும் குறைவானது அல்ல இது. அவுரங்கசீப்பின் உண்மையான பற்றாளரான பேராசிரியர் ஹபீப் பதில் அளித்திருக்கிறார். இந்த வழியில், அவர் தம்மை வெளிப்படுத்திக் கொண்டதுமட்டுமின்றி, பேச்சு சுதந்திரம் மற்றும் ஆஜாதியை பிரசங்கம் செய்யும் விலகல்வாதிகளின் ஒட்டுமொத்த குழுவும், தவிர இது அமைப்புகளின் மீதான ஆதிக்கத்தை இழந்ததால் மட்டுமான விரக்தியின் வெளிபாடு மட்டுமின்றி, வரலாறு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மாயயை இழந்ததலும்தான்” என்று முடிகிறது.
அநாகரிமான கருத்து வேறுபாடு
‘கருத்துவேறுபாடு பகுப்பாய்வு’ என்ற தலைப்பிலான ஆர்கனைசரின் கட்டுரை, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை எந்த கண்ணியமும் இல்லாத ஒன்று என்று வர்ணிக்கிறது. ஜனநாயகத்துக்கு கருத்துவேறுபாடு தேவை என்று இந்த கட்டுரை சொல்கிறது. “ ஆனால், சி.ஏ.ஏ-வுக்கு எதிராக அண்மையில் நடந்த கருத்துவேறுபாடு இயக்கங்கள் அனைத்து கண்ணியமான வரையறைகளையும் தாண்டி விட்டது. வன்முறையில் திரும்பி விட்டது. எதிர்பாரதவிதமாக, இந்த கலவரத்தின் பின்னால் இருப்பவர்கள் அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தாங்கள், இதுபோன்ற வன்முறைப் பாதையில் போராடுவதற்கு உரிமை கொண்டவர்களா என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளை அந்த அறிவுஜீவிகள், நகர்புற நக்சல்கள் என்று அழைக்கப்படுவதற்கு தகுதி உடையவர்களாக இருப்பார்கள்.
தவிர, சி.ஏ,ஏ பாரபட்சமற்றது அல்ல எந்த ஒரு இந்திய குடிமகனையும் பாதிக்காது என்று இது விவாதிக்கிறது. “குற்றசாட்டப்படும் பாகுபாடு, வேறு ஏதும், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் வாழும் முஸ்லீம்களுக்கானதாக இருக்கிறதா. எந்த வழியிலும், அந்த மூன்று நாடுகளைச்சேர்ந்த முஸ்லீம்கள் போராட்டக்காரர்களுடன் தொடர்புடையவர்களா? ஹபீஸ் சையது, கசாப்-கள் இந்தியாவுக்கு வரவேற்கப்பட வேண்டுமா? சிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட எல்லைகள் தேசிய நலனுக்கானது. இந்த குழுக்களைச் சேர்ந்தவர்களை தடையற்ற வகையில் அனுமதிப்பது என்பது, தேசத்தின் தற்கொலைக்கு சமமானது. போராடும் இந்தியர்கள் இதனைப் புரிந்து கொள்வது நல்லது.”
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இந்தி பிரசார பீரங்கியான பஞ்சன்யாவிலும், சி.ஏ.ஏ போராட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க இடத்தை அர்பணித்திருக்கிறார்கள். ஒரு கட்டுரையில், சி.ஏ.ஏ போராட்டங்காரர்களிடம் இருந்து பொது சொத்துகளை சேதம் செய்த தற்கான கட்டணத்தை உ.பி அரசு வசூலித்தது உதாரணமாக காட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானை விரும்புவர்கள் பக்கம் இருக்கும் எதிர்கட்சியினரை இந்த கட்டுரை குற்றம் சாட்டுகிறது.
போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லீம்கள், அச்சம்காரணமாக தங்கள் தாடிய மழிப்பதை தடுக்க எப்படி உ.பி. போலீஸார் சலூன்களை கண்காணித்தார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
“கைது செய்யப்படுவது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதற்கு எதிரான நோட்டீஸ் ஆகியவற்றைப் பெறுவதில் இருந்து தற்காத்துக் கொள்ள, போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம்கள் தங்கள் தாடியை மழிக்கத் தொடங்கினர். பெயர் வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன், மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கோரக்பூர், கான்பூர் நகரங்களில் இருந்து கிடைத்த தகவலின் பேரில் சலூன்களைச் சுற்றி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர், “ என்று கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் தொடர்பு
ஆசிரியரின் தேர்வு என்ற தலைப்பில் ஆர்கனைசர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இன்னொரு கட்டுரையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சி.ஏ.ஏ போராட்டங்களுக்கு பாகிஸ்தான் தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தி.மு.க தலைமையிலான போராட்டத்தில் பாகிஸ்தான் கை இருந்ததன் காரணமாக அந்தப் போராட்டம் கண்ணியமற்றதாக மாறியது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்மணியை போலீஸ் கைது செய்தன் விளைவாக இது தெரியவந்தது,” என்று கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.
உளவுத்துறை அமைப்புகளின் தகவல்களின்படி இந்த கட்டுரையில், “அரசியல் சட்டப்பிரிவு 370- ரத்து செய்யப்பட்டபிறகு, பாகிஸ்தானை அடிப்படையாக க் கொண்ட குழுக்கள் தமிழகத்தில் கடை விரித்துள்ளன. சிறிய அமைப்புகள், பதவி ஆசை கொண்ட தி.மு.க,, இடதுசாரிகள், தமிழ் அடிப்படைவாதிகள், நக்சலைட் குழுக்கள் மூலம் அவை தமிழகத்தில் கடைவிரித்துள்ளன. கிறிஸ்தவ ஆதரவு பெற்ற தன்னார்வ நிறுவனங்களும் அவர்களின் வலுவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. சென்னையில் நடந்த சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த அமைப்புகள் மற்றும் பாகிஸ்தானை அடிப்படையாக க் கொண்ட அமைப்புகளின் தொடர்புகள் கொஞ்சம்,கொஞ்சமாக வெளிப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ/என்.ஆர்.சி க்கு எதிராக ரங்கோலி கோலமிட்டது குறித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. “இந்து பாரம்பர்யத்தை, அரசியலுக்காகப் பயன்படுத்தி அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக போலீஸார் அந்தப் பெண்களை கைது செய்தனர். இந்து என்றாலே எதையும் வெறுக்கும் தி.மு.க, சிறுமையான அரசியலுக்காக இந்துப் பாரம்பர்யத்தை அவமானப்படுத்தும் வகையில் பயன்படுத்தியது,” என இந்த கட்டுரை கூறுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் பின்னர் தி.மு.க தலைவர்களில் ஒருவரான கனிமொழியை சந்தித்தார். அந்தப் பெண் பாகிஸ்தானில் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் எனும் ஒரு அமைப்புடன் தொடர்புடையவர் என்று போலீஸ் கூறியதாக கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. “ஸ்டெரிலைட் போராட்டம் அல்லது ஹைட்ரோ கார்பன் அல்லது சேலம் தேசிய நெடுஞ்சாலை அல்லது ஜல்லிக்கட்டு என்று எந்தப் போராட்டம் என்றாலும் அதன் பின்னால் தி.மு.க இருக்கிறது. சந்தேகத்துக்குரிய அமைப்புகள் மூலம் நிதி உதவி பெறும் தேச விரோத சக்திகளும் இந்த போராட்டங்களில் பங்கேற்கின்றன. காயத்ரி-தி.மு.க தொடர்பு தெரியவந்ததை அடுத்து, மத்திய அரசானது தி.மு.க-அதன் பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது,” என்று கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.