Advertisment

வீடு இழந்த கோலா கரடிகள்

Australia bush fire : மிகவும் விரும்பப்படுகின்ற, தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற கோலா கரடிகளின் வாழ்வாதாரத்தை ஆஸ்திரேலிய புதர் தீ பறித்து விட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
australia bushfire, australia bushfires, bushfires in australia, australia bushfires casualties, express editorial, indian express

australia bushfire, australia bushfires, bushfires in australia, australia bushfires casualties, express editorial, indian express

மிகவும் விரும்பப்படுகின்ற, தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற கோலா கரடிகளின் வாழ்வாதாரத்தை ஆஸ்திரேலிய புதர் தீ பறித்து விட்டது. ஆஸ்திரேலியாவின் காடுகள் முழுக்க பரவி வரும் புதர் தீயின் விளைவாக எடுக்கப்பட்ட இதயத்தை பிழிந்தெடுக்கும் பல புகைப்படங்களுக்கு மத்தியில், தீயணைப்பு வீரர்கள் கொடுத்த ஒரு தண்ணீர் பாட்டிலை பிடித்தபடி இருக்கும் கோலா கரடியின் படமும் ஒன்று இருந்தது.

Advertisment

மீட்கப்பட்டவர்களின் பிடியில் இருக்கும் இந்த கோலாகரடி உள்ளிட்ட சில மிருகங்கள்தான் புதர் தீயின் அனலில் இருந்து தப்பித்தன. எதிர்காலத்துக்கான முக்கிய காப்பீடாக கருதப்படும் கங்காரு தீவு சரணாலயத்தில் இருந்த மொத்த விலங்குகளில் பாதி மட்டுமின்றி, ஆயிரகணக்கான கோலா கரடிகளும் தீயில் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது. மிகவும் விரும்பப்படும் பாலூட்டி வகையை சேர்ந்த இந்த விலங்கு ஆஸ்திரேலிய அரசால் இப்போது பாதிக்கப்படக்கூடியவை பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோலா கரடிகளின் 30சதவிகித வாழ்விடங்கள் தீ விபத்தால் அழிந்து விட்டன. எனவே, நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விலங்கை அருகி வரும் உயிரினம் என்று அறிவிப்பது பற்றி ஆஸ்திரேலிய அரசு பரிசீலிப்பதாகக் கூறப்படுகிறது.

கோலா கரடிகளை மனிதர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பதற்கு நீண்ட வரலாறு உள்ளது. ஆஸ்திரேலியாவை விலங்குகளின் ராஜியமாக்க துணை நின்ற ஐரோக்கிய இயற்கையியலாளர்கள் இந்த விலங்கை ஆரம்பத்தில் உரோமங்களால் சூழப்பட்ட கண்கள், சிறிய மூக்கு ஆகியவற்றுடன் மரங்களில் வாழும் மந்தமான ஒரு விலங்கு அல்லது குரங்கு என சொல்லலாம் என்று விவாதித்தனர். வால் இல்லாத மந்தமான சாம்பல் நிற உரோமம் மற்றும் காதுகள் கொண்ட, மரத்தில் வசிக்கும் ஆஸ்திரேலிய பாலூட்டி என்று விவாதத்தின் முடிவில் அறிவித்தனர். சாம்பல் நிற பாலூட்டி வகை கரடி என்றும் அழைக்கின்றனர். இது கங்காரு மற்றும் கரடி ஆகிய இரண்டும்கலந்த கலவையாக இருக்கிறது. அதன் வகைப்பாட்டில் பிழைகள் இருந்திருக்கிறது. எனினும், ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பிய வாசிகள் தங்கள் வீடுகளை உருவாக்கிய காலகட்டத்தில் காடுகளும், உயிரினங்களும் அழிக்கப்பட்டதை ஒப்பிடும்போது இது தீங்கற்றது எனலாம். ஆம் அப்போது, அதாவது 1880-1920-ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டங்களில் 80 லட்சம் கோலா கரடிகள் கொல்லப்பட்டன. அவற்றின் தோல்கள் லண்டன், அமெரிக்கா, கனடாவின் நகரங்களுக்கு அனுப்ப ப்பட்டன.

20வது நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், கோலா கரடி சுற்றுலா என்ற பெயரில் அழகான உயிரினமாக மனிதர்களின் ஈர்ப்பால் கவனம் பெற்றன. ஆனால், அதன் இயல்பான வாழ்வியல் குறித்து ஆய்வு செய்தவர்கள், கோலா கரடிகள் எப்போதும் தனித்திருக்க விரும்பும் விலங்கினம் என்றும், அவை யூக்கலிப்டஸ் மரங்களில் வாழ்கின்றவை என்றும் கூறுகின்றனர். தீ எளிதாகப் பற்றக் கூடிய தாவர வகைகளில் யூக்கலிப்டஸ் மரமும் ஒன்று. எனினும், பருவநிலை மாற்றத்தின் போது, கோலாக்களுக்கு அவர்களால் புகலிடம் கொடுக்க முடியவில்லை என்பதுதான் பிரச்னை.

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?

Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment