கிறிஸ்டினா தனராஜ்
அம்பேத்கரின் உறுதி, அவரது விடாப்பிடியான பொறுப்புடைமை, ஒழுக்கத்தின் மீது அன்பு, அவரது அழகான மனம் ஆகியவை உள்ளிட்ட பல விஷயங்கள் எனக்கு அவர் மீது ஈர்ப்பைக் கொடுத்தன. ஆனால், எது என்னை ஆச்சர்யத்திற்கு இட்டுச் சென்றது என்றால், அம்பேத்கர் காலமானது குறித்த சங்கரக்ஷ்தா நினைவு கூர்ந்ததற்கு நான் பதில் அளித்த விதம்தான்
இந்தியாவில் உள்ள பலரைப்போன்றே, தலித் என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்டு இந்திய கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை எனது குடும்பமும் தேர்வு செய்தது.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
சென்னையில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த உயிரியியல் ஆசிரியர், உண்மையிலேயே நான் பொதுப்போட்டியில் வந்தேனா என்று பல முறை கேட்டபோது, நாம் இந்திய கிறிஸ்தவர் என்று சொல்லும்படி என் தந்தை சொன்னார். இது எந்த வித்தியாசத்தையும் உருவாக்கவில்லை. அந்த ஆசிரியர் , நான் போகும் தேவாலயத்துக்குத்தான் வருவார். நாங்கள் யார் என்றும், எங்களுடைய தலித் உப ஜாதி
எது என்றும் அவருக்கு முழுமையாகத் தெரியும். வெளி உலகத்துக்கு நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவளாக இருந்தேன். ஆனால், எனக்குள் இன்னும் நான் பறச்சிதான்.
என்தந்தை வழி. தாய் வழி மூதாதயர்கள் சமூக பொருளாதார ரீதியாகவும், ஆன்மீக காரணங்களுக்காகவும் கிறிஸ்வத மதத்துக்கு மாறினர். கிறிஸ்வத மதத்துக்கு மாறியதன் அர்த்தம் என்னவெனில், முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் உரிமையைப் பெற்றோம். மிஷினரி நடத்திய ஆங்கில வழி கல்வி பள்ளிகள் கல்லூரிகளில் படித்தோம். இந்த கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெற்றோம். ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்த என்தாத்தா, பின்னர் தென்னிந்தியாவில் உள்ள ஒரு சர்ச்சில் பாஸ்டர் ஆக இருந்தார். என்னுடைய பாட்டி, தமது வாழ்க்கை முழுவதும் கிறிஸ்தவ பள்ளிகளில் ஆசிரியராகவே இருந்தார்.
நான் ஒரு மிஷினரி பள்ளியில் படித்தேன். கிறிஸ்தவ கல்லூரியில் படித்தேன். ஜாதியில் இருந்து தப்பிப்பதற்காக பற்றிக் கொள்ளும் ஏணியாக கிறிஸ்தவம் இருந்தது. அல்லது அவ்வாறு நாங்கள் நினைத்திருக்கலாம். மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, தேவாலயத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பல ஆண்டுகால சமூக, மத புறக்கணிப்புகள் காரணமாக தாழ்ந்த ஜாதி என்பதற்கு ஒரு பதிலியாக கிறிஸ்தவம் என்ற அடையாளம் அவசியமானது என்ற உணர்வுக்கு வந்திருக்கின்றோம்.
எவ்வளவு அருமையாக நாம் அதனை மறைக்கின்றோம் என்பது விஷயமல்ல. தோலின் நிறம், பேச்சு வழக்கு, நாம் வாழும் பகுதி, நமது பொருளாதார அந்தஸ்து மற்றும் நமது தொடர்புகள் (அல்லது அதில் குறைபாடு) ஆகிய இது போன்றவற்றின்மூலம் ஜாதி உருவாக்குபவர்கள் அதனைக் கொடுத்து விட்டுவிடுவார்கள். என்னுடைய கடந்த காலத்தின் உயிரியியல் ஆசிரியர், இப்போதைய காலத்தின் ட்டிவிட்டர் பதிவாளர்கள், இரு தரப்புமே அரிசிக்காக மாறியவர்கள் என்று ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள தலித் கிறிஸ்தவர்கள் (குறிப்பாக இளைஞர்கள்) மிகவும்
உணர்வுப்பூர்வமான அழுத்தத்துக்கு உட்பட்டிருக்கின்றனர். போதுமான அரசியல் விழிப்புணர்வு இல்லாதது எங்களை குழப்பத்தில் வைத்திருக்கின்றது. சிக்கலான சமூக அனுபவம் குறைந்து, இறையியல் செழிக்கிறது. தேவாலய பிரார்த்தனை சபையை எங்களது முக்கிய சமூகமாக நடத்தும் தாக்கத்துக்கு உட்பட்டிருக்கின்றோம். இது அரசியல் சார்பற்றதில் சிறந்து விளங்குகிறது. அதே நேரத்தில் ஜாதிரீதியாக மோசமாக இருக்கிறது.
வாழ்க்கை அனுபவத்தில் தலித்தாக இருந்தபோதிலும், நாம் வெறுமனே கிறிஸ்தவர்கள் மட்டுமே என்று நாங்கள் பாசாங்கு செய்து கொள்கின்றோம். எந்த வித அரசியல் கருவிகள் அல்லது வளங்கள் இன்றி நாங்கள் வளர்ந்தோம். ஜாதிக்கு எதிராக போராட, அறிவுசார் தளவாடங்கள் இல்லாமலும் வளர்ந்தோம்.
கடந்தகாலங்களை ஆய்வு செய்து பார்த்தால், வெறுமனே ஒரு கிறிஸ்தவரைவிடவும் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன். எனது ஜாதி என்ன என்பது எனக்குத் தெரியும். அது குறித்து ஆழமாக அவமானப்பட்டிருகின்றேன். ஆனால், நான் அப்படி இருந்திருக்கக் கூடாது. நான் தலித் என்ற அடையாளத்தோடு இருந்திருக்க
வேண்டும். எனது ஜாதி அடையாளத்தை கட்டவிழ்க்க உதவிய இந்திய கிறிஸ்வத மாணவர் இயக்கம் என்ற ஒரு தளத்தை தேடிக்கண்டடைந்தபோது எனக்கு 20 வயது பூர்த்தியாகி இருந்தது. கடைசியாக நான் அம்பேத்கரை கண்டடைந்தபோது எனக்கு மேலும் வயதாகிவிட்டது. என்னுடைய குடும்பம் அவரைப்பற்றிப் பேசவில்லை.
எனது பள்ளியோ அல்லது என்னுடைய தேவாலயமோ அவரைப்பற்றி பேசவில்லை. அவரது பெயரை வெறுமனே சொன்னபோது, அப்போதைய காலகட்ட நண்பர்களின் முகம் அஷ்டகோணலாகிப் போனது. அந்த நேரத்தில் அவர் எனக்குள் நிகழ்ந்தபோது, தலித் அரசியல் தடிமனாக என்னுள் மையப்பட்டிருந்தது. என்னைப் போன்ற தலித்கள் அம்பேத்கரிய அடையாளத்தை விளையாட்டாக கருதினர். கதாநாயக வழிபாடு செய்கின்றோம் என்று எங்களை குறிப்பிடும் நயவஞ்சகமான சவர்னாக்கள், பிறரை விட யார் அதிக பற்றுள்ள அம்பேத்கயரிஸ்ட் என்று அளவிடும் முகநூல் பதிவிடுவோர் ஆகியோருக்கு மத்தியில் , ஒரு அம்பேத்கரிஸ்ட் ஆக இருப்பதின் அர்த்தம் என்ன என்று நான் கவலையோடு இருந்தேன்.
இதனை ஆங்கிலத்தில் படிக்க – How Babasaheb helped me understand my identity as a Dalit-Christian
ஒரு ஆண்டுக்கு முன்பு பெய்ஜிங்கின் கொடுமையான, மாசடைந்த குளிர்காலத்தில், உண்மையின் சிறுபகுதியை கண்டடைந்தேன். அம்பேத்கரை முழுமையாக புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியாக உர்கியன் சங்கரக்ஷிதா எழுதி ரத்னாதியா வாசித்த “அம்பேத்கர் மற்றும் புத்தயிசம்” என்ற ஒலி புத்தகத்தை 11 மணி நேரம் 29 நிமிடம் கேட்கத்
தொடங்கினேன். அம்பேத்கரின் வாழ்க்கையை எங்களது சமுதாயம் குறித்த அவரது கண்ணோட்டம் மற்றும் சிந்தனைகளை சங்கரக்ஷிதாவின் வரிகளில் கேட்டேன். அம்பேத்கரின் உறுதி, அவரது விடாப்பிடியான பொறுப்புடைமை, ஒழுக்கத்தின் மீது அன்பு, அவரது அழகான மனம் ஆகியவை உள்ளிட்ட பல விஷயங்கள் எனக்கு அவர் மீது ஈர்ப்பைக் கொடுத்தன.
ஆனால், எது என்னை ஆச்சர்யத்திற்கு இட்டுச் சென்றது என்றால்,
அம்பேத்கர் காலமானது குறித்த சங்கரக்ஷ்தா நினைவு கூர்ந்ததற்கு நான் பதில் அளித்த விதம்தான் பி.ஆர் . அம்பேத்கர் 1957ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தூக்கத்திலேயே காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் 2 மைல் தூரத்துக்கு 5 லட்சம் பேர் பங்கேற்றனர். அம்பேத்கரின் சாம்பலை திரும்பவும் ராஜகிரிஹா கொண்டு வர ஒரு லட்சம் பேர் பாதுகாப்புக் கொடுத்தனர். ஆயினும், அம்பேத்கரியரிசம் தொடர்பான என்னுடைய
தொடர்புகள் முற்றிலும் புதிதானது.
என் இதயம் கண்ணீரில் மூழ்கி கண்ணீர் கண்களின் வழியே வழிந்தது. அன்பு மிக்கத்தலைவரை இழந்த து எப்படி உணரப்பட்டிருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கின்றேன். திடீரென்று அனைத்து விஷயங்களும் எப்படி நம்பிக்கையற்றதாக தோன்றியிருக்கும், அப்போது நான் என்ன நினைத்தேன் என்றால், என் தந்தை உயிரிழந்தபோது, நான் கடந்து சென்றதைப்போல இது நெருக்கமாக என்னுள் எதிரொலித்தது. இந்த வழியில், நான் எப்படி என்னை இழந்தனோ அதைப்போல ஒரு சமுதாயம் அவர்களின் கதாநாயகரை இழந்து விட்டது. ஒரு அம்பேத்கரிஸ்டாக இருக்க வெறும் உணர்வுகளைவிட அதிகமாக அங்கீகாரம் எடுத்துக் கொள்ளப்படும். அவரைக் குறித்து அதிகமாக படித்திருக்கின்றேன், அவரது கொள்கைகளை பயிற்சி பெற்றிருக்கின்றேன், அவரது சிந்தனைகளை பரப்பியிருக்கின்றேன் என்று நான் ஒருவேளை சொல்லக்கூடும்.
எப்படி நான் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தேன் மற்றும் அம்பேத்கரிஸ்ட் ஆனேன் என்று என்னிடம் கேட்கப்படக்கூடும். இறுமாப்புடன் இருப்பதற்காக அல்லது மோசமாக, ஒரு போலியாக இருப்பதற்காக சமூக வலைத்தளங்களில் நான் ஒருவேளை தாக்குதலுக்கு உள்ளாக்கூடும், எப்படி ஆயினும் முன்பு நான் செய்த தைவிடவும், நான் அம்பேத்கரை அறிய வேண்டும் என்று நான் விரும்பினேன். எனினும், அரசியலானது குறைந்த அளவு எந்த ஒரு பாகுபாட்டையும் உருவாக்காது. அம்பேத்கரின் அரசியல் ஞானம் குறித்த மிகவும் தேவையான அணுகலை இது கொடுக்கும் என்று நான் நம்புகின்றேன்.
அம்பேத்கரைட் விவரிப்புகளில் ஆயுதம் இருக்கவில்லை என்பதன் பொருள், ஜாதி வன்முறை மற்றும் அதன் விளக்கத்துக்கு நான் தகுதியனவளா என்பது குறித்தும் உள்வாங்கவேண்டியிருந்தது. பகுத்தறிவுவாதியான புரிதல் இல்லை என்பதன் அர்த்தம் என்பது, என்னுடைய பாவங்களுக்காக கடவுள் என்னைத் தண்டித்து விடுவார் என்று நான் நம்பியதாகும். முன்பே அம்பேத்கரை நான் புரிந்து கொள்ளவில்லை என்பதன் அர்த்தம் என்பது, நான் வெறும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவள் அல்ல நான் ஒரு தலித் என்று சொல்ல நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதாகும். அம்பேத்கரிஸ்ட் ஆக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அம்பேத்கர் ஒவ்வொருவருக்குமானவர்.
தமிழில்; கே.பாலசுப்பிரமணி
இந்த கட்டுரை, முதன் முதலில் ‘அம்பேத்கரும் நானும்’ என்ற தலைப்பில் நாளிதழில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் ஸ்மாஸ்போர்டு(Smashboard) என்ற மாற்று ஊடகத்தின் ஆலோசகர். #தலித்பெண்கள்போராட்டம் (#dalitwomenfight)என்ற
அமைப்பின் முன்னாள் ஆலோசகர். தவிர தலித் வரலாறு மாதத்திட்டம் அமைப்பின் துணை நிறுவனர். நெதர்லாந்தில் பணிபுரியும் இவர், அங்கேயே வசித்தும் வருகிறார்.