டி. ராஜா, கட்டுரையாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர்
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தியாகிகளின் தினம் முதன் முறையாக அர்த்தமுள்ள வகையில் கடைபிடிக்கப்படாமல் உள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு முன்னெச்சரிக்கையாக பொதுக்கூட்டங்களுக்கு சுயமாகவே தடைவிதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி, காலனி ஆதிக்கத்தின் கீழ், லாகூர் சதி வழக்கில் பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட்டனர்.
ஏற்கனவே நாடு பல்வேறு பிரச்னைகளில் உள்ளது. தற்போது அது தீவிரமான நோயை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலைக்கு பலமான அரசியல் சக்தியும், மக்கள் மீதான அக்கறையும், அர்ப்பணிப்பும் பகத்சிங்கைபோல் இருக்க வேண்டும். ஜெயிலில் இருந்தபோது, சிங் மற்றும் அவரது தோழர்களும், பிரிட்டிஷ் கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினர். நீதிமன்ற உத்தரவு 2 அனுமானத்தின் அடிப்படையில் இருக்கும். ஒன்று, இந்திய அரசிற்கும், பிரிட்டிஷ் அரசிற்கும் இடையே தொடரும் போரினால் இருக்கலாம். நாங்கள் போரின் ஒரு பகுதியாவோம். இரண்டாவது அனுமானம் நமக்கு சாதகமான ஒன்றாக இருக்கிறது. முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகிறது என்று கூறி அந்த கடிதம் முடிக்கப்பட்டிருந்தது.
1907ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி சிங் பிறந்தார். அவரது தந்தை மற்றும் மாமாக்கள் இரண்டு பேர் அவர் பிறந்த அன்றுதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்திருந்தனர். அவர்கள் நிலம் தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர். 19ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் மற்றும் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பஞ்சாப் எண்ணிலடங்கா நிலம் தொடர்பான போராட்டங்களை சந்தித்தது. அப்போது பிறந்தவர்களுக்கு எதிர்ப்பு என்பது ரத்தத்திலே ஊறிய ஒன்றாக இருந்தது. அதையே சிங்கும் செய்தார்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்:
இந்திய வரலாற்றின் இடைக்காலத்தின் மத்தியில் இருந்து, பஞ்சாப், அதன் எல்லைகளை மாற்றிக்கொள்வதில் குழப்பத்துடன் இருந்தது. வரலாற்றாசிரியர்கள் இந்த காலகட்டத்தை இந்திய – இஸ்லாமியர்கள் காலம் என்றழைக்கின்றனர். பாய் குருதாஸ் என்ற கவிஞர், தத்துவவாதி மற்றும் குருநானக்கின் சீடர், இதை கங்கை எதிர் திசையில் பாயத்துவங்கியது என்று விவரிக்கிறார். அப்போதுதான் சமுதாயத்தில் மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். பெரும்பாலான கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள், அவர்களில் சிலர் குரு நானக், கபிர் ரவிதாஸ், பாபா பாரித், மீரா பாய், நம்தேவ் மற்றும் ஏக்நாத் உள்ளிட்டோர் சமூக நிதர்சனங்களை மாற்று வழியில் கொண்டு செல்வதில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். அது சமூக புரட்சி ஏற்பட்ட காலம். அது புது வரலாறு எழுதப்பட்ட காலம். ராம் மற்றும் அல்லா ஆகியோரின் பெயர்களை ஒரே ஊக்கத்துடன் காபிர் உச்சரித்த காலம் மற்றும் அவர்களின் புதல்வர் தான் என்றும் அறிவித்தார். சூபி ஆன்மிகத்தையும், இந்து ஆன்மிகத்தையும் தைரியமாக ஒன்றாக இணைத்து, பாபா பாரித் பாடினார். அப்போது ரவிதாஸ் ஒற்றுமை என்ற யோசனை மற்றும் சமூக சூழலில் உண்மையான சமத்துவம் ஆகியவற்றை மறுவரையறை செய்தார். இந்த தத்துவவியலாளர்கள் தான் இச்சமூகதை ஏணியில் ஏற்றியவர்கள். அவர்கள் புதிய உலகத்திற்கான புதிய ஆன்மிகத்தை வரையறுத்தவர்கள். உண்மையில் கங்கை எதிர் திசையில் பாய்கிறது என்பதை உறுதி செய்தவர்கள். இவையனைத்தும் அந்த காலத்தின் பகுதிகளானது. பாரம்பரியம் இல்லை, உலாட் பன்சி என்றும் அல்லது தலைகீழாகவும் கபிரால் பிரபலமாக்கப்பட்டது. உலகுக்கு விளக்குவதற்கு மட்டுமல்ல, அதை மாற்றுவதற்கும் என்ற அடிப்படை மாற்றத்தின் பாரம்பரிய பரம்பரையில் வந்தவர் பகத்சிங். இந்த அறிவு கிடைக்கப்பெற்ற காலகட்டத்திற்கு பின்னர், இந்திய சூழலில் பொது உடைமைக் கோட்பாடு (Socialism) என்ற யோசனையை கொண்டுசெல்வது அவ்வளவு சிரமம் இல்லாமல் இருந்தது.
1920ல் நவுஜவான் பாரத் சபா மற்றும் இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ரிபப்ளிக்கன் சங்கத்தை நிறுவியதில் இருந்து, ஒரு அனுபவமுள்ள பொதுவுடமை புரட்சியாளராக தோன்றினார். பகத் சிங்கின் முழு வாழ்க்கையும் ஒரு பெரிய உத்வேகமாகவும், அறிவொளியை ஏற்றுவதாகவும் உள்ளது. அவரது நாட்களின் வரலாற்று சூழலுக்காக மட்டுமின்றி, அவரது வாழ்க்கையில் அவர் நமக்கு கற்றுக்கொடுத்த பெரிய பாடத்திற்காகவும் அவரை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சிங்குடன் சிறையில் இருந்தவரும், பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவருமான அஜய் கோஷ் கூறுகையில், எரிநட்சத்திரத்தைப்போல், குறைவான காலம் அரசியல் வானில் தோன்றி, அவர் மறைந்துவிட்டார். அவர் இறந்தபோது, ஏற்கனவே அவர் பல மில்லியன் கண்களை ஈர்த்துவிட்டார். அவர் புதிய இந்தியாவின் அடையாளமாகவும், மரணத்தைக் கண்டு அஞ்சாதவராகவும், ஏகாதிபத்திய ஆட்சியை தூக்கி வீச வேண்டும் என்ற உறுதிகொண்டவராகவும், நமது இந்த பரந்த நிலத்தை மக்களின் சுதந்திர மாநிலமாக்க வேண்டும் என்ற அவா கொண்டவராக இருந்தார்.
இக்கட்டுரையை எழுதியவர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்.
தமிழில்: R. பிரியதர்சினி