கௌஷிக் தாஸ்குப்தா, கட்டுரையாளர்
உணவு உலகத்தில் நறுமணம், சுவை ஆகியவற்றைப்போல் கட்டுக்கதைகளும் அதன் ஒரு பகுதிதான். உணவை சுவையின் அடிப்படையில் இனிப்பு, காரம் என்று பிரித்து வைத்திருப்பது மட்டுமல்ல சமூகத்தின் அடுக்குகளை சார்ந்து அதன் அடையாளம் மாறுபடுகிறது. இது அந்த காலத்தில் மட்டுமல்ல, இந்த காலத்திலும் நீ யாருடன், என்ன உணவு உண்ணுகிறாயோ அது உன் மதிப்பை காட்டும்.
டெல்லி சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தல், பிரச்சாரங்களில் ஈடுபட்ட உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரியாணி என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்தார். மேலும் அவர் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராடி வருபவர்களுக்கு கெஜ்ரிவால் பிரியாணி கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். இவரது இந்த இகழ்ச்சியான பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், ஆதித்யநாத்தின் நோக்கம் போராட்டக்காரர்களையும் குற்றம் சாட்டுவதாகும். போராட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்துவதாக கூறப்படுவதை வீடியோ எடுப்பவர்களிடம் இருந்து நான் பணத்தை பறிமுதல் செய்தேன். நான் கெஜ்ரிவாலைப்போல் உங்களுக்கு பிரயாணி வழங்கமாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன் என்று அவர் கூறினார்.
இனவாதத்திற்கும், உணவுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆதித்யநாத் அடிக்கடி கூறியுள்ளார். உத்தரபிரதேச முதலமைச்சரின் உரையில், தெற்காசிய முஸ்லிம்களின் முக்கிய உணவான பிரயாணி, சாதம், கறி ஆகியவற்றை உணவுகளில் வில்லனாக குறிப்பிடுகிறார். 26/11 தீவிரவாதத் தாக்குதலின் குற்றவாளி, அஜ்மல் கசாப் பிரியாணி கேட்கிறார் என்று பொது வழக்கறிஞர் உஜ்வால் நிக்கம் கூறியதைப்போல், இது இந்துத்துவ தேசியவாதத்தில் இருந்து வந்த அழுத்தமாகும். இது தடுக்க வேண்டிய இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதை என்று உஜ்வாலே பின்னாளில் கூறினார். இது போராளிகளுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான அலை என்றும் அவர் கூறினார்.
உணவு உலகத்தில் நறுமணம், சுவை ஆகியவற்றைப்போல் கட்டுக்கதைகளும் அதன் ஒரு பகுதிதான். உணவை சுவையின் அடிப்படையில் இனிப்பு, காரம் என்று பிரித்து வைத்திருப்பது மட்டுமல்ல சமூகத்தின் அடுக்குகளை சார்ந்து அதன் அடையாளம் மாறுபடுகிறது. இது அந்த காலத்தில் மட்டுமல்ல, இந்த காலத்திலும் நீ யாருடன், என்ன உணவு உண்ணுகிறாயோ அது உன் மதிப்பை காட்டும். பழைய ரோமாங்னோலின் அறுவடை பாடலில், முதலாளிக்கு தானியங்களும், விவசாயிகளுக்கு வைக்கோலும் கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. இது உலகின் நிறைய பகுதிகளுக்கு பொருந்தும். ஒழுக்கத்திற்கும், உணவிற்கும் இடையே உள்ள உறவு ஒரு படை போன்றது. அந்த காலத்தில் நீதி வழங்கும் விரஹஸ்பதி, பெங்காலின் உயர்சாதியினர் மீன் விரும்பி உண்பதை கண்டிப்பார் என்று தனது மெஜிஸ்டிரியல் பெங்காலிர் இத்தாஸ் என்ற புத்தகத்தில், வரலாற்று ஆய்வாளர் நிஹார் ரஞ்ஜன் ரே எழுதியுள்ளார். வெங்காயம் உண்பவர்கள் இகழப்படுவார்கள் என்று 5ம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீன பயணி பாஹீயான் தன் வரலாற்று குறிப்பில் குறிப்பிடுகிறார். அதற்கு இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வந்த, அதே நாட்டைச்சேர்ந்த பயணி, யுவான் சுவாங், தனது முன்னோடியின் கருத்துக்களை வழிமொழிந்தார். யாராவது வெங்காயம் பயன்படுத்தினார்கள் என்றால், அவர்கள் நகரத்திற்கு வெளியே விரட்டியடிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
இரக்கம் மனித பண்பு, என்பதை யுவான் சுவாங் கோடிட்டுக் காட்டுகிறார். ஏழாம் நூற்றாண்டு மன்னர் ஹர்ஷர், களைப்புற்ற பயணிகளுக்கு இலவச உணவுடன் தங்கும் விடுதிகளை சீன பயணிகள் கட்டியதாக எழுதியுள்ளார். உணவின் வரவாற்றில், அது மனிதர்களிடையே இணக்கத்தை உருவாக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக தம் பிரியாணியின் தோற்றம் குறித்த கதைகளில் ஒன்று அவாத் நவாப் பஞ்சத்தை போக்குவதற்காக எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று என்று கூறுகிறது.
எனவே உணவு என்று உங்கள் வீடு தேடி வருபவர்களுக்கு உணவளிக்க மறுக்காதீர்கள். தெரியாதவர்களாக இருந்தாலும் கூட உணவை பங்கிட்டு உண்ணுங்கள் என்பது தைத்திரிய உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரை. பைபிளில் உள்ள உணவை பகிர்ந்தளித்தல் என்ற வாசகம் கிறிஸ்தவமோ அல்லது அதைவிட மூத்த கட்டமைப்பான எந்த மாதத்தினுடைய சித்தாந்தம். இன் கேட்சிங் பையர், ஹவ் குக்கிங் மேட் அஸ் ஹியூமன் என்ற புத்தகத்தில், மானுடவியலாளர் ரிச்சர்ட் ராங்கம், நெருப்பு, மனிதர்கள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்படவேண்டும் என்பதை காட்ட முனைகிறது. மேலும், பெண்கள் சமையல் மட்டுமே செய்ய வேண்டும் என கட்டுப்படுத்தப்படுவதை நோக்கி இட்டுச்செல்கிறது என்று அறிவுறுத்துகிறார்.
தைத்திரிய உபநிடதத்தில் உணவு குறித்த ஒரு செய்யுள் உள்ளது. உணவிலிருந்து உலக உயிர்கள் படைக்கப்படுகின்றன. என்ன நேர்ந்தாலும் அவை பூமியில் வாழ்கின்றன. உண்மையில் உணவால் அவை வாழ்கின்றன. அதனுள்ளே அவைகள் இறந்து விடுகின்றன. உணவே அனைத்து உயிர்களுக்கும் முதன்மையாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தத்துவதத்திற்கு மனித சமூகம் எண்ணற்ற வழிகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது. சில கலாச்சாரங்களில் இறுதியில் ஓய்வெடுக்கும் இடத்தில் மக்கள் உணவை விட்டுச்செல்வர். உணவு, பாதுகாப்பு, அன்பு ஆகிய மூன்றும் மனிதனின் அடிப்படை தேவைகள் என்று உணவு பற்றி எழுதும் எழுத்தாளர் எம்.எப்.கே.பிஷர் கூறுகிறார். இவை மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. இவற்றை தனித்து, பிரித்து பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
டெல்லி ஷாஹின் பாகில், பஞ்சாப் விவசாயிகள் அனைத்து போராட்டக்காரர்களுக்கும் உணவளித்தார்கள். பெண்கள் வட்டமாக அமர்ந்து மாவு உருட்டி சப்பாத்தி தேய்த்தனர். தற்காலிக அடுப்புகள் அமைத்து ஆண்களும், பெண்களும் அண்டாக்களில் உணவு கிளறினார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பாளர்களைத்தவிர பலர் அந்நியர்கள், அவர்கள் சப்பாத்தியையும், பருப்பையும் சுவைத்து உண்டனர். இவ்வாறு அனைவரும் உணவு உண்ணும்போது, நாம் உடலால் வேறுபட்டாலும், மனதால் ஒன்றாகிறோம் என்ற ஃபிஷர் வார்த்தைகளை நினைவு கூறுவதுபோல் இருந்ததது.
லாங்கர் மையத்தின் சிறந்த சீக்கிய ஆராய்ச்சியாளர் மறைந்த ஹியூவ் மெக்லியோட், ஒரு காலத்தில் மதபோதகராக இருந்தவர், இதுவே சாதி அமைப்பு முறையின் மீதான பெரிய அடி என்று கூறுகிறார். பஷவுரா சிங் மற்றும் லூயிஸ் பெனெச் ஆகியோர் தொகுத்தமைத்த சீக்கிய ஆய்வுகள் குறித்த ஆக்ஸ்போர்ட் கையேட்டில், மற்றொரு மத ஆராய்ச்சியாளர், பொது சமையலறை என்பது பழக்கமாகிவிட்டால், அது சாதி அமைப்பை சுற்றியுள்ள சமூக வழக்கங்கள், உணவு தயாரிப்பது மற்றும் உண்பது ஆகியவற்றிற்கு சவால்விடும் என்று கூறியுள்ளார். ஷாஹின்பாகின் அடுப்புகள் எல்லோரும் ஒன்றுதான் என்று விளக்கிக் கூறியுள்ளது.
லாங்ரில் காரா பர்ஷத்தான், குருத்துவாரில் அல்வா என்று அழைக்கப்படுகிறது. வரலாற்று ஆய்வாளர் ஆலன் டேவிட்சன், பசைபோன்ற இனிப்பு தின்பண்டங்கள் 12ம் நூற்றாண்டில் அரேபியாவில் தோன்றியது என்று நம்புகிறார். ஆனால், இந்த கூற்று குறித்து மற்றவர்கள் வாதிடுகிறார்கள். உணவு ஆராய்ச்சியாளர் கே.டி.ஆச்சார்யா, இந்த வார்த்தை வேண்டுமானால் அரேபிய வாரத்தைகளாக இருக்கலாம். ஆனால், உணவு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தோற்றம் இருக்கலாம், அதுவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்புகிறார். மனித சமூகங்களைப்போலவே, உணவின் வரலாறும் உள்ளது. ஒவ்வொரு உணவின் தோற்றத்தையும் வரலாற்றையும் கண்டுபிடிக்கும் முயற்சி நடந்துகொண்டேயிருக்கிறது. இதுபோன்ற தொடர் ஆராய்ச்சிகள் பிரியாணி உள்ளிட்ட நிறைய உணவு வகைகளை முகலாயர்கள் காலத்தை சேர்ந்தது என்று கூறுவது உண்மை என்பதை புலப்படுத்துகிறது. இதுபோன்ற வெளிப்படையாக பொருந்தாத உணவு கலாச்சாரங்கள் ஒன்றாக கூடி பல்வேறு வகையான உணவு செய்முறைகளை, இந்தியா, மத்திய ஆசியா மற்றும் பெர்சியாவில் தோற்றுவித்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர் லிசி கொலிங்கம் கூறுகிறார்.
பிரியாணிக்கு எதிரான இனவாதத்தின் அடிப்படையிலான வன்மம், பல்வேறு புதிய உணவு வகைகள் கண்டுபிடிக்கப்படுவதை தடுக்கிறது. மேலும் அவை உணவு வரலாற்றை குறைப்பது நேர்மையற்ற செயல். தி இடிபில் ஹிஸ்டிரி ஆப் ஹியுமானிட்டி என்ற புத்தகத்தில் எழுத்தாளர் டாம் ஸ்டாண்டேஜ் குறிப்பிட்டுள்ளதைப்போல், போரின்போது சக்தி வாய்ந்த ஆயுதம் வாளோ, துப்பாக்கியோ, அணுகுண்டோ அல்ல, உணவு அளிப்பதை தடைசெய்வதாகும் என்று குறிப்பிடுகிறார். குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்து மக்கள் நடத்திவரும் போராட்டத்தில் உத்தரபிரதேச போலீசார் உணவையும், போர்வைகளையும் பறிமுதல் செய்தது தற்செயலான செயல் அல்ல என்றே தோன்றுகிறது.
தமிழில்: R. பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.