திருத்தப்படும் இந்திய வரலாறு வருங்கால தலைமுறையிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்து தேசியவாத கருத்துடன் வெளியான பாடப்புத்தகங்கள் வருங்கால தலைமுறையினரிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்!

Christophe Jaffrelot, Pradyumna Jairam

BJP has been effective in transmitting its version of Indian history : இந்திய வரலாறு இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும் நமது முன்னோர்கள் மூலம் வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் வழிமுறையாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அத்தகைய வரலாறு முந்தைய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் முந்தைய ஆட்சியாளர்களால் திரிக்கப்பட்டும், முக்கிய நிகழ்வுகள் இருட்டடிப்பு செய்யப்படும் உருவாக்கப்பட்டுள்ளதாக தற்போதைய அரசு குற்றம் சாட்டி வருகிறது. முந்தைய ஆட்சியாளர்கள், குறிப்பாக சுதந்திரத்துக்கு பிறகு சுமார் 40 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி வரலாற்றை புறந்தள்ளி வரலாற்றை திரித்து இருட்டடிப்பு செய்துவிட்டது என்றும் பா.ஜ.கா. குற்றம் சாட்டுகிறது.

இதனடிப்படையிலேயே பா.ஜ.கா அரசு தனது கண்ணோட்டத்தில் இந்திய வரலாற்றை திருத்தி எழுதி அதை வருங்கால தலைமுறையினரை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொடுத்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநில பள்ளி பாடப்புத்தகங்களில் இந்து தேசியவாத சித்தாந்தம், மற்றும் தேசத்திற்கான இந்துமத மன்னர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த போரட்டங்கள் மற்றும் தியாகங்களை முன்னிலைப்படுத்தி வரலாற்று பாடப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ல் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.கா அரசு பொறுப்பேற்றதும் அதன் ஓர் அங்கமான ஆர்.எஸ்.எஸ் நாட்டின் கல்வியை “இந்திய மயமாக்கும்” முயற்சியாக “பாரதிய நிதி ஆயோக்” என்ற கல்வி சீர்த்திருத்தங்களுக்கான குழுவை அமைத்தது. இதன் எதிரொலியாக புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “நமது வரலாற்றை ஒருங்கிணைந்து படைக்க வேண்டும். வரலாற்றுக்கு புத்துயிரூட்டி மெருகேற்றுவதோடு, அதை திருத்தி எழுத வேண்டியது இந்திய நாட்டின் பொறுப்பு மட்டுமல்லாது மக்களாகிய நமக்கும் வரலாற்று நிபுணர்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது என்று குறிப்பிட்டார். மத்தியில் உள்ள பா.ஜ.கா ஆட்சியின் முக்கிய சீர்த்திருத்தங்களில் அதன் அங்கமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இளம் தலைமுறையினருக்கு வரலாற்றை கொடுப்பது அவர்களுக்கு தேசிய அடையாளத்தை அளிப்பதோடில்லாமல், மதச்சார்பற்றவர்கள் என்ற போர்வையில் முந்தைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய வரலாறு உண்மையிலேயே யதார்த்த வரலாற்றை பிரதிபலிப்பதாக இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கல்வி சீர்த்திருத்தத்திற்கான பாரதிய ~pக்~h நிதி ஆயோக் என்ற அமைப்பு டினான்ந்த் பத்ரா தலைமையில் அமைக்கப்பட்டது. அவர் பாடப்புத்தகங்களில் காணப்பட்ட இந்து மதத்தையும் அதன் உணர்வுகளையும் காயப்படுத்தும் வகையில் அமைந்த அம்சங்களை நீக்க உத்தரவிட்டார். சங் பரிவார் அமைப்பின் அங்கமான வித்யா பார்தி என்ற அமைப்புக்கு நீண்ட காலமாக பாத்ரா என்பவர் பொதுச் செயலாளராக இருந்தார். அப்போது டெல்லி பல்கலைக்கழ வரலாற்று பாடத்தில் இடம் பெற்றிருந்த “300 ராமாயணங்கள்” என்ற பாடத்தை நீக்கினார். முதலாவதாக இந்துக்கள் மட்டுமே இந்த மண்ணின் மைந்தர்கள். 2வதாக புராண இதிசாக பாடல்களில் பழம்பெரும் இந்தியாவை பற்றி சிறப்புற கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் இந்தியாவின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாக உள்ளன. 3வதாக இந்தியாவின் மீதான மொகலாய மன்னர்களின் படையெடுப்பு இந்திய வரலாற்றின் இருண்ட காலம்.

4வதாக சுதந்திர போரட்ட இயக்க வராலாறு என்பது மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களை முன்னிலைப்படுத்தி வரையறுக்கப்பட்ட வரலாறாகவே உருவாக்கப்பட்டதால் அதனால் இந்து தேசவாத தலைவர்களின் பங்களிப்புக்கு அது பேராபத்தாக அமைந்து விட்டது என்றெல்லாம் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்து தேசவாதிகளுக்கான வரலாற்று ஆய்வாளர் சுதர்சன் ராவ் 2014ல் வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் புராணங்கள், இந்திய இதிகாசங்கள் போன்றவற்றில் குறிப்பிடுப்பட்டுள்ள முக்கிய நிகழ்வுகள் நடந்த இடங்களை பற்றிய வரலாற்று ஆராய்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டுள்ளார்.

To read this article in English

கடந்த 2018ல் அப்போதைய மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா தான் ராமாயணத்தை வணங்குவதாகவும் அது ஒரு வரலாற்று ஆவணம் என்றும் கூறினார்.  இந்து தேசியவாத தலைவர்கள் வரலாற்றை திருத்தி எழுதுவது தற்போது பா.ஜ.கா ஆளும் மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது. தேசப்பற்றை போதிக்கும் வகையில் கற்பித்தலில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டுமென்று ராஜஸ்தான் மாநில பா.ஜ.கா அரசின் கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி வலியுறுத்துகிறார். இதனால் நாட்டின் வரலாறு குறிப்பிட்ட மாநிலத்தின் வரலாற்றில் இந்து தேசியவாத மன்னர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு மாறிவிடுகிறது. ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சரின் இந்த கருத்துகள் 2017ல் வெளியான அம்மாநில பள்ளிகளின் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு வெளியான பாடப்புத்தகங்களில் ஜே.என்.எஸ்.யூ முன்னாள் தலைவர் கன்கயாஸ் போன்ற தேசவிரோதி இந்த ராஜஸ்தான் மண்ணில் பிறக்கவில்லை என்றும் தேசப்பற்றும் தேசமுமே முக்கியம் என்ற அம்சங்களை வலியுறுத்தும் விதமாகவும் வரலாற்றுப் பாடங்கள் இடம் பெற்றுள்ளன.

அதே போல சுதந்திர போரட்ட வரலாற்றில் இடம் பெற்ற தலைவர்களில் சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரலாற்று புத்தகங்கள் வெளியிடப்பட்டதாகவும் பா.ஜ.கா அரசு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில பள்ளி வரலாற்று பாடப்புத்தகங்களில் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு பற்றிய பாடங்கள் 8ம் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பி.ஆர். அம்பேத்காரை இந்து சமூக சீர்திருத்தவாதி என்று குறிப்பிட்டுள்ளது. பி.ஆர். அம்பேத்காரின் முயற்சிகள் சுவாமி தயானந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹேக்ட்வார் ஆகியோருக்கு இணையானது என்று கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசின் பள்ளிகளில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான ஒவ்வொரு வரலாற்று பாடப்புத்தகங்களிலும் இந்துத்வா கோட்பாடுகளை நிறுவிய வினாயக் தாமோதர் சர்வாக்கர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சர்வாக்கர் மிகவும் போற்றப்படும் சுதந்திர போராட்ட வீரராகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. அரசுக்கு வரலாற்றை கற்றுக் கொடுப்பது என்பது குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், தனிநபர்களையும் முன்னிலைப்படுத்தியே ஆக வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது.

இதன் மூலம் பள்ளி மாணவ – மாணவிகளுக்கான தேசப்பற்றை குறிப்பிட்ட இலக்கில் போதிக்க இயலுமென்று கூறுகிறது. ஆனால் இந்தியா முழுவதும் இந்த குறிக்கோள் எட்டப்படவில்லை. சில மாநிலங்களில் இந்திய வரலாற்றின் இந்த புதிய பரிமாணங்கள் வருங்கால தலைமுறையினருக்கு சமுகமான முறையில் கொண்டு செல்லப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சி வருமானால், இந்த வரலாறு மீண்டும் திருத்தப்படுமா? அல்லது இந்து தேசியவாத கருத்துடன் வெளியான பாடப்புத்தகங்கள் வருங்கால தலைமுறையினரான மாணவ – மாணவிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். “வரலாறு தானாக திரும்புகிறது” என்பதே மறுக்க முடியாத உண்மை.

தமிழில் மொழி பெயர்ப்பு : த.வளவன்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close