Advertisment

பிரெக்ஸிட் கிரிமியாவுக்கு புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு: ஐரோப்பாவின் உரிமையை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 எம்.இ.பி-கள்

இந்தியாவுக்கு வருகை தரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 27 உறுப்பினர்களில், குறைந்தது 22 பேர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள வலதுசாரி அல்லது தீவிர வலதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
brexit, european union, anti immigrants, prime minister narendra modi, modi eu mp meet, eu meet on jammu and kashmir, பிரெக்ஸிட், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, kashmir, meps, uk, france, germany, italy, poland, czech republic, slovakia, Tamil indian express

brexit, european union, anti immigrants, prime minister narendra modi, modi eu mp meet, eu meet on jammu and kashmir, பிரெக்ஸிட், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, kashmir, meps, uk, france, germany, italy, poland, czech republic, slovakia, Tamil indian express

சுபஜித் ராய், கட்டுரையாளர்

Advertisment

இந்தியாவுக்கு வருகை தரும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 27 உறுப்பினர்களில், குறைந்தது 22 பேர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள வலதுசாரி அல்லது தீவிர வலதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இத்தாலியில் பரவலான குடியேற்றத்திற்கு எதிரானவர்களும் இங்கிலாந்தில் பிரெக்சிட்டுக்கு ஆதரவானவர்களும். புலம்பெயர்வுக்கு எதிரான பிரான்சில் உள்ள மரைன் லு பென்னின் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஜெர்மனியில் தீவிர வலதுசாரிகளான ஸ்தாபன எதிர்ப்பு மாற்று டெய்ச்லாந்தினரும் உள்ளனர்.

அவர்கள் பின்வருமாறு:

போலந்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இவர் நாஜியைப் பற்றிய விஷயங்களில் குழப்பங்களை ஏறபடுத்தியதற்காக ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்.

பிரான்சில் இருந்து ஒரு நாடாளுமன்ர உறுப்பினர். இவர் ரஷ்ய அதிகாரிகளுடன் சென்று கிரிமியா - ரஷ்ய இணைப்பிற்கு ஆதரவளித்தார். அஜர்பைஜானில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு கண்மூடித்தனமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். ஆளும் அலியேவ் ஆட்சியின் மன்னிப்புக் கேட்பவராக அவர் கருதப்பட்டார்.

போலந்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். “#WhyNotSvastika” அதாவது “#ஏன் ஸ்வஸ்திக் கூடாது?” என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ளார். இது நாஜியுடன் தொடர்புடைய ஸ்வஸ்திக் சின்னத்தைப் பற்றிய குறிப்பு - இது அமேசானில் கிடைக்கும் சோவியத் கருப்பொருள் விற்பனைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய டுவிட்டில், “இரண்டாம் உலகப்போரின்போது பாடழிவு இருந்தபோதிலும் கருக்கலைப்பு செய்பவர்களுக்கு மத்தியில் ஏன் இவ்வளவு யூதர்கள் இருக்கிறார்கள்” என்று ஆச்சரியப்பட்டுள்ளார். இது கோபத்தை தூண்டியது.

குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர்:

ரைஸ்ஸார்ட் ஜார்னெக்கி: பிப்ரவரி 2018 இல், ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒரு அரசியல்வாதிக்கு எதிராக நாஜி அவதூறுக்காக அவரை அதன் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலந்தின் தேசியவாத-பழமைவாத சட்டம் மற்றும் நீதிக் (பி.ஐ.எஸ்) கட்சிக்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்னெக்கியை பதவி நீக்கம் செய்வதற்கு ஆதரவாக 447-க்கு 196 பேர் வாக்களித்தனர்.

போலந்தில் ஆளும் பிஐஎஸ் கட்சி நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துவதாக ரோசா துன் என்பவர் ஒரு ஜெர்மனி ஒளிபரப்பாளரிடம் கூறியதை அடுத்து, போலந்தின் தாராளவாத-பழமைவாத சிவிக் தளம் கட்சியின் போட்டி நாடாளுமன்ற உறுப்பினரான ரோசா துன் என்பவருக்கு எதிராக ஜார்னெக்கி ஒரு கேவலமான வார்த்தையைப் பயன்படுத்தினார். அதனால், ஒரு மூத்த உறுப்பினரை பதவி நீக்கம் செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தியது இதுவே முதல் முறை.

தியரி மரியானி: ஜூலை 2015 இல் ரஷ்ய அதிகாரிகளுடன் மரியானி 2014 இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கு ஒரு பயணம் மேற்கொண்டார். நேர்காணல்களிலும் கூட்டங்களிலும் அவர் இணைப்பிற்கு ஆதரவு தெரிவித்தார். “கிரிமியன் நாடாளுமன்றத்தின் தைரியத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஏனென்றால் கடினமான சூழ்நிலையிலும் அதிக ஆபத்து இருந்தபோதிலும் இந்த முடிவை எடுத்துள்ளது.” 2016 ஆம் ஆண்டில், அவர் தேசிய சட்டமன்றத்திலும் செனட்டிலும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்கவும், அனைத்து ரஷ்ய இணைப்புகளுக்கு ஆதரவளிக்கவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார். ஐரோப்பிய கவுன்சிலின் (PACE) நாடாளுமன்ற சபைக்கு பிரெஞ்சு தூதுக்குழுவின் உறுப்பினராக இருந்த அவர் அஜர்பைஜானில் உரிமை மீறல்களுக்கு கண்மூடித்தனமாக அதரவு அளித்ததாக மரியானி மீது குற்றம் சாட்டப்பட்டது.

கோஸ்மா ஸ்லோடோவ்ஸ்கி: நவம்பர் 2018 இல், ஸ்லோடோவ்ஸ்கி, நாஜியுடன் தொடர்புடைய ஸ்வஸ்திக் சின்னத்தைக் குறிக்கும் #WhyNotSvastika (#ஸ்வதிக் ஏன் கூடாது) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி டுவிட் செய்தார்.ஏனென்றால், லிதுவேனியாவின் சமூக ஊடக பயனர்களின் ஆன்லைன் பிரச்சாரத்திற்கு அமேசான் தனது சோவியத் கருப்பொருள் வர்த்தகப் பொருட்களை திரும்பப் பெற வேண்டும் என்று பகிரங்கமாக பதிலளித்தார். அமேசான் சமீபத்திய முறையீட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புவதாக அவர் கூறினார். “சோவியத் ஒன்றியம் ஒரு சர்வாதிகார மற்றும் குற்றவியல் நாடு. அமேசான் போன்ற ஒரு நிறுவனம் அதை அறிந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்

போக்டன் ஸோன்கா: அக்டோபர் 2017 இல் போக்டன் ஸோன்கா தனது டுவிட்டர் பக்கத்தில், “பாடழிவு இருந்தபோதிலும் கருக்கலைப்பு செய்பவர்கள் மத்தியில் எப்படி இவ்வளவு யூதர்கள் இருக்கிறார்கள்” என்று ஆச்சரியப்பட்டதாகக் கூறினார். போலந்தின் யூத சமூகம் இதை “யூத-விரோத” சம்பவங்களில் ஒன்றாகப் பார்ப்பதாக போலந்து அதிபருக்கு எழுதினர். சோன்காவின் கட்சி, சட்டம், நீதி, ஆழ்ந்த பழமைவாதம் மற்றும் தேசியவாதத்தைக் கொண்டது. மேலும், புலம் பெயர்ந்தோருக்கு எதிரான கட்சி. அது தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அதிபருக்கு எழுதிய கடிதம் ஒரு கவலையான குரலாக இருந்தது. சோன்காவின் கருத்து சில யூத விரோத கருத்துகளைக்கொண்ட குழுக்களால் ஆதரிக்கப்படுகிறது.

ஜோனா கோப்சின்ஸ்கா: 2018 ஜனவரியில், போலந்து அரசாங்க செய்தித் தொடர்பாளரான இவர் போலந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையை அவர் ஆதரித்தார். நாடாளுமன்றம் நாஜி ஜெர்மனி தனது மண்ணில் செய்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எந்தவொரு பொறுப்பையும் போலந்து ஏற்க வேண்டும் என்று பரிந்துரைப்பது சட்டவிரோதமானது என்றது. இதை எதிர்த்த இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போலந்து பிரதமர் மேட்டூஸ் மொராவெக்கியை சந்திக்க தனது தூதருக்கு இந்த மசோதாவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த அறிவுறுத்தினார். இந்த மசோதா மூலம், ‘போலந்து மரண முகாம்கள்’ போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது வரலாற்றை தூய்மைப்படுத்துதல் என பரலவாக கருதப்படுகிறது என்று கோப்சின்ஸ்கா டுவிட்டரில் எழுதினார்.

ஜெர்மன் நாஜி அரசாலும் சோவியத் கம்யூனிச அரசாலும் 20 ஆம் நூற்றாண்டில் மிருகத்தனமான சர்வாதிகார ஆட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், யூதர்கள் மற்றும் பிற நாடுகள் மீது நடந்த கொடூரமான குற்றங்கள் பற்றிய உண்மையை காண்பிப்பதே இந்த சட்டத்தின் நோக்கம்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள்:

பிரான்ஸ்: மரியானி, ஜூலி லெச்சான்டக்ஸ், மாக்செட் பிர்பகாஸ், வர்ஜீனி ஜோரோன், பிரான்ஸ் ஜேமெட், நிக்கோலஸ் பே ஆகிய மரைன் லு பென் கட்சியின் தேசிய பேரணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர்.

இங்கிலாந்து: ப்ரெக்ஸிட் கட்சியைச் சேர்ந்த நாதன் கில், டேவிட் ரிச்சர்ட் புல், அலெக்ஸாண்ட்ரா பிலிப்ஸ், ஜேம்ஸ் வெல்ஸ் மற்றும் தாராளவாடஹ் ஜனநாயகவாதிகள் கட்சியைச் சேர்ந்த (லிபரல் டெமக்ரேட்ஸ்) பில் நியூட்டன் டன் ஆகியோர் உள்ளனர்.

ஜெர்மனி: மாற்று டாய்ச்லாந்திலிருந்து பெர்ன்ஹார்ட் சிம்னியோக், லார்ஸ் பார்ட்டிக் பெர்க் ஆகிய உறுப்பினர்கள் உள்ளனர்.

இத்தாலி: புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரிக் கட்சிகளின் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கியானா கன்சியா, சில்வியா சர்தோன், ஃபுல்வியோ மார்டூசியெல்லோ மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த குயிசெப் ஃபெராண்டினோ ஆகியோர் உள்ளனர்.

போலந்து: மைய - வலதுசாரி நீதி மற்றும் சட்டக் கட்சியைச் சேர்ந்த கோஸ்மா ஸ்லோடோவ்ஸ்கி, போக்டன் சோன்கா, எல்ஸ்பீட்டா ரஃபால்ஸ்கா, ஜோனா கோப்சின்ஸ்கா, கிரெச்கோர்ஸ் டோபிசோவ்ஸ்கி மற்றும் ரைஸ்ஸார்ட் ஸார்னெக்கி ஆகியோர் உள்ளனர்.

மற்றவர்கள்: பெல்ஜியத்தில் ஒரு வலதுசாரி குழுவைச் சேர்ந்த டாம் வாண்டென்ட்ரிஸ்; செக் குடியரசைச் சேர்ந்த டோமாஸ் ஸ்டெகோப்ஸ்கி, ஸ்பெயினிலிருந்து ஹெர்மன் டெர்ட்ச் மற்றும் ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த பீட்டர் பொல்லாக் ஆகியொர் உள்ளனர்.

இந்த தூதுக்குழுவின் அமைப்பை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டுவிட்டரில் விமர்சித்துள்ளார். அதில் “இந்த அதிகாரப்பூர்வமற்ற குழு பெரும் அளவில் தீவிர வலதுசாரி பாசிச சார்பு கட்சிகளிலிருந்து இடம்பெற்றுள்ள இது  பாஜகவுடன் உறவு கொண்டுள்ளது. இது நம்முடைய எம்.பி.க்கள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பதை விளக்குகிறது. ஆனால், மோடி அவர்களை வரவேற்கிறார். 3 முன்னாள் முதல்வர்கள் மற்றும் 1000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்திய அரசியல் கட்சிகளின் மூலம் தேர்வு செய்கிறதா?”

 

Bjp Narendra Modi Sitaram Yechury
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment