Advertisment

அமிர்த கால கேள்விகள்

இந்திய அரசிடம் கேட்க என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன. இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் என்னிடம் இந்த கேள்விகளை கேட்கின்றனர்..

author-image
WebDesk
New Update
P Chidambaram writes

P Chidambaram writes

ப. சிதம்பரம்

Advertisment

நாம் இப்போது நாட்டின் வளர்ச்சிக்கு இலக்காக வைக்கப்பட்டுள்ள அமிர்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றும் உலகத்தில் அனைத்துமே நன்றாக நடப்பதாக நம்பவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.  ஆனாலும் தேசப்பற்று இல்லாமல் இருப்பதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இந்திய அரசிடம் கேட்க என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன.  இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்  என்ற நம்பிக்கையில் மக்கள்   என்னிடம் இந்த கேள்விகளை கேட்கின்றனர்.

இந்திய பொருளாதாரத்தின் நிலை மிக மோசமாக இருந்தாலும் இந்தியாவில் வறுமை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதை அரசு நம்புகிறதா?  இந்திய மக்கள் தொகையின் கடைநிலையில் இருக்கும் 50 சதவீத  மக்களில் மொத்தமாக 3 சதவீதம் தான் செல்வம் இருக்கிறது. இதை ஆக்ஸ்பார்ம் சொல்கிறது. அவர்களை ஏழைகளாக அரசு கருதாதா? இந்திய மக்கள் தொகையில் சுமார் 22.4  கோடி மக்கள் அதாவது 16 சதவீத மக்கள் வறியவர்கள் என்று  உலகளாவிய வறுமை கூட்டெண் சொல்கிறது. இதை அரசும் ஒப்புக் கொள்கிறது. இந்த சதவீதம் எவ்வளவாக இருந்தாலும் அரசு எதற்காக ஏழைகளை பற்றி பேசுவது இல்லை? கடந்த 2023 பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில்  90 நிமிடங்கள் படிக்கப்பட்ட  பட்ஜெட் அறிக்கையில் வறுமை என்ற வார்த்தை  எதற்காக இரண்டு முறை மட்டுமே இடம் பெற்றது?

வேலை வாய்ப்பு

இந்தியாவில் வேலையில்லா மக்களின் எண்ணிக்கை  47.5 கோடி என்றும் அவர்களில் 48 சதவீத மக்களே வேலைக்கு செல்கிறார்கள்  என்பது சரி தானா?  மீதமுள்ளவர்கள் ஏன் வேலைக்கு செல்வதில்லை? அல்லது வேலை தேடவில்லை? 2020 ஜனவரி முதல் 2022 அக்டோபர் வரை வேலைக்கு செல்லும் ஆண்கள் 45 லட்சமும் பெண்கள் 96   லட்சமும் குறைந்து விட்டனர் என்பது உண்மை தானா? வேலையில்லா திண்டாட்ட அளவு 7.5  என்று சி.எம்.ஐ.இ அமைப்பு சொல்வதை அரசு ஒப்புக் கொள்கிறதா? வறுமை என்ற வார்த்தை பட்ஜெட்டில் குறிப்பிடப்படாத போலவே வேலையில்லா திண்டாட்டம் என்ற வார்த்தையும் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

வறுமை

உலகில் பட்டினியால் வாடுவோரின்  பட்டினி குறித்த அட்டவணையில் 2022ம் ஆண்டு  மொத்தமுள்ள 123 நாடுகளில் இந்தியா 101 வது இடத்தில் இருந்து 107 வது இடத்துக்கு போய்  விட்டது என்பது அரசுக்கு தெரியுமா?சரிவிகித உணவு கிடைக்காததால் இந்திய பெண்களில் 57 சதவீதம் ரத்த சோகையினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.  36 சதவீத குழந்தைகள்  வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்கள்.  19  சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றிய  குழந்தைகள்.  சரிவிகித ஊட்டச்சத்து இல்லாமல் தான் மேற்கண்ட குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பது அரசுக்கு தெரியுமா?  மத்திய உணவு திட்டத்துக்காக 2023-24ம் பட்ஜெட்டில் நடப்பு ஆண்டை காட்டிலும் ரூ. 1200 கோடி குறைக்கப்பட்டது அரசால் விளக்க முடியுமா? உணவு விநியோக  மானியத்தை 2023-24 ம் ஆண்டுக்கு ரூ. 80000 கோடி குறைத்திருப்பதை அரசால் நியாயப்படுத்த முடியுமா?

உரமானியம்

விளைச்சலை பெருக்க விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களுக்கான  மானியத்தை 2023-24 ம் பட்ஜெட்டில் ரூ. 60 000  கோடி குறைத்துள்ளது ஏன் என்று அரசால் விளக்க முடியுமா? இதனால் உரங்களின் விலையும் சாகுபடி செலவும் அதிகரித்தால் உணவு தானியங்களின் விலையும் அவற்றில் இருந்து  தயாரிக்கப் படும் உணவுப் பொருளின் விலையும் அதிகரிக்காதா?  இதனால் ஏழை குடும்பங்களின் உணவு நுகர்வு குறைந்த ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு விடாதா?

கல்வி

ஒரே ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் பள்ளிகள் இந்தியாவில் 117000  இருக்கின்றன.  இவற்றில் 16 சதவீதம் அதாவது 16630 பள்ளிகள் மத்திய பிரதேசத்தில் மட்டுமே இருக்கின்றன என்பது உண்மையா? முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரே ஆசிரியர் எப்படி அனைத்து பாடங்களையும் நடத்த முடியும் என்று அரசு விளக்க முடியுமா?  எதனால் இந்த பள்ளிகளுக்கு அதிக ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை? பயிற்சி  பெற்ற ஆசிரியர்கள் இல்லையா அல்லது இவர்களுக்கு ஊதியம் கொடுக்க அரசிடம் பணம் இல்லையா? இந்த பள்ளிகளில் எந்த விதமான  கல்வியை மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்?

ராணுவம்

 ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் ராணுவத்தில் சேர ஆர்வமாமா இருக்கிறார்கள் என்பது சரிதானா? மத்திய காவல் படையில் 84405  காலியிடங்கள் இருக்கின்றன என்பது அரசுக்கு தெரியுமா? இவற்றுக்கு தொடர்ச்சியாக ஆள் எடுத்தால் தானே காலி இடங்களை உடனுக்குடன் நிரப்ப முடியும்? இந்த வேளையில் சேர விரும்புபவர்களில்  பெரும்பான்மையினர் சமூகரீதியாக பிற்படுத்தப் பட்ட என்பது அரசுக்கு தெரியுமா ?

தொழில்நுட்ப கழகங்கள்

இந்தியாவில் மொத்தம் உள்ள 23 தொழில் நுட்ப கழகங்களில் அரசு அனுமதித்துள்ள 8153   இடங்களில் 3253 இடங்கள்  காலியாக இருக்கின்றன என்ற தகவல் சரிதானா? இந்திய தொழில்நுட்ப கழகங்களும் மத்திய பல்கலை கழகங்களும் ஒன்றிய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுவதால் ஏன் இந்த ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது? காலியாக இருக்கும் இடங்களில் பெரும்பாலானவை பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடிகள் என்ற தகவல் சரிதானா?  தகுதியான ஆசிரியர்கள் கிடைக்காமல்  இந்த இடங்கள் காலியாக இருக்கின்றனவா அல்லது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க அரசிடம் பணம் இல்லையா?

இந்திய குடியுரிமை

கடந்த  9 ஆண்டுகளாக  ஆண்டுக்கு லட்சம் பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டு விட்டு இந்தியாவை விட்டு வெளியேறுகின்றனர் என்பது சரிதானா?  கடந்த 2022 ம் ஆண்டில்  225000 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டு விட்டு இந்தியாவை விட்டு வெளியேறியது உண்மையா? நன்கு படித்த இவர்கள் ஏன் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள் என்று அரசு விசாரணை நடத்தியதா?

பதில்  இருக்கிறதா?

அமிர்த காலத்தில்  சொர்க்க வாசல் வழியாக சொர்க்கம் செல்பவர்கள் ஆனந்தத்தில் மிதப்பார்கள்  என்பது  ஒரு நம்பிக்கை.  மேற்கண்ட கேள்விகளுக்கு அரசு பதில் கொடுத்தால் சொர்க்க வாசல் கதவுகள் அல்ல. குறைந்த பட்சம் சன்னல் கதவுகளாவது திறக்கப் பட்டு லட்சக்கணக்கான  மக்களுக்கு ஆனந்தம் கிடைக்காவிட்டாலும் உணவும், வேலை வாய்ப்புமாவது  கிடைக்கும். இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?

தமிழில்: த. வளவன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment