ALOK BANSAL
கட்டுரை ஆசிரியர் முன்னாள் கடற்படை அதிகாரியாக இருந்தவர். தற்போது இந்தியா பௌண்டேசன் என்ற ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும், புது தில்லி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் துணை பேராசிரியராகவும் உள்ளார்.
Chief of Defence Staff : சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட மிக முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று முப்படை தலைமைத் தளபதி (chief of Defence Staff) பதவி , இந்த பதவி முப்படை சேவைகளுக்குள் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யப்படும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. இதுவே, இந்திய பாதுகாப்புப் படையினரின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது என்றால் அது மிகையாகது. மேலும், 1999 இல் கே சுப்ரமண்யம் தலைமையிலான கார்கில் மறுஆய்வுக் குழுவும், ஜெனரல் டி.பி சேகத்கரின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர்களின் குழுவும் பரிந்துரைத்த ஒன்றே. முப்படை பாதுகாப்பு தலைமை தளபதியின் பொறுப்பு மற்றும் செயல்தன்மை குறித்து இன்னும் சரியான விதிமுறைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், அவர் நான்கு நட்சத்திர பாதுகாப்பு தளபதியாகவும், இந்திய பாதுகாப்பு விஷயங்களில் அரசாங்கத்திற்கு ஒற்றை புள்ளி ஆலோசகராக செயல்படுபவராக இருப்பார் என்பதேயே எல்லா சாத்தியக்கூறுகளும் நமக்கு சொல்கின்றன. தலைமைத் தளபதி மூன்று படைகளையும் ஒருங்கிணைப்பதால், முக்கிய வேறுபாடுகளைக் குறைக்கும்.
நவீன போர்களை ஒவ்வொரு படையும் தன்னிச்சையாக போராட முடியாது. தற்போதைய இந்திய முப்படைகள் காலனித்துவ சிந்தனையாலும்,ஆங்கிலேயேர்களின் பெரும் போர்களுக்காகவும் கட்டமைக்கப்பட்டதாகும்.இதனால், இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு, முப்படைகளின் மறுசீரமைப்பு கட்டாயம் தேவைப்படுகிறது. மேலும், எதிர்காலப் போர்கள் தீவிர விவகாரங்களாகவும், தெளிவு இல்லாமலும் இருக்கப்போகிறது. அத்தகைய சூழ்நிலையால் போர்யுக்தியில் ஒற்றுமை தேவைப்படுகிறது, இது சி.டி.எஸ் தலைமையிலான ஒரு ஒருங்கிணைந்த கட்டளை அமைப்பைக் கொண்டிருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும்.
இதன் முக்கியத்துவம் இவ்வாறாயிருந்தும், பாதுகாப்பு அமைச்சகம் அரசியல் ஆக்கப்படதாலும், அது குடுமைப்பணி (civil service) அதிகாரத்துவ நெரிசலில் சிக்கப்படதாலும் இந்த முக்கியமான வெற்றிடம் நிரப்பாமல் இருந்தன.
பாதகாப்பு தலைமை தளபதி மற்றும் துணைத் தலைமைத் தளபதி (வி.சி.டி.எஸ்) ஆகியோரை பரிந்துரைத்த கார்கில் மறுஆய்வுக் குழுவின் தன்மைகளை ஆராய்வதற்கு அப்போதைய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அம்மச்சர்கள் குழுவும் முப்படை கூட்டு திட்டமிடல் ஊழியர்களை கொண்ட தலைமைத் தளபதி வேண்டும் என்பதையே தங்களது வாதங்களாக முன் வைத்தன.
அதன்படி, முத்தரப்பு சேவை தலைமையகம் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் (HQ IDS) என்ற அமைப்பு அக்டோபர் 2001 இல் உருவாக்கப்பட்டது. ஆனால், தலைமை பாதுகாப்புத் தளபதி உருவாக்கப்பட்டால் குடியாட்சி கவிழ்ப்பது மிகவும் எளிதாகிவிடும் என்ற கருத்தை உருவாக்குவதன் மூலம் தலைமை பாதுகாப்புத் தளபதி நியமனத்தை நிறுத்துவதில் குடுமைப்பணி அதிகாரத்துவங்கள் வெற்றி பெற்றன. இதன் விளைவாக, ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அதாவது, 2001 இல் அமைப்பு உருவாக்கப்பட் டாலும், கடந்த 18 ஆண்டுகளாக ஒரு தலைமை இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
துணைத் தலைமைத் தளபதி பதிவியை ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் (HQ IDS) என்ற பதிவியாய் மறுசீரமைத்து நமது அரசாங்கம்.இந்த பதவி மூன்று நட்சத்திர அதிகாரிக்கு சமமானது. இவர், தலைவர் தலைமைக் குழுத் தளபதி என்று அழைக்கப்படும் சி.ஐ.எஸ்.சி-க்கு நாட்டின் ராணுவ ஒருகிணைப்புப் பற்றிய அறிக்கையை அளிப்பார்.
தற்போது, மூன்று சேவைகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யும் திறன் சி.ஐ.எஸ்.சி-க்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், மூன்று படைத் தலைவர்களில் மூத்தவர் ஒருவர் சி.ஐ.எஸ்.சி-இன் தலைவராக நியமிக்கப்படுகிறார். படைத் தளபதியாய் இருக்கும் வரையில் தான் சி.ஐ.எஸ்.சி-இன் தலைவராகவும் இருக்க முடியும். படைத் தளபதியில் இருந்து ஓய்வுப் பெற்றால், சி.ஐ.எஸ்.சி-இன் பதவியும் காலியாகி விடும். இதனால், ஒரு நிரந்தரமான பாதுக்கப்பு தலைமை தளபதி(chief of Defence Staff ) தேவைப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தளபதி (சி.டி.எஸ்) என்பதற்கு பதிலாக, இத்தனை நாள் நாம் முப்படைகளில் ஒருவரை தலைமைக் குழுத் தளபதியாய் வைத்திருந்தோம்.
சி.டி.எஸ் நியமனம் இந்தியாவின் முப்படைகளை மிகவும் பயனுள்ளதாக மாற்றும். இருப்பினும், சி.டி.எஸ் என்ற அலுவலகத்தை உருவாக்குவது மட்டும் போதாது. ஒருங்கிணைந்த போர் யுக்திகளுக்கு ஏற்றார் போல் பாதுகாப்பு அமைச்சகமும் (MoD) தன்னை மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும். சி.டி.எஸ் உலகளாவிய பாதுகாப்பு சூழல் மற்றும் மூன்று சேவைகளின் செயல்பாட்டை நன்கு புரிந்துகொள்ளும் பெருமூளை வீரராக இருக்க வேண்டும். அவரை, ஏனோ தானென்று சுழற்சி முறையில் நியமனம் செய்யாமல் ; விரிவான நேர்காணலுக்குப் பின் அரசாங்கம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்ந்தெடுத்தப் பின்பும் இதில் நிறைய தர்ம சங்கடங்கள் உள்ளன. உதாரணமாக, ஒவ்வொரு படைத் தளபதிகளும் தங்கள் பணிக்குள் சி.டி.எஸ் உள்நுழைவதை விரும்ப மாட்டார்கள். இந்த வகையான விசயங்களை நாம் சமாளிக்க அமெரிக்காவில் தற்போது நடைமுறையில் உள்ள கோல்ட்வட்டர்-நிக்கோல்ஸ் சட்டத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம். உதாரணமாக , இந்தியாவின் அனைத்து பாதுகாப்பு பிரிவின் நிலங்கள் மற்றும் மூலதன வரவுசெலவுத் திட்டங்கள் எல்லாம் சி.டி.எஸ் இன் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஒவ்வொரு படைத் தலைவரும் படைகளைச் தயார்ப்படுதுதல், ஒழுங்கமைத்தல் மற்றும் பயிற்றுவிப்பதற்கு மட்டுமே பொறுப்பாக இருக்க வேண்டும்.
மேலும், சி.டி.எஸ் திறம்பட செயல்பட, அவர் பாதுகாப்பு மந்திரி மற்றும் அவர் மூலமாக பிரதமருக்கு நேரடியாக அணுகம் அளவிற்கு அவருக்கு அதிகாரம் அளித்தல் வேண்டும் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.