scorecardresearch

இந்தியாவும் நிலவின் புவிசார் அரசியலும்

டெல்லி தற்போதைய விண்வெளி அமைப்புக்கும் சந்திரன் தொடர்பாக அதன் விருப்பங்களுக்கும் எழுந்து வரும் சவால்களைக் கடுமையாகப் பார்க்க வேண்டும். நாட்டின் நிலவுக்கு பயணம் செய்யும் திட்டத்தின் மூலம் அவற்றைத் தொடர உத்திகளை உருவாக்க வேண்டும் என்று சி ராஜா மோகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் நிலவின் புவிசார் அரசியலும்

சி. ராஜா மோகன் எழுதுகிறார்: டெல்லி தற்போதைய விண்வெளி அமைப்புக்கும் சந்திரன் தொடர்பாக அதன் விருப்பங்களுக்கும் எழுந்து வரும் சவால்களைக் கடுமையாகப் பார்க்க வேண்டும். நாட்டின் நிலவுக்கு பயணம் செய்யும் திட்டத்தின் மூலம் அவற்றைத் தொடர உத்திகளை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு, அமெரிக்கா தலைமையிலான 8 நாடுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆர்டிமிஸ் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகின்றன. இது நிலவில் விரிவடையும் மனித நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் ஒரு பரந்த கொள்கைகளை கடைப்பிடிப்பதற்கான ஒரு ஒப்பந்தம் – இந்த ஒப்பந்தங்கள் – கனிம வளங்கள் முதல் நிலவில் காலனிகளை அமைப்பது வரை அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஜப்பான், லக்சம்பர்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 8 நடுகள் கையெழுத்திட்டுள்ளன. அதன் பிறகு பிரேசில், தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் இணைந்தன.

கடந்த மாதம் இருதரப்பு உச்சி மாநாட்டிற்காக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தபோது, ​​இருதரப்புக்கும் இடையே இந்த ஒப்பந்தம் தொடர்பாக சில பூர்வாங்க அதிகாரப்பூர்வ விவாதங்கள் நடந்தன. தனித்தனியாக, இருதரப்பு விவாதத்தைத் தொடர்ந்து நடந்த நாற்கர மன்றத்தின் ( Quadrilateral Forum) உச்சிமாநாட்டில், மோடியும் பைடனும், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்களுடன் சேர்ந்து, விண்வெளியில் ஒரு புதிய குவாட் பணிக்குழுவை அமைக்க ஒப்புக்கொண்டனர். விண்வெளியின் வளர்ந்து வரும் வணிகமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கல் குவாட் தலைவர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

தொழில்நுட்ப திறன்கள் வளரும்போது, ​​நாடுகள் பூமிக்கு அருகிலுள்ள இடத்திற்கு அப்பால் (அல்லது கடல்சார் சொற்களில் உள்ள பழுப்பு நீர் விண்வெளி விவாதத்தை வடிவமைக்கின்றன) கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளையும் ஆழமான விண்வெளி ஆராய்ச்சியையும் (நீல நீர்) செய்கின்றன.

இந்த போக்குகள் நிலவை கூர்மையான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன. விண்வெளி போட்டி சக்திகள் சந்திரனுக்கு வழக்கமான அணுகலைத் முயற்சிக்கின்றன – அரசிய கௌரவத்தால் இயக்கப்படும் 20ம் நூற்றாண்டின் சந்திரனில் தரை இறங்குவதற்கு எதிராக – அவர்களின் கவனம் சந்திரன் சுற்றுப்பாதை (cis lunar space) மண்டலம் அல்லது பூமி மற்றும் சந்திரனைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைகளுக்கு இடையில் உள்ள தொகுதி மீது திரும்பியது.

சமீபத்திய ஆண்டுகளில் சந்திரன் சுற்றுப்பாதை (cis lunar space) இடத்தில் எந்த நாட்டின் நடவடிக்கையும் சீனாவை விட அதிக லட்சியம் கொண்டதாக இல்லை. சீன நிலவு தெய்வமான சாங்கேயின் பெயரிடப்பட்ட பெய்ஜிங்கின் சந்திரனுக்கு பயணம் செய்யும் திட்டம் 2007ல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், சந்திரனின் சுற்றுப்பாதையில் சீனா இரண்டு விண்கலங்களை வைத்துள்ளது. நிலவில் இரண்டு ரோவர்களை (சாங்கே 3 மற்றும் 4) தரையிறக்கியது. பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலவின் தொலைதூரப் பகுதியில் முதன்முதலாக தரையிறங்கிய சிறப்பை சாங்கே 4 பெற்றது. கடந்த ஆண்டு ஏவப்பட்ட சாங்கே 5 சந்திரனில் இருந்து பொருட்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது. கடைசியாக சந்திர பாறையுடன் திரும்பிய திட்டம் 1976ல் சோவியத் லூனா 24 ஆகும்.

சீனாவின் லட்சியங்கள் மிகப் பெரியவை. அடுத்த நிலவுப் பயண திட்டங்கள் – சாங்கே 6,7, 8 – நிலவின் தென் துருவத்தில் ஒரு சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை நிர்மாணிக்க பங்களிக்க முடியும். அந்த சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையம் சந்திரனைச் சுற்றும் ஒரு விண்வெளி நிலையத்தைக் கொண்டிருக்கும், இது பல வேலைகளைச் செய்யும் பல புத்திசாலித்தனமான ரோபோக்களைக் கொண்டிருக்கும். சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்திற்கு உதவ, பெய்ஜிங் இந்த பத்தாண்டு முடிவதற்குள் லாங் மார்ச் சிஇசட் -9 என்ற சூப்பர் ஹெவி ராக்கெட்டை உருவாக்கும் என்று நம்புகிறது. இது நிலவுக்கு குறைந்தபட்சம் 50 டன் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஒப்பீட்டுக்காக 2019 பிப்ரவரியில் இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திரயான் -2 இன் சுமார் நான்கு டன் எடையை கொண்டு சென்றது.

சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையம் (ILRS) திட்டத்தில் பங்கேற்க மற்ற நாடுகளை அழைப்பதன் மூலம் சீனா தனது நிலவு திட்டங்களுக்கு ஒரு சர்வதேச பரிமாணத்தையும் சேர்த்துள்ளது. ஒரு காலத்தில் முன்னணி விண்வெளி செயல்பாட்டாளராக இருந்த ரஷ்யா இப்போது ஐ.எல்.ஆர்.எஸ் -இல் சீனாவுடன் கைகோர்த்திருக்கிறது. சீனாவின் முயற்சிகளை நிறைவு செய்வதற்காக ரஷ்யா தனது சந்திரனின் லூனா தொடர் ஆய்வுகளுக்கு புத்துயிர் அளிக்கிறது.

கடந்த மாதம் குறிப்பிடப்பட்ட லூனா -25ன் செலுத்துதல் இப்போது மே 2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லூனா 25, 26 மற்றும் 27 ஆகியவை சாங்கே 6,7 மற்றும் 8 உடன் இணைந்து விரிவான நிலவில் தரையிறங்குவதற்கான உளவு மற்றும் தீவிர துல்லியத்திற்கான உத்திகளை உருவாக்கும். இந்த திட்டங்கள் இணைந்து சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் – சந்திர தளத்தின் கூட்டு கட்டுமானம் – 2026 முதல் தொடங்குகிறது.

புவிசார் அரசியல் கருத்தாய்வுகள் ரஷ்யா சீனாவை நோக்கி நகர்த்துவதால், விண்வெளி ஒத்துழைப்பு அமெரிக்காவிற்கு எதிரான அவர்களின் ராஜதந்திர கூட்டுறாவு உத்தியின் விரிவாக்கமாக மாறியுள்ளது. அமெரிக்காவுடனான விண்வெளி ஒத்துழைப்பை நிறுத்தப்போவதாகவும் ரஷ்யா அச்சுறுத்துகிறது. இது பனிப்போரின் போது தோன்றிய ஒத்துழைப்பும் அதன் பின்னர் விரிவடைந்ததாகும்.

1960களில் நிலவுக்கு ஓடிய அமெரிக்கா, 1970களின் முற்பகுதியில் அப்போலோ திட்டத்தை நிறுத்தியது. பெய்ஜிங்கின் விண்வெளி திட்டத்தின் பரந்த முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் இராணுவ களங்கள் மற்றும் மாஸ்கோவுடனான அதன் ஆழமான ஒத்துழைப்பு ஆகியவை நிலவை நீண்டகாலமாக புறக்கணித்ததில் இருந்து அமெரிக்காவை உலுக்கியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் 2024க்குள் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவில் வைக்கும் திட்டத்தை அறிவித்தது. அதன் புதிய திட்டத்துக்கு கிரேக்க தெய்வமான அப்பல்லோவின் இரட்டை சகோதரியின் பெயரான ஆர்டிமிஸ் என்று பெயரிடப்பட்டது.

ஆர்டிமிஸ் திட்டத்தின் அமைப்பு சீனாவின் ஐ.எல்.ஆர்.எஸ் போன்றது. இது சந்திரனைச் சுற்றிவரும் நிலவு நிலப்பரப்பு, சந்திர நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. மேலும் நிலவின் தென் துருவத்தில் பனிக்கட்டி மற்றும் எதிர்கால மனித செயல்பாட்டைத் தக்கவைக்கும் ஒரு மேற்பரப்பு இருப்பை உள்ளடக்கியது. சீன சவாலை எதிர்கொண்டு சந்திர ஆய்வில் அமெரிக்காவின் தலைமையை மீட்டெடுப்பது பற்றி வாஷிங்டனில் உள்ள அவசரத்தைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. சீனாவைப் போலவே, அமெரிக்காவும் தனியாகச் செல்ல முடியாது என்று முடிவு செய்து, தனது ஆர்ட்டிமிஸ் திட்டத்திற்கான கூட்டாளிகளைத் தேடுகிறது.

வளர்ந்து வரும் சந்திர செயல்பாட்டின் விளைவுகளில் ஒன்று தற்போதைய சர்வதேச சட்ட ஆட்சியின் மீதான அழுத்தம் – 1967 வெளி விண்வெளி ஒப்பந்தத்தை (Outer Space Treaty) மையமாகக் கொண்டது. வெளி விண்வெளி ஒப்பந்தம் கூறுகிறது, “சந்திரன் மற்றும் பிற வான் பொருட்கள் உட்பட விண்வெளி, இறையாண்மையின் உரிமைகோரல், பயன்பாடு அல்லது ஆக்கிரமிப்பு அல்லது வேறு எந்த வழியிலும் தேசிய ஒதுக்கீட்டிற்கு உட்பட்டது அல்ல” விண்வெளி என்பது அனைத்து மனிதகுலத்தின் மாகாணம் என்றும் அதன் பயன்பாடு நன்மைக்காகவும் அனைத்து நாடுகளின் நலன்களுக்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அது அறிவிக்கிறது.

வெளி விண்வெளி ஒப்பந்தத்தின் பரவலான உலகளாவிய அலை மிகவும் ஊக்கமளிக்கிறது; ஆனால் பூமியில் வணிக மற்றும் இராணுவ ஆதாயத்திற்காக விண்வெளியை சுரண்டுவதற்கான திறன்கள் இல்லாதபோது அதை கொண்டாடுவது எளிது. அந்த நிலைமை மாறி வருகிறது, விண்வெளி தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள் மற்றும் பெரிய சக்திகளின் வளங்களின் விரிவான முதலீட்டிற்கு நன்றி.

வெளி விண்வெளி ஒப்பந்தத்தின் பல விதிகள் அதிகளவில் போட்டியிடும் விளக்கங்களுக்கு உட்பட்ட முதல் நகர்வுகளால் உருவாக்கப்பட்ட நிலவு புதிய உண்மைகளால் பாதிக்கப்படக்கூடியவை. பெரும் வல்லரசுகளிடையே பனிப்போருக்குப் பிந்தைய நல்லிணக்க முறிவு நிலவு போட்டியை கூட்டியது. நிலவுக்கான நீண்டகால பூகோள அரசியல் போட்டிக்கு களம் அமைத்தது.

சந்திரன் தொடர்பாக வெளி விண்வெளி ஒப்பந்தம் ஆட்சியைப் பாதுகாக்க மற்றும் வெளிப்படைத்தன்மை, இயங்குதன்மை, அவசர உதவி மற்றும் அமைதியான சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்க அமெரிக்கா ஆர்டிமிஸ் ஒப்பந்தங்களை ஊக்குவிக்கும் சூழல் இருக்கிறது. ஆனால், ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், அது இந்தியா போன்ற பிற விண்வெளிப் பயண நாடுகளை தேர்வு செய்ய வைக்கிறது.

ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தங்கள் டெல்லியை நிலவின் மீதான இந்தியாவின் விருப்பங்கள் குறித்து விரிவான மதிப்பாய்வைத் தொடங்கவும், வலுவான தேசிய சந்திர மிஷன் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் ஆழமான கூட்டுறவு மூலம் அவற்றைத் தொடர உத்திகளை உருவாக்கும். இந்தியாவின் விண்வெளி செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அதன் சர்வதேச நலன்களைப் பாதுகாப்பதற்கும் டெல்லி ஒரு வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பைச் சட்டமாக்க வேண்டும். தற்போதைய விண்வெளி அமைப்புக்கு வளர்ந்து வரும் சவால்களை இந்தியா கடுமையாகப் பார்க்க வேண்டும். விண்வெளியின் தன்மை பற்றிய அதன் கடந்தகால அரசியல் அனுமானங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெளிப்புற விண்வெளி ஒப்பந்தத்தின் சாரத்தை வலுப்படுத்தும் புதிய உலகளாவிய விதிமுறைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்.

இந்த கட்டுரையை எழுதியவர் சி ராஜா மோகன், தெற்காசிய ஆய்வு நிறுவனம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் சர்வதேச விவகாரங்கள் துறையின் ஆசிரியர்களில் ஒருவர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: China space mission moon quad meet isro india geopolitics

Best of Express