Abhijit Banerjee , Esther Duflo
குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்களுக்கான தேசிய பதிவு, ஆகியவை, தலையிடுகின்ற ஒரு அதிகாரத்தை அறிமுகம் செய்து, குடியுரிமை என்பது அடிப்படையா என்ற கேள்விக்குள் இட்டுச் செல்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!
ஜனநாயவாதியாக இருக்க நமது தேசிய இயக்கத்தில் பதிவு செய்ய ஒவ்வொருவருக்கும் நாம் ஏன் கதவுகளைத் திறக்கக்கூடாது. திறப்போம், சகிப்புத்தன்மையுடன் உள்ளடக்குவோம்.
2014-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் வேட்பாளர், நரேந்திரமோடி அதிகமான நிர்வாகம், குறைவான அரசு என்ற முழக்கத்தை முன் வைத்தார். இது பல்வேறு வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய அரசு தங்களுக்கு மிகக் குறைவாக வழங்கும்போது தங்கள் வாழ்க்கை அச்சுறுத்துவதாக உள்ளது என்று அவர்கள் உணர்ந்தனர். குறைவான அரசு, அதிக நிர்வாகம் இரண்டுக்கும் இடையேயான முரண்பாட்டில் அது வெளிப்படையாக தோன்றுகிறது. வெறுப்புகளைக் காட்டிக்கொள்ளாமல் அரசு திறம்பட செயல்படக் கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களுக்கான தேசிய பதிவு ஆகியவற்றின் மீதான இப்போதைய விவாத த்தை இந்த ஆலோசனை எனும் காட்சிப்பெருக்கி கண்ணாடி வழியே அணுகினால், மேன்மையான சிந்தனையாக இருக்கும். கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை சேகரித்து வாழ்க்கையில் நேரத்தைச் செலவிடும் மக்களுக்கு, கேள்விகளுக்கான தொடர்புடைய பதில்களை பதில் அளிப்பவர்களிடம் இருந்து பெறுவது எவ்வளவு கடினம் என்பதில் நாம் அக்கறை உடையவர்களாகவே இருக்கின்றோம். நம்மில் சிலருக்கு உலகின் பாஸ்போர்ட் படிவங்களைப் பயன்படுத்துதல், தங்களின் விருப்பம் ஆகியவை கிட்டத்தட்ட தானியங்கி தனமாக இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பாரகனாஸ் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் “நீங்கள் எங்கு பிறந்தீர்கள்” என்று கேட்டதை நாம் நாம் நினைவில் கொள்ள வேண்டும். “இந்த கிராமத்தில் இல்லை, இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் தூரத்துக்கு அப்பால்” என்று தெற்கு அல்லது கிழக்கு நோக்கி தெளிவற்று சுட்டிக்காட்டுவார்கள். “இங்கே எப்படி வந்தீர்கள்” என்று கேட்டால், “என்னுடைய தாய் அடுத்த கிராமத்தில் இருந்து வந்தாள், ஆனால், அவள் நான் பிறந்த கிராமத்தில்தான் திருமணம் செய்து கொண்டாள். அப்போது எனது தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டார். எங்களை திருப்பி அனுப்பி விட்டார்.
அப்போது எனக்கு 6 அல்லது 8 வயதுதான் இருக்கும். நாங்கள் எங்கள் கிராமத்துக்குத் திரும்பிச் சென்றோம். ஆனால், எங்கள் தாய்வழி மாமா எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக இந்த கிராமத்தில் உள்ள ஒரு பெண் எங்களுக்கு வசிக்க இடம் கொடுத்தார்.” “நீங்கள் பிறந்த கிராமத்தின் பெயர் தெரியுமா?” “என் தாயுக்குத்தான் தெரியும் அவர் இறந்து விட்டார்.” பிறந்த இடத்துக்கு நேரே அடையாளம் தெரியாத குறியீட்டை(9999 நமக்கு சரியாக நினைவிருக்கும் பட்சத்தில்) நாம் குறிப்பிடுவோம். இந்த பெண் , உண்மையான குடியுரிமை அந்தஸ்தை உருவாக்கிக் கொள்ள அவரது வாழ்க்கை குறித்த போதுமான தகவல்களை தர வேண்டும் என்பதை குடிமக்களுக்கான தேசிய பதிவு எதிர்பார்க்கிறது. அப்படி அவரால் முடியாவிட்டால், இடம் பெயர்ந்த இந்துகளுக்காக, அல்லது இடம்பெயர்ந்த சீக்கியர்களுக்காக, இடம் பெயர்ந்த கிறிஸ்தவர்களுக்காக , புத்தமத த்தை சேர்ந்தவர்களுக்காக, ஜெயின்களுக்காக குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு இல்லை.
தங்களது குடியுரிமையை அவர்கள் நிரூபிக்காவிட்டால், அவர்கள் தவறிழைத்ததாக்க் கருத இடமிருக்கிறது. ஒரு வெளிநாட்டவர் என்ற நிலை ஏற்படும். நாடற்றவர் என்ற தவிர்க்கமுடியாத சூழல் ஏற்படும். அல்லது சில நல்லெண்ணம் கொண்ட அதிகாரிகளைப் பொறுத்து, அவர்கள் எந்த அந்தஸ்துக்கு தகுதியுடையவர்கள் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். அது ஒரு அபாயகரமான சூதாட்டம் என்ற ஒரு விஷயத்தை , நமது களப்பணியில் இருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இது ஒரு குறைந்தபட்ச அரசோ அல்லது அதிகபட்ச நிர்வாகமோ அல்ல. இது ஒரு தலையிடுகின்ற அதிகாரத்தை அறிமுகம் செய்து, குடியுரிமை மக்களின் வாழ்க்கையில் அடிப்படை என்ற கேள்விக்குள் இட்டுச் செல்கிறது. உங்கள் வாழ்க்கை முழுவதும் எங்கு வாழ்ந்தீர்களோ அங்கே உங்களுக்கு குடியுரிமை இல்லையெனில், யார் ஒருவரும் உங்களை விரும்பவில்லை எனில், நீங்கள் யார்? இதனால்தான், பல இளைஞர்களுக்கு இது குறித்து கவலைகொள்கின்றனர்.
ஆனால், அரசின் கவலையானது இங்கே வேறு ஏதாவதாக இருக்கவேண்டும். குடியுரிமை தொடர்பான இந்த அனைத்து உரையாடல்கள், இடம் பெயர்வோர் பிரச்னையாக இருக்கின்றனர் என்று கொடுக்கப்பட்டபடி எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது போலத் தோன்றுகிறது. அசாமில் இந்த யோசனை, அதன் தர்க்கரீதியான முடிவாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. குடிபெயர்ந்தோர் அனைவரும், அவர்களின் மதம் எதுவாக இருந்தாலும், அவர்கள் பிரச்னைக்குரியவர்கள் என்று எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இங்கே வெறுக்கப்படுகிறது. போதுமான வெளிநாட்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், குடிமக்களுக்கான தேசிய பதிவும் வரவேற்புபெறவில்லை.
கடினமான சூழல்களுக்கான நல்ல பொருளாதாரம் என்ற அண்மையில் வெளியான எங்களுடைய புத்தகத்தில், பொருளாதாரத்தில் திறன் குறைந்த இடம்பெயர்வோருக்கு எதிராக உண்மையில் எந்த ஒரு பொருளாதார நிகழ்வும் இல்லை என்று நாங்கள் ஆய்வு செய்தோம். திறன் குறைந்தோர் இடம் பெயர்வின் போதான பெரும் காலகட்டத்தின் போது கூட இதர திறன் குறைந்த இடம் பெயர்வோரின் வருவாய் பாதிக்கப்படவில்லை என்று எங்களுக்கு கிடைத்த அனைத்து ஆதாரங்களும் நிரூபிக்கின்றன. இதில், ஒரு பகுதியில் பொருளாதாரத்துக்காக இடம்பெயர்வோர் வாய்ப்புகளுக்கான பசியோடு கொண்ட நோக்கத்தைக் கொண்டிருப்பதாகையால், அவர்களுக்கு வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சில உள்ளூர்காரர்கள் விருப்பத்தின் பேரில் வேலைக்கு சேருக்கின்றனர். ஒரு பகுதியில், குடிபெயர்போர், தங்கள் வேலைவாய்ப்பைத் தேடுவது மட்டுமின்றி, உணவுப் பொருட்களை வாங்குகின்றனர். தங்கள் புதிய சம்பாத்தியத்தைக் கொண்டு முடிவெட்டிக் கொள்கின்றனர், எல்லாவற்றையும் மேற்கொள்கின்றனர்.
இந்த புதிய குழுவினர் அதுவரை கொண்டிருந்த இடத்துக்கு அந்தஸ்து கோரி, உள்ளூர் அரசு வேலை எனும் இறுதி பரிசை பெற்று இறுதியில் மதிப்பை அடைகின்றனர். நடுத்தர வகுப்பினரின் உண்மையான பொருளாதார சவால்கள் என்பது இதனால் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஆனால், இது மோசமான அரசு நிர்வாகத்துக்கான அறிகுறியாகும். அரசு வேலை என்பது, இப்போதைக்கு, வீழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் 2019-ம் ஆண்டில் 1.90 கோடி இந்தியர்கள் ரயில்வேயில் 63,000 கீழ்நிலைப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்திருக்கின்றனர். நாம் தவறான ஒன்றை ப் பெற்றிருக்கின்றோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், மிகவும் முக்கியமானது உள்ளூர் மக்கள் தொகைக்கான பொருளாதார நீதி குறித்த இதே கேள்வியில், இபோதைக்கு எதிர்கொள்ளப்படவில்லை. எதிர்காலத்தில் எழுந்தால், (ஏற்கனவே எழுந்திருந்தால்) இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இன்னும் கூடுதலான பிளவுக்கான வழி ஏற்பட்டிருக்கும். சென்னைக்கு இடம் பெயர்ந்த வங்கத்தைச் சேர்ந்த இந்துவின் தமிழ் பேசும் குழந்தைகள் மாநில அரசில் வேலைவாய்ப்புப் பெற தகுதி பெற்றவரா? பீகாரில் இருந்து மகாராஷ்டிராவுக்கு குடிபெயர்ந்த அங்கு வளர்ந்து மராத்தி பேசும் குழந்தையின் நிலை என்ன? நீங்கள் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படும்போது, தனியார் துறைகளில் நல்ல வேலைவாய்ப்புகள் என்ன இருக்கின்றன? மாநில எல்லைகளுக்குள் ஏன் நிற்கிறீர்கள்? மும்பை நகர வேலைவாய்ப்புக் மும்பைக்கார ர்களுக்கு என்று மட்டும் கொடுக்கப்பட வேண்டுமா? இடம்பெயர்வோர் குறித்த அச்ச உணர்வு என்பது ஒரு கெட்ட ஆவியாக இருக்கிறது. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அந்த ஆவியைத் திரும்பவும் ஒரு பாட்டிலில் அடைத்து தூக்கி எறிய வேண்டும்.
நல்லவழியைப் பெற, மக்களின் தாய்வீடு ஒன்றாக இருத்தல் என்பதை நோக்கமாக இந்தியா தழுவி இருக்க வேண்டும். ஜனநாயவாதியாக இருக்க நமது தேசிய இயக்கத்தில் பதிவு செய்ய ஒவ்வொருவருக்கும் நாம் ஏன் கதவுகளைத் திறக்கக்கூடாது. திறப்போம், சகிப்புத்தன்மையுடன் உள்ளடக்குவோம். பாகிஸ்தானில் அஹமதீகள் ஏன் துன்படுத்தப்படுத்தபடக்கூடாது(அவர்கள் அப்படியேதான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தெற்கு ஆசிய முஸ்லீம்கள் நாடு திரும்புவதை வரவேற்பது அடிக்கடி தோல்வியடைகிறது.) அல்லது இந்து மதத்தைச்சேர்ந்த தமிழர்கள் இலங்கையில் அசெளக்கர்யமாக இருக்கிறார்களா? நாம் 1.3 பில்லியன் மக்கள். மேலும் சில லட்சம்பேர், அந்த உருகும் பானையில் திடீரென மறைந்து விடுகின்றனர். உண்மையில் நாம் உலகத்துக்கான வழிகாட்டும் விண்மீனாக இருக்கப் போகிறோமோ?
பானர்ஜி, டஃப்லோ இருவரும், எம்.ஐ.டி பேராசிரியர்கள், வெளிநாட்டில் குடியிருக்கும் இந்தியர்கள். 2019-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்.
இக்கட்டுரை ஆசிரியர்கள் பானர்ஜி மற்றும் டஃப்லோ ஆகியோர் எம்ஐடியில் பொருளாதார பேராசிரியர்களாக உள்ளனர். அவர்கள் 2019 ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றனர்.
தமிழில் - கே.பாலசுப்பிரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.