நீதிமன்றம் தலையிடாமல் இருந்திருந்தால், ஜஹாங்கிர்புரியில் முஸ்லிம்களின் அழிவு எதனோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு பேரழிவாக இருந்திருக்கும்.
இந்தியாவில் வகுப்புவாத வன்முறைக்கு நீண்ட வரலாறு உண்டு. சமீபத்திய நிகழ்வுகள் அவற்றோடு ஒத்தவையா அல்லது வேறுபட்டவையா? இத்தகைய நிகழ்வுகள் அரசியல் ரீதியாக மற்றும் சமூக ரீதியாக என்ன வகையான ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன?
மத ஊர்வலங்கள் பற்றிய தகவல்களுடன் ஆரம்பிக்கிறேன். இத்தகைய ஊர்வலங்கள் வரலாற்று ரீதியாக வகுப்புவாத வன்முறைகளுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்துள்ளன என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும். 1950-95 காலக்கட்டத்தில் வகுப்புவாத வன்முறை தொடர்பாக ஸ்டீவன் வில்கின்சனுடன் (யேல் பல்கலைக்கழகம்) இணைந்து உருவாக்கிய தரவுத்தொகுப்பில், தோராயமாக ஒவ்வொரு நான்காவது வன்முறைக்கும் மத ஊர்வலமே காரணமாக இருந்திருக்கிறது. .
மத ஊர்வலங்களில் பங்கேற்பது என்பது கூட்டு பிரார்த்தனை மற்றும் பக்தி, ஆன்மீக மறுசீரமைப்பு, இழப்பின் துக்கம், உடைந்த வாழ்க்கையை சரிசெய்வது, இரக்கத்தை விரிவுபடுத்துவது மற்றும் மன்னிப்பு தேடுவது அல்ல. இத்தகைய ஊர்வலங்கள் தீவிர அரசியல் சார்ந்ததாக இருக்க முடியும் , இருந்திருக்கவும் முடியும். பெரும்பாலும் மதத்தில் இருந்து வகுப்புவாதம் வரை இது சீராக உருமாறியது. தெற்காசியாவில் வகுப்புவாதம் எப்போதும் மதத்திலிருந்து வேறுபடுகிறது. இது ஒரு வகையான அரசியல் உயர் நிலையை கொண்டிருப்பதுடன் மதத்தில் வன்முறைப் பயன்பாடு அடிக்கடி நேரிடுகிறது. மதவாதம் என்பது வாழ்க்கையின் ஆழமான அர்த்தங்களைப் பற்றியதாக இருக்கலாம், ஆனால் வகுப்புவாதம் என்பது அதிகாரத்தை வலுக்கட்டாயமாக வலியுறுத்துவது அல்லது பழிவாங்குவதற்கான இரத்தக்களரி தேடலைப் பற்றியதாக உள்ளது. பெரும்பாலும் வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டு வழங்கப்படுவதாக இருக்கிறது. இடைக்காலத்தில் சில முஸ்லீம் ஆட்சியாளர்கள் ஹிந்துக்கள் மீது அடக்குமுறை கொண்டிருப்பவர்களாகவும் அல்லது வன்முறையாளர்களாகவும் இருந்திருக்கின்றனர். முஸ்லீம் ஆட்சியாளர்கள் அல்லது பிரபுக்களுடன் எந்த தொடர்பும் இல்லாத ஏழை முஸ்லிம்களைக் கூடநவீன இந்து வகுப்புவாதிகள், குறிவைத்து பழிவாங்க விரும்புகிறார்கள்.
இவ்வாறு மத ஊர்வலங்களும், வன்முறைகளும் இணைந்து நிகழ்வது இன்று வியப்பிற்குரியது அல்ல. அசாதாரண நிலை என்பது வேறு இடத்தில் இரண்டு மடங்காக உள்ளது. எங்கள் தரவுத்தொகுப்பின் மூலம், ராம நவமி மற்றும் ஹனுமான் ஜெயந்தி ஆகியவை வன்முறையைத் தொட்டுப்பார்ப்பதற்கான முக்கியமான மத ஊர்வலங்களாக அறியப்படவில்லை. மூன்று சதவீத வன்முறைகள் மட்டுமே ராம நவமியுடன் தொடர்புடையவை. பீகாரில் உள்ள சாய்பாசாவில், 1970 இல் - நடந்த ஹனுமன் ஜெயந்தி நிகழ்வு ஒரு வன்முறையை முன்னெடுப்பதாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி, மொஹரம், தசரா மற்றும் துர்கா ஊர்வலங்கள் ஆகியவை அதிக நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. இதில் ஹோலி பண்டிகையும் ஒரு பெரிய வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது.
பெரிய தாக்கங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஊர்வலங்களுடன் சேர்த்து அரிதாகவே இணைத்து அறியப்பட்ட வன்முறைகள் இப்போது வன்முறையை உருவாக்குபவையாக பயன்படுத்தப்படுகின்றன. மகாத்மா காந்தியின் ராமர் பக்தி என்பது ("நிர்பல் கே பால் ராம்" )"பலவீனமானவர்களுக்கு உதவி செய்பவர்" என்ற பழமொழியில் பொதிந்திருந்தது. காந்தி ராமரை ("மர்யதா புருஷோத்தம்") என்றைக்குமான "நெறிமுறை நடத்தையின் உருவகமாக நினைத்தார். வகுப்புவாதிகளைப் பொறுத்தவரை, ராம் பலவீனமானவர்களுக்கு உதவுபவராகவோ அல்லது நெறிமுறை நடத்தைக்கு உருவகமாகவோ இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, ராம் என்பது பழிவாங்குவது மற்றும் அவமானத்தை ஏற்படுத்துவதாகக்கருதப்படுகிறது.
இரண்டாவது வேறுபாடு மிகவும் முக்கியமானது மற்றும் மேலும் எண்ணற்ற ஆபத்தானது என இரண்டையும் கொண்டதாகும். கடந்த காலங்களில், ஊர்வலங்கள் வன்முறைகளை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் அவற்றைக் கையாள்வதில் நடுநிலைக் கொள்கையை அரசு கைவிடுவது என்பது அரிதாகவே இருந்தது.. பல வன்முறை நிகழ்வுகளில், அரசு சரி சமமான முறையில் நடந்து கொண்டதா என்பதில் சந்தேகம் இருந்தது, ஆனால் மத சமூகங்களுக்கு எதிரான நடுநிலைமை தன்மையானது மாநில நடத்தை மற்றும் தலையீடு முறையில் வெளிப்படையாக கைவிடப்படவில்லை.
இந்த பெரிய கொள்கைக்கு 1984ல் டெல்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் ஆகிய இரண்டு தெளிவான விதிவிலக்குகள் உள்ளன.
கருத்தியல் ரீதியாகப் பார்த்தால், ஒரு மாநிலம் ஒரு சமூகத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகம் வேட்டையாடப்படும்போது, மிரட்டப்பட்டு தாக்கப்படும்போது, அது நீண்டகாலத்துக்கு ஒரு வன்முறையாக இருக்காது. மாறாக அது ஒரு இனப்ப டுகொலையாகும். எந்தவொரு சமூகத்தின் மீதும் முறையான செயல்முறையின்றி புல்டோசர்களைக் கட்டவிழ்த்து விடுவது வெறுமனே சட்டவிரோதமானது மட்டுமல்ல, ஒரு சமூகமானது, மத ரீதியாக, கலாசார ரீதியாக அல்லது இன ரீதியாக வரையறுக்கப்பட்டிருந்தால், அது ஒரு படுகொலையின் தொடக்கமாகவும் கருதுவதற்கு தகுதி பெறுகிறது. நீதிமன்றம் தலையிடாமல் இருந்திருந்தால், ஜஹாங்கிர்புரியில் முஸ்லிம்களின் அழிவு என்பது எதனோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு பேரழிவாக இருந்திருக்கும்.
உண்மையில், உ.பி., ம.பி., கர்நாடகா, உத்தரகாண்ட், ஹரியானா போன்ற பல மாநிலங்களில் அரசாங்கத்தின் மத நடுநிலைமை விரைவாகசெல்லரிக்கப்பட்டு வருவது மிகவும் ஆபத்தான அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றாகும். அதிர்ஷ்டவசமாக, முழு தேசமும் வகுப்புவாத மதவெறியின் தளமாக இல்லை. பதினொரு மாநிலங்கள் இன்னும் பாஜக அல்லாத கட்சிகள் அல்லது பிற கூட்டணி கட்சிகளால் ஆளப்படுகின்றன, எனவே மாநிலங்களின் நடத்தையில் மாறுபாடு என்பது நீடித்திருக்கிறது. ஆனால் பிஜேபி ஆளும் மாநிலங்களிலும், பாஜக ஆளும் மத்திய ஆட்சியும் மதத்திற்கு எதிரான அரசு நடுநிலைமை என்ற பாசாங்கு கைவிடப்பட்டிருக்கிறது. அரசு எந்திரத்தின் அன்றாட நடத்தை மட்டுமல்ல, ஹிஜாப், அஸான், "லவ் ஜிஹாத்" ஆகியவற்றின் மீது வலுவடையும் சட்டத்தின் அமைப்புகள், நிர்வாக ஆணைகள் தேசத்தின் பெரும்பகுதியை பகிரங்கமாக விரோதமாகவும், முஸ்லிம்கள் மீதான பாரபட்சமாகவும் மாற்றுகின்றன.
இது போன்ற வேறு சில நிகழ்வுகளைக் கவனியுங்கள். கடந்த சில மாதங்களில்,நடைபெற்ற மதக் கூட்டங்களில் கொலைக்கான அழைப்புகள் விடுக்கப்பட்ட காட்சிகளைக் கண்டோம். சில இந்து மதத் தலைவர்கள் இந்து சமூகத்தினர் ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்றும் , முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும் என்றும் வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளனர். அத்தகைய பேச்சு குற்றவியல் நடவடிக்கைக்கு உரியதாகும். "பொது ஒழுங்கிற்கு" ஆபத்தை விளைவிக்கும் பேச்சுக்களை இந்திய அரசியலமைப்பு தடை செய்கிறது. ஆனால், சட்டத்தை சரியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அடிப்படையில் அரசானது வேறு வழிகளைக் கையாண்டது. கைது நடவடிக்கைகள் தொடங்கியபோது, பலவீனமான வழக்குகள், நீதித்துறை விசாரணையில் நிலைபெற முடியவில்லை.
1990களில் இந்து-முஸ்லிம் உறவுகள் குறித்து நான் முழுநேர ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, வன்முறைக்கு யார் தலைமை தாங்கினார்கள் என்பதற்கான தெளிவான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாக இருந்தது. வன்முறையைத் தூண்டுபவர்கள் அல்லது அமைப்பாளர்கள் எப்போதும் தெளிவின்மையின் நிழலில் மறைந்திருப்பார்கள். அனுமானங்கள் கட்டமைக்கப்படலாம், ஆனால் பொதுவாகவே தெளிவான சான்றுகள் கிடைக்காது. வன்முறையில் ஈடுபடும் தலைவர்கள் இப்போது, ரத்தம் தோய்ந்த துரோகிகளைக் கொல்லுங்கள்("தேஷ் கே கடாரோன் கோ, கோலி மாரோ சலோன் கோ )" என்று வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறார்கள். அத்தகைய தலைவர்கள் ஒருபோதும் தண்டிக்கப்படுவதில்லை, அல்லது வெறுமனே லேசான தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். காலத்தின் மனநிலையை வியத்தகு முறையில் பிரதிபலிப்பது மோசமானதாக உள்ளது. அவர்களில் சிலர் ஹீரோக்களாகக் கொண்டாடப்படுகிறார்கள் மற்றும் உயர் பதவியைப் பெறுகிறார்கள்.
குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களில், தேசபாதுகாவலர்களின் வன்முறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது, ஆபத்தான முறையைக் கொண்ட போக்குகளில் ஒன்றாக மாறி வருகிறது. பழங்கள் விற்பனை செய்யும் . முஸ்லீம்களை வெளிப்படையாக துன்புறுத்தலாம் மற்றும் அவர்களின் வண்டிகளை கவிழ்க்கலாம். இந்து கோவில்களுக்கு அருகில் இனிப்பு, பூ விற்கும் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்வதை தடுக்கலாம். முஸ்லீம் பெண்கள் தலையை முக்காடிட்டு மறைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கலாம், ஆனால் சீக்கிய சிறுவர்கள் தலைப்பாகை அணியலாம், இந்து சிறுவர்கள் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளலாம். .
தேச பாதுகாவலர்கள் பற்றிய புதிய ஆராய்ச்சியில், குறிப்பாக அடித்துக் கொல்லப்படுதலில் ,தேச பாதுகாவலர்களுக்கு தண்டனையிலிருந்து அரசு விலக்கு அளிக்காதவரை , அது அதிகரிக்காது என்பதை தெளிவுபடுத்துகிறது. முஸ்லீம்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றுவதன் மூலமும், முஸ்லிம்களுக்கு எதிரான ஆணைகளை பிறப்பிப்பதன் மூலமும், பாஜக ஆளும் அரசியலானது தேச பாதுகாவலர்களின் வெற்றிக்குத் தேவையான தண்டனையை இன்றைக்கு வழங்குகின்றன. இதன் விளைவு முஸ்லிம்களை பயமுறுத்துகிறது, அவர்கள் சாதாரணமாக தங்கள் வழக்கமான வியாபாரத்தை செய்கிறார்கள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்கிறார்கள், பள்ளிகளுக்குச் செல்கிறார்கள், அனுமதி மற்றும் அங்கீகாரங்கள் பெறுவதற்காக அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்கிறார்கள்.
முஸ்லிம்கள் வற்புறுத்தல் எனும் மொழியின் வாயிலாக மட்டும் கேட்கவில்லை பல பிரயோகம் எனும் மொழியின் வாயிலாக மட்டுமே கேட்கிறார்கள் என்பது இந்து தேசியவாதத்தின் நீடித்த நம்பிக்கையாக உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை, படை என்பது மேலே உள்ள அரசு அதிகாரத்தையும் கீழே உள்ள தெரு அதிகாரத்தையும் இணைப்பதாகும். இத்தகைய நம்பிக்கைகள் பெரிய அளவிலான முஸ்லீம்-விரோத படுகொலைக்கு எளிதாக வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அப்படி நடந்தால், அதன் விளைவுகள் கணிக்க முடியாததாக இருக்கும்.
இந்த கட்டுரை முதன்முதலில் 23ம் தேதியிட்ட அச்சுப் பதிப்பில் ‘The difference this time’ என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் சோல் கோல்ட்மேன் பிரவுன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகள் மற்றும் சமூக அறிவியல் பேராசிரியராக உள்ளார்.
தமிழில்; ரமணி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.