குருதாஸ் தாஸ்குப்தா : உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடினார்

தாஸ்குப்தா தனது வாழ்நாளில் கடைசி நாளை கடுக்கும் போது, ஏ.ஐ.டி.யு.சியின் நூற்றாண்டு நினைவு விழா தொடங்கியிருப்பது ஒரு கசப்பான இனிமை என்றே சொல்ல வேண்டும்

கடந்த அக்டோபர் 31 ம் தேதி காலமான தோழர் குருதாஸ் தாஸ்குப்தா, தனது வாழ் நாளில் கடைசி நாட்கள்  வரை தொழிலாள வர்க்கத்துக்காக போராடினார். தனது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையை மாணவராக இருந்தபோதே தொடங்கியவர். முறைசார்ந்த/முறைசாரா துறைகளில் பணியாற்றும் உழைப்பாளிகளுக்கு தலமைத்துவம் தாங்கியவர். சிறந்த பாராளுமன்ற உறுப்பினராகவும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ( (சி பி ஐ)  ) தலைமை பொறுப்பிலும்  இருந்த தோழர் குருதாஸ் தாஸ்குப்தா மக்கள் உரிமைகளின் நாயகன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை

1957 ம் ஆண்டில் கல்கத்தா அசுதோஷ் கல்லூரியின் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளரான போது,  தாஸ்குப்தா தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். சி பி ஐ ன் மாணவர் பிரிவான அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் (ஏஐஎஸ்எஃப்) பொதுச் செயலாளராக பணியாற்றிய அவர், மேற்கு வங்காளத்தில்  சி பி ஐ கட்சியின்  இளம்  தலைவர்களில் மிக முக்கியமானவராக கருதப்பட்டார்.  1970 களில் இருந்து, குருதாஸ் தாஸ்குப்தா தேசிய அளவிலும் அறியப்பட்டார்

1985 ம் ஆண்டில், முதன் முதலில் மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட  தாஸ்குப்தா, மொத்தம் மூன்று முறை ராஜ்ய சபாவின் உறுப்பினர் பதவியில் இருந்தார் . மக்களவையில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தின் உறுப்பினராய் இருந்த காலத்தில், தாஸ்குப்தா விவாதங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும். பல்வேறு விசயங்களில் அவரின் துணிகர வாதத்தால் அரசின் செயல்பாடுகள் வெளிபடைத்தன்மையாக இருக்க நிர்பந்திக்கப் பட்டது . தனது கணிசமான சொற்பொழிவு திறனைப் பயன்படுத்தி தொழிலாளர்,விவசாயிகள் என ஒட்டுமொத்த இந்திய மக்களின் உரிமைகளை காப்பதில் வென்றார்.

நிதிக் குழு போன்ற பல  நாடாளுமன்றக் குழுக்களில் பணியாற்றியதால் பல்வேறு  கோட்பாடுகள் கொண்ட அரசியல் உறுப்பினர்களின் மரியாதையும் பெற்றார். ஹர்ஷத் மேத்தாவின் குற்றவியல் கையாளுதல்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட  பத்திர மோசடி தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராய் இருந்தார் . அதில்,  குற்றங்களை விசாரித்த விதமும், சாட்சியங்களிடம் கேள்விகேட்ட தோரணையும் அனைவரின் பாராட்டையும் பெற்றது.  இந்த கூட்டுக் குழுவில் அவர் செயல்பட்ட விதத்தைப் பார்த்து விருதும் வழங்கப்பட்டது. இருந்தாலும், அதில் கிடைத்த சன்மானத்தை பஞ்சாப் ஸ்ட்ரீ சபா போன்ற அமைப்புகளுக்கு வழங்கினார்.

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் (ஏ.ஐ.டி.யூ.சி) பொதுச் செயலாளராகவும் தோழர் தாஸ்குப்தா பணியாற்றினார்.  ஏகாதிபத்திய ஆட்சிமுறையை கம்யூனிஸ்டுகள் எதிர்த்த காலங்களில் , தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக 1920 ம் ஆண்டில் இருந்து அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் செயல்பட்டுவருகிறது. இந்திரஜித் குப்தா, ஏ பி பர்தன் போன்ற ஸ்டால்வார்ட்ஸ்கள்  அதன் கடந்த காலங்களில் பொது செயலாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். தாஸ்குப்தா தனது வாழ்நாளில் கடைசி நாளைக் கடக்கும் போது, ஏ.ஐ.டி.யு.சியின் நூற்றாண்டு நினைவு விழா தொடங்கியிருப்பது ஒரு கசப்பான இனிமை என்றே சொல்ல வேண்டும்.

1990 களில் காங்கிரஸ் அரசாங்கம் தனது புதிய தாராளமய பொருளாதார கொள்கையை, திட்டங்கள் மூலமாகவும், சட்டங்கள் மூலமாகவும் செயல்படுத்தியபோது, தாஸ்குப்தா தனது கொள்கையில் சமரசம் செய்யாமல் எதிர்த்தார். பாரளுமரத்தின் சபையின் உள்ளே அவரின் வாதாங்கள், உணர்வுகள், தவிப்புகள் எல்லாம் விவசாயிகள், தொழிலாளர்கள், சமூகத்தின் பிற பிரிவுகளுக்கு எதிராக இருக்கக் கூடிய அரசின்  நடவடிக்கைகளை நோக்கியே இருக்கும். தாஸ்குப்தாவின் வேகம் வெறும் பாராளுமன்றத்திற்குள் மட்டும் தான் என்று கருதி விட முடியாது.   ஒரு தொழிற்சங்கத் தலைவராக, அவர் தொழிலாள வர்க்கத்தின் பல போராட்டங்களை ஏற்பாடு செய்தார். தனது நீண்ட அரசியல் பொது வாழ்க்கையில், கார்ப்பரேட் சக்திகளுக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சக்திகளுக்கும் எதிராக நின்றார்.    பொது மக்களை ஒருகிணைத்து அணி திரட்டுவதற்கான தனித்துவமான திறன் அவரிடம் இருந்தது. ‘இது தான் வாழ்க்கை என்று சொல்லப்பட்டிருந்தால் அதற்கு எதிராக போராடுங்கள்’  என்று மக்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், உங்களின் போராட்டம் தேசிய நலனோடு இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணரவும் வைப்பார்.

ஏற்பட்டிற்கும் குழப்பமான பொருளாதார மந்தநிலை, நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படைகளே கேள்வியாக்குகிறது.  தற்போதைய  ஆளும் அதிகாரத்தின் கீழ், நாடு  வகுப்புவாத சக்திகளால் தாக்கப்படுகிறது. இந்த பிரித்தாளும் சக்திகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக  நிற்க வேண்டிய நேரத்தில், இதுபோன்ற போர்களில் முன்னணியில் இருந்த ஒரு தோழரை நாம் இழந்துவிட்டோம்.

குருதாஸ் தாஸ்குப்தாவின் மறைவு சிபிஐக்கு ஒரு இழப்பு மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், சோசலிச சிந்தனையாளர்களுக்கும், முற்போக்கு வாதிகளுக்கும் ஏற்பட்ட  ஒரு இழப்பாகும். இது இந்தியாவுக்கு ஒரு இழப்பு.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close