ஒவ்வொரு நாளும் அரசியலமைப்புச் சட்டம் மீறப்படுகிறது

Constitution of India : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், அதன் அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சமூகம், பொருளாதாரம், அரசியல் பாதுகாப்பு அளிப்பது என்பது தீர்மானிக்கப்பட்டதாக...

ப.சிதம்பரம்

கட்டுரையாளர் ப. சிதம்பரம், சிறந்த பொருளாதார வல்லுனரும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தவர்.

இந்திய அரசியல் சட்டத்துக்கு, இந்திய மக்களாகிய நாம் நமது வாழ்நாளைக் கொடுத்திருக்கின்றோம். அரசியலைப்பின் அவை, ஒரு நபர், ஒரு வாக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்டதல்ல. ஆகவே உண்மையில் அது மக்களின் பிரநிதியாக இல்லை. ஆயினும்,இறுதி முடிவு குறித்த தீர்ப்பில், அரசியலமைப்பின் அவை இந்திய மக்கள் அனைவருக்காகவும் பேசியது. அவசரநிலை காலகட்டம் (1975-77) அல்லது உரிய காலத்துக்கு முன்பே கவிழ்ந்த மத்திய அரசு (1979-80) போன்ற மிகவும் அழுத்த த்துக்கு உட்பட்ட காலகட்டங்களில் எல்லாம் கூட, நெகிழ்வுத்தன்மை கொண்ட அரசியலமைப்பு சட்டம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அடிப்படைக்கட்டமைப்பு சிதையாமல், பல்வேறு திருத்தங்களுடன் நீடித்திருக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை திருத்தவோ, மாற்றவோ கூடாது என்ற கருத்தை நானி பால்கிவாலா எடுத்துரைத்தபோது, சட்டவல்லுநர்கள் எல்லாம் அவரது வாத த்தை ஏளனம் செய்தனர். அரசியல் சட்டத்தைத் திருத்தும் (பிரிவு 368), இறையாண்மை கொண்ட பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குறைத்தல் அல்லது கட்டாயப்படுத்துவதை ஆய்வு செய்வதை அரசு நிர்வாகத்தால் நியமிக்கப்படும் நீதிபதிகள் எப்படி மேற்கொள்ள முடியும் என்று அவர்கள் கேட்டனர்.

நாளின் முடிவில், 13 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 7 நீதிபதிகள் மட்டும்தான், பல்கிவாலாவின் புதிய வாத த்தை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் வாத த்தை ஏற்றுக் கொண்டனர் நன்றி கடவுளே என்று இன்றைக்கு நாம் சொல்ல முடியும்.

அனைவருக்குமான நீதி எங்கே?

இந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், அதன் அனைத்து குடிமக்களுக்கும் நீதி, சமூகம், பொருளாதாரம், அரசியல் பாதுகாப்பு அளிப்பது என்பது தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது. ஒவ்வொரு சொற்றொடரும், உதாரணத்துக்கு சமூக நீதி என்பதற்கு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. இந்த சொற்றொடர்கள், பல லட்சம் இதயங்களில் இலக்கு எனும் தீப்பொறியை தூண்டுகின்றன. தொடர்ந்து அதே நிலை நீடிக்கிறது. 2020ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி அரசியமைப்பு சட்டத்தின் 70 ஆண்டை கொண்டாடவிருக்கின்றோம்.
கடினமான கேள்விகளைக் கேட்பதற்கான தருணம் இது; யார் சமூக நீதியைப் பெற்றார்கள் யார் பெறவில்லை? பொருளாதார நீதி என்பது என்ன? அனைத்து குடிமக்களும் பொருளாதார நீதியைப் பெற்றுவிட்டார்களா? அனைத்து குடிமக்களும் ஒரு அரசியல் வாக்கைப் பெற்றபோதிலும் கூட, அனைவரும் அரசியல் நீதியைப் பெற்றுவிட்டார்களா?

நூற்றாண்டுகளாக, பிரமிடின் கீழே இருக்கும் மக்கள் தாழ்தப்பட்டோராக, தாழ்த்தப்பட்ட பழங்குடியினராக இருக்கின்றனர். இதர பின்தங்கிய வகுப்பினர், அவர்களில் மிகவும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் இதர பின்தங்கிய பிரிவுகளில் இருக்கின்றனர். அமெரிக்காவில், உள்ள கருப்பினத்தவர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இன்றைக்கு இந்தியாவில் இஸ்லாமியர்கள், பழங்குடியினர், தலித்கள் இருக்கும் அதே நிலையில்தான் இருக்கின்றனர். அமெரிக்காவில் இது அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான மக்கள் புரட்சியை நோக்கிச் சென்றது மற்றும் 1963-ல் மனித உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு அவர்களை ஏற்றுக் கொள்வதற்கு, உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு சரிசமமான அந்தஸ்து கொடுப்பதற்கு நீண்டகால நடைமுறை தொடங்கியது. இந்தியாவில் தீண்டாமையை எதிர்க்கும், மத த்தின் அடிப்படையிலான பாகுபாட்டை சட்டவிரோதமாக்கும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையிலான அரசியல் சட்டம்,நமக்கு இருக்கிறது. சமூக நீதியில் இன்னும் உண்மை என்னவெனில், கல்வி, சுகாதாரம் (இதர மனிதவள முன்னெடுப்பு அறிகுறிகளுக்கு மத்தியில்),அரசு வேலைகளில் நியமனம் ஆகியவை கிடைப்பதற்கான அடிப்படை என்பது புறக்கணிக்கப்பட்டப்பிரிவைச் சேர்ந்தோருக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.

ஏழைகளுக்கு எதிரான பாகுபாடு

வீட்டு வசதி, குற்றம், விசாரணை, விளையாட்டில் பிரதிநிதித்துவம் உள்ளிட்டவற்றின் புள்ளிவிவரங்களை நான் சுட்டிக்காட்டவில்லை. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்கள் சமூகத்தில் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். புறக்கணிப்பு, அவமானம், வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த புள்ளிவிவரங்கள் முடிவாக அதை நிறுவுகின்றன.
சமூகநீதியின் குழந்தைதான் பொருளாதார நீதி. புறக்கணிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த குழுவினர், குறைவான கல்வித்தகுதியை, குறைவான சொத்துடைமையை, குறைவான அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்புகளை, குறைவான வருவாய், செலவினத்தைக் கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை அட்டவணையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பு

அரசியல் நீதி எனும் மூன்றாவது வாக்குறுதி மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றம், சட்டப்பேரவைகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நியாயமான விகிதத்தில் இடம் பெற்றிருப்பதற்கு இட ஒதுக்கீடு தொகுதிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், அரசியல் நீதியைப் பார்க்கும்போது அது அங்கேயே நின்று விட்டது. பல அரசியல் கட்சிகளில் முடிவு எடுக்கக் கூடிய அமைப்புகளில் அல்லது நிலைகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் என்பது அடையாளமயம் என்பதற்கு அப்பாற்பட்டு வேறு ஒன்றும் இல்லை. தங்களது சொந்தக்கட்சியாக (பகுஜன் சமாஜ், விடுதலைச்சிறுத்தைகள்)இருந்தாலும் கூட அவர்கள் பரந்துபட்ட அளவில் ஒரு சமூக கூட்டணியை (பகுஜன் சமாஜ் ) அல்லது அரசியல் கூட்டணியை உருவாக்காதவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு என்பது குறைவாகத்தான் இருக்கிறது. அவர்கள் இருக்கும் இடத்திலேயே சிக்கித் தவிக்கின்றனர். சிறுபான்மையினரைப் பொறுத்தவரை குறிப்பாக முஸ்லீம்கள் நிலை மோசமாக இருக்கிறது. முக்கிய‍ அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரைக் கொண்ட பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதிலும் முன்னணித்தலைவர்கள் மிகவும் குறைவு. பா.ஜ.க வெளிப்படையாகவே முஸ்லீம்களை புறக்கணிக்கிறது. என்.ஆர்.சி- சி.ஏ.ஏ-என்.பி.ஆர் வழியே குறிப்பால் உணர்த்துகிறது. மறுபுறம் ஐ.யு,எம்.எல் அல்லது ஏ.ஐ.எம்.ஐ.எம் போன்ற முஸ்லீம்கள் முன்னெடுத்த கட்சி கூட்டணியின் ஒரு அங்கமாக அல்லது கூட்டணியை பாழ் செய்வதாக மட்டும்தான் இருக்க முடியும். ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

மையமாக இருக்கும் காரணங்களுக்காக, முஸ்லீம்கள் சிறிதளவு ஆதரவு பெறுகின்றனர் அல்லது வன்முறை எதிர்ப்பு உணர்வைக் கொண்டிருக்கின்றனர். ஜம்மு& காஷ்மீர் நிகழ்வை கருத்தில் கொள்வோம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் 75 லட்சம் முஸ்லீம்களின் காரணிகளைப் பார்க்கும்போது எனக்கு, அது வேகமாக காரணிகளை இழந்து வருவதாகத் தெரிகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு(யூனியன் பிரதேசத்தில் பாதி அளவாக குறைகப்பட்டிருக்கிறது) ஆகஸ்ட் 5-ம் தேதியில் இருந்து ஒரு முற்றுகையின் கீழ் உள்ளது. பத்தாண்டுகளில் இல்லாத அளவாக 2019-ம் ஆண்டு தீவிரவாத நிகழ்வுகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவு கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் காயம் அடைந்துள்ளனர். மூன்று முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட 609 பேர் எந்தவித குற்றசாட்டும் இல்லாமல் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இயல்புநிலை திரும்பி விட்டது என்ற அதிகாரத்தின் தகவலை ஊடகங்கள் வெளியிடுகின்றன. நாட்டின் பிற பகுதிகளைப் பார்க்கும்போது அவை, காஷ்மீரை மறந்து விட்டு இதர அழுத்தும் கவலைகளை நோக்கி நகர்ந்து விட்டன. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

அரசியல் சட்டம் ஒவ்வொரு நாளும் மீறப்படுகிறது. நீதி, சமூக, பொருளாதார, அரசியல் வாய்ப்புகள் குறைந்தபட்சமாக கூட லட்சகணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகிறது. ஜம்மு& காஷ்மீரைப் பொறுத்தவரை அரசியல் அமைப்பு களங்கப்பட்டிருக்கும் நிகழ்வில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக க் காத்திருக்கின்றோம். 70 ஆண்டுகள் கடந்தும் அனைத்து குடிமக்களுக்கும் உறுதி அளிக்கப்பட்ட நீதியானது, குடிமக்களின் ஒரு பகுதியினருக்குக் கூட கிடைக்கவில்லை. இதர பகுதி மக்களுக்குத்தான் சிறுதுண்டுகளாக நீதி கிடைக்கிறது.

தமிழில்; கே.பாலசுப்பிரமணி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close