Advertisment

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் - அத்தியாயம் மூன்று

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
copy right act and cinema phase 3 by shankar krishnamurthy

copy right act and cinema phase 3 by shankar krishnamurthy

அறிவு சார்ந்த சொத்துரிமை ( Intellectual Property Rights )

Advertisment

இன்று முன்னேறிய நாடுகளான அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள், சீனா, மற்றும் ஜப்பான் ஐ எடுத்து கொண்டால் அங்குள்ள பெரிய கார்பொரேட் நிறுவனங்களில் சொத்துக்கள் யாவை என்று பார்த்தால் அவை நிலங்களாகவோ,கட்டிடங்களாகவோ அல்லது வேறு material assets ஆகவோ இருக்காது.. அவை பெரும்பாலும் அறிவு சார்ந்த சொத்துரிமையாகவே இருக்கும் (Intellectual Property Rights ) . காப்புரிமைகள்(patents ), பதிப்புரிமைகள்(copyrights ), வணிக முத்திரைகள் ( Trade Marks ), Good will என அழைக்கப்படும் நல்ல பெயர் அதன் மூலம் ஈட்டிய வாடிக்கையாளரின் மகிழ்ச்சி இவையனைத்தும் தொட முடியாத ( Intangible Assets ), பார்க்க முடியாத ( Invisible assets ) சொத்துக்களாக விளங்குகின்றன.. Fortune 50 மற்றும் Fortune 500 என அழைக்கப்படும் உலகத்தில் உள்ள முதல் ஐம்பது மற்றும் ஐநூறு நிறுவனங்களின் சொத்துக்களை பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் 70 சதவிகிதத்திற்கு மேல் அறிவுசார்ந்த சொத்துக்களாகவே இருக்கும்..

ஆனால் இந்தியாவில் உள்ள நிறுவனங்களை பார்த்தால் பெரிய பெரிய கட்டிடங்கள், ஏக்கர் கணக்கில் நிலங்கள், இந்தியா முழுவதும் அலுவலகங்கள் என்றே இருக்கும்.. அதனால்தானோ என்னவோ நாம் உலகளவில் இன்றும் ஒரு நிறுவனத்தை Fortune 50 லிஸ்ட் க்குள் கொண்டு வர இயலவில்லை.. இந்தியா ஒரு காப்புரிமை தேசம் ( Patent country) இல்லை.. Patient ( நோயாளி தேசம் ) Country என்று கூட வேடிக்கையாக சொல்வார்கள்.

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் - அத்தியாயம் 1

அதாவது பார்க்க முடியாதது, தொட முடியாதது இதற்கே விலை மதிப்பு அதிகம் என்பதைதான் நாம் பார்க்கிறோம்.. இது வணிக உலகில், கார்பொரேட் உலகில் உண்மை.

இப்போது இங்கிருந்து சற்றே விலகி , மனித உடல்களை பற்றி ஆராய்வோம்..

மனித உடலில் மிக மிக முக்கிய உறுப்புகளான, மனிதனை காக்கும் உறுப்புக்கள் இதயம், மூளை , சிறுநீரகம் , கல்லீரல் , நுரையீரல் என்று எடுத்து கொண்டால் இவை எதையுமே நாம் பார்க்க முடியாது.. தொட முடியாது.. ஆனால் இவையில்லாமல் மனிதன் வாழ முடியாது..

ஆனால் மனிதனோ இவற்றை விட தனது வெளியில் தெரியும் தலை முடிக்கும், முகத்துக்கும், முக்கியத்துவம் கொடுக்கிறான்.. தலைக்கு டை அடித்து கொள்கிறான்.. முகத்துக்கு முகப்பூச்சு பூசி கொள்கிறான் .

ஆக மனித உடலாகட்டும் , அல்லது கார்பொரேட் நிறுவனங்கள் ஆகட்டும் இன்றைய தேதியில் இந்த பார்க்க முடியாத , தொட முடியாத சொத்துக்கள் அதிக மதிப்புடையதாக உள்ளன ..

இதற்கு காரணம் இவை ஒழுங்காக இருந்தால் இவற்றை வைத்து ஆயிரம் சொத்துக்களை படைக்க முடியும்..

ஒரு முறை ஒரு மனிதனிடம் ஒருவர் கேட்டாராம் .. கடவுள் உனக்கு கொடுத்த வரம் என்ன என்று ? அவன் சொன்னானாம் ... எங்க வரம் கொடுத்தார்.. கடன் தான் கொடுத்தார்.. எங்கு திரும்பினாலும் கடன் .. கடனை அடைக்க முடியவில்லை என்று.. இன்னொரு மனிதனிடம் இதே கேள்வியை கேட்டாராம்..

உடனே அவன் சொன்னானாம் ..எனக்கு உழைக்க இரு கைகள், நடக்க இரு கால்கள், பார்க்க இரு கண்கள், கேட்க இரு காதுகள், சிந்திக்க மூளை,,நுகர மூக்கு, இவற்றை கொடுத்த இறைவனிடம் நான் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று..

மனிதன் வாழ்வதற்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் இறைவன் கொடுத்துள்ளார்.. ஆனாலும் கொடுக்காததை மட்டுமே மனம் தேடுகிறது.. இதுதான் மனித புத்தி..

இந்த அறிவு சார்ந்த சொத்துரிமைகளால் என்ன பயன் என்று கேட்கலாம் ? உதாரணமாக காப்புரிமையை எடுத்து கொள்ளுங்கள்.. Patents எனப்படும் இவை ஒரு தொழில் நுட்ப கண்டுபிடிப்பிற்கான உரிமை பத்திரம்.. அரசு அவர்களுக்கு இருபதாண்டுகள் வழங்கியது.. இவற்றை அவர்கள் மற்ற தயாரிப்பு நிறுவனங்கள், மற்ற நாடுகளுக்கு லைசென்ஸ் கொடுத்து பணம் பெறலாம்.. தாங்களே தயாரிக்கலாம்.. இல்லை அந்த பொருளை விற்பனை செய்ய லைசென்ஸ் கொடுக்கலாம்.. இப்படி பல வகைகளில் பணம் பெறலாம்.. அதுதான் அந்த படைப்பாளிக்கு கிடைக்கும் ஊதியம்.. அவர் அந்த கண்டு பிடிப்பிற்காக பணம் பொருள் நேரம் மூளை என்று அனைத்தையும் செலவழித்துதானே அதனை கண்டு பிடித்து இருப்பார். அப்போது அதை அவர் எப்போது திரும்ப பெற முடியும்.. இந்த முறையில் தான்..

இதுதான் அறிவு சார்ந்த சொத்துரிமைகள் உங்களுக்கு எனக்கு அனைவர்க்கும் பெற்று தர போவது.. அறிவு சார்ந்த சொத்துரிமை என்பதை ஒரு மனிதன் எவ்வாறு பெறுகிறான் ? எதற்காக அவனுக்கு அந்த உரிமையை கொடுக்க வேண்டும்..

ஒருவன் தனது உடல் உழைப்பினால் செய்து பெற கூடிய எதுவுமே அவனுக்கு சொந்தமானது..அதற்கான பலனை அவன்தான் பெற வேண்டும்.. ஒருவன் தனது மூளையை உபயோகப்படுத்தி ஒரு கதை எழுதுகிறான் என்றால் , ஒரு கண்டுபிடிப்பை கொண்டு வருகிறான் என்றால் அதெல்லாம் அவனது உடல் சார்ந்த உழைப்பிலிருந்து வருவது.. இது இயற்கை சட்டத்தின் விதி.. Natural Law theory ...

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் - அத்தியாயம் 2

ஒருவன் திறமை, அனுமானம், உழைப்பு, மூலதனம் இவற்றிலிருந்து பெறக்கூடிய எந்த ஒரு படைப்புமே அவனுக்கு சொந்தமாகிறது.. இது நான்கையும் ஒருவனே செய்யும் போது அனைத்தும் அவனுக்கே சொந்தமாகிறது.. ஆனால் இதில் ஒருவனும் மூலதனம் செய்து இன்னொருவன் அதை பயன்படுத்தி ஒரு கண்டுபிடிப்பையோ படைப்பையோ செய்யும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம் அவர்களில் யார் படைப்பிற்கு சொந்தக்காரர் என்பதை முடிவு செய்கிறது.. இது பற்றிய விளக்கமான பல விஷயங்களை நாம் மேற்கொண்டு வரப்போகும் அத்தியாயங்களில் பார்ப்போம்....

இப்போது உங்களுக்கு அறிவு சார்ந்த சொத்துரிமை பற்றியும், அதனை சார்ந்த பல உரிமைகள் பற்றியும் ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.. இதனை மேலும் தெரிந்து கொள்ள ஆங்கிலத்திலும், தமிழிலும் ஏராளமான புத்தகங்கள், இணைய தளங்கள் உள்ளன.. இன்று கூகுளை தட்டி விட்டால் அனைத்து தகவல்களையும் பெறக்கூடிய ஒரு நிலை உள்ளது.. 90 களில் பிறந்தவர்கள் அநேகமாக தங்களது ஆறாவது ஏழாவது வயதிலேயே இன்டர்நெட் என்ற தகவல் தொழில்நுட்பத்துட சாதனத்தை பார்த்திருப்பார்கள்..

இன்று இன்டர்நெட், கூகிள், பேஸ்புக், யூட்யூப், மொபைல் , என்று பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை கையாண்டு கொண்டு இருப்பீர்கள்.. அதன் மூலம் ஏராளமான பலன்களையும், இம்சைகளையும் அனுபவித்து கொண்டும் இருப்பீர்கள்.. ஒரு கத்தியை கொண்டு காய்கறி நறுக்கவும் முடியும்.. கழுத்தை சீவவும் முடியும்.. அது இரண்டையுமே நமக்கு தருகிறது.. அதனை எப்படி நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும் என்பது நம் கையில்தான் உள்ளது..

வரும் அத்தியாயத்தில் நாம் பதிப்புரிமை ( காப்பிரைட் ) சம்பந்தப்பட்ட பல தகவல்களையும், சட்ட வடிவத்தையும் பார்க்க போகிறோம்.. காப்பிரைட் என்ற உரிமை எந்தெந்த விதத்தில் பயன்படுத்த முடியும், அவற்றை பற்றி சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றன, நீதி மன்ற முடிவுகள், இன்னும் ஏராளமான தகவல்களை சுமந்து அடுத்த அத்தியாயம் தயாராகிறது..

இந்த படைப்பு, திரு. ஷங்கர் கிருஷ்ணமூர்த்தியின் பதிப்புரிமை…(காப்பிரைட் ).. அவரது அனுமதி இன்றி இது வேறு யாரும் பயன்படுத்தவோ, மொழி மாற்றம் செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.

திரு . ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி ஒரு பொறியாளர்.. , மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவர்.. சட்டம் படித்தவர்.. வணிக சட்டத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.. ஒரு வழக்குரைஞர். எழுத்தாளர்.. ஆலோசகர்.. பயிற்சியாளர் திரைப்பட நடிகர்.. திரைப்பட திரைக்கதை ஆலோசகர்.. திருச்சியை அடுத்த நங்கவரம் கிராமத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த இவர் , சென்னையில் படித்து வளர்ந்து வேலை பார்த்து பிறகு வேலை நிமித்தம் பல நகரங்களில் பணி புரிந்து இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார்..

ஒரு நடிகராக இவர் ‘காதலே என் காதலே, மாற்றான், நந்தனம், அனேகன், ஜானி, காப்பான்’ படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர இன்னும் பல படங்களில் திரைக்கதை ஆலோசகராக, சட்ட ஆலோசகராக பணி புரிந்திருக்கிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment