பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் – அத்தியாயம் ஐந்து

சிலர் சொல்வார்கள் நான் கொடுத்த ஐடியா வை வைத்து அவர் கதை எழுதி விட்டார் என்று.. இங்குதான் சட்டத்தின் சூட்சுமம் உள்ளது.. ஐடியாக்களுக்கு காப்பிரைட் கிடையாது. Ideas don’t get copyright. Only expressions are copyrightable in law

அறிவு சார்ந்த சொத்துரிமை (இது வரையில், அறிவு சார்ந்த சொத்துரிமை பற்றியும் , அதன் சரித்திரம் , அதன் முன்னோடிகள், அதை சார்ந்த பல உரிமைகள், நுதல் பொருள்கள் என்று பல விஷயங்களை பார்த்தோம்.. இன்று அறிவு சார்ந்த சொத்துரிமையை முக்கியமான ஒரு உரிமையை அதாவது பதிப்புரிமையை (காப்பிரைட் ) பற்றி பார்க்க போகிறீர்கள்.

பதிப்புரிமையின் நுதல் பொருள்கள் (சப்ஜெக்ட் மேட்டர் ) பற்றி போன தொடரில் பார்த்தோம். அதில் எழுத்துரிமை என்பதை பற்றிய சட்ட நுணுக்கங்களையும், அதன் தொடர்பான பல விஷயங்களையும், நீதிமன்ற தீர்ப்புகள் சாராம்சங்கள் புரியும் இந்த தொடரில் காணலாம் நீங்கள்..

Literary Work ( எழுத்துரிமை ): இதில் என்னென்ன வெல்லாம் வரும் என்பதை பார்ப்போம்.

எழுத்தில் வடிக்கப்பட்டிருக்கும் அனைத்துமே இதில் அடங்கும்.. கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், தொடர்கள், புத்தகங்கள், கணினி ப்ரோக்ராம் , கணித கோட்பாடுகள் , திரைப்பாடல்கள், கவிதைகள் , எழுத்தில் வடிக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இவை அனைத்துமே இந்த உரிமையின் கீழ் வரும்.

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் – அத்தியாயம் 4

கலைஞர் தனது உடன்பிறப்புகளுக்கு முரசொலியில் எழுதிய கடிதம் கூட இந்த உரிமையில் வரும்.. அந்த கடிதத்தை அவரோ அல்லது அவரது வாரிசுகளின் அனுமதியின்றி யாரும் பிரசுரிக்க முடியாது.. புத்தகமாக்க முடியாது.. மொழி பெயர்த்து போட முடியாது.

ஒரு பரீட்சை வினாத்தாள் இந்த உரிமையில் வருமா ?

இப்படி ஒரு கேள்வி எழுந்தது ஒரு நீதிமன்ற வழக்கில் .

1961 இல் University of London Press Ltd . V . University Tutorial Press Ltd . ஒரு பரீட்சை வினாத்தாள் அந்த வினாக்களை தொகுத்து எழுதிய நபருக்கு சொந்தமா இல்லை அதை எழுத சொல்லி பணித்த பல்கலைக்கழகத்திற்கு சொந்தமா என்று கேள்வி எழுந்தது.. காப்பிரைட் சட்டத்தில் literary work என்பதற்கு இலக்கிய வேலை என்பதாக எடுத்து கொள்ள முடியாது.. எழுத்தில், அச்சில் வரக்கூடிய , வந்த அனைத்துமே அந்த உரிமையில்தானே வரும்.. அது தனி திறமை கொண்டதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.. அந்த வேலையானது ஒரிஜினல் வேலையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.. ஒரிஜினல் என்றால் அந்த எழுத்தாளரிடமிருந்து அது வெளிப்பட்டு இருக்க வேண்டும்.. அதுதான் ஒரிஜினாலிட்டி .

மேலும் நிரந்தர பணிக்காக ஒருவர் வேலை செய்து ஒரு பல்கலைக்கழகத்தில் சம்பளம் பெறும் போது, பணி நிமித்தம் செய்யும் அனைத்து வேலைகளும் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமானது.. ஆனால் வெளியில் இருந்து கொண்டு ஒரு ஊதியம் பெற்று வினாத்தாள் தயாரிக்கும் போது அதற்கான உரிமை அவரையே சாரும்.. பல்கலைக்கழகத்திற்கு போகாது..

இதற்கு இரண்டு விதமான ஒப்பந்தங்கள் உண்டு .. Contract of Service ( பணிக்கான ஒப்பந்தம் ) மற்றும் Contract for Service (ஒப்பந்தப்படி ஒரு சேவை ).

பணிக்கான ஒப்பந்தத்தில் ஒருவர் ஊழியராக பணி புரிய அவருக்கு நிறுவனத்துடன் ஒப்பந்தம்.. அப்போது அவர் செய்யும் அனைத்து பணிகளும் நிறுவனத்துக்காகத்தான். அவற்றின் பலன்கள் , உரிமை அனைத்தும் நிறுவனத்தை சேரும்.

ஆனால் ஒப்பந்தப்படி ஒரு சேவை செய்யும் போது, அந்த சேவையின் பலனை எல்லாவற்றிற்கும் பயன்படுத்த முடியாது.. அந்த சேவையை சார்ந்த உரிமைகள் அந்த நபரையே சாரும் .. நிறுவனத்தை சாராது.

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் – அத்தியாயம் மூன்று

ஒருவர் மாத சம்பளத்திற்காக வேலை செய்யும் போது அவருக்கு சம்பளம் , பல்வேறு சலுகைகள், வீட்டு வாடகை, பல அல்லோவான்ஸ்கள் கொடுக்கப்படுகின்றன . ஆனால் தனிப்பட்ட வேலைக்கான ஒரு வேலையை மட்டும், ஒப்பந்தத்தின் கீழ் செய்கிறவர் அந்த நிறுவனத்தில் வேலையாள் அல்ல.

இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே உரிமைகள் தீர்மானிக்கப்படுகின்றன, வழக்கு மன்றத்துக்கு வரும் போது. மேலும் சட்டம் சொல்லியிருப்பதை பல வகைகளில் பல பார்வைகளில் பார்க்கலாம்.. இதை Interpretation of Law என்று சொல்வார்கள்.. நீதிமன்றம் பல கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த சட்டத்தை அணுகும்.. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வழக்கில் சில புதிய கோட்பாடுகளை
நீதிமன்றமே சொல்லும்.. அதுவே ஒரு சட்டமாக்கி விடும் எதிர்காலத்தில்,

பதிப்புரிமை சட்டம் எதற்கு அங்கீகாரம், பாதுகாப்பு அளிக்கிறது ?

ஒருவரது படைப்பு என்பது அவரது நேரம், அவரது அறிவு, அவரது தனி திறமை, அவரது பணம் இப்படி அவ்ருக்கு சொந்தமானவற்றில் இருந்து வருகிறது.. அப்படி அனைத்தையும் போட்டு ஒன்றை படைக்கும் அவருக்கு அந்த படைப்பின் உரிமையை அரசு அவருக்கு அளிக்கிறது மீண்டும் உரிமையாக ….. சில காலத்திற்கு..

ஒரு பேராசிரியர் ஒரு வினாத்தாளை உருவாக்குகிறார் என்றால், அதில் பல்வேறு திறன்கள் உள்ளன.. அவரது அறிவு, அனுபவம், தேர்ந்தெடுக்கும் பக்குவம், ஆராயும் திறன் இப்படி பல.. அது ஒரு ஒரிஜினல் ஒர்க்.. அது நிச்சயம் ஒரு தொகுப்பாக வரும் போது அவரது தனி படைப்பாகிறது.

ஒருவர் ஒரு மொழிபெயர்ப்புக்கான உரிமையை பெறும் போது, அந்த மொழி பெயர்ப்பே ஒரு ஒரிஜினல் ஒர்க் தான்.. ஒரு நீதிமன்ற தீர்ப்பை பற்றி எழுதும் போது, ஒரு தலையங்கம் கொடுக்கிறார் என்றால் அதுவும் ஒரிஜினல் ஒர்க் தான்.. சில மேற்கோள்களை காட்டி விமர்சனம் செய்து அந்த தீர்ப்பையும் போடும் போது, அதுவே ஒரு படைப்பாகி விடுகிறது.. அதற்கும் காப்பிரைட் உண்டு..

மகாத்மா காந்தி சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள், ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திராவுக்கு சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் இவையெல்லாவற்றிற்கும் பதிப்புரிமை ( காப்பிரைட் ) உண்டு.. அவர்கள் இறந்து அறுபது வருடங்கள் ஆகி விட்ட காரணத்தினால் , அவை பப்ளிக் டொமைன் (public domain ) என்று மக்களுக்கு உரிமையாகி விட்டன.. அந்த கடிதங்களை யாராவது பத்திரிகையில் பிரசுரித்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் செய்யலாம்..

பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் – அத்தியாயம் 2

பதிப்புரிமை கோட்பாடுகளில் ( Copyright Principles ) முக்கியமான ஒன்று ஒரிஜினாலிட்டி..( Originality). இதன் அர்த்தம் சட்டத்தில் என்னவென்றால், அது அந்த படைப்பாளியிடமிருந்த்து வெளிப்பட்டிருக்க வேண்டும்.. ஒரு படைப்பாளி தனது திறன் மூலம், தான் கேட்டது, படித்தது, பார்த்தது அனைத்தையும் தொகுத்து ஒரு புது படைப்பை உருவாக்கி இருந்தால் அது எழுத்துரிமை பெறும் ஒரிஜினல் படைப்பாகும் .

சிலர் சொல்வார்கள் நான் கொடுத்த ஐடியா வை வைத்து அவர் கதை எழுதி விட்டார் என்று.. இங்குதான் சட்டத்தின் சூட்சுமம் உள்ளது.. ஐடியாக்களுக்கு காப்பிரைட் கிடையாது. Ideas don’t get copyright. Only expressions are copyrightable in law.

இதென்ன வம்பாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். இந்த ஐடியா – எஸ்பிரேஷன் (IDEA – EXPRESSION DICHOTOMY ) இரட்டை விஷயங்கள் பற்றி விரிவாக வரும் தொடரும் பார்க்கலாம்.

நீங்கள்.. மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கிறேன்..

இந்த படைப்பு, திரு. ஷங்கர் கிருஷ்ணமூர்த்தியின் பதிப்புரிமை…(காப்பிரைட் ).. அவரது அனுமதி இன்றி இது வேறு யாரும் பயன்படுத்தவோ, மொழி மாற்றம் செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.

திரு . ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி ஒரு பொறியாளர்.. , மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவர்.. சட்டம் படித்தவர்.. வணிக சட்டத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.. ஒரு வழக்குரைஞர். எழுத்தாளர்.. ஆலோசகர்.. பயிற்சியாளர் திரைப்பட நடிகர்.. திரைப்பட திரைக்கதை ஆலோசகர்.. திருச்சியை அடுத்த நங்கவரம் கிராமத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த இவர் , சென்னையில் படித்து வளர்ந்து வேலை பார்த்து பிறகு வேலை நிமித்தம் பல நகரங்களில் பணி புரிந்து இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார்..

ஒரு நடிகராக இவர் ‘காதலே என் காதலே, மாற்றான், நந்தனம், அனேகன், ஜானி, காப்பான்’ படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர இன்னும் பல படங்களில் திரைக்கதை ஆலோசகராக, சட்ட ஆலோசகராக பணி புரிந்திருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Copy rights ans cinema by shankar krishnamurthy phase 5

Next Story
நமது ஆசிரியர் பயிற்சி கல்வி முறைகள் , உலகத்தரத்துக்கு சீரமைக்கப்பட வேண்டும்government schools, government teacher, teacher education news, teacher training, teaching jobs, teacher qualification exam, how to become a govt teacher, teacher training, hrd ministry, education news, indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com