அறிவு சார்ந்த சொத்துரிமை ( Intellectual Property Rights )
அறிவு சார்ந்த சொத்துரிமையை என்னென்ன உரிமைகள் உள்ளன என்பதை இதற்கு முன்னால் பார்த்தோம். அதில் உள்ள ஒரு முக்கியமான உரிமை பதிப்புரிமை.. ஆங்கிலத்தில் காப்பிரைட் என்று சொல்வார்கள்.. காப்பிரைட் என்பது எழுத்தாளர்கள், திரை படைப்பாளிகள், இசையமைப்பாளர்கள், ஓவியர்கள், புகைப்படக்கலைஞர்கள் , நாடக ஆசிரியர்கள், திரைப்பட பாடலாசிரியர்கள், திரைப்பட பாடக, பாடகியர்கள், இப்படி பல துறைகளுக்கு மிகவும் அத்யாவஸ்யமான ஒரு உரிமையாகும்.. இவர்களது படைப்புகள் இந்த உரிமை சட்டம் மூலம் காக்கப்படுகின.
பதிப்புரிமையில் உள்ள நுதல் பொருள் (சப்ஜெக்ட் மேட்டர் - Subject Matter ) என்னவென்று பார்ப்போம் இப்போது..
வாசகர்களின் புரிதலுக்காக அதை நுதல் பொருள் என்றே எழுதுகிறேன்.. இந்த நுதல் பொருளானது பல வகைகள் உள்ளன பதிப்புரிமையில்.. இவை யாவன என்று பாருங்கள்,
1 . Literary work ..( இதை இலக்கிய படைப்பு என்று சொல்வதை விட எழுத்து படைப்பு என்று சொல்வதே சரியாக இருக்கும்).. இந்த எழுத்து படைப்பில் கதைகள் , கட்டுரைகள், நாவல்கள், திரைக்கதைகள், பாடல்கள் , இலக்கிய படைப்புகள் என்று அனைத்துமே இதில் அடங்கி விடும்.. ஒருவர் தனது எழுத்தால் சொல்ல கூடிய அனைத்துமே இந்த எழுத்து படைப்புரிமையில் வந்து விடும்.
2 . Dramatic Work ( இதை நாடக படைப்பு என்று சொல்லலாம்.. ட்ராமா என்று சொன்னால் அதில் காட்சிகளும் , வசனங்களும், பின்னணி இசையும் சேர்ந்தது.. காட்சிகளை வரிசைப்படுத்தி ஒரு கதை சொல்லப்படும் போது அதில் வரும் கதாபாத்திரங்கள், காட்சி அமைப்புகள் ,நடனம், இசை அனைத்தும் சேர்ந்ததே dramatic Work )
பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் - அத்தியாயம் மூன்று
3 Cinematographic Work ( திரைப்பட படைப்பு ): ஒரு திரைப்படம் முழுமையாக வர ஒளி, ஒளி, சப்தம், இசை கோர்வை, பாடல்கள், காட்சியமைப்பு, காட்சி வரிசை, நடனம் , வசனம் , அரங்க அமைப்பு, சண்டை ( இருந்தால் ) , கதாபாத்திரங்களின் நடிப்பு இது அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டதே ஆகும்.. இதைத்தான் சினிமாட்டோகிராபிக் ஒர்க் என்று காப்பிரைட் ( பதிப்புரிமை) சட்டத்தில் சொல்லப்படுகிறது.
ஒரு திரைப்படம் உருவாக்க திரைக்கதை, காட்சி வரிசை, காட்சி அமைப்பு மற்ற திறன்கள் சேர்த்து ஒரு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.. ஆதலால் இது அனைத்திற்கும் ஒரு உரிமை.. அந்த உரிமையானது அந்த திரைக்கதை எழுதியவரை சேருகிறது.. திரைக்கதை என்றால் திரைக்கான கதை அது.. திரையில் வரும் காட்சி அமைப்புகள் கொண்ட கதை அது.. காட்சியமைப்புகள் வரிசை ஆரம்பம் முதல் இறுதி வரை.. ஒவ்வொரு காட்சிக்கும் தேவைப்படும் ஒளி, ஒளி, இசை, நடனம், பாட்டு, நடிப்பு இது அனைத்தும் சேர்ந்ததே திரைப்படைப்பு.
இசைக்கு தனி பதிப்புரிமை ( காப்பிரைட் ) உண்டு.. ஆனால் அது திரைப்படத்தோடு சேர்ந்து வரும் போது அது திரைப்படுத்திற்கான உரிமை ஆகி விடுகிறது.. தயாரிப்பாளருக்கு அது போய் விடும்.. படத்துக்கான உரிமை தயாரிப்பாளருக்கும், திரைக்கதைக்கான உரிமை திரைக்கதை அமைத்திருக்கும் போய் சேரும்.. ஆனால் அதிலும் ஒரு திரைக்கதை அமைப்பாளர் சம்பளத்திற்காக வேலை செய்து அந்த முழு உரிமையையும் எழுதி கொடுத்து விட்டால் அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளருக்கு போய் சேர்ந்து விடும்.. இது பற்றி பின்னால் ஒவ்வொரு உரிமை பற்றி எழுதும் போதும் இன்னும் விவரமாக எழுதுகிறேன்.
4. இசை அமைப்புக்கான உரிமை அடுத்தது.. இசை என்பது பல வகைகள்.. திரை இசை.... தனி பாடல் இசை ( மியூசிக் ஆல்பம் ) இன்னும் சில வகை இசை வெளியீtடுகள்.. இவை அனைத்திற்குமே இசையமைப்பாளரே முதல் உரிமையாளர்.. ஆனால் அதுவும் அவர் பணம் போடுபவரோடு செய்யும் ஒப்பந்தத்தை பொறுத்தது.. அதையெல்லாம் விளக்கமாக எழுதுகிறேன் வரும் தொடர்களில்.. 2013 க்கு பிறகு பாடல் ஆசிரியர்கள், பாடலை பாடியவர்களுக்கும் உரிமை வந்துள்ளது.. அது பற்றியும் விவரமாக எழுதுகிறேன்..இது சம்பந்தமான ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்பு கூட சமீபத்தில் வந்துள்ளது.. அது பற்றியும் விளக்கமாக எழுதுகிறேன்.. காரணம் அது ஆங்கிலத்தில் இருப்பதால் அது நம் மக்களுக்கு, திரை உலகை சேர்ந்தவர்களுக்கு முழுமையாக புரிய வைக்கத்தான் இந்த முயற்சி..
5. Artistic Works ( கலைப்படைப்புகள் ): ஒரு சித்திரம் (painting அல்லது drawing ) வரையப்படுவது, ஒரு சிலை செதுக்கப்படுவது ( Sculpture ), ஒரு புகைப்படம் /நிழற்படம் எடுக்கப்படுவது , ஒரு enraving எனப்படும் வேலைப்பாடுகள், ஒரு architechtural work (கட்டிடக்கலை படைப்பு ) இவை தவிர இன்னும் சில கலை வேலைப்பாடுகள் அனைத்துமே இந்த கலைப்படைப்பு உரிமையின் கீழ் பதிப்புரிமை (காப்பிரைட் ) சட்டத்தில் வரும் உரிமைகளில் ஒன்று. ஒரு கடிதத்தை குறிப்பிட்ட எழுத்து வடிவத்தில் எழுதுவது கூட இந்த உரிமையின் கீழ் வரும்.. இதற்கு ஒரு நீதிமன்ற தீர்ப்பு முன்னோடி உள்ளது.. இந்த உரிமை பற்றிய விளக்கங்களையும் வரும் வாரங்களில் எழுதுவேன்..
அநேகமாக பெரும்பாலான உரிமைகள் பற்றி மேலே குறிப்பிட்டுள்ளேன்.. இன்னும் சில உரிமைகள் அவற்றின் விளக்கங்கள் பின்னால் வரும்..
உரிமை காலம் : எவ்வளவு காலம் பதிப்புரிமை என்பது அந்த உரிமையாளருக்கு உண்டு என்றால் அவரது வாழ்நாள் மற்றும் அவரது இறப்பிற்கு பிறகு அறுபதாண்டு காலம் அவரது சந்ததியருக்கு அந்த உரிமை உண்டு.. ஒரு குறிப்பிட்ட பதிப்புரிமை இரண்டு பேர் பகிர்ந்து கொண்டால், இரண்டு பேரின் வாழ்நாள் மற்றும் கடைசியாக இருப்பவருக்கு பின்னால் அறுபதாண்டு காலம் அவரது சந்ததியினருக்கு உண்டு.. இந்த உரிமை பதிப்புரிமை, மொழி மாற்ற உரிமை, லைசென்ஸ் உரிமை இப்படி பல உரிமைகள் உண்டு. உரிமைகள் பற்றியே தனியாக விளக்குகிறேன்.
இனி வரும் தொடர்களில் மிக பெரிய விளக்கங்களும், பதிப்புரிமை சம்பந்தப்பட்ட பல கொள்கைகளும்,கோட்பாடுகளும் அவற்றின் விளக்கங்களும், அவற்றில் உள்ள பல மிக முக்கியமான இங்கிலாந்து கோர்ட் தீர்ப்புகளும், நமது மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் குறிப்பிட்டு சொல்லப்படும்..
பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் - அத்தியாயம் 2
இந்த கொள்கைகள், கோட்பாடுகள் என்பவனே பதிப்புரிமை ( காப்பிரைட் ) சட்டத்தின் பெரும் தூண்களாக விளங்குகின்றன.. இந்த பதிப்புரிமை சட்டத்தின் முக்கியமான இந்த கோட்பாடுகளே இவற்றை இன்று வரை வழி நடத்தி செல்வதோடு, நீதிமன்றங்கள் தீர்ப்பு அளிப்பதற்கும், வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதிடுவதற்கும் அடிப்படையாக உள்ளன..
சட்டம் தெளிவாக இருந்தால் மட்டுமே , உரிமை என்பது திட்டவட்டமாக நிலைநாட்ட முடியும்.. ஒரு உரிமையாளருக்கு அவரது படைப்பின் உரிமை என்பது சட்டம் அவருக்கு கொடுத்துள்ள அங்கீகாரம். சட்டம் என்பது அரசியல் சாசனத்தில் அடிப்படையில் தேசம் வகுக்கும் நீதிகள்.. அவற்றை ஒவ்வொருக்கும் மதித்து செயல்படும் போது,அனைவருக்கும் அவரவர் உரிமை அவரவர்க்கு கிடைக்கிறது.. உரிமை மீறல் என்பது சட்ட மீறல்.. இதற்கு சட்டத்தின் மூலமாக, நீதிமன்றங்கள் வாயிலாகவே நீதி பெற முடியும்.
அடுத்த தொடரில் பதிப்புரிமை சம்பந்தப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகள் பற்றி எழுத தொடங்குகிறேன்.. அவற்றில் நீங்கள் எதிர்பார்க்கும் பல விளக்கங்களை பார்க்க முடியும்.. நீதிமன்ற தீர்ப்புகள் சாராம்சங்களும் வரும்.. மீண்டும் சந்திப்போம்..
இந்த படைப்பு, திரு. ஷங்கர் கிருஷ்ணமூர்த்தியின் பதிப்புரிமை…(காப்பிரைட் ).. அவரது அனுமதி இன்றி இது வேறு யாரும் பயன்படுத்தவோ, மொழி மாற்றம் செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.
திரு . ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி ஒரு பொறியாளர்.. , மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவர்.. சட்டம் படித்தவர்.. வணிக சட்டத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.. ஒரு வழக்குரைஞர். எழுத்தாளர்.. ஆலோசகர்.. பயிற்சியாளர் திரைப்பட நடிகர்.. திரைப்பட திரைக்கதை ஆலோசகர்.. திருச்சியை அடுத்த நங்கவரம் கிராமத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த இவர் , சென்னையில் படித்து வளர்ந்து வேலை பார்த்து பிறகு வேலை நிமித்தம் பல நகரங்களில் பணி புரிந்து இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார்..
ஒரு நடிகராக இவர் ‘காதலே என் காதலே, மாற்றான், நந்தனம், அனேகன், ஜானி, காப்பான்’ படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர இன்னும் பல படங்களில் திரைக்கதை ஆலோசகராக, சட்ட ஆலோசகராக பணி புரிந்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.