தொற்றால் பாதிக்கப்பட்டு அவதியுறும் வேளையில் தேசத்தின் உற்சாகத்தை ஐபிஎல் போட்டிகள் உயர்த்தும் என எதிர்பார்ப்பது, கிரிக்கெட்டின் குணப்படுத்தும் திறனை அதிகரித்து காட்டுவதும், தொற்றை குறைத்து மதிப்பிடுவதும் ஆகும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
உலகம் முழுவதிலும் விளையாட்டுப்போட்டிகளை தொடர்ந்தால் மனிதர்களின் சந்தோசத்தை அதிகரிக்கும் என யார் நினைத்திருப்பார்கள். விளையாட்டு அரங்கங்கள் திறக்கப்படும்போது, அறிவியல் மற்றும் கணக்கெடுப்பின் உதவியின்றி, மக்கள் முகத்தில் புன்னகையை காண முடியும் என்று அரசியல்வாதிகள், அலுவலர்கள், வீளையாட்டு வீரர்கள் மற்றும் பல தரப்பினரும் கணித்துள்ளனர். பற்றிப்பரவிக்கொண்டிருக்கும் தொற்றின் முடிவில் உள்ள ஒளிவெள்ளைத்தை அவர்கள் குறிப்பிட்டு கூறுகிறார்கள், விளையாட்டின் மாயம் அனைத்து சோகங்களையும் மாற்றிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிறைந்து கிடக்கும் மருத்துவமனைகளிலும், உறைந்து நிற்கும் வாழ்க்கையிலும் புது ரத்தம் பாய்ச்சும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இதோ புன்னகை அட்டவனை. இங்கிலாந்தில், 40 ஆயிரம் கோவிட் -19 மரணங்களை கடந்து தொற்று மிக மோசமான நிலையில் உள்ளது. அவர்களின் வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப்ஐ பொருத்தவரை, இம்மாத இறுதியில் பிரீமியர் லீகை மீண்டும் துவக்கினால், தேசம் புத்துணர்வு கொள்ளும் என்கிறார். ஒரு லட்சத்து எண்பதாயிரம் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் ஜெர்மனி, மே 15ம் தேதி அன்று அவர்களின் கால்பந்து போட்டிகளை மீண்டும் தொடங்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்ட பின்னர் ஒரு பெரிய புத்துணர்ச்சி அலை நாடு முழுவதும் பரவியது. இதனால்தான் ஜெர்மனி கால்பந்தின் அரசன் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியாவில், வெகுஜன மன நிலை ஊசலாட்டத்தில் உள்ளது. இந்தாண்டின் இறுதிகுள்ளாவது ஐபிஎல்ஐ தாமதமாக நடத்தினால் கூட நல்லது என எண்ணும் ஒரு குழு. ஒரு சில பிசிசிஐ அதிகாரிகள், எம்பியான கிரிக்கெட் வீரர், பெரு முதலாளிகள் போன்ற அனைத்து தரப்பினரும் கிரிக்கெட் இந்த சூழ்நிலைக்கு நல்ல மாற்றாக இருக்கும் என்றே கருதுகின்றனர். கொரோனா பிரச்னையை சமாளிக்கும் பொறுப்பும் கிரிக்கெட்டுக்கு உள்ளது.
கிரிக்கெட்டிற்கு கால்கள் மட்டும் இருந்தால் இந்த எதிர்பாராத கூடுதல் பொறுப்பின் சுமைகளை அது தன் கால்களின் கீழ் மடித்துப்போட்டிருக்கும். சுதந்திரத்திற்கு பின்னர் இருந்து, தேசிய பொழுதுபோக்கின் மீதான சுமை கடுமையாக உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளில், இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பல்வேறு பணிகள் இருந்துள்ளது. இதுவே நாட்டை ஒன்றிணைக்கும் ரணியாக உள்ளது. தூதர், உச்சகட்ட பொழுதுபோக்கு அம்சம், அண்டை நாட்டினருடன், துப்பாக்கி இல்லாமல் அடிக்கடி நடக்கும் போருக்கான ஆயுதம் மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் சக்தியில்லாத கைப்பாவையாகவும் உள்ளது. மேலும் தற்போது அவர்கள் அதை யாரும் விளையாட்டு அரங்கைவிட்டு வெளியேறாமல் பாதுகாத்து விளையாடுவதுடன், கொரோனா போராளியாகவும் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இது கிரிக்கெட்டின் குணப்படுத்தும் சக்தியை அதிகரித்து மதிப்பிடுவதும், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்பை ஏற்படுத்தியுள்ள நூற்றாண்டின் முக்கிய பிரச்சனையை குறைத்து மதிப்பிடுவதுமாகும். 1,200 கிலோ மீட்டர்கள் சைக்கிளிலே பயணித்த தர்பங்காவைச் சேர்ந்த பெண் அல்லது மும்பை விமான நிலையத்திற்கு வெளியே கானா கால்பந்தாட்டக்காரகனின் 73 நாட்கள் நீண்ட காத்திருப்பு சோதனை அல்லது முன்னணி ஊழியர்களான பெயரில்லாத செவிலியர்களின் தியாகம் என அனைத்தும், நடனமாடி உற்சாகப்படுத்தும் பெண்கள், எப்போதும் புன்னகையுடன் சத்தமான வர்ணனை செய்யும் கிரிக்கெட் வர்ணணைகள், பிரவோவின் நடனம், தோனியின் கடைசி பால் சிக்சர் போன்றவற்றால் அப்படியே திசை திருப்பப்படுமா? உண்மையில்லை. டி20 கிரிக்கெட் மாலை நடந்தாலும் அதில் ஏற்படும் பாதிப்பைவிட, அடுத்த நாள் காலையில் பால் வாங்குவதற்காக நிற்கும் கூட்டத்தில் உள்ள பாதிப்பிற்கே பயம் அதிகமாக உள்ளது.
நீங்கள் முயற்சி செய்தாலும், வெற்றிடமே நிரம்பியிருந்தாலும், அம்பயர்கள் கையுறை அணிந்திருந்தாலும், பந்து வீசுபவர்களும், மட்டை பிடிப்பவர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்தாலும், சுத்திகரிக்கப்பட்ட பந்துகளை சந்தேகத்துடன் உபயோகிக்கும்போது, மூடப்பட்ட விளையாட்டரங்க கதவுகளை கடந்தும் வைரஸ் பதுங்கியிருக்கும் என்பதை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும்.
இதை அறிவிக்க வேண்டும். ஐபிஎல், அலுவலகத்தின் ஒரு மோசமான நாளில் இருந்து மனதை திசைதிருப்பும் ஒரு நல்ல மருந்துதான், ஒரு கடினமான சூழ்நிலையை மறக்கச்செய்யும் ஒன்றுதான் மற்றும் உற்சாகமான ஒன்றுகூடலுக்கான ஒருமித்த பின்னணிதான். ஐபிஎல், தொலைக்காட்டிசியில் வரும் யதார்த்த நிகழ்ச்சிகளைவிட உண்மையானதுதான். தினமும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி தொடர்களைவிட சிறந்த நாடகம்தான். அதனால் தான் ஐபிஎல் சிறந்த முக்கிய நேர தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உள்ளது. குறைவும் இல்லை, அதிகமும் இல்லை, இது கோவிட் – 19க்கான மனதிற்கான தடுப்பு மருந்து அல்ல. ஒரு போலியான மருத்துகூட கிடையாது.
விளையாட்டை, மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் புரோசாக் மாத்திரைகளாகவோ அல்லது இறுதியான அனைத்து நோய் நிவாரணியாகவோ கருதினால், அவர்கள் வரலாறு குறித்து பேசுவார்கள். அவர்கள் சில காலங்களை கடந்து, போருக்கு பிந்தைய 1948ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் காலத்திற்கு செல்வார்கள். போருக்கு பிந்தைய கால விளையாட்டுகளில் ஆங்கிலேயர்களே நிறைந்திருந்தார்கள். என்றாலும், பின்னர் பாசிசம் கடுமையாக தாக்கப்பட்டது. விளையாட்டு போரை கொண்டு வரும் என்பதை மறுக்க முடியாதுதான். சோர்வான இங்கிலாந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது.
ஒட்டிய கன்னத்துடன், மெலிந்த தேகம் கொண்டவர்களின் படங்களை பிரிட்டிஷ் ஆவண காப்பகம் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. அவை உணவின்றியும், பெரியளவில் இருந்த வேலைவாய்ப்பின்மையாலும் ஏற்பட்ட விளைவுகளாகும். ஆனாலும் விளையாட்டை பார்க்கும்போது அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து, கைதட்டி ஆரவாரம் செய்யும் காட்சிகள் அவை.
மேலும் 1930ம் ஆண்டுக்கு அவர்கள் பின்னோக்கிச் செல்வார்கள். அப்போது மக்கள் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் சீபிஸ்கட் மற்றும் பிராட்மேன் குறித்து பேசுவார்கள். பின்தங்கிய பந்தய குதிரைகளின் எதிர்பாராத வெற்றி மற்றும் வேலைசெய்யும் மட்டைப்பந்தாட்ட வீரர்கள் பொருளாதாரத்தை உற்சாகப்படுத்தி, முடங்கிப்போன நாட்டை மீண்டும் எழுந்து நடக்க வைக்க முடியுமெனில், விளையாட்டு போட்டிகள் ஏன் மீண்டும் உத்வேகத்தை இரட்டிப்பாக்க முடியாது?
தற்போதுள்ள தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான நிச்சயமற்ற தன்மை, இங்கிலாந்தின் போருக்கு பிந்தைய நம்பிக்கை அல்லது மனஅழுத்தத்தின்போது, நாம் இதை கடந்து விடலாம் என்ற மனநிலையில் இருந்து முற்றிலும் வேறானது. இது ஆப்பிளையும், ஆரஞ்சையும் மற்றும் பாதுகாப்பில்லாத கையெறி குண்டையும் ஒப்பிடுவதை போன்று தவறானது.
விளையாட்டு, தேசத்தின் மனநிலையை உற்சாகப்படுத்தி, உயர்த்தும் என்று குரல் கொடுப்பவர்களும், ரசிகர்கள் மனநிலையை எதிரொலித்ததாக குற்றம்சாட்டப்படுவார்கள். இதுவரை மும்பை இந்தியன்ஸ் ஆதரவாளர்கள் அவர்களின் கோட்டை அணிந்துகொண்டு, வாங்கடே மைதானத்தின் வாயில்களில் நின்று பிசிசிஐ, ஐபிஎல்ஐ மீண்டும் துவக்க வேண்டும் என்றும், அப்போதுதான் தங்கள் மனநிலை மாறும், அப்போது வைரசை மகிழ்ச்சியாக புறந்தள்ள முடியும் என்று போராட்டம் நடத்தவில்லை. தர்ணாவை விடுங்கள், டிவிட்டரில் கூட ஐபிஎல், கோவிடை அடித்து நொருக்கும் என்ற ஹாஷ்டாக் கூட வைரலாகவில்லை.
வணிகம்தான் விளையாட்டுகளை இயக்குகிறது என்ற தற்கால உண்மையை எடுத்துக்கொண்டால், விளையாட்டு மைதானமே ஒளி வெள்ளத்தில் மிதக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குகிறது, ஆபத்துக்கள் அதிமாக இருந்தாலும், மனநிலையை மாற்றும் போன்ற வாதங்களை முன் வைக்கலாம். நாட்டின் பல மில்லியன் கிரிக்கெட் ரசிகர்களின் கருத்துக்களை கேட்காமல், சந்தேகத்திற்குரிய நகர்வு அதற்கு சிவப்பு அட்டைதான் கிடைக்கும். இந்த ஐபிஎல்லின் தொற்று காலம் அதே சந்தேகத்துடன் தெரிகிறது, அதாவது வைரஸ் கட்டற்ற நிலையில் இருக்கும் காலத்தில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் செயலிகளில் கிரிக்கெட் ஓட்ட எண்ணிக்கையையும், கோவிட் – 19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை ஆரோக்கிய சேது செயலிலும் 500 மீட்டர் இடைவெளியில் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருப்பது இந்த தேசத்தின் எழுச்சியை உயர்த்த முடியாது.
இக்கட்டுரையை எழுதியவர் சந்தீப் திவேதி.
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.