இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை செய்வதில் இன்னும் தாமதம் இல்லை. வெறுமனே சாதாரண முறையில் செயல்படும் அதனை சமூக ஆரோக்கியம் பொதுநலனுக்கும் உதவும் வகையில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
விவேக் திவான்
ஒரு பத்தாண்டுக்கு முன்பு, சுகாதாரம் தொடர்பான முன்னெடுப்புகளில் இந்தியா முன்னுதாரணமாக, பொது சுகாதார சவால்கள் எப்படி வெற்றிகரமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு செயல்திட்டத்துக்கான பாராட்டைப்பெற்றது. அந்த வெற்றிக்கான அடிப்படைகளை ஏற்கனவே நாம் மறந்து விட்டதாக தெரிகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
எச்.ஐ.வி.,எயிட்ஸ் நோய் தொற்றை எதிர்கொள்வதில் கீழ்கண்ட கொள்கைகளை பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. முதலில் பெருந்தொற்று தடுப்புக்கான பணிகளை முன்னெடுக்கும்போது எந்த ஒரு உத்தியிலும் ஓரங்கட்டப்பட்ட பாதிக்கப்படக்கூடியவர்களை முன்னணியில் வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தகவல்கள் அடிப்படையிலோ அல்லது சேவையின் அடிப்படையிலோ அவர்களுக்கு அவர்களின் தேவைகள் தீர்க்கப்பட்டவா அல்லது அவர்களின் சுகாதார வெளிப்பாடுகள் மேலும் உறுதியானதாக இல்லாவிட்டாலும் கூட, அவர்களை உடலாக , சமூகமாக, பொருளாதார ஒருங்கிணைப்பாக எல்லா சாத்தியக்கூறுகளிலும் மதிக்கப்பட வேண்டும். சமூக பொருளாதார ஏணியின் உயரத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான சுகாதார நலன்களும் இது போன்ற சிந்தனை அணுகுமுறையில் தீர்க்கப்பட வேண்டும்.
உள்ளடக்கிய வடிவமைப்பு, சுகாதார முறைகளின் வளர்ச்சி, சமூக சூழ்நிலைகள் என்பது பாதிக்கப்படக் கூடியவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்களின் உண்மையை ஏற்றுக்கொள்ளக் கூடியதான தேவைகளை சுகாதார முன்னெடுப்புகள் சிறப்பாக செய்ய முடியும். அரசாங்கம் மற்றும் ஆரோக்கிய சூழலை வளர்த்தெடுத்தல் என்பது விளிம்பு நிலையில் உள்ள ஒரங்கட்டப்பட்டவர்கள் ஊக்குவிக்கப்படுவதையும் அவர்களுடன் உடனிருப்பதையும்தான் பாதுகாப்பாக உணர்வார்கள். தன்பாலினத்தவராக எச்.ஐ.வி பாதிக்கப்படக் கூடியவராக என்னையும் என் சகாக்களையும் 1990 காலகட்டத்தைப் போல எவ்வளவு தூரதுக்கு இந்த சுகாதார அமைப்பு விலக்கி வைத்தது என்பது எனக்குத் தெரியும். ஒரு வழகறிஞராக, சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றேன். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸார், ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் பணியாற்றும்போது எவ்வாறு பார்வை மாற்றம் ஏற்படுகின்றது என்பதைப் பார்த்திருக்கின்றேன். பாலியல், பாலியல் உணர்வு, உடல் நலக்குறைவு மற்றும் சட்டம், எப்படி, அதிக நேரம் ஆகியவற்றின் மீது அவர்கள் திறந்த மனப்பான்மையுடன் உரையாடுவார்கள். இந்த உரையாடல்கள் சுகாதாரத்துறையில் செயல்படுத்தும் சூழலை உருவாக்கியது. அது கொள்கையில் எதிரொலிக்கத் தொடங்கி, எச்.ஐ.வி-யை எதிர்ப்பதற்கான பரந்த சமூக முயற்சிகளை உருவாக்க வேண்டும்.
எச்.ஐ.வியைப் பொறுத்தவரை, பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள், எச்.ஐ.வி-யுடன் வாழும் நபர், போதை மருந்து பழக்கம் உள்ளவர் ஆகியவை கொண்ட சூழல்களில் வளர்கின்றன. ஆண்கள் பிற ஆண்களுடன் பாலின தொடர்பு வைத்துக் கொள்ளுதல் என்பது உடல் நலம் மற்றும் பொதுக்கொள்கை முயற்சிகளின் மையத்தில் இருந்தன. இந்தப் பொருளில் கோவிட்-19 என்பது, முன்னணியில் களப்பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ், இணைநோயுற்றவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் மையமாக இருக்கின்றனர். நகர்புற ஏழைகள், பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் , தினக்கூலிகள் ஆகியோர் வாழ்வாதரம் என்பது இதுபோன்ற ஊரடங்கு நடவடிக்கைகளால் குழப்பமாக மாறி உள்ளது.
இரண்டாவதாக, ஓரங்கட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை இந்த பயணம், அவர்களின் தேவைகளை கேட்டு, ஒரு பொருத்தமான தீர்வுகளை வழங்கும் கூட்டு அணுகுமுறையை உருவாக்கி உள்ளது. அவர்களை கட்டப்படுத்தப்பட்டவர்களாக கருத வேண்டாம். மேலிருந்து கீழே உள்ளவர்களாக அல்லாமல், கீழிருந்து மேலே உள்ளவர்களாக அதிகாரத்தில் பங்கேற்பாளர்களாக கருத வேண்டும். நம்பகமான, தொடர்புடைய , அவமானமற்ற, ஆதரப்பூர்வமான தகவல்கள் மற்றும் சேவைகளுடன் அவர்களை வலுப்படுத்த வேண்டும். அவை கிடைப்பதற்கான உரிமைகள், சுகாதார மற்றும் சமூக முறை கேவலப்படுத்தப்படவில்லை. மாறாக வரவேற்கப்படுகிறது.
நம் நிபுணத்துவம் எதுவாக இருந்தாலும் அதை தெரிந்துகொள்ளும் உள்ளுணர்வு, பணிவு இதற்கு தேவை. சுகாதார விஷயங்களுக்கு நம்மிடம் தீர்வு இல்லை. அவை சிக்கலான மனித யதார்த்தங்களுடன் சிக்கியுள்ளன. அனைத்து வகையான தவறான கருத்துகளின் வழியே சமூக மனிதமதிப்பை அளவிடுகின்றோம். ஆகவே, அந்த பெரும்பாலான மிகவும் கடினமான இக்கட்டான நிலைகள் குறைவாக இருக்கலாம். தீர்வை நோக்கி நம்மை இணைந்து வழிநடத்திச் செல்லும் நுண்ணறிவை அநேகமாக கொண்டிருக்கலாம்.
மூன்றாவதாக, ஒருவருடைய சொந்த அறத்தில் இருந்து வெளியேறுங்கள். குற்றம் சாட்டுதல் , பின்னால் பழி சொல்லுதல் என்ற அனைத்தும் அதீதமான பொது மனித போக்காக இருக்கிறது. எப்படி தொற்று பரவுகிறது என்ற புரிதல் என்பது இதில் இன்றியமையாத தாகும். ஆனால், அது அந்த நோயைக் கொண்டிருப்பவரின் தவறு அல்ல. கோவிட்-19-ஐ போலவே, எச்.ஐ.வி-யும் கூட, தாம் அந்த தொற்றைச் சுமந்து கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணம் இல்லாமல்தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.
எச்.ஐ.வி-யுடன் தொடர்புடைய இதனை செய்யும்போது, மனித பாலியல் மற்றும் பாலியல் நடத்தை பிரச்னைகள் வழக்கமான ஒன்றாகிவிட்டது என்ற அந்த சுகாதார அதிகாரத்துவத்தின் முதிர்ச்சி உள்ளிட்டவை சில அசாதாரண முன்னேற்றத்துக்கு இட்டு செல்லும். இது போன்ற விஷயங்களில் நேர்மையான மற்றும் பச்சாதாபம் கொண்ட ஒருவர், தொடர்ச்சியாக தன்பாலித்தவர்களுடன், பாலியல் தொழிலாளர்களுடன் உட்கார்ந்திருத்து அவர்களை கண்டு, கேட்டு அவர்களிடன் கற்றுக் கொள்ளுதல் இது போன்ற குரல்கள் கொள்கைகள் நடைமுறைகளை வகுப்பதை அனுமதிக்கும். கள யதார்த்த த்தை மேலும் அதிகமாகப் பிரதிபலிப்பதாக அது மாறும். ஆகையால் இது மிகவும் திறன் வாய்ந்ததாகும். உண்மையில், எச்.ஐ.வி தொற்று உச்சத்தில் இருந்தபோது அதைத் தடுப்பதற்காக அரசுடன் பணியாற்றிய அவர்கள், இந்திய மருத்துவ கவுன்சிலின் கோவிட்-19 வல்லுநர் குழுவின் உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவில்இடம் பெற்றிருப்பது மனதைக் கவரும் வகையில் இருக்கின்றது. எச்.ஐ.-வி-யில் கற்றுக்கொண்டதை பகிர்ந்து கொள்ளும் பாடத்தை அவர்கள் கொண்டிருப்பார்கள். அந்த அறிவுரை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவை அழிக்கத் தொடங்கிய எச்.ஐ.வி-யை முறியடித்தோம். மேல் இருந்து கீழ் நோக்கிய அச்சுறுத்தும் அணுகுமுறையால் அல்ல. சுகாதாரம் மற்றும் அது தொடர்பான உரிமைகளை கேட்ட பாதிக்கப்பட்ட குடிமக்கள் சமூகத்தைக் கொண்ட அதிகாரம கொண்ட சமூகத்தால் உள்ளடக்கி வைக்கப்பட்டது. வழிகாட்டுதல்களை பெறுவர்கள் மட்டும் அல்ல. சவால்களை தீர்க்கக் கூடிய பொறுப்புமிக்கவர்கள் மேஜையில் ஒரு இடத்தில் இருந்தனர். ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகளை கிடைக்கச் செய்யும்படி கோரிக்கை வைக்கும் சமூகமாக அது இருந்தது. அதன் படி அரசாங்கம் அதனை செயல்படுத்தியது. இலவச திட்டம் காரணமாக லட்சகணக்கானோரின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டது. ஒரு தீவிரமான மாறுப்பட்ட வினோத சமூகமான அது, வன்முறை, நியாயப்படுத்த முடியாத குற்றம் மற்றும் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்படும் சட்டப்பிரிவு 377-ஐ கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அந்த காரணத்துக்காக இந்த சட்டம் கைவிடப்பட்டது. எச்.ஐ.வி.,/எயிட்ஸ் சட்டம் என்ற இந்தியாவின் முதல் பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் கிடைப்பதற்கு , பரந்த அளவிலான குடிமக்கள் பணியாற்றினர். உயிரைப் பாதுகாக்கக் கூடிய அத்தியாவசிய மருந்துகளை பெரிய மருந்து நிறுவனங்கள் உரிமை கொண்டாடி, அந்த மருந்துகளை சாதாரண மக்கள் வாங்கமுடியாத அளவுக்கு அதிக விலைக்கு விற்கும் முறையற்ற ஏகபோகத்துக்கு எதிராக, இந்த சமூகம் போராடியது.
எச்.ஐ.வி-க்கு எதிரான சிகிச்சைகள் நோயை மையப்படுத்தி இருந்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதிக அளவிலான நிதி மற்றும் மனித உழைப்பும் சிகிச்சையை வலுப்படுத்தின. எதிர்பாராதவிதமாக, இது மேலும் பரந்த அளவில் சுகாதாரத்துறையில் மாற்றம் ஏற்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்து விட்டது. அத்தகைய மனித உழைப்பு, தீவிர முயற்சியுடன் கூடிய இன்னொரு சாதகமான விளைவு மேற்கொள்ளளப்பட வேண்டும். சந்தேகத்துக்கு இடமின்றி, கோவிட் 19 மற்றும் எச்.ஐ.வி இரண்டும் அதன் நோயியல் காரணங்கள், வெளிப்பாடுகள் மற்றும் தாக்கங்கள் ஆகியவை வெவ்வேறு விதமானவைதான். இன்னும், இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பைப் போல, சில அடிப்படைகள் விஷயங்களின் இயல்பைப் பொருட்படுத்தாமல் உண்மையில் உழைக்கின்றன.
எனினும், கோவிட்-19-க்கு எதிரான சவால்களை நோயை மையப்படுத்திய முறையில் எதிர்கொள்ள முடியாது. இந்த சிக்கல்கள், மேலும் முழுமையாக சமூக பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தை வலுப்படுத்த கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாகும். மனிதாபிமான மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறைகளால் பலப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை எச்.ஐ.வி நமக்கு காட்டியது. இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை செய்வதில் இன்னும் தாமதம் இல்லை. வெறுமனே சாதாரண முறையில் செயல்படும் அதனை சமூக ஆரோக்கியம் பொதுநலனுக்கும் உதவ மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
இந்த கட்டுரை முதலில் கடந்த 27-ம் தேதியிட்ட நாளிதழில் ‘HIV lessons for Covid-19’ என்ற தலைப்பில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர், புனேவின் ஐ.எல்.எஸில் உள்ள சுகாதார சமபங்களிப்பு , சட்டம் மற்றும் கொள்கை மையத்தின் தலைவராக உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.