இந்தியாவில் உள்ள 26 கோடி குடும்பங்களில் 50 சதவீத குடும்பங்களை தோராயமாக 13 கோடி குடும்பங்கள் வரை பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொள்ளலாம்.
ப. சிதம்பரம், கட்டுரையாளர்
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டார். அங்கிருந்து கொரோனா வைரஸ், வுஹான் நகரம் முழுவதும் பரவி, பின்னர் ஹீபை மாகாணம் முழுவதும் பரவி, பின்னர் சீனா முழுவதும் பரவி, பின்னர் உலகம் முழுவதும் பரவியது. அப்போதுதான் உலகம் முழுவதும் அச்சம் பரவியது. இந்தாண்டின் ஜனவரி மாத இறுதியில் 27 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தன. பிப்ரவரி 12ம் தேதி ராகுல் காந்தி, கொரோனா வைரஸ், நம் மக்களுக்கும், நம் பொருளாதாரத்தையும் கடுமையாக அச்சுறுத்தும் ஒன்றாகும். நமது அரசு இந்த அச்சுறுத்தலை அபாயமான ஒன்றாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். சரியான நேரத்தில் செயல்படுவது மிக முக்கியமான ஒன்று என்று ராகுல் காந்தி தன் டிவீட் மூலம் எச்சரிக்கை செய்திருந்தார்.
வேலை பளுவை எதிர்கொள்ள போதுமான உணர்வு மேலாண்மையை கொண்டிருக்கிறீர்களா?
அப்போது மத்திய அரசு குறிப்பிடும்படியான இரண்டே இரண்டு நடவடிக்கைகள் மட்டுமே எடுத்திருந்தது. ஒன்று, ஜனவரி 17ம் தேதி சில நாடுகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இரண்டாவதாக, பிப்ரவரி 3ம் தேதி, குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு இ விசாவை இடைநீக்கம் செய்திருந்தது.
ராகுல் காந்தி கூறியது சரி
எதிர்பார்த்ததை போலவே அதற்கு கேலியும், கிண்டலும் செய்யப்பட்டிருந்து. சரல் பட்டேல் என்பவர், ஏய் மேதையே, தற்போதை செய்தி என்ன என்று பார்த்தாயா என்று கேட்டிருந்தார். பூஜா என்பவர் எழுதியிருந்தார் ஓ கடவுளே, உங்களால் உணரக்கூட முடியுமா? நகைச்சுவைகளை நிறுத்திவிட்டு, வீட்டில் சென்று போகோ சேனல் பாருங்கள் என்று கிண்டல் செய்திருந்தார்கள். இப்போது அந்த பட்டேலும் பூஜாவும் எங்கே ஓடி ஒளிந்திருக்கார்கள் என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. மார்ச் 3ம் தேதி ராகுல் காந்தி மீண்டும் டிவீட் செய்திருந்தார். இந்த பிரச்னையை சமாளிக்க சிறப்பான திட்டமிடுதலுடன் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
மார்ச் 14ம் தேதிதான் மத்திய அரசு ஒரு நடவடிக்கைகளை எடுக்கக்துவங்கியது. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளை தனிமைப்படுத்தியது. பக்கத்து நாட்டின் எல்லைகளை மூடியது. சர்வதேச விமானங்களை கட்டுப்படுத்தியது. உள்நாட்டு விமானங்களுக்கு தடை விதித்தது. இறுதியில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கை அறிவித்தது. பின்னோக்கிப்பார்த்தால் ராகுல் காந்தி கூறியது சரியாகவே இருந்தது. எல்லோரையும்விட முதலில் இந்த கடுமையான பிரச்னை குறித்து முதலில் எச்சரித்தது அவராகவே இருந்துள்ளது. கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு அறிவிக்கும் முன்னரே, தங்கள் மாநிலத்தில் சில இடங்களில் ஊரடங்கை அறிவித்தது. மார்ச் மாதத்தில் மத்திய அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும், பிப்ரவரி மாதத்திலே எடுத்திருந்தால், கோவிட் – 19க்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.
இதை எழுதுவதன் நோக்கம் கடந்த காலத்தை ஆராய்ந்து பார்ப்பதல்ல, எதிர்காலத்தில் அரசு தைரியமான நடவடிக்கை எடுத்து இந்த வைரசுக்கு எதிரான போரில் நாம் வெற்றியடையவதற்கான தூண்டுதல் கொடுப்பது, உயிர்களை காப்பது, வாழ்வாதாரங்களை பாதுகாப்பது மற்றும் சரிந்துள்ள பொருளாதாரத்தை காப்பாற்றுவது மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டே இது எழுதப்படுகிறது.
தைரியமான நடவடிக்கைகள் தேவை
அரசு ஒருமித்த தன்மையுடன் செயலாற்ற வேண்டும்
1. கட்டுப்படுத்துதல் மற்றும் மருத்துவ சிகிச்சைகள்
2. ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு வாழ்வாதார உதவி
3. வீட்டுக்குத்தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை தடையின்றி வழங்குதல்
4. சரிந்துள்ள பொருளாதாரத்தை காப்பாற்றுவது மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது
முதலில், மத்திய அரசு பல தவறான துவக்கங்களுக்கு பின்னர், அதன் செயல்களை ஒருங்கிணைத்து செய்வதுபோல் தெரிகிறது. அது மாநில அரசுகள் ஊரடங்கை கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்துகிறது. தொற்றுநோய் நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் அழுத்தத்தால், விரிவானதாக இல்லாவிட்டாலும், அண்மையில் அங்கீகரித்த எதிர்ப்புத்திறன் பரிசோதனையுடன் சேர்ந்து, இறுதியில் பரிசோதனைகளை அதிகரித்துவிட்டது. அவை நிச்சயம் நல்ல பலனை தரும். சுகாதார வசதிகள், மருத்துவ மற்றும் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் ஆகியவை மாநில அரசுகளின் தலைமையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.
இரண்டாவதாக, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு நிதி உதவிகள் வழங்குவதில் பரிதாபமாக தோற்றுவிட்டது. ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்குதான் நாட்டின் வளங்கள் முதலில் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் நிதி செயல் திட்டம் (மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்டது) மோசமாக பல பிரிவுகளையும் புறக்கணித்துவிட்டது. அதுவே புலம்பெயர் தொழிலாளர்களை தங்களின் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்புவதற்கும் காரணமாக அமைந்தது. இதில் நடந்த சோகம் என்னவெனில், அவர்களில் பலர் தங்களுடன், வைரசையும் சுமந்து சென்றிருக்கக்கூடும்.
ஏழைகளுக்கே முன்னுரிமை
மாநில அரசுகள் வழங்கிய சொற்ப தொகைகளையே வைத்துக்கொண்டு, பெரும்பாலான ஏழைகள், வாழ்வாதரங்களை இழந்து எவ்வித உதவியுமின்றி தவித்து வருகின்றனர். நாம் ஏழை மக்களை மீண்டும் கண்காணிக்க வேண்டும். அதாவது அவர்களுக்கு பொருளாதார உதவிகள் வழங்கவேண்டும். இந்தியாவில் உள்ள 26 கோடி குடும்பங்களில் 50 சதவீத குடும்பங்களை தோராயமாக 13 கோடி குடும்பங்கள் வரை பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொள்ளலாம்.
நகரத்தில் உள்ள ஏழைகளுக்கு எண்ணெய் நிறுவனங்களின், உஜ்வாலா பட்டியலில் இருந்து தொடங்கலாம். ஜன்தன் கணக்குகளையும் பார்க்கலாம். ஜன் ஆரோக்கிய ஆயுஷ்மான் பாரத் திட்டங்களில் பதிவு செய்து உள்ளவர்ளையும் பார்க்கலாம். ஆதாரை பயன்படுத்தலாம். மாநிலங்கள் தங்களிடம் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு பார்த்து, இறுதி பட்டியலை தயாரிக்கலாம்.
ஊரக ஏழை மக்கள் பட்டியல் தயாரிக்க, கடந்த ஆண்டின் நூறு நாள் வேலை திட்டத்தில் கூலிப்பட்டியல்களை பயன்படுத்தலாம். ஜன் தன் கணக்குகள், உஜ்வாலா பட்டியல் ஆகியவற்றையும் பார்க்கலாம். ஆதாரை பயன்படுத்தலாம். மாநிலங்கள் தங்களிடம் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு பார்த்து, இறுதி பட்டியலை தயாரிக்கலாம். பழங்குடியினர் பகுதிகளில், அனைத்து குடும்பத்தினரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தொற்றுநோயிலிருந்து தப்பித்து வருவது போரில் சண்டையிடுவதை போன்றது - அமர்த்தியா சென்
மாநில வாரியான பட்டியல் தயாரிப்பது சாத்தியம் என்றே நான் நினைக்கிறேன். (13 கோடி குடும்பங்கள் வரை) அது சில நூறாயிரங்கள் என்ற எண்ணிக்கையிலே இருக்கும். இதில் சில போலிகளும் இருக்கலாம். (இரட்டை நன்மைகளை பெறுவதற்காக) ஆனால் இந்த தேசிய அவசர காலத்தில் அதை கண்டுகொள்ள தேவையில்லை. தற்போது நம்மிடம் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மூலம், மாநில அரசுகளால் ஐந்தே நாட்களில் இந்த பணிகளை செய்து முடிக்க முடியும். ஏப்ரல் 14ம் தேதி பிரதமர் தேசிய தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும்போது, ஏழை குடும்பத்தினர் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு முதல் தவணையாக ரூ.5000 வழங்கப்படும் என்று அறிவிக்கலாம். அது அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு வீடுகளுக்கு வந்து நேரடியாக வழங்கப்படும் என்று அறிவிக்கலாம். இதற்கு அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் கோடி ரூபாயே செலவாகும். இது அரசால் ஏற்கக்கூடிய தொகைதான். மேலும் சாத்தியமான ஒன்றுதான். நிதித்துறையாலும் சமாளிக்கக்கூடிய ஒன்றுதான். பொருளாதார ரீதியாக நியாயமான ஒன்றுதான். சமுதாய ரீதியாக முக்கியமானதும்தான்.
அப்போது ஊரடங்கை நீட்டித்தாலும், ஏழை மக்கள் கவலைகொள்ள மாட்டார்கள். முதலில் செய்ய வேண்டியதை, முதலில் செய்யுங்கள். நாட்டின் வளங்கள் அனைத்தும் ஏழை மக்களுக்கு முதலில் உதவட்டும் என்று உறுதிகொள்ளுங்கள்.
இக்கட்டுரையை எழுதியவர் ப. சிதம்பரம். முன்னாள் மத்திய நிதியமைச்சர்.
தமிழில் : R.பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.