Advertisment

பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் : அரசுகளுக்கு இது தாமதம் கிடையாது

Financial support for migrant workers : தற்போது வழங்கப்படும் உணவின் அளவும் போதுமானதாக இல்லை. அன்றாட வாழ்விற்கு தேவையான மற்ற பொருட்களுக்கும் தற்போது தேவை அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, covid pandemic, migrant workers, financial support, central government, najeeb jung, delhi union territory, governor, migrants india lockdown, migrant workers coronavirus, migrant exodus india

நஜீப் ஜங், சுதிப்டோ முண்டே, கட்டுரையாளர்கள்.

Advertisment

ஆனால், இங்கு துரதிஷ்டவசமாக, மீண்டும் பிஎம் கிஷான் யோஜ்னா மற்றும் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் மற்றும் ரேஷன் பொருள் மானியம் மூலம் மனிதாபிமான அடிப்படையில் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணம் மிகச்சிறிய அளவாகவே உள்ளது. ஏழைகளுக்கு உதவுவதில் அரசு ஏன் இவ்வளவு இறுக்கம் காட்டுகிறது?

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்புவது, பசியுடனும், தாகத்துடனும் தவிப்பது மற்றும் உதவியின்றி இருப்பது, இந்திய வரலாற்றில் எப்போதும் ஆறாத தழும்பாகிவிடும் என்பதில் ஐயமில்லை. 44 டிகிரி செல்சியல், தகிக்கும் கோடை வெயிலிலும், தூசு படர்ந்த சாலைகளிலும், போலீசாரின் தாக்குதலையும் அடிக்கடி எதிர்கொண்டு, சில நேரங்களில் டிரக்குளிலும், டெம்போக்களிலும் பல நூறு பேர் அடைத்துக்கொண்டு வருவது, ஒரு இளைஞர் இறந்துகொண்டிருக்கும் தனது நண்பரை தூக்கிக்கொண்டு நடந்தது, சாலையிலேயே பிரசவித்த குழந்தையுடன் பெண் நடந்தது, ரயில்கள் இயங்காததால், ரயில்வே டிராக்கில் தூங்கியவர்கள் சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தது, அவர்கள் கொண்டு வந்த ரொட்டிதுண்டுகள் டிரக்கில் சிதறிக்கிடந்தது, பேருந்துகளுக்காகவும், ரயில்களுக்காகவும் கூடிய கூடிய கூட்டம், பெண்களும், குழந்தைகளும் பரிதாபமாக நடந்து வரும் படங்களை தினமும் செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களிலும், டிவிகளிலும் பார்த்தது நம் மனதில் எப்போதும் இருக்கும்.

புலம்பெயர் தொழிலாளர்களை இந்தியா கையாண்ட விதம் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல என்பதை நாம் மறந்துவிட்டோம். ஆண்களும், பெண்களும், தங்களின் பொருளாதாரத்தையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக்கொள்வதற்காக அவர்கள் வீடுகளையும், சொந்தங்களையும் விட்டு வந்தவர்கள் என்பதையும் நாம் மறந்துவிட்டோம். இந்திய நகரங்கள் அவர்களின் நம்பிக்கைகளை தகர்த்துவிட்டன. வெளிநாடுகளில் தவிக்கும் நமது உறவினர்களை நம் நாட்டிற்கு அழைத்துவர துடிக்கும் நாம்தான், இவர்களை யாரோ தானே என்று ஒதுக்கிவிட்டோம்.

பீதியை ஏற்படுத்திய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மத்தியில், பல லட்சம் தொழிலாளர்கள் தாங்களாகவே தங்கள் வீடுகளை அடைவதற்கு முயற்சி செய்தார்கள் என்பது வியக்கவைப்பதாக இல்லை. இதுபோன்ற நிர்வாக தோல்வி உலகின் எந்த நாட்டிலும் இந்த தொற்று காலத்தில் ஏற்டவில்லை. முதலில் அரசு அவர்களை நிறுத்தியது. அடுத்ததாக உடலளவில் துன்பப்படுத்தியது மற்றும் மனதளவில் அதிர்ச்சியளித்தது. பின்னர் பேருந்து மற்றும் ரயில் இருக்குமா, இருக்காதா என்ற பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

குறைவான ஏற்பாடுகளை செய்துவிட்டு, அந்த துன்பம் நிறைந்த சூழலில், அவர்கள் தொடர்ந்து தங்கவேண்டும் என்று அரசு எவ்வாறு எதிர்பார்த்தது? அவர்களின் சொந்த ஊர்களான, வெவ்வேறு இடங்களுக்கு ரயில்கள் மற்றும் பஸ்கள் அனுப்பி உதவுவதில் அரசு நிறைய வாரங்கள் தாமதப்படுத்தியது ஏன்? தங்களின் மாவட்டங்களை கடந்து பசி, தாகத்துடன் நடந்து செல்லும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏன் உணவு, தண்ணீரை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கவில்லை? நெடுந்தூரம் நடந்ததால் காயமடைந்த கால்கள் அல்லது பல்வேறுஉடல் உபாதைகளோடு நடந்தவர்களுக்கு ஏன் போதிய மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை? பள்ளிக்கட்டிடங்கள், கோயில்கள் மற்றும் மசூதிகளில் அவர்கள் இரவு நேரங்களில் ஏன் தங்கவைக்க அனுமதிக்கப்படவில்லை? மனித குலத்திற்கு நடந்த இந்த அவலத்திற்கு யார் பொறுப்பேற்பது?

சரியான புள்ளிவிவரம் இல்லையென்றாலும், 10 முதல் 12 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் அவர்களின் வீடுகளை சென்றடைய முயன்றார்கள் என தொழிலாளர் சந்தை தலைவர் ஸ்ரீவத்ஸ்தவா கூறுகிறார்.

எல்லாவற்றையும்விட , புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை மற்றும் அவரது குடும்பத்தினரின் மோசமான நிலைக்கு காரணம், போதிய முன் தயாரிப்பும், முன்அறிவிப்பும் இல்லாத நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பாகும். கணக்கெடுப்பின்படி, 450 மில்லியன் பேர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இதில், 200 மில்லியன் முறைசாரா தொழிலாளர்கள் வேளாண் அல்லாத பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தற்போது வேலையிழந்துள்ளனர். அவர்களுக்கு வருமானமும் இல்லை. ஊரடங்கை தொடர்வதால் அவர்களுக்கு உணவும் இல்லை. இதில் தினக்கூலி, சிறு வியாபாரிகள், தச்சுத்தொழிலாளர்கள், குழாய்கள் செப்பனிடுபவர்கள் போன்ற சுயதொழிலாளர்களும் அடங்குவர். இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரைச் சேர்த்து 600 மில்லியன் பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்பாராதவகையான அளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த முறைசாரா தொழிலாளர்கள் வர்க்கத்தினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், நோபல் பரிசு பெற்ற மூன்று பேர் உட்பட, நாட்டின் முக்கியமான அறிவாளிகள், தாராள திட்டங்களை அறிவித்து அதன் மூலம் இலவச உணவு மற்றும் வருமானத்திற்கு உதவவேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இந்த கஷ்ட காலத்தில் அவர்களுக்கு உதவ வேண்டுகின்றனர். அந்த கூடுதல் உணவு மற்றும் வருமானத்திற்கான ஆதரவு வழங்குவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக 3 சதவீதம் தேவைப்படும். இந்த சூழ்நிலையில் ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு, இந்த பேரழிவிற்காக மாற்றப்படவேண்டும். உடனடியாகவே 10 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி மீட்பு தொகுப்பை வெளியிடவேண்டும். உண்மையான நிதி தூண்டுதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1 முதல் 1.5 சதவீதமாக இருக்க வேண்டும். எஞ்சிய தொகை, பல்வேறு மற்ற இலக்குக்குழுக்களான சிறு, குறு தொழில்கள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு உறுதியளித்த கடனாக வழங்க வேண்டும். இந்த கூடுதல் தொகையை இவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறயளவு தொகையான ரூ.40 ஆயிரம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.2 சதவீதம் மற்றும் இரண்டு மாதங்களுக்கு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க ஒதுக்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.02 சதவீதமான ரூ.3,500 கோடியும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்ட தொகுப்பிற்கு முன்னர் ஏற்கனவே வழங்கிய உண்மையான நிதி தூண்டல் குறித்து பெரியளவில் செய்தி செய்தி வெளியிடுவதில் அரசு ஏன் கவனம் செலுத்தமாட்டேன் என்கிறது குழப்பமாகவே உள்ளது. அரசு கூடுதல் கடன் வாங்குவது, நிதிநிலைக்கு மேலும் கடன் சுமையை ஏற்படுத்தி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பட்ஜெட்டுடன் சேர்ந்த 2 சதவீத உள்நாட்டு உற்பத்தியில் இருந்து வேறுபடுகிறது. மாநிலங்களுக்கு செயல்படுத்தும்போது மாநிலங்களின் 10 சதவீத உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 1 முதல் 1.5 சதவீத நிதி தேவைப்படும். ஆனால், இங்கு துரதிஷ்டவசமாக, மீண்டும் பிஎம் கிஷான் யோஜ்னா மற்றும் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் மற்றும் ரேஷன் பொருள் மானியம் மூலம் மனிதாபிமான அடிப்படையில் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிவாரணம் மிகச்சிறிய அளவாகவே உள்ளது.

ஏழைகளுக்கு உதவுவதில் அரசு ஏன் இவ்வளவு இறுக்கம் காட்டுகிறது?

தற்போதும் கூட, மாநில மற்றும் மத்திய அரசிற்கு இது தாமதமல்ல, பணியிழந்த தொழிலாளர்களுக்கு உணவுவையும், சிறிதளவு பணத்தையும் இன்னும் சில மாதங்களுக்கு கொடுப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். தற்போது வழங்கப்படும் உணவின் அளவும் போதுமானதாக இல்லை. அன்றாட வாழ்விற்கு தேவையான மற்ற பொருட்களுக்கும் தற்போது தேவை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இது தேவையை அதிகரிப்பதற்கும் மற்றும் பொருளாதாரத்தை தூண்டுவதற்கும் உதவும்.

தமிழில்: R. பிரியதர்சினி.

ஜங் டெல்லி முன்னாள் லெப்டினட் கவர்னர். முண்ட்லே 14வது நிதிக்குழுவின் முன்னாள் உறுப்பினர். பெருளாதார ஆராய்ச்சி தேசிய கவுன்சிலின் ஆராய்ச்சியாளர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Migrant Workers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment