குற்றம்சாட்டப்படவேண்டியது மதம் அல்ல குறுகிய மனப்பான்மைதான்!

ஒரு சிந்தனையற்ற செயல் டெல்லி நிஜாமுதீன் மையத்தின் முஸ்லீம்களை பலமடங்கு காயப்படுத்தி இருக்கிறது. இன்னொருபுறம் அரசு உதவ வில்லை

ஒரு சிந்தனையற்ற செயல் டெல்லி நிஜாமுதீன் மையத்தின் முஸ்லீம்களை பலமடங்கு காயப்படுத்தி இருக்கிறது. இன்னொருபுறம் அரசு உதவ வில்லை. தொடர்ச்சியாகவும் மற்றும் மீண்டும், மீண்டும் முஸ்லீம்களில் பிறர் அவர்களை, இருள் சூழ்ந்திருக்கும் மூலையை நோக்கி தள்ளுகின்றனர்.

நஜீப் ஜங்க்

நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத் மையம் , பல்வேறு நபர்களின் மரணங்களுக்கு காரணமான கொரோனா வைரஸ் தொற்றை பரப்பியதற்காக ஒற்றை நபராக பொறுப்பாகி இருக்கிறது. இந்த மையத்தை யார்நடத்தி வந்தாலும், அவர்கள் குற்றவாளிதான். இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி உரிய பிரிவில் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும். நாடு ஒட்டுமொத்தமாக முடங்கி இருக்கும்போது இது புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகும். கொடூரமான தொற்று நோய் பரவலுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் இடைவிடாமல் போரில் ஈடுபட்டிருக்கின்றன. மத அடிப்படைவாதிகளின் நுண்ணிய பிரிவினர் மக்கள் தொகையின் பெரும்பகுதியில் நோய்தொற்று மற்றும் இறப்புக்கு காரணமாகின்றனர் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. எனினும், தவிர உள்ளூர் நிர்வாக பொறுப்புள்ளவர்கள் மேலும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருந்து, முன்கூட்டியே அவர்களை அப்புறப்படுத்தியிருக்கலாம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் எதிர்கொள்ளும் பெரிய அசெளகர்யத்தை இது எனக்கு கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான சூழலை யார் ஒருவரும் மறுக்க முடியாது. பெரும்பாலானோர் சமூகத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். ஏழைகள், கல்வியறிவற்றவர்களாக, ஒரு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வேகமாக இ.ழக்கின்றனர். இல்லை என்று அவர்கள் நம்புகின்றனர். உண்மையில், அவர்களுக்கு நேர்மையாக இருக்க முடியாது. முந்தைய அரசுகளிலும், அவர்களின் சூழல் நன்றாக இல்லை. ஆனால், அப்போது அரசின் கைகள் இவ்வளவு அழுத்தமாக இல்லை. அரசுகளின் குற்றம்சாட்டும் மனப்பான்மை நாள்தோறும் வழக்கமாகி வருகிறது. வெளிப்படையாக தெரியாத ஒரு சிக்கல் அதில் அடங்கியிருக்கிறது என்பதை இஸ்லாமிய சமூகத்தினர் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.

மாதரஸாக்களில் உள்ள கல்வி வழிகாட்டும் முறை, பழைமையான ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது. சில மாதரஸாக்களில் ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகியவை கற்பிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பல பள்ளிகளில் இந்த முயற்சிகள் இல்லை. குரானை மனதில் கொள்வதற்கான கற்பித்தலை மாணவர்கள் பெறுகின்றனர். எட்டு அல்லது 10 வயதுள்ள குழந்தை குரானை இதயப்பூர்வமாக அறிந்த ஒரு முஸ்லீம் ஆக இருக்கிறது என்பது ஒரு குடும்பத்துக்கு மகாத்தான பெருமை என்பதறாகத்தான் இது இருக்கிறது. பெரும் எண்ணிக்கையிலான இஸ்லாமிய ஆண், பெண் குழந்தைகள் முறையான கல்வி முறையில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஒரு பெரும் எண்ணிகையானது மாதரஸா முறையில் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.

 

ஆகையால், மவுல்விஸ், மவுலானாக்கள் ஆதிக்கம் செலுத்துவதுதான் இந்த சமூகத்தினரிடையே பெரும் பிரச்னையாக இருக்கிறது. அவர்கள் மசூதிகளில் உட்கார்ந்து கொண்டு பேத்வாகளை விடுத்துக் கொண்டிருப்பது பேஷனாகி இருக்கிறது. எனக்கு இஸ்லாமியர் அல்லாத எண்ணற்ற நண்பர்கள் உண்டு. அவர்கள் எல்லாம் இந்திய இஸ்லாமிய சமூகத்தினரிடம் மிகுந்த‍ அனுதாபம் கொண்டிருக்கின்றனர். போதுமான அரசியல் தலைமை இல்லாமை, ஏழைகள், போதிய கல்வியின்மை, அவர்களின் பொருளாதார சூழல் ஆகியவை பற்றி தீவிரமான கவலை கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் உள்ளார்ந்த மதசார்பின்மை, அரசியலமைப்பு சட்டத்தின் வலிமை, கொரோனாவை எதிர்க்கும் என்று சொல்லப்படும் மாட்டு கோமிய விருந்துகளுக்கு எதிரான சவால்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறார்கள். எனினும், அவர்கள் இந்து வலது சாரிகளுக்கு எதிரான போரில் வலிமை குறைந்த போதிலும் அதனை முன்னெடுக்கிறார்கள். முஸ்லீம் பழைமைவாதம் பழைமையான நம்பிக்கைகளின் போது நடுநிலையாளர்களாக இருக்கிறார்கள்.

உண்மை என்பது, நான் ஏற்கனவே கூறியபடி அறிவார்ந்த முடக்கத்தில் இந்திய இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய தலைமுறை அறிஞர்கள் இப்னு அரபி, ஃபக்ருதீன் ராசி, ஐன்ஸ்டீன், பெர்க்சன், ரஸ்ஸல் மற்றும் பிராய்ட் போன்ற சிந்தனையாளர்கள் குறித்து படிக்கப் பழகினர். இந்த பணி மீண்டும் ஒருமுறை, கடந்த காலத்தில் இருந்து முழுவதும் அறுந்து விடாமல் இஸ்லாம் சிந்தனை செய்ய வேண்டும். அல்லாமா இக்பால் கூறியது போல, ஒரே ஒரு மைதானம் திறந்துள்ளது. “நவீன அறிவை ஒரு மரியாதையுடன் அதே நேரத்தில் சுதந்திரமனப்பான்மையுடன் அணுக வேண்டும். அந்த அறிவு வெளிச்சத்துடன் இஸ்லாமிய படிப்பினைகளை ஊக்குவிக்க வேண்டும்.” முழுவதுமாக கடந்த காலத்தை மறந்த அல்லது மறுதலித்த இன்னும் கண்டிப்பாக ஒரு மதம், எந்த ஒரு சமூகத்துக்கும் ஒருபோதும் சாத்தியமானதல்ல. நபி (அவருக்கு அமைதி கிடைக்கட்டும்)அவர்களின் மரணத்துக்குப் பின் வந்த ஆண்டுகளில் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய வரலாறு ஒரு புகழ்பெற்ற சகாப்தம் என்று உண்மையில் பெருமை கொள்ளலாம். குறிப்பாக இந்திய இஸ்லாமியர்களில் இஸ்லாமில், என்ன சரிசமமான உண்மை இருக்கிறது. மவுலானாக்களின் இடைக்கால கற்பனைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். மேலும் சமகால அணுகுமுறைகளை சார்ந்திருக்க வேண்டும். குரான் அதன் தூண்டல் பகுத்தறிவு, பராம்பர்யத்துக்கு எதிரான ஒரு கிளர்ச்சி, ஏக தத்துவம் ஆகியவற்றின் பேரில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். விவாத த்தின் சக்தியை(இஜ்திஹாத்) அவசியம் தூண்ட வேண்டும்.

பாரம்பர்யமாக, நபியின் காலத்தில் இருந்து, விவாதம், அறிவியல் அறிவை பின்தொடர்வது ஊக்குவிக்கப்படுகிறது. நபிகள், தமது மக்களுக்கு எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் சீனா வரை கூட பயணித்து அறிவுத்தேடலில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதே தொனியில் இக்பால், கூறியிருக்கிறார்; நீங்கள் சென்றடைந்த இடத்துக்கு அப்பால் அமைந்த ஒரு இலக்கை எப்போதும் தேடுங்கள். நீங்கள் ஒரு ந தியைக் கண்டுபிடித்தால், கடலைத் தேடுங்கள்.

சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் போராட்டத்தின் வழியே, இந்திய இஸ்லாமியர்கள் ஒரு புதிய குரலை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த இயக்கத்தின் மிகப்பெரிய சாதகமான அம்சமாக பெண்கள் இருந்தனர். இந்தியாவில் முதன் முறையாக(இஸ்லாமிய வரலாற்றில் பெண்கள் ஆண்களுடன் போரில் பங்கேற்றிருக்கிறார்கள். அதை பற்றி நான் சொல்ல வரவில்லை ) ஒரு குரல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்பவர்களாக ஆண்கள் இருக்கின்றனர். நம்பிக்கையுடன், வாழ்க்கையின் இந்த புதிய சூழல், ஒரு முன்னோட்டத்தைத் பெண்களுக்கு சிறந்த நேரமாக தருகிறது. ஆனால், ஆண்களிடம் இருந்து தப்லிகி ஜமாத்போன்ற அமைப்புகளிடம் இருந்து என்ன நம்பிக்கையை நாம் பெறுகின்றோம். அவர்கள் நல்ல எண்ணங்களை கொண்டிருக்கலாம். எந்த ஒரு நல்ல மத செயல்பாடுகளிலும் அவர்கள் நடத்தலாம். எனினும் அவையெல்லாம் இந்த சமூகத்தை முன்னெடுக்க உதவாது. மதத்தின் மீது குற்றம் சாட்டப்படக் கூடாது. சுயம்புவாக அறிவித்துக்கொண்ட தலைவர்களின் குறுகியமனப்பான்மைதான் குற்றம்சாட்டப்பட வேண்டும். ஒரு சிந்தனையற்ற செயல் டெல்லி நிஜாமுதீன் மையத்தின் முஸ்லீம்களை பலமடங்கு காயப்படுத்தி இருக்கிறது.

இன்னொருபுறம் அரசு உதவ வில்லை. தொடர்ச்சியாகவும் மற்றும் மீண்டும், மீண்டும் முஸ்லீம்களில் பிறர் அவர்களை, இருள் சூழ்ந்திருக்கும் மூலையை நோக்கி தள்ளுகின்றனர். 370 வது பிரிவை ரத்து செய்தது குறித்த அமைச்சர்களின் கொண்டாட்டம், சிஏஏ தந்த சவால்கள், என்ஆர்சி, என்.பி.ஆர் ஆகியவற்றின் அச்சுறுத்தல், கலக்கார ர்களை தண்டிக்கும் வகையிலான அமைச்சர்கள், ஆளும் கட்சி நிர்வாகிகளின் அறிக்கைகள், தாரளவாதிகளின் அவதூறு, இஸ்லாமியர்களிடையே பணிபுரியும் தன்னார்வலர்களை துன்புறுத்துதல், டெல்லியில் நடந்த இன படுகொலைகள் ஆகியவை இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் மோசமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இங்கே சவால் இருக்கிறது. இந்த சவால் என்பது இந்திய இஸ்லாமியர்களுக்கு மட்டுமானதல்ல. இந்த ஒட்டுமொத்த நாடு முழுமைக்குமானதாகும். இஸ்லாமியர்கள், அவர்களுக்கு முன்பு, சீக்கியர்களை முன்னுதாரணமாக கொண்டிருந்தனர். சீக்கியர்களும் கூட, மத கட்டுப்பாடுகளை நியமமாக கடைபிடிக்கின்றனர். ஆனால், அவர்கள் தைரியம், பெருந்தன்மை, மற்றும் செழுமை ஆகியவற்றின் தொடர் உதாரணங்களாக இருக்கின்றனர். பிரிவினையின் போதும், 1984-ம் ஆண்டு கலவரங்களின் வேதனைகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு அந்த சமூகம் உயர்ந்து நிற்கிறது. இப்போது புதிய இஸ்லாமியர்கள் முன்னே செல்ல வேண்டிய காலம் இது. அதே போல சமகாலத்தில் ஈடுபட வேண்டிய நேரமும் இதுவாகும். ஆற்றுப்படுத்தலுக்கு அல்ல, உறுதியான நடவடிக்கையாக சமூகத்தின் சூழலில் செயல்படும் சொல்லாக, இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த கட்டுரை The crisis, in a larger frame என்ற தலைப்பில் ஏப்ரல் 1-ம் தேதியிட்ட நாளிதழில் வெளியானது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் முன்னாள் அரசு உயர் அதிகாரி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close