Advertisment

கோவிட் – 19ஐ கையாள்வதற்கு ஜனநாயகம் வேண்டும், அதிகாரமல்ல

இந்திய நகரங்களை அரசியல் இயக்கவிடாமல் தடுப்பது, ஒரு பெரியமாற்றத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தொழில்நுட்ப தீர்வுகளாக காட்டுகிறது. அந்த சவால் குடிமக்கள் சார்ந்த அரசை உருவாக்க வேண்டும். அந்த வாய்ப்பை இந்த தொற்று நோய் உருவாக்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus. corona pandemic, lockdown migrants walk home, migrants exodus lockdown 4, migrant journeys coronavirus, coronavirus migrant crisis, migrants exodus coronavirus, indian express

coronavirus. corona pandemic, lockdown migrants walk home, migrants exodus lockdown 4, migrant journeys coronavirus, coronavirus migrant crisis, migrants exodus coronavirus, indian express

ஜனநாயகம் மட்டுமே இதற்கான தீர்வு. ஆனால் அதுவே சரிவர இயங்காமல் இருப்பது, நாளைய சமுதாயத்தை கேள்விக்குறியாக்குகிறது. மற்ற எந்த இடங்களையும்விட நகர்மயமாக்கப்படும் இந்தியாவிற்கு ஜனநாயகம் பெரிதும் தேவைப்படுகிறது.

Advertisment

பானு ஜோஷி மற்றும் ஷமிந்த்ரா நாத் ராய், கட்டுரையாளர்கள்.

நகரத்தில் அதிகரித்து வரும் தொற்று, சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், நகரங்கள் முழுவதிலும் ஸ்தம்பித்துவிட்ட பொருளாதார நடவடிக்கைகள், இந்தியாவின் நகர்மய மாறுதலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சூழல் நம்மை பல கேள்விகள் கேட்க வைக்கிறது. இந்த மாற்றங்கள் அரசியல் மற்றும் பங்கேற்பை ஒப்புகொள்ள மறுக்கும்போது, இந்த சமூகத்திற்கும், அதன் சங்கிலித்தொடர் பிணைப்புக்கும், சக்திக்கும், என்ன ஆனது?

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பஞ்சம், கொள்ளை நோய் மற்றும் இடப்பெயர்வு ஆகியவை, கடந்த காலங்களில் இந்திய நகரங்களை அழித்தது. எனினும், குறிப்பாக இந்த சூழல்நிலையில், நகர்புறங்கள் இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள என்ன செய்யும்? தேவையான சமூக பாதுகாப்பு இங்கு உள்ளதா என எண்ணும்போது சில கேள்விகளை அது இந்த நாடு மற்றும் சமூகத்திடம் கேட்கும்போது அது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த கேள்விகள் பகிரங்கமாக மூன்று வழிகளில் வெளிப்படுகிறது. முதலாவது, நமது அரசியல் நகரங்களை அங்கீகரிக்க மறுக்கிறது. உலகத்திலேயே இந்தியா மட்டும்தான் இருவேறான அளவுகோல்களை வைத்திருக்கிறது. நகர்புறங்களில் மக்கள் அடர்த்தி, பொருளாதாரம் மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு நகராட்சி அமைப்பு பொருந்தும் என்று அறிவுறுத்துகிறது. இந்த தன்னிச்சையான தொடக்கங்கள் விபரீத சலுகைகளை உருவாக்கி, ஏற்றுக்கொள்ளப்படாத வளர்ச்சி போக்குகள் நகர்மயத்திற்கு வழிவகுத்து, நகரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படும் என்று ஆராய்ச்சிகள் அறிவுறுத்துகின்றன. எடுத்துக்காட்டாக 2001 முதல் 2011ம் ஆண்டு வரை மூன்றில் ஒரு பங்குக்கும் அதிமான மக்கள்தொகை வளர்ச்சி census townகளில் (census town என்பது நகராட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படாத பகுதியாக இருக்கும். மக்கள்தொகை உள்ளிட்ட மற்ற தன்மைகள் நகரத்தை ஒத்து இருக்கும்) நடந்தது. அதில் நகரத்தின் தன்மைகள் இருக்கும். ஆனால் ஊராட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும். தமிழ்நாடு அதிக நகர்மயமான மாநிலமாகும். உதாரணமாக, அங்கு 566 பேரூராட்சிகள், ஊராட்சிகளாக மறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அம்மாநிலத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து அதிக நிதி கிடைக்கும். இந்தியாவில் அதிகரித்து வரும் நகர்மய மாற்றம், அரசியல் நிர்வாக செயல்முறையை கடந்து சிந்திக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது, கற்பனையில்லாத இந்த சிந்தனை அரசியல் மயமாகாத நகரப்பகுதிகளின் வெளிப்பாடாகும். 1990களின் துவக்கத்தில் நகரம் மற்றும் ஊரகம், இரண்டிற்கும் அதிகாரம் ஒரே மாதிரிதான் இருந்தது. தற்போது ஊராட்சிகள் குறிப்பிடத்தக்க அளவு அரசியல் மற்றும் பொருதார களமாக மாறிவிட்டது. ஊராட்சி தேர்தல்கள் போட்டி நிறைந்த ஒன்றாகிவிட்டதே அதன் வெளிப்பாடாகும். இதற்கு இப்போதுள்ள ஒரு எழுத்தாளரின் பணிகள் ஆதாரமாகின்றன. நகரத்தில் நடக்கும் தேர்தல்களைப்போலவே, கிராமத்தில் நடக்கும் தேர்தல்களில் போட்டிகள் அதிகரித்துவிட்டதை அது காட்டுகிறது. குறைந்த வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறுவது, கட்சிகள் அணி திரட்டுவதற்கு போடும் முயற்சி, பிரச்சாரத்திற்கான செலவுகள் மற்றும் வாக்குப்பதிவு என அனைத்துமே நகரத்திற்கு இணையாக இருக்கிறது. கடைசியாக 2008ம் ஆண்டில் செய்யப்பட்ட வரம்பு நீக்கத்திற்கு பின்னரும், நகர்புறங்களில் விதான் சபா மற்றும் லோக் சபா ஆகியவற்றிற்கு போதிய பிரதிநிதிகள் இல்லை. உதாரணமாக மஹாராஷ்ட்ராவை எடுத்துக்கொண்டால், அங்கு அலுவல் ரீதியாக நகர்மயமாக்கப்பட்ட அளவு 45.2 சதவீதம் இருந்தும், சட்டப்பேரவைக்கு நகர்புறங்களில் உள்ள தொகுதியின் அளவு 35 சதவீதம் மட்டுமே ஆகும்.

மூன்றாவது, ஒருங்கிணைக்கப்பட்ட நகரமே சிறந்த நகராமாகும். தினசரி செய்யப்படும் நடவடிக்கைகளான முறையான பொது போக்குவரத்து வசதிகள் அல்லது குப்பைகளை அகற்றுதல் முதல், தொற்றுநோயை கையாள்வது அல்லது இதுபோன்ற நீண்ட ஊரடங்கு நேரங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது வரை எல்லாவற்றிற்கும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மே 1ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலின்படி, கோவிட் தொற்று மையமாக 87 சதவீதம் நகர் பகுதியே உள்ளது. இதில் பெரும்பாலான நகரங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ளது. தனிமைப்படுத்தும் வசதிகள் முதல் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது வரை பெரும்பாலான நகர நிர்வாகங்கள், தொற்றை கையாள்வதற்கு குறைந்த அளவிலான திறனையே பெற்றுள்ளது தெரிகிறது.

இந்த மூன்று சவால்களும், இந்தியாவின் நகரங்கள் நாட்டிற்கு வழங்கிய பரிசு. இந்திய நகரங்களில் ஏழை மற்றும் பணக்காரர்கள் அருகருகே வாழ்வார்கள். இந்த இடஞ்சார்ந்த தன்மை அவர்களின் பொருளாதார நடவடிக்கைகள், அதன் அளவுகோல் மற்றும் இணைந்திருக்கும் முறையான மற்றும் முறைசாரா பணிகள் ஆகியவற்றில் பிரதிபலிக்கும். உதாரணமாக மும்பையில், சேரிப்பகுதிகளில் மாதச்சம்பளம் வாங்குபவர்களின் விகிதம் 61 சதவீதமாகும். இந்த அளவு சேரி அல்லாத பகுதிகளைவிட வேறுபட்டதல்ல. (2018ம் ஆண்டு தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலக அறிக்கைப்படி, சேரி அல்லாத பகுதிகளில் மாதச்சம்பளம் பெறுவோர் 68 சதவீதம் ஆகும்) எனினும், சேரியில் வாழும் மாதச்சம்பளம் பெறும் 40 சதவீதத்தினர் வீட்டு வேலை உதவியாளரோ அல்லது தொழிலாளர்களாகவோ இருப்பார்கள். இது சேரி அல்லாத பகுதிகளில் வாழ்பவர்களில் மாதச்சம்பளம் பெறுவோரில் இருந்து வேறுபட்டது. ஏழைகளும், பணக்காரர்களும், வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும், நகரில் அருகருகே வசிப்பார்களாக இருக்கிறார்கள். இவர்களிடையே ஒரு ஆழமான தொடர்பு இருக்கும் என்பது இதன் அர்த்தமாகும். அதுவே நகரத்தை இயக்கும். அதிகார மனநிலையில் நகரங்களை நிர்வகிப்பவர்கள் இந்த தொடர்பை அடிக்கடி மறந்துவிடுவார்கள். அவர்கள் நகரின் முழு நலனையும் கருத்தில்கொள்ளவதில்லை.

இந்த தொடர்புகள் எப்போதும் மறக்கப்படுகிறது. ஏனெனில், சட்டத்தில் இருக்கும் ஜனநாயகத்திற்கும், நடைமுறையில் அதன் சாத்தியக்கூறுகளுக்கும் அதிக இடைவெளி இருக்கும். குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், திறன்மிக்க குடியுரிமை பெறுவதில் பங்கு பெற முடியாது. இது மக்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை உருவாக்குவது என்று குறிப்பிடப்படுகிறது. மக்களின் தேவைகள் அனைத்தும், பிரதிநிதிகளால் மதிப்பிடப்படும். உண்மையில் அவருக்கு நகரில் அதிகாரம் இருக்காது. அதிகாரம் ஒன்று மாநில அரசிடமோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ இருக்கும். அரசியல் கட்சியினர், உள்ளூர் கவுன்சிலர்கள், கட்சி ஊழியர்கள், இடைத்தரகர்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து வாக்காளர்களின் தேவைகளை மதிப்பிட்டு, ஒரு திட்டத்தை வரையறுக்கிறார்கள்.

அருகில் ஒரு குழாய் பொருத்த வேண்டுமெனில், ஒரு அரசியல்வாதி, பல துறையினரை தொடர்புகொண்ட அதை செய்யுமாறு தூண்டவேண்டும். இடையில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க வேண்டுடியதும் கட்டாயமாகிறது. ஆனால், நகர அதிகாரிக்கு, அதை செய்யக்கூடிய திறனே இல்லாவிட்டாலும், அதை அவரால் எளிதாக செய்துவிட முடியும். ஆனால் உள்ளூர் அரசியல்வாதிக்கு பல்வேறு துறையினருடன் தொடர்பு இருந்தும், அதை செய்யக்கூடிய திறன் இருந்தாலும், அவருக்கென்று சில எல்லைகள் உள்ளது. அதை மீறி அவர் செயல்படுவது சாத்தியம்ல்ல. இதுவே முறையான மற்றும் முறைசாரா பணிகளுக்கும் இடையேயான தொடர்பில் இடையூறு ஏற்படுத்துகிறது. இதுவே இந்திய நகரங்களை இயக்குகிறது. முறைசாரா துறையின் உற்பத்தி திறனை முடக்குகிறது.

இதுபோன்ற எல்லைகளே பொது வாழ்வில் அனைவரும் பங்குபெறுவதை குறைக்கிறது. பொதுமக்களிலிருந்து பணக்காரர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்களை விடுவித்துக்கொண்டு, ஏழைகள் மற்றும் அவர்களின் தேவைகளை தொல்லையாக பார்க்கிறார்கள். ஏழை மக்களுக்கு இந்த எல்லைகள் நிரந்தர சீர்குலைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது. பொது வசதிகளை ஏழை மக்களால் தனியாக ஏற்படுத்திக்கொள்ள முடியாது. அவர்கள், அடிப்படை குடிமை சேவைகள் குறித்த குறைகளை மாநில அரசிற்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை நிறைவேற்றும்போது சார்பு மற்றும் பாதிப்புகள் உருவாகின்றன. அதுவே நகரங்களை நிர்மாணிக்கின்றன.

அடிப்படையில், இந்திய நகரங்களை அரசியல் இயக்கவிடாமல் தடுப்பது, ஒரு பெரியமாற்றத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தொழில்நுட்ப தீர்வுகளாக காட்டுகிறது. அந்த சவால் குடிமக்கள் சார்ந்த அரசை உருவாக்க வேண்டும். அந்த வாய்ப்பை இந்த தொற்று நோய் உருவாக்கியுள்ளது.

ஜனநாயகம் மட்டுமே இதற்கான தீர்வு. ஆனால் அதுவே சரிவர இயங்காமல் இருப்பது, நாளைய சமுதாயத்தை கேள்விக்குறியாக்குகிறது. மற்ற எந்த இடங்களையும்விட நகர்மயமாக்கப்படும் இந்தியாவிற்கு ஜனநாயகம் பெரிதும் தேவைப்படுகிறது.

இக்கட்டுரையை எழுதிய ஜோஷி, பிரவுன் பல்கலைக்கழக அரசியல் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் மற்றும் ராய், கொள்கை ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment