சுகாதாரத்திற்கு நாடு இல்லை

Healthcare in India : கோவிட்-19 நமது சுகாதார துறையில் உள்ள குறைகளை போக்கிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக எண்ணி சிலர் நம்பிக்கை கொள்கின்றனர்.

By: July 12, 2020, 3:51:47 PM

கோவிட்-19 நமது சுகாதார துறையில் உள்ள குறைகளை போக்கிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக எண்ணி சிலர் நம்பிக்கை கொள்கின்றனர். ஆனால், வைரஸ் குறைந்த பின்னரும் பெரிய மாற்றங்கள் அத்துறையில் நடந்துவிடாது.

மீனா மேனன், கட்டுரையாளர்.

ஜெய்சந்த் தேசாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிப்ரவரி மாதத்தில் மோட்டார் வாகன விபத்தில் சிக்கியபோது, அவரது மூட்டெலும்பு பாதிக்கப்பட்டது. அவர் மாகாராஷ்டிரம் மாநிலம், பால்கர் மாவட்டம், தஹானு தாலுகாவில் உள்ள பெத் கிராமத்தில் வசிக்கிறார். அங்குள்ள மக்களுக்கு அருகில் உள்ள தாதர்,நாஹர்கவேலி யூனியன் பிரதேசம் சில்வாசாவில் உள்ள பெரிய பொது மருத்துவமனையான வினோபாபாவே மருத்துவமனைதான் சிறப்பான சிகிச்சைகளை மனிதநேயத்துடன் வழங்கிவரும் மருத்துவமனையாக உள்ளது.

அவருக்கு விபத்து நடந்த அன்று, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதற்கு 70 கிமீட்டர் தொலைவுக்கு ரூ.18 ஆயிரம் செலவாகும் என்று ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் தெரிவித்தது. இது மிக அதிகமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தொகையாகும். அவர், கருணையுள்ளம் கொண்ட அவர் வீட்டிற்கு அருகில் வசிப்பவரின் உதவியோடு இலவசமாக மருத்துவமனையை சென்றடைந்தார். அவரது சேதமடைந்த மூட்டெலும்புக்கு அங்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு தொடர் சிகிச்சையளிப்பதற்கு, மார்ச் மாதத்தில் மீண்டும் செல்ல வேண்டியிருந்தது. அப்போதுதான், கோவிட் – 19 ஆல் ஊரடங்கு அமலுக்கு வந்திருந்தது. அதனால், அப்போது அவரால், மருத்துவமனைக்குச் செல்ல இயலவில்லை.

இப்பகுதி மக்கள் தங்கள் அவசரசிகிச்சைக்கு சில்வாசாவில் உள்ள குடிமை மருத்துவமனையைத்தான் அதிகளவில் நாடுவார்கள். அங்கு கூட்டமாக இருந்தாலும், மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் அவர்கள் மீது காட்டப்படும் கவனம் மனிதநேயத்துடன் இருக்கும். மேலும் அரசு வழங்கும் அத்தனை நன்மைகளும் நோயாளிகளுக்கு கிடைக்கப்பெறுவது உறுதிசெய்யப்படும். அங்கு சிறப்பு நிபுணர் குழுவினர் உள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட அறுவைசிகிச்சைகளை நன்றாக செய்வார்கள். நெறிப்படுத்தப்பட்ட முறையில் சில்வாசாவால் ஒரு மருத்துவமனையை நடத்த முடியும் என்றால், போதிய பணமுள்ள பெரிய மாநிலத்தில், அதே வேலையை செய்ய முடியாதா? உண்மையில், சில்வாசாவிற்கு அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, மஹாராஷ்ட்ராவில் இருந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் தூரத்தை பெரும்பொட்டாக கருதுவதில்லை.
பெத் கிராமத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனை, 8 கிமீட்டர் தொலைவில் உள்ள காசாவில் உள்ள மாவட்ட துணை மருத்துவமனையாகும். அந்த மருத்துவமனையும், அங்கு கோவிட் வார்ட் அமைப்பதற்காக வந்த மருத்துவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சிறிது காலத்திற்கு மூடப்பட்டுள்ளது. கோவிட் அல்லாத காலத்தில் கூட இம்மருத்துமனை அரிதாகவே இயங்கும். ஆனால், அங்கு விஷ முறிவு மருந்துகள் போதியளவு இருப்பு உள்ளது. அதற்கான தேவை இப்பகுதியில் அதிகம் உள்ளது. அண்மையில் அங்கு காய்ச்சல் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த உள்ளூர் பத்திரிக்கையாளரை, ஒருவாரம் கழித்து, தஹானுவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், தேசாயின் கால்களில் காயம் முழுமையாக குணமடையவில்லை. ஜீன் மாதத்தில் அவர் பல்வேறு மருத்துவமனைகளை அணுகினார். அதில், துண்தால்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையும் அடங்கும். அம்மருத்துவமனை மட்டுமே இவருக்கு சிகிச்சை வழங்க முன்வந்தது. பாய்சரில், சில மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் அவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேக்கள், அவருக்கு மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள அறுவைசிகிச்சை செய்யப்படவேண்டும் என்று தெரிவித்தது. அது விலை உயர்ந்ததாகும். கடைசியில், ஜீன் மாதத்தின் கடைசி வாரத்தில் தஹாணுவில் உள்ள ஒரு மருத்துவமனை அவருக்கு குறைந்த கட்டணத்தில் அறுவைசிகிச்சை செய்ய முன்வந்தது. ஆனால், அதற்கும் கூட அவர் கடன் தான் வாங்க வேண்டும். அவர பாய்சரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு மார்ச் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.

தொற்று காலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்து வந்த துன்பங்கள், நமது சுகாதார துறையின் ஒட்டுமொத்த நிலை, இது வழக்கமான ஒன்றுதான், ஆனால் இந்நாடகம் மேலும் தொடரக்கூடாது. இங்குள்ள மக்கள் சுகாதாத துறையை விதியிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். நீங்கள் மரணிக்க வேண்டும் என்பது விதியென்றால், நீங்கள் இறப்பீர்கள் என்று நம்புவார்கள். 150 கிமீட்டர் தூரம் பயணித்து, மும்பைக்கு பொது மருத்துவமனைக்கு செல்வதை, எப்போதாவதே தேர்ந்தெடுக்கிறார்கள். பயணக்கட்டணமே பலர் செல்வதை தடுக்கும் ஒன்றாக உள்ளது. அரிதாக யாராவது அரிசின் சுகாதார திட்டங்களை அறிந்து வைத்திருப்பார்கள், அவர்களுக்கு அது குறித்து விளக்குவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலான வர்லி ஆதிவாசிகள், இப்போதும், வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். அண்மை காலங்களில், சிலர் உள்ளூர் மாவட்ட துணை மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர்.

இப்பகுதி மும்பைக்கு அருகில் இருந்தாலும், இவர்களுக்கு தண்ணீர் குழாய் வசதிகள் மற்றும் சாக்கடை வசதிகள் கிடையாது. அவர்கள் சுரங்கத்தில் இருந்து தண்ணீர் எடுத்து பணம் பெறுகின்றனர். அது பணம் சம்பாதிக்க ஒரு வழியாக உள்ளது. இதனால் தான் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இங்கு சுகாதாரத்திற்கு குறைந்தளவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

கோவிட் – 19, கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள மோசமான சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள பிரச்னைகளை மேலும் அதிகரிக்கவே செய்யும். தனியார் சுகாதார துறை மீது கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பல வழிகளிலும் பின்வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மார்ச் மாதம் முதல், பால்கர், பாய்சர் போன்ற இடங்களில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன. பால்கரில், சில இடங்களில், எம்.எல்.தவாலே அறக்கட்டளையின் ஹோமியோபதி மருத்துவமனைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. திடீரென, அங்கு நோயாளிகள் வெள்ளமென குவிந்தபோது, அவசர, அவசரமாக நிதியை பெருக்கி, நூற்றுக்கணக்கான கோவிட் அல்லாத பாதிப்புகளுக்கு சிகிச்சையளித்தது. அது ஒரு தொண்டு நிறுவனத்தால், நிர்வகிக்கப்படும் மருத்துவமனை மற்றும் சுகாதார துறையில் நீண்ட கால வரலாறு உள்ள மருத்துவமனை என்பதால், அது நோயாளிகளிடம், மற்ற மருத்துவமனைகளைப்போல் இரக்கமின்றி நடந்துகொள்ள முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன், சாதி மற்றும் நித்தின் ஜாதவ் என்ற தொண்டு நிறுவனங்களின் முயற்சியில், தேசிய ஊரக சுகாதார நிலைகள் திட்டத்தின் கீழ் பொது விசாரணைகள் குறித்து, நானும் ஒரு மருத்துவரும் தானே மாவட்டத்தில் உள்ள சேவான் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு அறிக்கை அளித்தோம். குழாய்களில் கசிவு ஏற்பட்டு, அந்த சுகாதார நிலையம் முழுவதிலும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. ஷாப்பூர் துணை மாவட்ட மருத்துவமனையில் இரண்டு கழிவறைகள், தேவையில்லாத பொருட்கள் போடப்படும் அறையாக இருந்தது. அங்கு ஒரு கர்ப்பிணி, மற்றொரு கழிவறைக்கு செல்லும் வழியிலே குழந்தை பெற்றதால், அவசர மேல்சிகிச்சைக்காக, சென்றடைய மூன்று மணி நேரமாகும் தானே நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தானேவை, தானே, பால்கர் என இரண்டு மாவட்டங்களாக பிரித்த பின்னரும், கதிரியக்க நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் வருவது அரிதான ஒன்றே. ஷாப்பூர் மருத்துவமனையில், ஒருவர், சோனோகிராபி செய்துகொள்வதற்கு, மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை வரை காத்திருக்க வேண்டும். இங்குள்ள அடிப்படை பிரச்னை என்னவென்றால், எத்தனை பெரிய அரசு திட்டங்கள் இருந்தாலும், அவற்றிற்கு நிறைய ஆவணங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளதால், படித்தவர்களுக்கு கூட அவை எட்டாக்கனியாகவே உள்ளன. இந்த நாட்டில் உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகள் இல்லை. இந்த நாட்டில் சுகாதாரம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

எனவே, அதற்கு உங்களிடம் போதிய பணம் அல்லது உங்களால் கடன் வாங்க முடியும் என்றால், உங்களால், மருத்துவ வசதிகளை பெறமுடியும்.
கோவிட்-19 நமது சுகாதார துறையில் உள்ள குறைகளை போக்கிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக எண்ணி சிலர் நம்பிக்கை கொள்கின்றனர். ஆனால், வைரஸ் குறைந்த பின்னரும் பெரிய மாற்றங்கள் அத்துறையில் நடந்துவிடாது. இதே சமத்துவமின்மைதான், முகமூடியுடன் தொடர்ந்து உயரும். நாம் ஏற்கனவே சமூக விலகலை பல வழிகளில் கடைபிடிக்கின்றோம்.

இக்கட்டுரையை எழுதியவர் சுதந்திர பத்திரிக்கையாளர். தி ஜர்னி ஆப் காட்டன் இந்தியா போன்ற நூல்களை எழுதியவர்.

தமிழில்: R.பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus coronavirus healthcare healthcare covid 19 healthcare india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X