Advertisment

ஒற்றுமை என்பது பெருந்தொற்றுக்கு எதிரான சக்திவாய்ந்த ஆயுதம், பாரபட்சம் என்பது நம்மை பலவீனப்படுத்தும்.

ஒவ்வொரு போரும் ஆயுதம் கொண்டுள்ளது. இந்த போரில் இருக்கும் சில ஆயுதங்கள் வெளிப்படையானவை. அறிவியல், பொது முதலீடுகள், அரசின் திறன்கள், அரசியல் தலைமையின் தரம் ஆகியவைதான் அவை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus spread, healthcare workers, tablighi jamaat event, tablighi jamaat corona cases, coronavirus, coronavirus news, covid 19 tracker, covid 19 india tracker,coronavirus news, healthcare workers,coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

coronavirus, coronavirus spread, healthcare workers, tablighi jamaat event, tablighi jamaat corona cases, coronavirus, coronavirus news, covid 19 tracker, covid 19 india tracker,coronavirus news, healthcare workers,coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

பரந்த அளவிலான கடினமான ஒரு ஊரடங்கு என்பது இந்தியாவுக்கு ஏற்றதா என்பதில் பொது சுகாதார வல்லுநர்கள் வேறுபாடான கருத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது இப்படி இருக்கும் என்று கருதி, முழுவதுமாக பச்சாதாபம் மற்றும் இரக்கமின்மையோடு வடிவமைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

Advertisment

ஹர்ஷ் மந்தர்

இந்த காலத்தய பெருந்தொற்றை, ஒரு போர் என்ற உருவகத்துடன் நாம் கேள்விப்படுகின்றோம். சுகாதார வல்லுநர்கள், அரசாங்கங்கள், மக்கள் என உலகமே ஒரு போரில் களம் இறங்கி உள்ளது. உலகப்போருக்குப் பதிலாக வைரஸுக்கு எதிராக போரிடுகிறது. இது நூற்றுக்கணக்கான, ஆயிரகணக்கானோரின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. நமக்குத் தெரிந்ததைப் போலவே உலகின்பெரும்பகுதியும் நம்புகின்றனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ஒவ்வொரு போரும் ஆயுதம் கொண்டுள்ளது. இந்த போரில் இருக்கும் சில ஆயுதங்கள் வெளிப்படையானவை. அறிவியல், பொது முதலீடுகள், அரசின் திறன்கள், அரசியல் தலைமையின் தரம் ஆகியவைதான் அவை. ஆனால், மிகவும் தீர்க்கமானதாக என்ன ஆயுதம் இருக்க வேண்டுமோ அது அரிதாகத்தான் அது நினைவு கூறப்படுகிறது, புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது அல்லது பேணிப்பாதுகாக்கப்படவில்லை. அது நமது ஒற்றுமைதான்.

இது போன்ற ஒற்றுமையைக் கொண்ட பல திகைப்பூட்டும் காட்சிகள்தான் உண்மையில் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்து மட்டத்திலும் பொது சுகாதார வல்லுநர்கள் இருக்கின்றனர். பெரும்பாலும் அரசால் மோசமாக கைவிடப்படும் சூழலில் அவர்கள் இருக்கின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக, சோதனை கருவிகளுக்காக, கருவிகள் மற்றும் கட்டமைப்புகள் ஆகியவற்றுக்காக போதுமான அளவுக்கு முதலீடுகள் செய்யப்படவில்லை. போரின் பதுங்கு குழியில் இருந்து அவர்கள் போரிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அதனால்தான், நான் கருணையின் வட்டங்கள் என்று நான் அழைக்கின்றேன். ஆதரவற்றோர், வீடற்றோர் ஆகியோருக்கு உணவு வழங்கும் உதவிகளை வழங்குவதற்காக நான் ஒவ்வொருமுறை தெருவுக்குச் செல்லும்போதும், பாதுகாப்பு, உணவு வேண்டி பசியோடு இருந்த சாதாரணமக்களால் தடுக்கப்பட்டேன். முறையான அனுமதி இல்லாவிட்டாலும் கூட, பெரும்பாலான உணவு வழங்கும் சேவையாளர்களை போலீஸார் அனுமதித்தனர். பசியோடு இருக்கும் ஏழைகளுக்காக போலீஸ் ஸ்டேஷன்களில் உணவு கிச்சன்களை போலீஸார் ஒருங்கிணைத்ததாக சில செய்திகளைக் கூட நான் கேள்விப்பட்டேன்.

ஊரடங்கின்போது வீடற்றவர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், ஊரடங்கு தொடங்கிய இரண்டாம் நாளில் இருந்து என்னுடன் பணியாற்றிய இளைஞர்கள் உணவு தானியங்கள், சமைத்த உணவுகள் ஆகியவற்றை அவர்களுக்கு விநியோகித்து வருகின்றனர். நாங்கள் முகமூடிகள், கையுறைகள் ஆகியவற்றுடன் சென்றோம். எனினும் தொற்று என்பதற்கான அபாயம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. “மக்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருக்கமுடியாது” என்று அவர்களில் ஒருவர் என்னிடம் விவரித்தார். “நான் கொரோனாவைப் பார்த்துப் பயப்படுகின்றேன்” என்று இன்னொருவர் கூறினார். “ஆனால் என்னுடைய அச்சத்தைவிட அவர்களின் பசி என்பது பெரிது” என்றும் அவர் கூறுகிறார்.

நிஜாமுதீன் பகுதியில் வீடற்ற ஒருவரிடம், இப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்று கேட்டேன். தாம் கொஞ்சம் பணம் சேமித்து வைத்திருந்ததாகவும், அதை உணவுக்காக செலவழிப்பதாகவும் அந்த நபர் சொன்னார். அவருக்கு சொந்த குடும்பம் இல்லாவிட்டாலும் கூட, அவருடன் நடைபாதையில் உறங்கும் மூன்று குடும்பங்களுக்கும் அவர் உணவு அளிக்கிறார். அவர்களுக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை. பசியோடு அவர்களின் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கையில் அவரால் எப்படி தனியாகச் சாப்பிட முடியும்?

காசிப்பூரில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பலர் தங்கள் கார்களில் தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்களை எடுத்து வந்து நடந்து சென்று கொண்டிருந்தவர்களுக்குக் கொடுத்தனர்.

இன்னும், இந்த காலகட்டத்தில் எங்களின் ஒற்றுமைகள் ஆழ்ந்த அழிவுக்கு உட்பட்ட காட்சியையும் ஒரே நேரத்தில் காணமுடிந்தது. பரந்த அளவிலான கடினமான ஒரு ஊரடங்கு என்பது இந்தியாவுக்கு ஏற்றதா என்பதில் பொது சுகாதார வல்லுநர்கள் வேறுபாடான கருத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது இப்படி இருக்கும் என்று கருதி, முழுவதுமாக பச்சாதாபம் மற்றும் இரக்கமின்மையோடு வடிவமைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

நாம் ஒரு மனக்கணக்கில் ஈடுபடுவோம். ஒருவேளை நாம் எல்லோரும் நடுத்தரவர்க்கமாக மற்றும் முறைசார் வேலை வாய்ப்புகளில் இருப்பவர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஊரடங்கின்போது நம்மில் யாருக்கும் சம்பளம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. பதிலாக, நம்மில் சிலருக்கு அரசு இரண்டு நாள் கூலி மற்றும் 5கிலோ உணவு தானியம் கொடுக்க முயற்சிக்கலாம். வேறு ஏதும் கிடைக்காதபோது, ஒருவேளை வங்கிகளில் நமது சேமிப்பில் கொஞ்சம் பணம் இருந்தது என்று வைத்துக் கொள்வோம். சுகாதார காப்பீடு எடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கும் பொது சுகாதார அமைப்பை மட்டுமே சார்ந்திருக்க முடியும். அப்போது, நாம் ஊரடங்கு சரியானதுதான் என்று ஏற்றுக்கொள்வோமா, பெருமளவிலான பெருந்தொற்றுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில்தானா இது?

ஒற்றுமை கோரிக்கைகள்; ஊரடங்கின் காலம் முழுவதற்கும் முறைசாரா தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாம் அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அவர்கள் நம்மில் இருந்து வித்தியாசமானவர்கள் அல்ல. சட்டரீதியான குறைந்த பட்ச ஊதியமாவது அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், நாம் அதை செய்யப்போவதில்லை.

நாம் இன்னொரு மனக்கணக்கில் ஈடுபடுவோம். வீடு என நீங்கள் இருக்கும் ஒரு இடத்தில் இருந்து மிக நீண்ட தொலைவில் நீங்கள் பணியாற்றுவதாக வைத்துக் கொள்வோம். வேலையும், உணவும் இன்றி தீடீரென நடுத்தெருவில் விடப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பயமே உங்களைக் கொல்லக் கூடிய நோயாக இருக்கும். உத்தரவை மதித்து நீங்கள் இருக்கும் அந்த நகரத்திலேயே தங்குகிறீர்கள். அந்நியர்கள் மத்தியில் உயிர்போவதற்கும் தயாராக இருக்கிறீர்களா? அல்லது அன்பானவர்களின் அருகாமையில் இருக்க வேண்டும் என்பதற்காக எதுவும் செய்யத் துணிந்து, நூற்றுக்கான கி.மீட்டர்கள் நடந்துகூட, அக்கறையற்ற அரசின் விரைவான நடவடிக்கையால் தவிர்க்கப்படுவீர்கள். இந்த இயலாமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. பிரிவினை காலத்தில் இருந்தே இந்தியாவில், இடம் பெயரும் மக்களை மனிதாபிமானத்துடன் கையாள்வது, பொது ஒற்றுமையில் மற்றொரு அற்புதமான தோல்விதான்.

இதுபோல, நமது அச்சங்கள், வெறுப்புகளுக்கு சில பலிகடாக்களை நாம் தேடிக்கொண்டிருக்கின்றோம். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மீது நாம் காட்டுமிராண்டித்தனமான பாகுபாடுக்கு உட்பட்டிருந்தோம். குறுகிய கண்ணோட்டம் கொண்ட கண்கள் மட்டும், வைரஸ் தோன்றியதன் காரணமாக சீனாவின் ஏதுமறியாத இனவெறி மக்களை நினைவுப்படுத்தியது.

பின்னர் எந்த ஒரு வெளி ஆளையும் பலிகடாவாக மாற்றினோம். அடைக்கப்பட்ட குடியிருப்பு வளாகங்களில் மட்டுமின்றி, ஆனால், அருகில் இருக்கும் ஏழைகள், மற்றும் கிராமங்கள் ஆகியவை தங்களுக்குத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். உள்ளே அந்நியர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீஸாரிடம் இருந்து தப்பித்து நடந்தோ அல்லது லாரிகளில் பெட்டிகளில் மறைந்து கொண்டோ இரவு நேரங்களில் குடும்பத்தினருடன் சேருவதற்காக செல்லும் வெளிமாநிலத்தவர்களைக் கூட, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அவர்கள் தயாராக இருந்தும் கூட அத்தகையவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இப்போது இஸ்லாமியர்கள் பெரிய‍ அளவில் பலிகடா ஆக்கப்படுகின்றனர். அடிப்படைவாதப்பிரிவால் தவறாக வழிநடத்தப்பட்ட தலைவர்களால் நடத்தப்பட்ட கூட்டம் பெரும் அளவில் தொற்று ஏற்பட காரணமாகி விட்டது என்பது உண்மைதான். அதே நேரத்தில், மேலும் பல தவறான வழிகாட்டுதலுடன் கூடிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்களின் தவறுகளுக்காக, அனைத்து இஸ்லாமியர்களும் பொறுப்பேற்க முடியாது. ஆனால், சமூக வலைதளங்களில் முஸ்லீம்கள் கொரோனா குண்டுகள் என்றும் அவர்கள் கொரோனா ஜிகாத் நடத்துகின்றனர் என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு வெறுப்பு வெறி கொண்டு இருக்கிறது. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது. பலர் வன்முறை அச்சத்தில் இருக்கின்றனர்.

வரவிருக்கும் மாதங்கள், நம்மிடம் இருந்து சிறந்ததை எதிர்பார்க்கின்றன. நமது ஒற்றுமையை உறுதிப்படுத்துவதன் மூலம் ஒரு நாளில் அதிலிருந்து நாம் மீளுவோம் என்பதுதான் ஒரே வாய்ப்பு. கருணை எனும் வட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் இணைந்திருப்போம். பல்வேறு வகையான வகுப்பு, இனம், மதம், பாலினம், வயது, தேசிய எல்லைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு நம்மை பாதுகாப்பதற்காக, ஒவ்வொருவரையும் பாதுகாப்பதற்காக ஒவ்வொருவரும் துணை நிற்போம்.

இந்த கட்டுரை முதலில் ‘Circles of kindness’ என்ற தலைப்பில், ஏப்ரல் 15-ம் தேதியிட்ட நாளிதழில் வெளியானது. ஹர்ஷ் மந்தர் மனித உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளராவார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment