உலகின் புதிய நடைமுறைகள் – அமெரிக்கா,ஜெர்மனியுடன் இணைகிறது இந்தியா

புதிய உலக நடைமுறைகளை வகுப்பதில் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தியா முக்கிய பங்காற்றும். மனிதனை மையமாகக்கொண்ட ஒத்துழைப்பு என்பதன் அடிப்படையில், மோடியின் அறிவுரையின்பேரில் அது நடைபெறும்

By: Updated: May 4, 2020, 02:32:08 PM

இது ஒரு புது அட்லாண்டிக் சாசனமாகும், சுற்றுச்சூழல், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஜனநாயக தாராளமயம் ஆகியவை அதன் அடித்தளமாகும்.

ராம் மாதவ், கட்டுரையாளர்.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அதன் காலனி நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், விசா, பாஸ்போர்ட் என்ற நடைமுறைகளே கிடையாது. பின்னர் முதலாம் உலகப்போர் வந்தது. அப்போது நடைமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. ஒரு தேசத்தின் எல்லைக்குள் நுழைவதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. பொருளாதாரத்தில் தேக்கம் மற்றும் மந்தநிலை ஏற்பட்டது. தேசியவாதம், தீவிர தேசியவாதமாகி, அடுத்த உலகப்போருக்கு வித்திட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், உலக நடைமுறைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, நிறுவனமாக்கப்பட்டது. கடந்த 65 ஆண்டுகளில் சிறிய பின்னடைவுகள் இருந்தாலும், உலக நடைமுறைகள் என்பது பெருமளவு அப்படியே இருக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

உலக நடைமுறைகளை பழைய முறைக்கு மாற்றுவதற்கு, இந்த தொற்றுநோய் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. முன்பைப்போல், நாடுகள் தங்களுக்குள்ளே இருந்து சர்வாதிகாரிகளாக மாறிவருகின்றன. எல்லைகள் மூடப்பட்ட, குறுகிய தேசியவாத மனநிலை கொண்ட நாடுகள் உலகில் அதிகளவில் உருவாகும் என்று அரசியல் அறிவியாலாளர்கள் கணிக்கின்றனர். உலகமயமாதல் மற்றும் எளிமையான வர்த்தக நடைமுறைகள் குறித்து சில பொருளாதார வல்லுனர்கள் எழுதிவிட்டனர். இந்த அவநம்பிக்கை எங்கிருந்து முளைத்தது? கொரோனா வைரஸ் என்ற நச்சு உயிரியிலிருந்தா? உண்மையில் இல்லை. சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்பட்ட, இரண்டு நாடுகள், மொத்த உலகின் நம்பிக்கையை ஆட்டிப்பார்த்துவிட்டன.
ஹீவர் மையத்தைச் சேர்ந்த அமெரிக்க வரலாற்றாசிரியர் நியால் பெர்க்யூசன், அதை சிமெரிக்கா என்று அழைக்கிறார். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, அமெரிக்காவும், சீனாவும் ஒரு பொருளாதார மாதிரியை உருவாக்கியிருந்தார்கள். அதை பெர்க்யூசன், கடந்த நூற்றாண்டின் இறுதி வரையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த அமெரிக்க – ஜப்பான் பொருளாதார ஒப்பந்தமான நிச்சிபெய்யுடன் ஒப்பிடுகிறார். கொரோனா வைரஸ் சிமெரிக்கா என்பதை, வெற்றி பெறுவதற்கு சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கிறது.

உண்மையை மறைத்ததற்காகவும், லைரசை எல்லையை கடந்து பரவவிட்டு, அதை மிகப்பெரிய தொற்றாக மாற்றியதற்காகவும், உலகத்தினரின் குற்றச்சாட்டை சீனத்தலைவர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும். கடந்த வாரம் வரை அவர்களின் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை, தொற்று ஏற்பட்டவர்கள் 82 ஆயிரம் எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 4,500 எனவும் கூறப்பட்டது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் எண்டர்பிரைசஸ் மையத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் டெரின் சிசர்ஸ் சீனாவில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை, 2.9 மில்லியனை தாண்டியிருக்கும் என்று கூறுகிறார்.

வழக்கமான நடைமுறைகளை சில நாடுகள் கடைபிடித்திருக்காது. அதில் சீனாவும் ஒன்று. வரலாற்று அனுபவங்கள் என்பதையே அது கடைபிடித்திருக்கும். இன்று என்னவாக இருந்தாலும், அதன் நடைமுறைகள் 1949ம் ஆண்டு மாவோ அதிகாரத்தை கைப்பற்றியபோது, நீண்ட கால புரட்சி உச்சகட்டத்தை அடைந்ததிலிருந்து வந்ததுதான். சீனாவின் உலகப்பார்வை மூன்று முக்கிய கொள்கைகளின் படி வழிநடத்தப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியியம்(GDPism), சீன மையவாதம்(China – centrism) மற்றும் சீன விதிவிலக்குவாதம்(chinese exceptionalism) ஆகிய மூன்றும், அந்த புரட்சியில் இருந்து பெறப்பட்டது.

டெங் சியோபெங், பொருளாதார வளர்ச்சி மட்டுமே முக்கியமான ஒன்று என்று 1980ம் ஆண்டு அறிவித்தார் என்று கூறப்படுகிறது. இதை சீன பொருளாதார வல்லுனர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியியம் என்று விவரிக்கின்றனர். இரண்டாவது சீன மையவாதம். சுதந்திரம், தன்னாட்சி, தன்னிறைவு என்று மாவோ வலியுறுத்தினார். வாங் ஷென் எழுதிய நாட்டுப்பற்று நிறைந்த தாய்நாட்டின் கீதம் என்ற பாடலில், மிகப்பெரிய அழகான சீன நிலம், மலைகள் சூழ்ந்த, சமவெளிகள், ஹீயாங் மற்றும் யாங்ட்ஷே நதிகள் பாய்ந்து வளம் கொடுக்கும் எங்களின் இல்லமாகும், இதுவும், சீனர்கள் என்ற உணர்வும் ஒவ்வொரு சீனரின் மனதிலும் வேரூன்றியுள்ளது. மூன்றாவது சீன விதிவிலக்குவாதம். சீனர்கள் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதை நம்பமாட்டார்கள். சீனர்கள் அவர்களின் பிரச்னைக்கு தீர்வுகளை தங்களின் அறிவு மூலமே கண்டுபிடிக்க விழைவார்கள். அதையே அவர்களின் தலைவர்களும் வலியுறுத்துவார்கள். சீனா தேசியவாதிகளின் உலகப்பார்வை என்பது, இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய ஜெர்மனியின் வரலாற்றுக்கு இணையாக இருக்கும். இன உயர்வு, வரலாற்று கூற்றுகள் மற்றும் ஆரியன் விதிவிலக்குவாதம் ஆகிய அனைத்தும் 1930களில் வாழ்ந்த மக்களுக்கு நன்றாக தெரியும். முன்னாள் செக்கோஸ்லோவேகியாவில் ஜெர்மன் பேசும் சூடேடென்லாண்ட் என்ற பகுதியை ஹிட்லர் ஆக்கிரமித்தபோது, ஐரோப்பா அதை எதிர்ப்பதற்கு பதிலாக, அவரை சமாதானப்படுத்த முடிவெடுத்தது. முனிச் ஒப்பந்தத்தை பிரட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் கொண்டாடிக்கொண்டிருந்ததை ரூஸ்வெல்ட் தூரத்தில் இருந்து ரசித்துக்கொண்டிருந்தார். மேலும், உங்களின் நடவடிக்கையை நூற்றுக்கணக்கான, பல மில்லியன் மக்கள் அங்கீகரிப்பார்கள். இது மனிதநேயத்திற்கான முதன்மையான வரலாற்று சேவை என்று ஹிட்லரை புகழ்ந்தார்.

வியக்கத்தக்க வகையில், ஓராண்டுக்குள்ளாகவே, ஹிட்லர், மேலும் ஆக்கிரமிப்பு இல்லை என்ற அவரின் வாக்குறுதியை மீறினார். இதையடுத்து, இரண்டாம் உலகப்போர் உருவானது 1939- 40களில் பிரிட்டன் எந்த இடத்தில் இருந்ததோ, இன்று அமெரிக்கா அந்த இடத்தில் நிற்கிறது. இறுதியாக, விழித்துக்கொள்வதற்கு முன்னரே, அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் கொரோனாவைரசை அனுமதித்து, அமெரிக்காவின் பேரழிவுக்கு காரணமாகிவிட்டார். மிகத்தாமதமாக பிப்ரவரி 28ம் தேதிதான், தனது ஆதரவாளர்களிடம், அமெரிக்காவில் வைரசின் தீவிர நோய் பரவல் குறித்த எச்சரிக்கைகளை கவனிக்கவில்லையா என்பதை கேட்டறிந்தார். இதை மிகைப்படுத்தியதற்காக ஊடகங்களை அவர், குற்றம்சாட்டினார். கொரோனா அச்சுறுத்தலை அவர்களின் புது புரளி என்று அழைத்தார். சீனாவின் belt and road எனப்படும் உலக வளர்ச்சி கொள்கையின் நன்மைக்காக அந்நாட்டை அரவணைத்த ஐரோப்பிய நாடுகள் தற்போது, இந்த தொற்றுநோய் பரவலால் வீழ்ச்சியடைந்து அல்லலுறுகின்றன. ஆசியாவில் உள்ள நாடுகளே இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடி வருகின்றன. ஒரு நாளில் அமெரிக்காவைவிட அதிகளவு பரிசோதனைகள் செய்வதில், தென்கொரியா முதன்மை வகிக்கிறது. சிங்கப்பூர் விரிவான பரிசோதனைகள் மேற்கொண்டது, அறிகுறிகள் தென்படுபவர்களை கண்காணிப்பதில் அதீத கவனம் செலுத்தியது. ஹாங்காங் மற்றும் தைவான் நாடுகள், சார்சில் தங்களுக்குள்ள அனுபவத்தின் மூலம் சரியான நேரத்தில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, வைரசை கட்டுப்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

மற்றொரு புறம் இந்தியாவும், ஜனநாயக செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக, கொரோனா சவாலை எதிர்த்து போராடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சர்களுடன் முன்னணியில் தலைமையேற்று, ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை வெற்றிகரமாக மக்களின் ஆதரவுடன் செயல்படுத்தி வருகிறார். 1.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தேசத்தில் 17 ஆயிரத்து 610 பேரே கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். மோடி தன்னிச்சையான, சர்வாதிகாரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. என்றாலும், islamophobia எனும் முஸ்லிம் எதிர்ப்பு போன்ற ஆத்திரமூட்டக்கூடிய தவறான தகவல்கள் வேண்டுமென்றே தூண்டிவிடப்படுகின்றன. இதுபோன்ற தூண்டுதல்களுக்கு அமைதி, சமநிலை, நம்பிக்கை ஆகியவற்றையே காண்பித்தார். தொலைநோக்கு பார்வையுள்ள தலைமையுடன் உள்ள ஜனநாயகத்தால், இதுபோன்ற சவால்களை தாராளமய மதிப்புகளில், சமரசமின்றி சமாளிக்க முடியும் என்பதை மோடி நிரூபித்துவிட்டார்.
புதிய உலக நடைமுறைளை வகுப்பதில் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தியா முக்கிய பங்காற்றும். மனிதனை மையமாகக்கொண்ட ஒத்துழைப்பு என்பதன் அடிப்படையில், மோடியின் அறிவுரையின்பேரில் அது நடைபெறும். இது ஒரு புது அட்லாண்டிக் சாசனமாகும், சுற்றுச்சூழல், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஜனநாயக தாராளமயம் ஆகியவை அதன் அடித்தளமாகும்.

சீனா, தற்போது உலகளவிலான விமர்சனத்திற்கு ஆளானாலும், அந்நாட்டில் அமைதியின்மை நிலவினாலும், அந்நாட்டிற்கு இன்றும் வாய்ப்புள்ளது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சொற்றொடர் உண்டு, லக்சியன் டவுஜென்ங் என்பதாகும். சிலருக்கு அதிகார போராட்டம் என்பது அதன் அர்த்தமாகும். புதிய கட்சிக்கான போராட்டம் என்பதையும் அது குறிக்கிறது. கடந்த காலங்களில் அதுபோல் நிறைய இருந்தது. சிறந்த ஒன்று இப்போது கிடைக்கும் என்று உலகம் நம்பலாமா?

இக்கட்டுரையை எழுதியவர் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் இந்தியா பவுண்டேசனின் இயக்குனர்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus covid 19 pandemic coronavirus global lockdown coronavirus exit strategy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X