Advertisment

கொரோனா தொற்றும் காலத்தில், நீண்டகால நோயாளிகள் பாதிக்கும் அபாயம்...

தேசத்தின் சுகாதார முறைமை என்பது, பெருந்தொற்று காலத்திலான சிகிச்சைகள் அளிப்பதைக் கொண்டு தீர்மானிக்கப்பட க்கூடாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, covid-19 coronavirus india, india lockdown coronavirus, covid-19 lockdown, indian economy lockdown, india lockdown poor, india lockdown migrants, india lockdown labourers

coronavirus, covid-19 coronavirus india, india lockdown coronavirus, covid-19 lockdown, indian economy lockdown, india lockdown poor, india lockdown migrants, india lockdown labourers

கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து தடுக்க சமூக விலகல் மிகவும் முக்கியம். ஆனால், மேலும் இரக்க சுபாவத்துடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம். மக்களின் ஆரோக்கியத்தில் அரசுக்கு பொறுப்புடமை உண்டு.

Advertisment

ஷா ஆலம் கான்

நான் புறநகர் பகுதியில் வசிக்கின்றேன். டெல்லியின் எல்லை முடிவடையும் நொய்டாவில் உள்ள கேடட் காலனியில் (கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அழைக்கின்றோம்) குடியிருக்கின்றேன். சுத்தமான குடிநீர், உணவு அல்லது கைகளை சுத்தப்படுத்தும் சானிடைஸ்சர் வாங்குவதற்கான பணம், வாழ்வாதரம் ஆகியவற்றுக்கு நான் கவலைப்படத் தேவையில்லை. பணி நிமித்தமாக நான் டெல்லி செல்வதற்கு விரைவு சாலையில் செல்வது வழக்கம். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு சில நாட்கள் கழித்து அந்த விரைவு சாலையில் செல்லும்போது, பெரும் அளவிலான இடம் பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதைப் பார்க்க முடிந்தது. ஆண்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டும், பெண்களை அழைத்துக் கொண்டும் சென்றனர். சில வளர்ந்த குழந்தைகள் தங்களைவிட வயதில் குறைந்த குழந்தைகளையும், தங்கள் தாத்தா, பாட்டிகளையும் கையைப்பிடித்து அழைத்துக் கொண்டு நடந்து சென்றனர். ஏழைகளான அவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து 200 கி.மீ முதல் 400 கி.மீ தொலைவில் உள்ள தங்கள் கிராமங்களை நோக்கி நடந்து செல்கின்றனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா தொற்ற வாய்ப்பில்லாத என்னுடைய காலனி வீட்டின் முன்பு சீத்தாராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உட்கார்ந்திருந்தார். அவர் பலூன் விற்பவர். அவர் ஒருமுறை என்னிடம், ஒரு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வரை சம்பாதிப்பேன் என்று சொல்லி இருந்தார். அவர் சாலை ஓரத்தில் உள்ள குடிசை ஒன்றில் வசிக்கிறார். அவருடன் சேர்த்து அவர்கள் வீட்டில் மூன்று பேர் இருக்கின்றனர். மூன்றுபேர் பசியை தீர்க்க வேண்டியது அவரது பொறுப்பாக இருக்கிறது. ஊரடங்குக்குப் பின்னர், பலூன் விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் நின்றுபோனது. ஆனாலும் கூட அவரும், அவரது குடும்பத்தினரும் ஆரோக்கியமாக இருந்ததால் எந்தவித கொரோனா தொற்றும் இன்றி இருந்தனர். நீண்டகாலமாக நோய்வாய்பட்டிருப்போர் அல்லது சிகிச்சையில் இருப்போர் அல்லது மருத்துவமனைக்கு செல்ல காத்திருப்போரில் பலர் இந்த ஊரடங்கு காரணமாக இறந்துவிடக் கூடிய சூழல் உள்ளது.

கேன்சர் நோய் சிகிச்சைக்காக பலர் மெட்ரோ நகரங்களுக்கு வருகின்றனர் என்பது பற்றி இந்த செய்தித்தாளில் நான் எழுதி இருந்தேன்(கேன்சர் அகதிகள் என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 2018-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி வெளியானது). அப்படி வருபவர்கள் சிகிச்சைக்காக கொண்டு வந்த பணம் தீர்ந்துபோனபின்னர், எங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார்களோ அந்த மருத்துவமனைக்கு அருகிலேயே தெருக்களில் வாழ்ந்து வந்தனர். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே உள்ள தெருக்களில் நூற்றுக்கணக்கான கேன்சர் அகதிகள் வாழ்ந்து வந்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் இந்த தெருக்கள், நடைபாதைகள் காலியாகிவிட்டன. இந்த பெருங்கூட்டம் எங்கே சிதறியது என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் சிகிச்சையை நிறுத்தியிருக்க கூடும் என்பதுதான் எனக்கான பெரும் கவலையாக இருக்கிறது. ஒரு துயரத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. என்னுடைய கவலையெல்லாம், இது போன்ற ஊரடங்கு கால சூழ்நிலையில் நோய்வாய்ப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான்.

உலக சுகாதார நிறுவனத்தின் 2015-ம் ஆண்டு அறிக்கையின் படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தொற்றா நோய்களின் விளைவாக 58 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இது போன்ற தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தொடர் கண்காணிப்பு தொடர்ச்சியான மதிப்பீடுகள் முக்கியமானதாகும். இது எப்படி இருப்பினும், இந்தியா போன்ற நாடுகளுக்கு இது கடிமான செயலாகும். ஊரடங்கு காலத்துக்குப்பின்னர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலானோர் மோசமாகப் பாதிக்கப்படக் கூடும்.

2018-ம் ஆண்டில் இந்தியாவில் 20.15 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய முழு ஊரடங்கு காரணமாக இத்தகைய காச நோயாளிகள் தங்களுக்கு உரிய மருத்துவமனைக்கு போகமுடியாத சூழல் ஏற்பட்டால் அல்லது அந்த மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தால், டாட்ஸ் DOTS (directly observed treatment short-course) எனப்படும் குறுகியகால நேரடி கவனிப்புக்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காசநோயாளிகளின் அவல நிலையை நினைத்துப் பாருங்கள். வழிகாட்டுதல்களின்படி மருந்துகள் உட்கொள்ளாவிட்டால் அல்லது சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மீண்டும் காசநோய் பல்கி பெருகும். குறிப்பாக மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோயாக உருவாகக் கூடும். எனவே, இந்த ஊரடங்கு காலத்தில் நாம் காசநோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

என் உடன் பணியாற்றுவோர், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், துணை ஊழியர்கள் , மருத்துவமனையின் இதர நபர்கள் உளிட்ட நான் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்களின் பக்தி குறிப்பிடத்தக்கதாகும். சுகாதாரப் பணியாளர்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் கைகளைத் தட்டுங்கள், மணிகளை ஒலிக்கச்செய்யுங்கள் என்ற பிரதமரின் வேண்டுகோள் ஊக்கமளிப்பதாக இருந்தது. எதிர்பாரதவிதமாக இதுபோன்ற ஊக்குவிப்புகள் குறைந்தகாலமே நீடித்தது. நான் பணியாற்றும் மருத்துவமனையில் என்னுடன் பணிபுரியும் இளம் மருத்துவர்களை அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் வீடுகளை காலி செய்யும்படி சொல்லி இருக்கின்றனர். தெலங்கானாவில் பணிக்குச் சென்ற பெண் மருத்துவரை ஊரடங்கை மீறுவதாக கூறி, தடுத்து நிறுத்தியதுடன் மட்டுமின்றி தாக்கவும் செய்தார் போலீஸ்காரர் ஒருவர். இவையெல்லாம் மிக சிறிய சம்பவங்கள்தான். மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய உபகரணங்கள் வழங்கப்படுவதற்கு போதுமான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து தடுக்க சமூக விலகல் மிகவும் முக்கியம். ஆனால், மேலும் இரக்க சுபாவத்துடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம். மக்களின் ஆரோக்கியத்தில் அரசுக்கு பொறுப்புடமை உண்டு. ஆனால், எந்த நிலையிலும் அது ஒரங்கட்டப்பவர்களை காயப்படுத்தும் முறைகளை கொண்டதாக இருக்கக் கூடாது. ஒரு தேசத்தின் சுகாதார முறைமை என்பது, பெருந்தொற்று காலத்திலான சிகிச்சைகள் அளிப்பதைக் கொண்டு தீர்மானிக்கப்பட க்கூடாது. நீண்டகாலத்துக்கு பொதுமக்களுக்கான சுகாதாரக் கடைமைகளை ஆற்றுவதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதாக இருக்க வேண்டும். மக்களுக்கான சுகாதார முன்னெடுப்பு முறையானது நன்றாக செயல்படுத்தும் பட்சத்தில், இது போன்ற பெருந்தொற்று காலங்களில் அது மிகவும் உபயோகமாக இருக்கும். மோசமான அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில் ஒருபோதும் தாமதம் செய்ய வேண்டாம்.

இந்த கட்டுரை கடந்த ஏப்ரல் 30-ம் தேதியிட்ட நாளிதழில் “Compassion, Above All” என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எலும்பியல் (orthopaedics)பேராசிரியர் ஆக இருக்கிறார். கட்டுரையின் கருத்துகள் அவரது சொந்த கருத்துகளாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment