Advertisment

பூங்கொத்துகளைப் பெறுவோர் மீது செங்கற்களும் வீசப்படலாம்...

புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டால், ஒரு போலீஸ்காரர் உணர்வுமிக்கவராகவும், மனிதாபிமான மிக்கவராகவும், மக்களின் நண்பர்களாகவும், சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus lockdown, coronavirus news, chennai lockdown, chennai curfew

chennai lockdown

ஒரு வேளை புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டால், ஒரு போலீஸ்காரர் உணர்வுமிக்கவராகவும், மனிதாபிமான மிக்கவராகவும், மக்களின் நண்பர்களாகவும், சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அதில் கூறப்படும். எனினும் இந்த மாறுதல்களுக்கு மக்கள், ஊடகம் எல்லாவற்றுக்கும் மேலே எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களின் ஆதரவும் தேவை.

Advertisment

பிரகாஷ் சிங்

ஒவ்வொரு சிக்கலும் அல்லது பிரச்னையும் அதனை எதிர்கொள்ளும் திறன் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பையே தருவதாக இருக்கிறது. அதைப்போலத்தான் கோவிட்-19 வைரஸ் இந்திய காவல்துறையினருக்கு தனித்துவமான சவால்களை கொடுத்திருக்கிறது. இதற்கு முன்னர் இதுபோன்ற சிக்கல்களை ஒருபோதும் அவர்கள் கண்டதில்லை. காவல்துறையினருக்கான நடத்தை விதிமுறைகளிலும் இது போன்ற சூழல்களை எதிர்கொள்வது குறித்து நிலையான அறிவுறுத்தல்கள் தரப்படவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் காவல்துறை மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு ஏற்ப பணியாற்றுவது மட்டுமின்றி, ஒரு வேளை அதற்கு ஏற்ப எப்படி செயல்படுவது என்பது மற்றும் எதிர்பார்ப்பை விட அதிகமாக செயல்படுவது என்பது குறித்து பார்ப்பது நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ஊரடங்கை அமல்படுத்துவதற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அதனை அவர்கள் செயல்படுத்தினர். இந்த ஊரடங்கு செயல்பாட்டின்போது சில நிகழ்வுகளில் அதீதமாகவும் அவர்கள் செயல்பட்டனர். மக்கள் லத்தியால் அடிக்கப்பட்டதாகவும், இடம் பெயர் தொழிலாளர்களுக்கு முட்டி போடுல் உள்ளிட்ட தண்டனைகள் அளிக்கப்பட்டதாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல்கள் வந்தன.

எனினும், மாநில காவல்துறை தலைவர்கள் இந்த நிகழ்வுகளை முறையாக கையாண்டனர். இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் என்ற ஆய்வுஅமைப்பு, குறிப்பிட்ட காவல்துறை செயல்கள் குறித்து ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில் மாநில காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அது தயாரித்துள்ளது. எனினும், இந்த அறிவுறுத்தல்கள் பலன் அளித்தனவா என்ற முடிவுகளைக் காண்பதற்கு நேரம் இல்லை. காவல்துறையினர், ஒழுங்குமுறை உத்தரவுகளை அமல்படுத்தும் பணிகளை மட்டும் பார்க்கவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மனிதாபிமான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். உள்ளூர் மட்டத்தில், விவேகானந்தா கேந்திரா உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து , ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு நிவாரணப்பொருட்களையும் வழங்கி வருகின்றனர். நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கார்கள் போன்ற போக்குவரத்து வசதிகளையும் , முதியோர்களுக்கு உதவுவது போன்ற செயல்களையும் செய்கின்றனர். நோயால் மோசமாக பாதிக்கப்பட்டு ரத்தம் தேவைப்படுவர்களுக்கு காவல் துறையினர் ரத்த தானம் தருகின்றனர். நோய் தொற்று அபாயமுள்ள இத்தகைய சூழலிலும் கூட தங்கள் கடமையை அவர்கள் செய்து வருகின்றனர். இத்தகைய சூழல்களில்தான் பொதுமக்கள் அவர்களை தாக்குவது, அவர்கள் மீது கற்களை வீசுதல் போன்ற சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. பஞ்சாப் மாநலத்தில் மன நலம் பாதித்த ஒரு நபர் ஒரு காவல்துறை அதிகாரியின் கையை வெட்டி இருக்கிறார்.

எனினும், தங்களது சொந்தப் பாதுகாப்பைக் கூட புறந்தள்ளிவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம் இரக்கம் காட்டுபவர்களாகவும், பச்சாதாபம் காட்டுபவர்களாகவும் காவல்துறையினர் இருகின்றனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு அப்பாலும் மக்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் அளிக்கின்றனர். இப்போதைய சூழலில் ஒரு விமர்சகர் காவல்துறையினர் குறித்து முன்னணியிலும் முன்னால் இருப்பவர்கள் என்று கூறி இருக்கிறார். பிரதமர் கூட, “மனித நேய, உணர்வுப்பூர்வமான காவல்பணி நம் இதயங்களை ஈர்க்கிறது” என்று கூறி இருக்கிறார்.

இதர சூழல்களில் காவல்துறையினர் குறிப்பாக ஜமாமியா மில்லாஹ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய நிகழ்வுகளை ஏன் தவறாக கையாண்டனர். அண்மைகால டெல்லி வன்முறையின்போது அவர்கள் பாதகச்செயல்களில் ஈடுபட்டதாக தோற்றம் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக பணியாற்றியது எப்படி? இதற்கான விடை மிகவும் எளிமையானது. வரையறுக்கப்பட்ட எல்கைக்குள் கொடுக்கப்பட்ட சூழலில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டால், தனித்துவமான சாதகமான முடிவுகளை உருவாக்கும் திறன் பெற்றவர்களாக காவல்துறையினர் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சூழலில் பாரபட்சமாக அல்லது ஒரு சாராருக்கு சாதகமாக செயல்படும் படி அல்லது குறிப்பிட்ட வழியில் செல்லும்படி தூண்டும்போது, அதிகார அமைப்பிடம் இருந்து வரும் அழுத்தம் காரணமாக பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதனால்தான் வெளி அழுத்தங்களில் இருந்து காவல்துறையினரை பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்களின் செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மையை அனுமதிக்க வேண்டும் என்றும் நாங்கள் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம். காவல்துறை சீர்திருத்தத்தின் இந்த அடிப்படையான உண்மையை எப்போது நமது தலைவர்கள் புரிந்து கொள்ளப்போகிறார்கள்? காலனிய ஆதிக்கத்தின் காவல்துறை நடைமுறை என்ற சேணையை எவ்வளவு நாளைக்கு கையில் வைத்தபடி எவ்வளவு தூரம் போகப்போகிறோம்? காவல்துறையினர் மீது ஜமீன்தார்கள் போல அதிகாரம் செலுத்துதல் எப்போது முடிவுக்கு வரும்? நாட்டில் ஸ்மார்ட் காவல்துறை-க்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் எப்போது ஆதரவு தருவார்? மாநில அரசுகளை ஒழுங்குபடுத்த உச்ச நீதிமன்றம் எப்போது சாட்டையை சொடுக்கும்? தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் காவல்துறை சீர்திருத்தத்தை மேற்கொள்ள முன் வராதபோது, அதனை அவசியம் அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் எப்போது தெளிவாகப் பேசுவார்கள்?

இப்போது வரை, இப்போது உள்ள சூழ்நிலையே தொடர்கிறது. இன்றைக்கு காவல்துறையினர் பூங்கொத்துகளைப் பெறுகின்றனர். மீண்டும் அது அவர்கள் மீது வீசப்படும் செங்கற்களாகவும் மாறலாம்.

இப்போதைய சூழலுக்கு வருவோம். காவல்துறையினரைப் பொறுத்தவரை, மூன்று விஷயங்களை அரசாங்கம் செய்ய வேண்டியிருக்கிறது. காவல்துறையினரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சிலர் இறந்தும் போகின்றனர் எனவே முதலில், காவல்துறையினர் பணிக்குச் செல்வதற்கு போதுமான பாதுகாப்பு முறைகளை அவர்களுக்குத் தர வேண்டும். இரண்டாவதாக, சுகாதாரத்துறையினருக்கு வழங்கப்படுவது போல காவல்துறையினருக்கும் காப்பீடு வழங்க வேண்டும். மூன்றாவதாக அவர்களுக்கு சட்ட வரையறையை அவசரமாக வரையறுக்க வேண்டும். தொற்று நோய்கள் சட்டம் என்பது 1897ல் கொண்டு வரப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த சட்டமாக முழுமையில்லாமல் இருக்கிறது. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழான குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் வகை செய்யும் பிரிவு இல்லை.

இதர நாடுகளின் காவல்துறை, ஒரு மாற்றத்துக்காக, வெற்றிகரமானதாக இல்லை. கிரேட்டர் மான்செஸ்டர் காவல்த்துறையின் முன்னாள் தலைமை காவலர் கூறுகையில், ஊரடங்கை அமல்படுத்துவது சாத்தியமற்றது என்று சொல்லி இருக்கிறார். “இந்த நாட்டில் காவல்துறையினர் கள அளவில் இல்லை. போதுமான எண்ணிக்கையில் இல்லை. ஒவ்வொரு சமூகத்திலும் காவல்துறையினர் இருப்பதை நடைமுறைப்படுத்த முடியாது.” இத்தாலியில் பொதுவாக கிராமப்புறங்களில் காவல்பணி மேற்கொள்வோரை நகர்புறங்களுக்கு அனுப்பினர். ஸ்பெயினில், மக்கள் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்து அமல்படுத்த ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது. அமெரிக்காவில் காவல்துறையினருக்கு உதவி செய்ய தேசிய பாதுகாவலர்களை களமிறக்க முடிவு செய்திருக்கின்றனர். நமது காவல்துறையினர் பல்வேறு வகையான கடமைகளைச் செய்கின்றனர். ஒருபோதும் அது குறித்து புகார் தெரிவித்ததில்லை. மத்திய ஆயுதப் படையிடம் இருந்து எந்த ஒரு உதவியும் கேட்பதில்லை. மக்களை மகிழ்விக்கவும், மன உறுதியை அதிகரிக்கவும் காவல்துறையினர் பாட்டுப்பாடவும், நடனமாடவும் செய்கின்றனர்.

ஒரு வேளை புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டால், ஒரு போலீஸ்காரர் உணர்வுமிக்கவராகவும், மனிதாபிமான மிக்கவராகவும், மக்களின் நண்பர்களாகவும், சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அதில் கூறப்படும். எனினும் இந்த மாறுதல்களுக்கு மக்கள், ஊடகம் எல்லாவற்றுக்கும் மேலே எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களின் ஆதரவும் தேவை.

(கட்டுரையின் எழுத்தாளர், இந்திய போலீஸ் பவுண்டேஷனின் தலைவர்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Lockdown Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment