கோவிட் – 19ஐ கட்டுக்குள் வைப்பதற்கு நம்மிடம் உள்ள அனைத்து சக்திகளையும் ஒட்டுமொத்தமாக பயன்படுத்தி, மாவட்ட திட்டமிடல், சட்டப்பிரிவு 243 டியில் உள்ளதைபோல் ஊராட்சி மற்றும் நகராட்சியின் மூன்றடுக்கு ஒன்றிணைத்து மாவட்ட திட்டக்குழுவின் கீழ் கொண்டுவரவேண்டும்.
மணி சங்கர் அய்யர், கட்டுரையாளர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஒத்துழைத்து கூட்டாட்சி என 2014ம் ஆண்டு வாக்குறுதி அளித்த மத்திய அரசு ஆண்டுகள் செல்லச்செல்ல அதை குறைத்துக்கொண்டது. இதனால் தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட் – 19க்கு எதிரான நெருக்கடி நிலையில், பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பெரிய துன்பத்தை சந்தித்து வருகின்றன. மத்திய அரசுடன் நல்ல உறவு நிலவாதது மோதல் கூட்டாட்சி என்று வரையறுக்கப்படுகிறது. பிரதமர், முதலமைச்சர்களுடன் தொடர்ந்து வீடியோ கான்பிரன்சிங்க் மூலம் உரையாடி வருகிறார். அது மையப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை ஏற்கிறது. எனினும் தயங்கினாலும், கோவிட்- 19 சூழலுக்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் சேர்ந்து ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து பணியாற்ற வேண்டிய நேரமிது. இந்த நெருக்கடி நிலையில் நல்ல தீர்வை எட்டுவதற்கு அனைவரின் ஆலோசனைகளும் தேவைப்படுவதை மத்திய அரசும் ஏற்கிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கும் வழிகாட்டுதல்களை மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் சுதந்திரம் இருக்க வேண்டும். போதிய ஆலோசனைகளை வழங்குவதுடன், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்ட, இந்த நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நிதி உதவியும் செய்ய வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 73 மற்றும் 74வது திருத்தங்களின் கீழ், கடந்த கால் நூற்றாண்டாக பகுதி 9 மற்றும் 9ஏவில் உறுதியளிக்கப்பட்ட, ஊராட்சி நிர்வாகங்களுக்கும், நகராட்சி நிர்வாகங்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது, தற்போது செய்யப்படவேண்டியது. அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதில் உள்ள 29 தலைப்புகளில், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறு வைத்தியசாலை உள்ளிட்டவற்றின் சுகாதாரமே துவக்கமாக இருக்கட்டும். அதேபோல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடப்பதற்கு ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கவேண்டும். சட்டப்பிரிவு 243ஜி பிரிவின்படி, மாநிலங்களை ஆள்பவர்கள் இச்சூழலை கருத்தில்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தனித்து செயல்பபடிக்கூடிய நிதி, அதிகாரங்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.
இந்த சட்டப்பிரிவு, மாநில அரசுகளுக்கு, சட்டப்பூர்வமாக ஊராட்சி அமைப்புகளுக்கு சக்தியும், அதிகாரமும் அளிக்கிறது. இதன் மூலம் அந்த அதிகாரத்தை செயலாற்றுவதற்கு நாம் இந்த சூழலில் முயற்சி செய்ய வேண்டும். ஊராட்சி அமைப்புகளை நாம் சுய அரசு மன்றமாக செயல்பட வைக்க வேண்டும். மாநில அரசுகள் ஊராட்சி அமைப்பை, மாநில அரசின் நீட்டிக்கப்பட்ட அங்கமாக பார்க்ககூடாது மற்றும் பார்க்கவும் முடியாது. ஆனால், அதை சுய அரசு மன்றமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமாகும். ஒத்துழைப்புடன் கூட்டாட்சி என்பதன் அர்த்தம், எவ்வாறு மாநிலங்கள் மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படாமல், கூட்டாட்சியில் தன்னாட்சி அமைப்புகளாக இயங்கிறதோ, அதேபோல் ஊராட்சி அமைப்புகளும், மாநில அரசின் நீட்சியாக இல்லாமல் சுய அரசு மன்றமாக கருதப்பேடவேண்டும். அதனால் தான் ஊராட்சி அமைப்புகளும் மூன்றடுக்கு அதிகாரப்பகிர்வுகளாக இருக்க வேண்டும். எவ்வாறு இந்திய அரசியலமைப்பு மத்திய அரசு, மாநில அரசு மற்றும் ஊராட்சி அமைப்பு (நகராட்சி அமைப்பு) என்ற முறையில் உள்ளதோ, அதேபோல் உள்ளாட்சி அமைப்பும் இருக்க வேண்டும்.
கேரளா எவ்வாறு தங்கள் மாநிலத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்து, அற்புதமாக செயல்பட்டுகொண்டிருப்பதற்கு காரணம், அவர்களின் வலுவான அமைப்பே ஆகும். அவர்கள் குடும்பஸ்ரீ திட்டத்தின் மூலம் அதிகாரத்தை ஊராட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளித்து பணிகளை மேற்கொண்டதும் அவர்களுக்கு உதவியதாக இருந்ததாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஜசக் அண்மையில் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருந்தார். (அந்த கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரசில் ஏப்ரல் 17ம் தேதி கோவிட் வளைவுக்கு மேல் சென்றது எப்படி என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது) இந்த ஊரடங்கு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை தங்களின் சொந்த கிராமங்களுக்கு கொண்டுவந்துகொண்டிருக்கிறது. எனவே கிராம ஊராட்சி நிர்வாகத்தினரை கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பங்காற்ற வைப்பது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. (சுய அரசின் மன்றமாக நகராட்சி நிர்வாகத்தினரையும் ஈடுபட வைக்க வேண்டும்) உண்மையில், அரசின் மூன்றாம் அடுக்கு வரை ஒத்துழைப்பு கூட்டாட்சி நீட்டிக்கப்பட்டால், நாம் சிறிதளவேனும் வெற்றிபெற வாய்ப்புள்ளது. இந்த பிரச்சாரம் அடிமட்டத்தில் இருந்து திட்டமிட்டு, செயல்படுத்தப்பட வேண்டும். வழக்கமான பொருளாதார நடவடிக்கைகள் துவங்கும் வரை இதை கண்காணிக்க வேண்டும். வீடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட பல மில்லியன் கிராம மக்களுக்கு இலவசமாவோ அல்லது அதிகளவு மானியத்திலோ உணவு வழங்க வேண்டிய தேவை இருக்கும். 11வது அட்டவணையில் உள்ள 28வது சாரத்தில், அதிகாரப்பகிர்வில் பொது வினியோக முறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அட்டவணையில் பல்வேறு சாரங்களும் உள்ளன. அவை இதற்கு ஏற்றவை. ஊராட்சிகளின் பங்களிப்பை மாநிலகளின் அதிகாரிகள் எப்போது ஏற்றுக்கொண்டு ஊராட்சி அமைப்புகளுக்கும் எப்போது சம அதிகாரம் வழங்குகிறார்களோ அப்போது 11 மற்றும் 12வது அட்டவணையின் சாராங்கள் முழுவதுமாக பின்பற்றப்படும்……
மத்திய மற்றும் மாநில அரசுகள் விழித்துக்கொண்டு, கோவிட் – 19ஐ எதிர்த்து போராடுவதற்கு, அதிக சக்தி வாய்ந்த ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளை பயன்படுத்த வேண்டும். 32 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினர்கள் நம்மிடம் திறன் பெற்றவர்களாக உள்ளனர். நகராட்சி அளவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் தற்போது பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அதாவது 10 முதல் 12 லட்சம் பேர் பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் அப்பிரிவினரில் அதிகளவு தேவைகள் வேண்டிய நிலையில் உள்ள மற்றும் ஆதரவற்றவர்களையும் சென்றடைவது எளிது. 14 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கிராமப்புற தலைமை பணிகளுக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உலகத்திலேயே ஜனநாயக முறையில் அதிகளவில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்தியாவில்தான். அதில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர். உங்களால் நினைத்துப்பார்க்க முடியுமா? ஒரு பெண் நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு மத குருமார்களின் படுகொலையை தடுப்பதற்கு முயற்சி செய்ய முடியுமா? பால்கர் கிராமத்தின் பெண் ஊராட்சி தலைவர் இதை செய்துள்ளார். எந்த சூழ்நிலையிலும், இந்த கிராமத்தில் எது நடந்தாலும் அதற்கு முழு முதல் பொறுப்பு தனக்கே உள்ளது என்பதை உணர்ந்த அவர், அவ்வாறு செய்துள்ளார். ஏனெனில், அவர் அவரது கிராம மக்களிடம் இருந்து அந்த உரிமையை பெற்றுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் முன்னணி ஊழியராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
முக்கியமான ஒன்று புலம்பெயர் தொழிலாளர்கள் வருகையை எதிர்கொள்ள திட்டமிடுவது. அவர்கள் வந்தவுடன் பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் எந்த அளவிற்கு சாத்தியமோ, அந்தளவிற்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட அனைத்து முக்கிய தேவைகளையும் செய்யவேண்டும். அதி முக்கியமாக அவர்களுக்கு இருப்பிடமும், அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்க வேண்டும். அதற்கு தேவையான நிதியை கேட்டுப்பெறவேண்டும். இதில் கருத்தில்கொள்ள வேண்டிய மற்றொரு விஷம் என்னவெனில், உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் தினசரி நடவடிக்கைளை சட்டப்பிரிவு 243 ஏ மற்றும் 243 எஸ்சின்படி தங்களின் கிராம சபாக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை கொண்டு செயல்படுவதே அதிகாரிகளின் பொறுப்பாகும்.
கோவிட் – 19ஐ கட்டுக்குள் வைப்பதற்கு நம்மிடம் உள்ள அனைத்து சக்திகளையும் ஒட்டுமொத்தமாக பயன்படுத்தி, மாவட்ட திட்டமிடல், சட்டப்பிரிவு 243 டியில் உள்ளதைபோல் ஊராட்சி மற்றும் நகராட்சியின் மூன்றடுக்கு ஒன்றிணைத்து மாவட்ட திட்டக்குழுவின் கீழ் கொண்டுவரவேண்டும். கிராமப்புற மற்றும் கிராமம் சார்ந்த, கிராம சபை, கிராம பாராளுமன்றம், வார்ட் சபை ஆகிய மூன்றையும் சம்மந்தப்படுத்துவது மிக முக்கியமாகும். இதன்மூலம் தான் கோவிட் – 19 போரை மக்கள் இயக்கமாக மாற்ற முடியும். இதன் மூலம் மட்டும் தான் ஒரு பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நாம் ஒருங்கிணைந்து வெற்றி பெற முடியும்.
இந்த செய்தியை, நாட்டு மக்களுக்காக உரையாற்றும்போது, பிரதமர், ஏப்ரல் 24ம் தேதி, தேசிய ஊராட்சி நாளில் மக்களுக்கு அறிவிக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். அதை அவர் செய்திருந்தால், இந்த போரில், கருணை நிறைந்த முகங்களாக, கிராம ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகிகளின் முகங்கள், இந்தியாவிற்கும், உலகிற்கும் காட்டப்பட்டிருக்கும்.
இக்கட்டுரையை எழுதியவர் மணி சங்கர் அய்யர். காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்.
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.