ஸ்ருதி தபோலா, கட்டுரையாளர்
எல்லா பிரசவங்களுமே பீதி மற்றும் பதற்றம் நிறைந்த கணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அது தவிர்க்க முடியாததும் கூட. எனது முதல் அனுபவம், ஏதோ ஒரு ஆவலில் நான் ஒரு பாக்கெட் சிப்சை சாப்பிட்டுவிட்டேன். அதனால் என்ன? சிப்சை சாப்பிடதன் மூலம் நான் சரிசெய்ய முடியாத தீங்கை இன்னும் பிறவாத குழந்தைக்கு செய்துவிட்டேனா? கூகுளும், மற்ற தாய்மார்களும், மற்றவர்களும் அதனால் ஒன்றும் இல்லை என்று அறிவுறுத்தினர். அதனால், நான் அந்த முதல் பீதியிலிருந்து தப்பித்தேன். இப்படித்தான் பிரசவம் முழுவதுமே பெண்களுக்கு பல்வேறு விஷயங்களில் பீதியை ஏற்படுத்தும்.
ஆனால் இதுபோன்ற வேதனையான பதற்றங்கள் அவ்வளவு எளிதாக நம்மைவிட்டு சென்றுவிடாது. தற்போது நான் வேறுமாதிரியான காலகட்டத்தில் நுழைகிறேன். யாரும் எதிர்பாத்திடாத ஒரு திருப்புமுனையை எனது பிரசவகால இறுதி நாட்கள் கொண்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக உலகளவிலான ஒரு தொற்று நோய் நேரத்தில், தயாராவது சற்று கடினமாகத்தான் உள்ளது. நாம் உலகளவில் தொடர்பில் இருந்தாலும், 21 நாள் தேசிய ஊரடங்கில் இருந்தாலும், மருத்துவர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது போன்ற பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
கர்ப்ப காலத்தின் மூன்றாவது மூன்று மாதங்கள் மிக வித்யாசமாக உள்ளது. அல்லது அவ்வாறு நான் நினைத்துக்கொள்கிறேன். பெரும்பாலானோர் தங்கள் சமூக வலைதளங்களில் கர்ப்பகால அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். எனக்கு அது இந்த செய்தியில் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். வளைகாப்புக்கு வாய்ப்பில்லை. உலகம் முழுவதும் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதை நான், கர்ப்பம் தொடர்பாக, எனது போனில், பதிவிறக்கம் செய்துவைத்துள்ள பல்வேறு செயலிகளில் பார்க்கிறேன்.
சமூக ஒன்றுகூடலே இனி சிறிது காலத்திற்கு கிடையாது. வணக்கம் சமூக தனிமையே! இந்த பதற்றம் புதிதல்ல. நானும் பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்து விடாமுயற்சியுடன் தொடர்ந்து பார்த்து வருகிறேன். செய்தி துறையில் பணியாற்றுவதில் உள்ள ஒரு அபாயம் இது ஆகும். உங்கள் பீட் தொடர்பான பிரச்னை இல்லையென்றாலும், உங்களுக்கு கிடைக்கப்பெறும் தகவல் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க இயலாது.
சீனாவில் மூன்றாவது மூன்று மாதத்தில் கொரோனா பாதித்த பெண்கள் குறித்து லான்சட் மருத்துவ இதழின் ஆய்வு குறித்தும், அவர்களுக்கு அப்போது எப்படி தோன்றியது, அவர்கள் நலமுடன் வெளிவர உதவிய விஷயங்கள் குறித்தும் நான் படித்து வருகிறேன். ஆனால் இவையனைத்தும் எந்த உத்திரவாதத்தையும் மனதிற்கு வழங்குவதாக இல்லை.
உண்மையில் கர்ப்பிணிகளை இந்த நோய் எவ்வாறு பாதிக்கும் என்பது பல நிபுணர்களுக்கே தெரியவில்லை. இந்த வைரஸ் தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுமா? அப்படி பரவினால் குழந்தைக்கு என்ன ஆகும்? இதுபோன்ற கேள்விளை நான் தவிர்க்க முடியாது. ஆதாரங்கள் போதிய அளவு இல்லை மற்றும் யாருக்கும் தெரியாது என்ன ஆகுமென்று.
இந்த தொற்றுநோய் நிறைய பேருக்கு பரவினால், இதை நன்றாக புரிந்துகொண்ட வகையில், அது தீர்வை கொண்டு வராது. இந்த ஊரடங்கும், அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளும் வேறு அதிகரிக்கும். நான் எனது மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு செல்வது சட்டத்திற்கு புறம்பானதா? நான் ஒரு சிக்கலான உணவு கணக்கை என் மனதில் எண்ணிக்கொண்டிருக்கிறேன். வழக்கமாக வரும் பால் கிடைக்காவிட்டால் என்ன ஆகும்? வீட்டில் கால்சியத்திற்கான மாற்று வழிகள் என்ன? இரும்புச்சத்து உணவுகளுக்கான வழி என்ன? முட்டைகளுக்கான வழி என்ன? நான் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்ற புரதங்கள் என்ன?
இந்நிலை இன்னும் மோசமடைந்தால் என்ன ஆகும்? இந்தியாவின் சுகாதார சேவைகள் ஏற்கனவே உருக்குலைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொற்றால் நோயாளிகள் வெள்ளமென வந்தால், அதை எடுத்துக்கொள்ள முடியாது. எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள படுக்கை கிடைக்குமா? என் மகப்பேறு மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டு, எனக்கு தேவைப்படும்போது, அவர் செயலற்று கிடந்தால் என்னவாகும்?
இந்த ஊடரங்கு காலத்தில் வேறு ஒரு மருத்துவரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பேன்? எனது பெற்றோரும், என் கணவரின் பெற்றோரும் அவர்களின் பேரக்குழந்தையை எவ்வளவு நாளில் பார்க்க முடியும்? அது முன்னரே பிறந்திருக்கலாமோ? குழந்தை பிறந்தவுடன் ஒருவர் எவ்வளவு நாள் தனித்திருக்க வேண்டும்? எனக்கு தெரியும் இந்த நாட்டிலே நான் ஒருத்தி மட்டும் கர்ப்ப காலத்தில், இந்த கேள்விகளுடன் அல்லாடிக்கொண்டிருக்கவில்லை.
பீதியடையத் தேவையில்லை என்ற செய்தி எப்படியும் என் மனதில் பதியப்போவதில்லை. குறைந்தபட்சம் அதிலாவது என் மனம் அமைதியடைந்திருக்கும். பயம், பதற்றம் அனைத்தையும் உணர்கிறேன். சோகத்தை உணர்வது சரிதான். இந்த சோகம் நீங்கள் எப்படி திட்டமிட்டுள்ளீர்கள் என்ற விஷயங்களை பொறுத்து மட்டுமல்ல. அடுத்தவர்கள் உங்களிடம் என்ன கூறுகிறார்கள் என்பதை பொறுத்ததும். இது அதிகப்படியான எதிர்வினை கிடையாது. தற்போது அது எப்படி முடியும் என்று தெரியாது. அறிவியல் கதைகளில் உள்ள ஒரு கதாப்பாத்திரத்தைபோல் உணர்கிறோம். இங்கு அனைத்தும் கடுமையாகவும், தவறாகவும் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க...
இதுபோன்ற சிந்தனைகள் என் மனதில் நிறைந்திருக்கின்றன. இந்த கொந்தளிப்பான நேரத்திலும், எனக்கு உள்ள உயர்ந்தபட்ச சலுகைகளை நான் அறிவேன். உணவு முக்கியமல்ல. சில அளவு சுகாதார வசதிகள் எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு தேவையான மருந்துகள் கிடைக்கிறது. எனக்கு தெரியும், குறிப்பிட்ட அளவு சில விஷயங்கள் எனக்கு கிடைக்கும் வகையில் உள்ளது.
ஆனாலும், எனக்கு பிறக்க உள்ள குழந்தைக்கு நான் சில அத்தியாவசியமான பொருட்களை வாங்க வேண்டும். ஆனால் நாட்டில் உள்ள மற்ற கர்ப்பிணிகளுக்கு எனக்கு இருக்கும் சலுகைகள் இல்லை என்பது எனக்கு தெரியும். தொற்றுநோய் சூழல் நாட்டில் இன்னும் மோசமானால், அது அவர்களை பாதிக்கும், மேலும் நிலைகுலையச்செய்யும்.
(இக்கட்டுரையை எழுதியவர் ஸ்ருதி தபோலா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைனின் உதவி ஆசிரியர்.)
தமிழில்: R. பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.