கொரோனா போராளிகளுக்கு நன்றி; மருத்துவமனையிலிருந்து சில குறிப்புகள்
நாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை அல்லது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நமக்கு இதுபோன்ற சூழல் ஏற்படும்போது, பிறர் நம்மிடம் இவ்வாறு நடந்துகொண்டால் எப்படி இருக்கும் என்று எண்ணினாலே நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
நாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை அல்லது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நமக்கு இதுபோன்ற சூழல் ஏற்படும்போது, பிறர் நம்மிடம் இவ்வாறு நடந்துகொண்டால் எப்படி இருக்கும் என்று எண்ணினாலே நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
coronavirus, coronavirus india, coronavirus latest news, corona fighters, கொரோனா வைரஸ், கொரோனா, coronavirus india cases, people approach on Covid-19 positive patients, கொரோனா போராளிகளுக்கு நன்றி, how people approach Covid-19 positive patients, corona virus article, corona, கொரோனா வைரஸ் கட்டுரை
அஜித் மிஸ்ரா, கட்டுரையாளர்
Advertisment
நடுராத்திரியை நெருங்கிக்கொண்டிருந்த ஒரு நாளில் நானும், இன்னொருவரும், ராம் மனோகர் லோகியாவிலிருந்து, சேப்டார்ஜங் மருத்துவமனைக்கு கோவிட்–19 பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச்சென்றோம். நாங்கள் படியில் இறங்கி, கேட்டின் அருகே எங்களுக்காக காத்திருந்த ஆம்புலன்சை நோக்கிச் செல்லும்போது 10க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் எங்களை அந்த அர்த்த ராத்திரியிலும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஆமாம், அவர்கள் போதிய அளவு இடைவெளியில்தான் நின்றுகொண்டிருந்தார்கள். எங்களிடம் இருந்து யாருக்கும் எதுவும் பரவ வாய்ப்பில்லாத நிலையில்தான், நாங்களும் பாதுகாப்பு நடவக்கைகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் எங்களை நன்றாக உற்று பார்த்தார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. அது எங்களை கூச்சமடையச்செய்யவில்லை. ஏனெனில் நாங்கள், ஆம்புலன்சின் பின்புற கதவை சென்றடையும் வரை, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியவர்களுடன் பிரித்துப்பார்க்க முடியாத நிலையில் இருந்தோம்.
Advertisment
Advertisements
இது தவறான சம்பவமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், இது தற்போதைய கொரோனா இடரின் பொதுவான மனநிலையை விவரிக்கிறது. இது மக்களிடம் தற்போது உள்ள ஒரு வெறித்தனமான ஆர்வம், அச்சம் மற்றும் அறியாமை ஆகியவற்றை காட்டுகிறது. பல்வேறு அரசு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தினடம் இருந்து கிடைக்கப்பெறும் எண்ணிலடங்கா பயனுள்ள தகவல்கள், தொடர்ந்து வழங்கப்படும் அறிவுரைகள், அப்போதைய தகவல்களைவிட, வாட்சப் அல்லது அதற்கு இணையான சமூக ஊடகத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை மட்டுமே மக்கள், தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்கான தகவல்களாக பார்க்கின்றனர்.
பெரும்பாலானோர், பாதிக்கப்பட்டவர்களை (அறிகுறி தென்படுபவர்களை) ஒரு குற்றவாளிகளைப்போல் பார்க்கிறார்கள். அறிகுறிகள் இல்லாத, வீட்டு தனிமை அல்லது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்கள் கொஞ்சம் புதிய காற்றை சுவாசிப்பதற்காக வெளியில் வந்தால் 10 முதல் 15 மீட்டர் இடைவெளியில் கூட அவர்களை பார்த்தால் நிராகரிக்கிறார்கள், பயந்து ஓடுகிறார்கள் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நிராகரிப்பவர்கள் படிக்காதவர்கள் கிடையாது. இவ்வளவு தொலைவில் நின்றால் வைரஸ் தொற்றாது என்று தெரியாதவர்கள் கிடையாது. அவர்கள் சுயநலமாக இதை செய்கிறார்கள். மேலும், அவர்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதாலும் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். அவர்கள் மிக விரைவில் அந்த காற்றை சுவாசிக்கக்கூட மறுக்கலாம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத, இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தின் தரங்கெட்ட சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.
நம் மக்களை பாதுகாக்க நமக்கு தேவையான சீறிய தையரியத்தையும், கடமையுணர்ச்சியையும் கற்றுக்கொள்வதற்கு மறுத்துவிடுவது இங்கு பெருங்குறையாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை வார்டுகளுக்குள் மருத்துவர்களும், செவிலியர்களும், உதவியாளர்களும், துப்புரவுப்பணியாளர்களும் எவ்வளவு சிரத்தையுடன், அச்சமின்றி சிகிச்சையளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கிறார்கள்தான். ஆனால், அவர்கள் வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். ரத்த மாதிரிகள் எடுக்கும்போதும், காய்ச்சல் அளவு பார்க்கும்போதும், ரத்த அழுத்தம் அளவிடும்போதும், மருந்துகொடுக்கும்போதும் பாதிக்கப்பட்டவர்களுடனே இருக்கிறார்கள். கோவிட்–19ஆல் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால், நோய் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளவர்களை நான் வார்டில் சந்தித்துள்ளேன். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்க கூடாதென்று நம்புகிறேன். ஆனால், இந்த செவிலியர்கள் இக்கட்டான இந்த சூழலில் அவர்களின் வேலையை செய்வதற்கு எவ்வளவு பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்துப்பாருங்கள். இந்நிலையில் அவர்கள் எவ்வாறு உணருவார்கள்? இந்த அச்சத்தை ஏற்படுத்தும் தொந்தரவால் அவர்கள் குடும்பத்தினருக்கும் சிகிச்சையளிக்க வேண்டும். அவர்கள் மேல் இரக்கம் கொள்ளுங்கள். மக்கள் ஊரடங்கின்போது, நம்மை கவனமாக பார்த்துக்கொள்ளும், அவர்களின் சேவையை நாம் பாராட்டுவது மிகச்சரியானது.
அவர்கள் மட்டுமல்ல, ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், ஆய்வக தொழிலாளர்கள் மற்றும் இந்த போருக்கு எதிராக மக்களை காக்க துணை நிற்கும், பல்வேறு துறைசார் அலுவலர்களையும் இந்த நேரத்தில் நாம் நினைவுகூற வேண்டும். தனியார் துறையினர்கூட, பொது மனப்பான்மையுடன், பொதுமக்களுக்காக போராடுகிறார்கள். அவர்களை நாம் எடுத்துக்காட்டாக கொண்டு அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் தத்துவவியலாளர்களிடம் இருந்து நன்னெறிகளை எடுத்துக்கொண்டு, அவற்றை கடைபிடிக்க வேண்டும். நாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை அல்லது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். நமக்கு இதுபோன்ற சூழல் ஏற்படும்போது, பிறர் நம்மிடம் இவ்வாறு நடந்துகொண்டால் எப்படி இருக்கும் என்று எண்ணினாலே நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
இக்கட்டுரையை எழுதிய அஜித் மிஸ்ரா, புதுடெல்லியை சேர்ந்த பேராசிரியர்.