ஷாமிகா ரவி, முதித் கபூர்: தமிழில்; ரமணி
இந்திய அரசு (GoI) 2019ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியன்று, பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) என்ற இடஒதுக்கீட்டின் கீழ் வராத சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) மத்திய அரசின் சிவில் பதவிகள் மற்றும் சேவைகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் என்ற வரையறை மேற்கொள்ள மத்திய அரசு இரண்டு அளவுகோல்களைப் பயன்படுத்தியது: ஒன்று, விவசாயம், வணிகம், தொழில் போன்ற அனைத்து வழிமுறைகளில் இருந்தும் மொத்த குடும்ப வருமானம் - விண்ணப்பிப்பதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்; இரண்டு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம், அல்லது 1,000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்பு பிளாட், அல்லது நகராட்சிகளில் 100 சதுர கெஜம் அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்பு, அல்லது 200 குடியிருப்பு நிலம் போன்ற சொத்துக்களை ஒரு குடும்பம் கொண்டிருந்தால் அல்லது வரையறுக்கப்படாத நகராட்சிகளில் அதற்கும் மேலாக வைத்திருந்தால், இங்கே வருமானம் என்பது அளவுகோலாக கருதப்படாமல், அத்தகைய குடும்பம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தது என்ற வரையறையிலிருந்து விலக்கப்படும். குடும்பம் என்பது தகுதி கோருபவர், அவர்களின் மனைவி, பெற்றோர், உடன்பிறந்தவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொண்டது என்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரூ.8 லட்சம் என்ற வரம்பானது உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதாகும். . வருமான உச்ச வரம்புக்கான அடிப்படை குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. ஜூலை 2018 முதல் ஜூன் 2019 வரையிலான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் (PLFS) வருவாய்த் தரவைப் பயன்படுத்தி இந்தச் சிக்கலை ஆராய்வோம். தொழிலாளர் பங்கேற்பு, வேலை நிலை, வேலை நேரம் மற்றும் வழக்கமான மற்றும் தற்போதைய வாராந்திர நிலைக்கான வருவாய் ஆகியவற்றை அளவிட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்கிறது. ஆய்வு செய்ய செல்வதற்கான சூழல் இல்லாத காரணத்தால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள கிராமங்களைத் தவிர,நாட்டின் பிறபகுதிகளில் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனிநபர்கள் சுயதொழில் செய்பவராக இருந்தாலும், வழக்கமான ஊதியம்/சம்பள வேலையாக இருந்தாலும் அல்லது சாதாரண தொழிலாளர்களாக இருந்தாலும், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பானது பொருளாதாரம், விவசாயம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மற்றும் வேலைவாய்ப்பு நிலை ஆகியவற்றின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கூடுதலாக, இது தற்போதைய வாராந்திர நிலை அடிப்படையில் வருவாய் பற்றிய தரவையும் சேகரிக்கிறது.
இங்கே காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் இறுதி நிலை அலகுகளாக குடும்பங்களாக இருக்கின்றன. அங்கு வேலையில் இருப்போர் மற்றும் வேலை இல்லாமல் இருப்போர் பற்றிய தகவல்கள் வீட்டின் அனைத்து குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் பெறப்படுகின்றன. கூடுதலாக, குடும்பத்தினர் பட்டியலினத்தவர், தாழ்த்தப்பட்டோர், இதரப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது பொதுப் பிரிவினராக இருந்தாலும், குடும்பத்தின் மத மற்றும் சமூக நிலை போன்ற சமூக-மக்கள்தொகை பண்புகள் பற்றிய தரவு சேகரிக்கப்படுகிறது. எங்கள் பகுப்பாய்வு ஜூலை 2018 மற்றும் ஜூன் 2019 க்கு இடையில் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் அடிப்படையில் 101,579 குடும்பங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இதில் 31,796 (31 சதவீதம்) குடும்பங்கள் பட்டியலினத்தவர், தாழ்த்தப்பட்டோர், இதரப்பிற்படுத்தப்பட்டோர் வகைகளை சேர்ந்தவர்கள் அல்ல. கூடுதலாக, மதிப்பீடுகளை அடைய மாதிரி முறையைப் பயன்படுத்துகிறோம்.
பட்டியலினத்தவர், தாழ்த்தப்பட்டோர், இதரப்பிற்படுத்தப்பட்டோர் அல்லாதவர்களின் தரவுகளின் அடிப்படையில், 99 சதவீத கிராமங்களில் உள்ள குடும்பங்களும், 95 சதவீத நகரங்களில் குடும்பங்களும் மாத வருமானம் ரூ.66,667க்கும் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தோம், இது ஆண்டுக்கு சுமார் ரூ.8 லட்சமாக கணக்கிடப்படும். மேலும், கிராமங்களில் சராசரி குடும்ப மாத வருவாய் ரூ. 9,000 ஆகும், இது சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருவாய் வரம்பை விட ஏழு மடங்கு குறைவாக இருந்தது, நகர்பகுதிகளில் இது ரூ.15,000 ஆக இருந்தது, இது மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருவாய் வரம்பை விட சுமார் நான்கு மடங்கு குறைவாக இருந்தது.
இருப்பினும் வருவாய் இல்லாத குடும்பங்களை நாம் தவிர்க்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். பட்டியலினத்தவர், தாழ்த்தப்பட்டோர், இதரப் பிற்படுத்தப்பட்டோர் அல்லாத 99 சதவீத கிராமங்களில் உள்ள குடும்பங்களும், 94 சதவீத நகரப் பகுதியில் குடும்பங்களும் மாத வருமானம் ரூ.66,667க்கும் குறைவாக இருக்கிறது என்றும், இது ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் ரூபாயாக இருக்கும் என்பதும் எங்கள் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. மேலும், கிராமங்களில் சராசரி குடும்ப மாத வருமானம் ரூ. 10,000 ஆகும், இது சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருவாய் வரம்பை விட ஆறரை மடங்கு குறைவாக இருந்தது, நகரங்களில் இது ரூ.20,000,ஆக, ஏறக்குறைய மூன்றரை மடங்கு குறைவாக மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருவாய் வரம்பாக இருந்தது.
இந்த விவகாரத்தின் இயல்பு தன்மையை கருத்தில் கொண்டு, காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பில்(PLFS) இருந்து வருவாய் தரவின் வரம்புகளை முன்னிலைப்படுத்துவது அவசியம். முதலாவதாக, காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் தரவு தற்போதைய வாராந்திர நிலையை அடிப்படையாகக் கொண்டது; வருடத்தின் மற்ற நேரங்களில் குடும்பத்திற்கு நேர்மறை வருமானம் இருக்க வாய்ப்பு உள்ளது ஆனால் கணக்கெடுப்புக்கு முந்தைய வாரத்தில் இல்லை. எனவே, வருவாய் தரவு குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரம்பைக் கடக்க, நேர்மறை வருமானம் உள்ள குடும்பங்களை மட்டும் சேர்த்து இரண்டாவது பகுப்பாய்வைச் செய்தோம். அடிப்படை முடிவுகள் கணிசமாக மாறவில்லை என்பதைக் கண்டறிந்தோம்
அதாவது, 90 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்கள், நகரங்கள் அல்லாத பட்டியலின, தாழ்த்தப்பட்டோர், இதர மிகவும் பிற்பட்டுத்தப்பட்ட குடும்பங்கள் ,சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான மத்திய அரசு நிர்ணயித்த வரம்பைவிட குறைவான மாத வருவாயைக் கொண்டிருந்தன. ஆய்வின் இரண்டாவது வரம்பு குடும்பத்தின் வரையறை ஆகும். காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு என்பது ஒரு குடும்பம் என்பதை, ஒன்றாக தங்கி, பகிரப்பட்ட சமையலறையில் இருந்து உணவை எடுத்துக் கொள்ளும் நபர்களின் குழுவாக இருப்பதை வரையறுக்கிறது. குடும்பத்தின் வரையறையில் உள்ள வேறுபாடுகள் பகுப்பாய்வை எவ்வாறு பாதிக்கும் என்பதை மதிப்பிடுவது கடினம்.
காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பில் குடும்பம் அல்லது குடும்ப வரையறை என்பது,சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் அளவுகோலுக்கான மத்திய அரசின் குடும்பத்தின் வரையறையை விட மேலும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பது எங்கள் யூகம்.இந்த மதிப்பீடுகள் குடும்பத்தின் மாதாந்திர வருவாயின் விநியோகத்தை மிகைப்படுத்தும் சாத்தியம் என்று பரிந்துரைக்கும்.
குடும்பத்தின் வருவாய் குறித்த புறநிலை தரவு எதுவும் இல்லாத நிலையில், 2018-2019 முதல் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் தரவைப் பயன்படுத்தி அனைத்து வருவாய் வழிமுறைகளில் இருந்தும் (சுய தொழில், வழக்கமான ஊதியம்/சம்பளம் மற்றும் சாதாரண வேலை) குடும்ப வருமானத்தின் விநியோகத்தை மதிப்பிடுவோம்.
சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் வரம்பாக மத்திய அரசு நிர்ணயித்த ரூ. 8 லட்சம் ஆண்டு வருமானம் (தோராயமாக ரூ. 66,667 மாத வருமானம்) என்பதை காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகளின் குடும்ப மாத வருமானம் விநியோகம் மூலம் வருமான அளவுகோல்களை , ஒப்பிடுவதே எங்கள் முதன்மை நோக்கமாகும். 90 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்கள், நகரங்களில் பட்டியலினத்த்தவர், தாழ்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் அல்லாத குடும்பங்கள் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் வரம்பைக் கொண்டிருக்கும் என்பதை எங்கள் பகுப்பாய்வு, சுட்டிக்காட்டுகிறது.
இந்த கட்டுரை முதன்முதலில் 4ம் தேதியிட்ட அச்சுப் பதிப்பில் ‘Counting the EWS’ என்ற தலைப்பில் வெளிவந்தது. ரவி அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் துணைத் தலைவராகவும், கபூர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் இணைப் பேராசிரியராகவும் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.