குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் நீதிமன்றம் தலையிட வேண்டும்

அந்த எட்டு வயது குழந்தை ரகசியமாக புதைக்கப்பட்டது. அவனுடைய ஆத்மா நிரந்தர அமைதியுடன் ஓய்வெடுக்கும் அந்த வேளையில் நமது சமூகத்தின் ஆத்மா எப்படி இருக்கிறது?

By: March 15, 2020, 7:24:20 PM

மதன் பி.லோகூர்

சமூகம் அதன் குழந்தைகளை நடத்தும் வழியை விடவும் சமூகத்தின் ஆத்மாவுக்கு வேறு ஏதும் தீவிரமான வெளிப்பாடு அங்கு ஏதும் இல்லை என்று நெல்சன் மண்டேலா கூறியிருக்கிறார். இன்றைக்கு நமது குழந்தைகளை நமது சமூகம் எப்படி நடத்துகிறது?

காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்ட குழந்தைகள் நடத்தப்படும் விதம், சட்டவிரோதமாக தடுத்து வைத்தது பற்றிய தீவிரமான குற்றசாட்டுகளைக் கொண்ட பொதுநல மனுவுக்கான எதிர்வினை வெறுமனே முட்டாள் தனமாக இருக்கிறது. இந்த குற்றசாட்டுகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி ஜம்மு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பெண் தலைமை நீதிபதி அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையின் சாரம்சம் வெளியிடப்படவில்லை. அது நிராகரிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய ஒரு குழு, போலீஸார் தந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பியது. பல குழந்தைகள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று அந்த அறிக்கை ஒப்புக் கொள்கிறது. அந்த அறிக்கையின் சாராம்சம் பொதுவெளியில் வெளியிடப்படுகிறது. ஆனால்,அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மூன்றாவதாக ஒரு அறிக்கை கோரப்பட்டது. இந்த அறிக்கையின் சாராம்சங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அந்த அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பொதுநல மனு தூக்கி எறியப்பட்டது. நமது சமூகத்தில் ஆத்மா இருக்கிறதா அல்லது இல்லாமல் இருக்கிறதா?

சட்டம் எப்போதும் இருந்தபடி இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது; சட்டத்துடன் முரண்படும்போது, ஒரு குழந்தைக்கு ஜாமீன் கொடுக்கப்படாவிட்டாலும் கூட அந்த குழந்தையை சிறையிலோ அல்லது போலீஸ் லாக்-அப்பிலோ வைத்திருக்க முடியாது. பாதுகாப்பான இடத்திலோ அல்லது கூர்நோக்கு இல்லத்திலோ வைத்திருக்க வேண்டும். ஒரு குழந்தை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது போலீஸ் லாக்-அப்பில் வைக்கப்பட்டிருந்தது குறித்தோ சிறார் நீதிமன்றங்கள் கவனத்துக்கு வரும் பட்சத்தில், அவை உண்மையான சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. விவகாரம் அவர்களுக்கு முன்பு வந்த பின்னர்தான், உத்தரவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சிறார் நீதிமன்றங்கள் மவுனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

நாடு முழுவதற்குமான குழந்தைகள் உரிமை குறித்து, குறிப்பாக உத்தரபிரதேசமாநிலத்தின் நிலைமை குறித்து கருதுவற்கு உச்சநீதிமன்றத்துக்கு ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. உத்தரபிரதேசபோலீஸார் சிறுவர்களை நடத்தும் விதம் குறித்து பொதுநல அமைப்புகள் தயாரித்துள்ள ‘ஏதும் அறியாதவர்கள் மீதான மிருகதனமான தாக்குதல்’ என்ற தலைப்பிடப்பட்ட பரபரப்பான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. நமது நாட்டின் எதிர்காலத்தினர் என்று அழைக்கப்படும் பல குழந்தைகள் பலியாவதை தெளிவாக வேதனையை ஏற்படுத்தும் வகையில் துயரமான வாசிப்பாக இந்த அறிக்கை இருக்கிறது.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உ.பி-யின் பல மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை இது குறிப்பிடுகிறது. பிஜானூர், முசாபர்நகர் மாவட்டங்களில் நடந்தவற்றை தனியாகவும் சுட்டிக்காட்டுகிறது. அச்சுறுத்துதல், அவமானப்படுத்துதல் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்துதல் என குழந்தைகள் (அல்லது அவர்களின் பெற்றோர்) ஆதாரத்துடன் சாட்சியங்கள் அளித்துள்ளனர். ஒரு அப்பாவி தாயின்குழந்தையை நாகினா போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால், இரண்டு நாட்களாக அவரது குழந்தையை சந்திக்கக் கூட தாயாருக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதே போலீஸ் ஸ்டேஷனில் போலீஸார் தம்மை கடுமையாக அடித்ததாக இன்னொரு குழந்தை புகார் சொல்கிறது. கைது செய்யப்பட்டதற்கோ அல்லது விசாரணை என்றபெயரில் தடுத்து வைப்பதற்கோ என்ன காரணம் என்றும் போலீஸார் விளக்கம் அளிக்கவில்லை. இதே போலீஸ் ஸ்டேஷனில் துன்புறுத்தப்பட்ட இரண்டு சிறுவர்களை ஒரு பத்திரிகையாளர் சந்தித்துப் பேசி இருக்கிறார். இது போன்ற போலீஸாரின் அத்துமீறல், அச்சமாக பெருகி உள்ளது. அதனால்தான் தமது சகோதரரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டபோது, அதன் விளைவுகளைத்தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு இளம் பெண் விரும்பினார்.

யாராவது ஒரு குழந்தை தாம் நடத்தப்படும் விதம் குறித்து வெளியே தெரிவிப்பதால், போலீஸார் தொடர்ந்து வந்து மேலும் துன்புறுத்துவார்கள் என்று அந்த பெண் அறிந்ததுதான் அவள் அச்சத்துக்குக் காரணம்.
இந்த அறிக்கையில், இரண்டுகுழந்தைகள் லக்னோவில் துப்பாக்கி காயம் பட்டதையும், பரிசாபாத்தில் மேலும் இருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும், வாரணாசியில் நடந்த போராட்டத்தின்போது போலீஸார் கூடுதல் படையை உபயோகித்து கடும் நெரிசல் ஏற்பட காரணமாக‍ அமைந்ததால் எட்டு வயது குழந்தை இறந்து போனது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான போலீஸ் கண்காணிப்புடன், அந்த எட்டுவயது குழந்தை ரகசியமாக புதைக்கப்பட்டது. அவனுடைய ஆத்மா நிரந்தர அமைதியுடன் ஓய்வெடுக்கும் அந்த வேளையில் நமது சமூகத்தின் ஆத்மா எப்படி இருக்கிறது?

ஒரு பொறுப்புடைமை உள்ள நீதிபரிபாலனையை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது. போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களை சேதம் விளவிக்கும்போது அமைப்பானதுபொறுப்புடமை கொண்டதாக(மேலும் இல்லாவிட்டால்) இருக்க வேண்டும். போலீஸாரின் அத்துமீறல் தவிர்க்கப்படாவிட்டால், நாடகம் ஆட்சேபகரமாக இருக்கிறது என்று யாரோ ஒருவர் கண்டுபிடித்தன் விளைவாக, 11 வயது சிறுமியின் ஆசிரியர் மற்றும் அவளின் தாய் தடுத்து வைக்கப்படுவது, கைது செய்யப்படும் நிகழ்வுகளுக்கு சாட்சியங்களாக மட்டுமே நாம் இருப்போம். நடைபெறாத குற்றத்துக்கு ஒரு வாரம் சிறையென்றாலும் கூட அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். வருந்துவதால் மட்டும் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை.

நமது குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பவர்கள் என கருதப்படும் வகையில் நமது அரசியலமைப்பு ரீதியிலான நீதிமன்றங்கள் முன் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏதும் அறியாதவர்கள் மீதான மிருகதனமான தாக்குதல் என்ற அறிக்கை, இது போன்ற நிகழ்வுகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இருக்க வேண்டும். அமைப்புகள்பொறுபுடைமை கொண்டதாக ஆக்கப்பட வேண்டும். யாரும் பொறுப்பில்லாமல் குரலற்ற குழந்தைகள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படக் கூடாது.
இல்லையெனில் நமது சமூகத்தின் ஆன்மா சிந்திப்பதற்கும் மேலான, அநீதிக்கு புதிய இலக்கணம் வகுப்பது போன்ற பிதார் வடிவம்போன்ற நிகழ்வுகள்கூட பல்கிபெருகும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காவல்காரர் செயல்படத் தவறியதன் விளைவாக, உச்சநீதிமன்றத்தால் விளக்கப்பட்ட சட்டத்தின் புரிதலை நிராகரிப்பதாகவும் ஆகிவிடும். இது தவிர, குரலற்ற குழந்தைகளுக்கு அரசியலமைப்பு சட்ட நீதியை வழங்குவதில் தோல்வியும் ஆகிவிடும்.

நாம் அமைதியாக இருக்கும்போதுதான், நமது குரலின் முக்கியத்துவத்தை நாம் உணர்கின்றோம் என்று மாலாலா யூசுப்சாய் எழுதி இருக்கிறார். நமது சமூகத்தின் ஆன்மாவும்?

இந்த கட்டுரை முதலில் மார்ச் 10-ம் தேதியிட்ட நாளிதழில் ‘Justice for the voiceless’என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எழுத்தாளர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Courts must intervene to address violations of childrens rights in up jk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X