கொரானா: சமுதாய சமையலறைகள் மூலமாக கட்டுக்குள் வந்தது எப்படி?

மனநலனை நன்றாக வைத்துக்கொள்வதற்கும், ஏழை, எளியவர்களுக்கு பொருளாதார உதவிகளை செய்வதற்கும், ஒரு சிறந்த வழியை கண்டுபிடிப்பதற்கும் இந்த தொற்று காலம் நமக்கு உதவியுள்ளது

By: Updated: April 27, 2020, 07:26:11 AM

கோவிட் – 19 என்ற கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஏற்படுத்திய நோய் கிட்டத்தட்ட முழு உலகையும் தாக்கி, துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா நிலைமையை ஓரளவு கட்டுக்குள் வைத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சித்து வருகிறது. இங்கு மக்கள்தொகை மற்றும் மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதிகள் அதிகம் இருப்பினும், இந்தியா சூழலை கட்டுக்குள் கொண்டுவர அதிதீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

குணால் குமார், ஓ.பி.அகர்வால், கட்டுரையாளர்கள்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கோவிட் – 19 என்ற கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஏற்படுத்திய நோய் கிட்டத்தட்ட முழு உலகையும் தாக்கி, துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா நிலைமையை ஓரளவு கட்டுக்குள் வைத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சித்து வருகிறது. இங்கு மக்கள்தொகை மற்றும் மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதிகள் அதிகம் இருப்பினும், இந்தியா சூழலை கட்டுக்குள் கொண்டுவர அதிதீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதற்காக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களை பாதுகாத்து, இறப்பை குறைப்பதே அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது. எனவேதான் முதலில், அரசு 21 நாட்கள் ஊரடங்குக்கு உத்தரவிட்டது. பின்னர் தொடர்ந்து 18 நாட்களுக்கு அது நீட்டிக்கப்பட்டது. இந்த துரதிஷ்டவசமான முடிவால் முதலில் பணியிழந்து பாதிக்கப்பட்டது தினக்கூலித்தொழிலாளர்கள் தான், அடுத்தாக முறைசாரா பணியில் உள்ள தொழிலாளர்களும், தற்காலிகமாக சிறு,சிறு வேலைகளை செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். இந்த ஊரடங்கு புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வைதான் மிகக்கடினமாக்கியது. அவர்கள் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரங்கள் நடந்தே வீடு திரும்பவேண்டிய அசாத்தியமான சூழலை ஏற்படுத்தியது.

நாம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும், இந்த எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டுள்ள காலத்தில், உலகம் முழுவதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களை ஒருங்கிணைத்து, நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்கு காலதாமதமாகும். இந்தியாவில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முதல் பணி சுகாதார அமைப்பை பராமரிப்பதாகும். கூலித்தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடம் வழங்குவதற்கும் இந்தியாவிற்கு நேரம் தேவைப்படுகிறது. அதேநேரத்தில் தொற்றுநோய்க்கு எதிரான போரில், நாம் சமூக இடைவெளியை கடைபிடித்து வரும்வேளையில், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், இணைந்து இருப்பதும் எப்படி என்பதற்கு புதிய வழிமுறைகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்கவும், கற்றுக்கொள்ளவும் வாய்ப்பளித்துள்ளது. இதை நாம் சரியாக செய்வதற்கு தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. அதையும் நாம் பயன்படுத்துகிறோம். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வைப்பதற்கும், நிலைமைய கையாள்வதற்கும், விரைவான தகவல் அடிப்படையிலான கண்காணிப்பு மையங்களை அமைப்பது, அவசர தேவைகளுக்காக ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது, மனநலனை நன்றாக வைத்துக்கொள்வதற்கும், ஏழை, எளியவர்களுக்கு பொருளாதார உதவிகளை செய்வதற்கும், ஒரு சிறந்த வழியை கண்டுபிடிப்பதற்கும் இந்த தொற்று காலம் நமக்கு உதவியுள்ளது. மக்கள், கார்பரேட்கள் என்று அனைத்து தரப்பினரும், அரசுடன் இணைந்து பொது சேவை செய்கிறார்கள். இந்த முன்னெடுப்புகள் பணிகளை பரவலாக்குவதற்கு சாத்தியங்களை ஏற்படுத்தி தரும்.

இந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான், சூரத் நகராட்சியின், கோவிட் – 19 கண்காணிப்பு ஆப். இதன் மூலம் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நபர்களையும், அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்களையும், அவர்களின் உடல் நலனையும் கண்காணிக்கலாம். ஒரு கண்காணிப்பு அறையில் அமர்ந்துகொண்டு, இந்த செயலியை பயன்படுத்தும் 8,500 பேரை, தங்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் மாநகராட்சி நிர்வகிக்கிறது. பெங்களூருவில், பிரிஹான் பெங்களூர் மகாநகர் பள்ளிக்கே 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் போர் அறையை வடிவமைத்தது. வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும் இந்த போர் அறை, ஒவ்வொரு கோவிட் – 19 நோய் தொற்றாளரையும், GIS என்ற புவியியல் தகவல் அமைப்பு முறை மூலமாக கண்காணித்து வருகிறது. GPS மூலம் சுகாதார பணியாளர்களை கண்காணித்து வருகிறது. வரைபட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கட்டுப்படுத்தும் திட்டத்தை வடிவமைத்தது. நகரம் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வியாளர்களுடன் கூட்டு வைத்துக்கொண்டது. கோவிட் – 19 தகவல் பலகையை ஏப்ரல் 7ம் தேதி வெளியிட்டது. நாக்பூர் நகர நிர்வாகம், நோய் அறிகுறியுள்ள நபர்களின் நன்மைக்காக தனியார் துறை, லைப் கேர் போன்றவர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் செயலியை துவக்கியது. இந்த ஆப் மூலம், கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட அறிகுறிகளை காண்பித்தால், இது மருத்துவர் குழுவினருக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பும். இதேபோல், இ-டாக்டர் சேவா, பொதுத்துறை மற்றும் தனியாரின் பங்களிப்புடன் ஆக்ராவில் செயல்படுத்தப்படுகிறது. இதனால், வீடியோ மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற முடியும். இணையம் வழியாக முன் அனுமதியை பெற்றுக்கொண்டு, மருத்துவருடன், தொலைபேசி அல்லது வீடியோ மூலம் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம். மருத்துவர்கள் இணையம் வழியாகவே மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். அவசரமாக சிகிச்சையளிக்க வேண்டியவர்களுக்கு மருந்துகளை வாங்கி வீடுகளுக்கே கொடுத்தனுப்புகிறார்கள்.

இந்த நெருக்கடி காலத்தில், ஏற்கனவே உள்ள பல்வேறு புதுமையான வழிமுறைகளையும் பல நகரங்கள் இதற்காக மாற்றி பயன்படுத்தி வருகின்றன. அவற்றை சிறிது பணம் பெற்றுக்கொண்டோ அல்லது இலவசமாகவோ செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, 2019ம் ஆண்டு, டிசம்பர் மாதம், சென்னை பெருநகர மாநகராட்சி, நகரின் உட்கட்டமைப்பு வசதிகளில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளான சாக்கடை குழாயில் ஓட்டை மற்றும் தண்ணீர் குழாயில் பழுது போன்றவற்றை சுட்டிக்காட்டுவதற்காக ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதையே கோவிட் கண்காணிப்புக்கு பயன்படுத்தி வருகிறது. சென்னை மக்கள் இதை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். நிர்வாகத்திற்கு உதவும் வகையில் தங்களின் அறிகுறிகள் குறித்து கூறுவதன் மூலம், நிர்வாகம் போதிய நடவடிக்கைளை எடுப்பதற்கு ஏதுவாக உள்ளது.

ஊரடங்கு காலத்தில், பொது இடங்களை சுத்திகரிக்கவும், கிருமி நீக்கம் செய்யவும், பல்வேறு புதுமையான வழிமுறைகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்யப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக பெல் நிறுவனம் பெல்மிஸ்டர் என்ற கிருமிநீக்கும் மருந்து தெளிப்பான் கருவியை நான்கே நாட்களில் வடிவமைத்துக்கொடுத்தது. இந்த கருவி தமிழ்நாட்டில் உள்ள மேல்விஷாராம் நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது. தெருக்கள் மற்றும் அந்த பகுதிகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாலும், தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அதிகமுள்ள பகுதி என்பதாலும் அங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம், சுத்திகரிப்பானில் தண்ணீர் கலந்து, தானாவே தெளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினிகளையும் இரண்டு மணி நேரத்தில் தெளித்துவிடும் திறன் பெற்றது. குறுகலான இடங்களில் வாகனங்களில் வைத்து பயன்படுத்தப்படுகிறது. ராஜ்கோட், விவசாய இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து 18 உயர் ரக கிருமி நாசினி தெளிப்பான்களை கொள்முதல் செய்தது. அவை பயிர்களுக்கு மருந்துகளை தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள். இவை நகரில் கிருமி நாசினி தெளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. நகரங்கள்தோறும், சமுதாய சமையலறை அமைத்து, ஏழைகளுக்கு உணவு தயாரித்து வழங்குவதற்கும், ஏழைகளுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கும் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ராஜ்பூரில் உள்ள வீடுகளில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் உணவு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. அங்கிருந்து சமைத்த மற்றும் சமைக்காதவை என நாளொன்றுக்கு 15 ஆயிரம் உணவுப்பொட்டலங்கள் அளவு வினியோகம் செய்யப்படுகிறது. அவை அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர், லாபமற்ற நோக்கில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மூலம் தேவையானவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

உத்ரபிரதேசத்தில் லக்னோ நகராட்சி பல்வேறு இடங்களில் சமுதாய உணவுக்கூடத்தை அமைத்து, நாளொன்றுக்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவளித்து வருகிறது. இதேபோன்ற சமையலறைகள் அலிகார் மற்றும் ஷாஹாரன்பூரிலும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் 14 மாவட்டங்களிலும், 1,255 சமுதாய சமையலறைகள் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உணவுப்பொட்டலங்களை தினமும் வழங்கிவருகின்றன. சண்டிகரில், நகர நிர்வாகம், மார்க்கெட் கமிட்டி மற்றும் போக்குவரத்து கழகத்தினர் ஆகியோருடன் சேர்ந்து, மத்திய மார்க்கெட்டில் இருந்து 70 பேருந்துகள் மூலம் 144 உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் வழியாக குடியிருப்பு நலச்சங்கங்கள் மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறது. இந்த முன்னெடுப்புகள், இதுபோன்ற நெருக்கடி காலங்களில் இந்தியாவின் பலமே அதன், குடிமக்களும், சமூகமும், கார்ப்பரேட்டுகளும் மற்றும் கல்வியாளர்களுமே எனக்காட்டுகிறது. நமக்காக தங்களின் உயிரையும் துச்சமென நினைத்து நம்மை பாதுகாக்கும் முன்னணி ஊழியர்களை பாராட்டும் வகையில், அவர்களை உற்சாகப்படுத்த கைத்தட்டி நமது நன்றியை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் கடந்த மாதம் கேட்டிருந்தார். அப்போது, அனைவரும் ஒன்றிணைந்து கைகளைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினோம். இந்த நேரத்தில் பொறுப்புள்ள குடிமக்கள் எங்கள் நகரம் எங்களுக்காக என்ன செய்தது என்று கேட்கமாட்டார்கள், மாறாக நாங்கள் நகரத்திற்காக என்ன செய்தோம் என்று கேட்பார்கள்.

இக்கட்டுரையை எழுதிய குமார், ஸ்மார்ட் நகரங்கள் திட்ட இயக்குனர் மற்றும் குடியிருப்பு மற்றும் நகரங்கள் பராமரிப்பு அமைச்சக இணைச்செயலாளர். அகர்வால், உலக வள இந்திய மையத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Covid 19 coronavirus news community kitchen helathcare workers social distancing

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X