இந்த மகத்தான முயற்சிகள் மற்றும் அறிவியலின் வழிகாட்டுதல் ஆகியவற்றால், அறிவியல் மற்றும் ஆயுர்வேத உலகத்தின் இடையே உள்ள தொடர்பு சிறப்பாக உள்ளது மற்றும் அதை வளர்ப்பதில் பொதுமக்களும் துணையிருக்கிறார்கள். இது மனிதத்திற்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ அறிவு கொடையாகும்.
மதுலிகா பானர்ஜி, கட்டுரையாளர்.
பாபா ராம்தேவ் ஆயுர்வேதத்தை அவமதித்துவிட்டார். அவர் கொரோனில் என்ற மாத்திரையை தயாரித்து, அதை சந்தைக்கு கொண்டு வந்துள்ளார். அது நாம் நீண்ட நாட்களாக சந்தித்து வரும் இந்த தொற்றை குணப்படுத்தாது என்று கூறப்படுகிறது. மேலும் அந்த மருந்து அறிவியல் நெறிமுறை மற்றும் மருந்து தயாரிப்பு ஒழுங்குமுறை ஆகியவற்றை பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு பாரம்பரிய மருத்துவமுறைகள் மீது ஏற்கனவே உள்ள முட்டாள்தனமான குற்றச்சாட்டுக்களை உண்மை போல் காட்டுகிறது. குறிப்பாக, இது ஆயுர்வேதத்தை பற்றிய, பழைய தவறான தகவல்கள், சந்தேகங்களை மேலும் தூண்டுவதற்கு வழிவகுப்பதுபோல் உள்ளது. தாவரங்கள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றிய கூர்மையான அறிவு அதற்கு கிடையாது, அம்மருத்துவம் ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாதது, அதற்கு ஒரு முறையான கட்டமைப்பு கிடையாது. அது நம்ப முடியாதது. அதற்கு என்ன தெரியும் எப்படி தெரியும் என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் உண்மைபோல் காட்டுவதாக உள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளாக நான் சந்தித்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் எனக்கு வேறு மாதிரி கற்றுக்கொடுத்துள்ளனர். ஆமாம் எனக்கு தெரியும், லிவ் 52, செப்டிலின் மற்றும் ஹாஜ்மோலா போன்ற மருந்துகளால் இன்று அறியப்படும் ஆயுர்வேதம் குறித்தும் நான் எழுதியுள்ளேன். (கசதுதாவர்தக் மூலிகையின் மிட்டாய் வடிவம்தான் ஹாஜ்மோலா) அதன் மறைக்கப்பட்ட விரும்பத்தகாத பக்கமும் எனக்கு நன்றாக தெரியும். ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சையில் இளநிலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் கூட, ஆங்கில மருத்துவமான ஆலோபதி மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். அதைவிட மோசமாக ஆயுர்வேத மருத்துவர்கள் ஸ்டிராய்ட்கள் எனும் ஊக்கிகளையும் சேர்த்து பரிந்துரைக்கிறார்கள். ஆனால் எனது ஆராய்ச்சிகள் ஆயுர்வேதத்தின் பல்வேறு உலகங்களை காட்டியுள்ளன. ஆயுர்வேத மருத்துவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் என அந்த உலகம் உள்ளது. இந்த உலகம் பதஞ்சலி, டாபர் மற்றும் ஹிமாலயாவைவிட பெரியது மற்றும் ஆழமானது. அந்த உலகம் துடிப்பானது, நேர்மையானது மற்றும் அதை தெரிந்துகொள்வது, மதிப்பது மற்றும் மரியாதை கொடுப்பது மிக முக்கியமாகும்.
வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மானுடவியலாளர்களின் உத்தமமான ஆராய்ச்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆயுர்வேதம், நீண்ட நாட்களாக சக்தி வாய்ந்த மற்றும் செயல்திறன் மிக்கதாக இயங்கி வந்தது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அதை வரையறுக்க பாரம்பரியம் என்ற ஒற்றை வார்த்தை மட்டும் சிறந்த வழி கிடையாது. அது ஒரு கால கட்டத்தை மட்டும் குறிப்பிடுவது போல் இருக்கும். உண்மையில் ஆயுர்வேத புத்தகங்களை நூற்றுக்கணக்கானவர்கள் பாராட்டியுள்ளனர். அது மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும், ஆதாரத்தின் அடிப்படையில், காலத்திற்கு ஏற்ப அது தனது கொள்கைகளை கூட மாற்றிக்கொள்ளும். மேலும் மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகளான யுனானி, ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ துறையைச் சேர்ந்த மருத்துவர்களிடம் இருந்தும், தேவையான அறிவுசார் தகவல்களை பரிமாறிக்கொள்ளும். காலனி ஆதிக்க காலம் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்துள்ளது. காலனி ஆதிக்க காலமே நவீன மருத்துவத்தின் மேலாதிக்கத்தை நம் நாட்டிற்கு கொண்டு வந்தது. காலனி ஆதிக்கத்தின் செல்வாக்கால், கல்வி மற்றும் கற்றலுக்காக, ஆயுர்வேதத்தின் மொழி, மையங்கள் மற்றும் செயல்பாடுகளை நாம் ஒன்றிணைத்தோம். பாரம்பரிய மருத்துவ முறைகளுக்குள்ளும், அதைச்சுற்றியும் உள்ள அறிவியல் பழக்கங்களிலும் பல கதவுகள் மற்றும் ஜன்னல்களை நாம் அடைத்துவிட்டோம். ஆனால், தந்திரமாக, அவர்கள் அறிவியல் மொழியையும், அறிவியல் முறைகளையும் கடைபிடிப்பதில்லை என்று நாம் கூறிக்கொள்கிறோம்.
பெரும்பாலானவர்களின் இதுபோன்ற கருத்துக்களில் இருந்து மாறுபட்டு, ஆயிரக்கணக்கான ஆயுர்வேத மருத்துவர்கள், அவர்களின் கல்விக்கு உண்மையாக இருந்து, நம்பிக்கையுடன் ஆயுர்வேத மருந்துகளை மட்டும் மக்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் வழிகளை கண்டுபிடித்துவிட்டார்கள். உதாரணமாக, அவர்கள் நோயிலிருந்து குணமடைவதற்கு அறுவைசிகிச்சை செய்கிறார்கள். அவர்கள் புதிய, அன்றைய தகவல்களை நன்றாக தெரிந்து வைத்துக்கொள்கிறார்கள். தங்கள் நோயாளிகளுக்கு உதவவேண்டி, சந்தையில் நுழையும் புதிய மூலக்கூறுகள் குறித்து நன்றாக தெரிந்து வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் இதனை அடிக்கடி செய்துகொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களை தவறாக கருதுவது மற்றும் நவீன மருத்துவர்களின் போலி பெருமையில் இருந்தும் தப்பித்துக்கொள்ளவும் முடியும்.
பல்வேறு மருத்துவத்தத்துவங்களிலும், ஆயுர்வேதத்தின் அறிவு வேரூன்றியிருந்தாலும், சமகால கல்வி, உடற்கூறியலின் நவீன வகைகளுக்கு ஏற்றவாறு, உடலியல் போன்றவற்றை கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளையும், ஆயுர்வேதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கண்டுபிடித்து வைத்துள்ளார்கள். உயர் சிறப்பு படிப்புகளை ஆழமாக கற்பதற்கான வசதிகளையும் அவர்கள் செய்து வைத்துள்ளார்கள். அவர்கள் புதிய அறிவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அவர்கள் எல்லைகளை தயக்கமின்றி விரிவுப்படுத்தி, அவர்களின் பாரம்பரியத்திற்கும் நம்பகமாக இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் மகிழ்ச்சியற்ற, தன்னைப்பற்றி குறைவாக நினைத்துக்கொள்ளும், மாணவர்களை சந்தித்தாக வேண்டும். அதற்காக அவர்கள் பெரும் அழுத்தத்தின் கீழ் தங்களை சமரசம் செய்துகொள்ள வேண்டும்.
அசோக் வைத்யா போன்ற ஆராய்ச்சியாளர்கள், நவீன அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு ஆயுர்வேதத்தின் அர்த்தத்தை விளக்கும் மகத்தான பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளார்கள். குறைந்தளவு அங்கீகாரமே கிடைத்தும், அறிவியலையும், ஆயுர்வேதத்தையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் இந்த கடினமான பணியை தொடர்ந்து, நம்பிக்கையுடன் செய்து வருகிறார்கள். அவர்கள் மருத்துவமுறைகளை கற்றுக்கொண்டு, பயன்படுத்துகிறார்கள். இரண்டு மொழிகளுக்கும் இடையே மொழிபெயர்க்கும்போதும், மருத்துவ முறைகள் மற்றும் உலகத்தின் பார்வை ஆகியவை குறித்து கவனமாக சிந்தித்து செயல்படுகிறார்கள். இதிலிருந்து, அவர்கள் நம்பகமான ஆதாரங்களைப்பெற்று, நவீன மருத்துவ ஆராய்ச்சிகளை உறுதிசெய்கிறார்கள். இந்த கடின உழைப்பும், அறிவுத்திறனும் இருந்தாலும், முக்கியமான பத்திரிக்கைகளில் அவை பிரசுரமாவதில்லை. அவையெல்லாம் பிரதான செய்தியாக வருவதில்லை.
இந்த மகத்தான முயற்சிகள் மற்றும் அறிவியலின் வழிகாட்டுதல் ஆகியவற்றால், அறிவியல் மற்றும் ஆயுர்வேத உலகத்தின் இடையே உள்ள தொடர்பு சிறப்பாக உள்ளது மற்றும் அதை வளர்ப்பதில் பொதுமக்களும் துணையிருக்கிறார்கள். இது மனிதத்திற்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ அறிவு கொடையாகும். ஆனால், துரதிஷ்டவசமாக இது பிரச்னை கிடையாது. அதனால், ஆயுர்வேத மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், ஆயுர்வேத அறிவையும், அறிவியலையும் இணைப்பதை அவர்களின் வேலையாக கருதி, விசாரித்து, செயல்படுத்தி, புதியவற்றை கண்டுபிடித்து வைத்துள்ளார்கள். பரஸ்பரம் தெரிந்துகொள்வதற்காக காத்திருக்காமல், ஆயுர்வேதம் மற்றும் நவீன அறிவியல் இரண்டையும் புரிந்துகொள்ளும், இரட்டை சுமையை ஏற்றுள்ளார்கள். அவர்கள் பொது நலனுக்காக, அதிகளவில் பங்களிப்பு செய்கிறார்கள்.
உற்பத்தி துறையில் ஆயுர்வேதம் வெற்றியடைய வேண்டியுள்ளது. இந்த விளையாட்டில், மற்றவற்றைப்போல், ஓரங்கட்டப்படுவதற்கு தயாராக இல்லை. உற்பத்தியாளர்கள் புதிய கண்டுபிடிப்பை அடுத்த அளவிற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்து இந்த விளையாட்டில் வெற்றி கொள்வார்கள். சரியான முறையில் பொதியாக்கி, சந்தைப்படுத்தி மற்றும் விலை நிர்ணயம் செய்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து, வேகமாக விற்பனையாகும் வணிக பண்டங்களைப்போல் அல்லது நவீன மருந்து நிறுவனங்களின் மருந்துகளைப்போல் ஆயுர்வேத மருந்துகளும் கிடைக்கும் வண்ணம் செய்வார்கள். இந்த வெற்றிக்கு நாம் விலை கொடுத்தே ஆக வேண்டும். ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளர்கள், நவீன மருந்து உற்பத்தியாளர்களுடனான போட்டியில் புதிய மருந்துகளை தயாரிக்க வேண்டும். அதை அதிக லாபம் கிடைக்கும் வகையில் சந்தைப்படுத்தும் செயல்திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.
ஆயுர்வேத உலகம் இந்த வெற்றியை பெறுவதில் உள்ள அடிப்படை பிரச்னைகளை ஆராய்வது குறித்து நீண்ட விவாதம் செய்துள்ளது. இரண்டு பாரம்பரிய மருத்துவ அறிவு சார் துறைகள், உடல் மற்றும் நோய்கள் குறித்து இருவேறு கருத்துக்களை கொண்டிருந்தால், ஏன் மருந்து மற்றும் குணப்படுத்துவதில் மட்டும் போட்டி இருக்க வேண்டும்? சிகிச்சை முறைகள் மற்றும் அதன் விளைவுகள் வெவ்வேறு வகையாக இருக்கும்போது, ஆங்கில மருந்துக்கான வழிமுறைகளை எவ்வாறு ஆயுர்வேத மருந்துகளுக்கு பயன்படுத்த முடியும்? ஆயுர்வேத உற்பத்தி, ஆயுர் வேதத்தின் கருத்துக்கள் மற்றும் நோயாளிகளுக்கு உள்ள அதிக எண்ணிக்கையிலான தேர்வுகளை வைத்து நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் குணப்படுத்தல் ஆகியவற்றிற்கு வேறு வழிமுறைகளை உருவாக்குவதில் ஏன் கவனம் செலுத்தக்கூடாது? ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளர்களின் வணிக வெற்றி, பொதுமக்களிடம் ஆயுர்வேதத்தின் சின்னமாக அவர்களை நிலைநாட்டும். ஒரு மோசமான உற்பத்தியாளர், ஒரு பரிசோதிக்கப்படாத மருந்தை ஒழுக்கமற்ற முறையில் வெளியிடும்போது, அது ஒட்டுமொத்த ஆயுர்வேத மருத்துவத்தையுமே ஏன் இழிவுபடுத்துகிறது. ஆனால் மறுபுரத்தில், மருத்துவத்துறையின் உயர்ந்த ஆராய்ச்சி பத்திரிக்கையான லான்சட்டின் ஆசிரியர், ரெம்டிசிவிர் மருந்து குறித்து நம்பகமற்ற தகவலை வெளியிட்டபோது, அவர் மருந்துகள் துறையின் பெரும் அழுத்தத்தின் கீழ் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அது விதிவிலக்காக கருதப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த நவீன மருத்துவத்துறை மீதுமே பழி போடப்படவில்லை. ஆயுர்வேதமும் அதற்கு தகுதியுள்ளது என்றே நான் கருதுகிறேன்.
இக்கட்டுரையை எழுதியவர் டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் ஆயுர்வேதத்தின் சக்தி, அறிவு மற்றும் மருந்துகள் என்ற புத்தகத்தின் ஆசிரியர்.
தமிழில்: R.பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.