ஹீரோக்கள் என்ற வரையறையை மாற்றி எழுத வேண்டிய காலகட்டம்

Yashee

பாலிவுட் எனும் இந்த உலகத்தில், பெண்கள் தங்கள் அந்தஸ்தை தக்க வைக்க, பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து முட்டி மோத வேண்டி இருக்கிறது. தங்களது திரைப்படங்களுக்கு முன்பு, அரசியல் காரணங்களை நினைவு கூர்வதில் பெரும் கவனம் ஈர்ப்பதிலும், அணுகுவதிலும் ஆண் நடிகர்கள் தூரத்திலேயே இருக்கின்றனர்.

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தீபிகா படுகோனே இருப்பது போன்ற புகைப்படம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கிறது. பலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். tukde tukde gang’ குழுவுடன் சேர்ந்து விட்டார் என்று அவரை பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ, இதே போன்ற தமது திரைப்படத்தை முன்னெடுப்பதற்காகவே ஜே.என்.யூ-வுக்கு அவர் வந்தார் என்றும், அவரது திரைப்படத்தை புறக்கணிக்கப்போவதாகவும் சொல்கின்றனர். சாப்பாக் (Chhapaak)திரைபடத்தின் வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு, இவ்வாறு செய்வது தமக்கு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் இதில் அவர் இறங்கினார். இந்தப்படத்தை இவர்தான் தயாரித்திருக்கிறார். தவிர தவறாமல் படிக்க வேண்டிய ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். பாலிவுட் ஆண் நடிகர்கள் எங்கே? என்ற புறக்கணிப்பதற்கு கடினமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

பல ஆண்டுகளாக சினிமாவை ஆட்சி செய்யும், பல லட்சகணக்கான இதயங்களை வென்ற முக்கிய நடிகர்கள் இதில் பங்கேற்காதது அபட்டமாக வெளிப்பட்டது. இந்த நாடு அவர்களின் தலை வாரும் பாணி, அவர்களது வசனம், உடலசைவுகள், துணிகளை அப்படியே காப்பியடிக்கிறது. இன்றைக்கு இந்த நாட்டில் எழுந்திருக்கும் பிரச்னைகள் குறித்து அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாம் ஏன் தெரிந்து கொள்ளக் கூடாது?
குடியுரிமைத் திருத்தச் சட்டம், நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அண்மை காலமாக நடந்த போராட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸாரின் நடவடிக்கைகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் பாலிவுட் ஈடுபாட்டினை காணமுடிந்தது. ஸ்வாரா பாஸ்கர், முகமது ஜீஸ்கான் அயூப், ரிச்சா சாதா, அனுராக் காஸ்யப், அனுபவ் சின்கா, தியா மிர்சா மற்றும் மேலும் பலர் வெறுமனே சமூக வலைத்தளங்களில் மட்டும் இது குறித்து பேசாமல், பொதுக்கூட்டங்கள், போராட்டங்களிலும் ஈடுபாட்டுடன் பங்கேற்றனர்.

இன்னும் கூட, மிக அண்மையில், முன்னணி நட்சத்திரங்களை இதில் காணமுடியவில்லை. சினிமா கதைகளின் வணிகர்கள், நல்ல உணர்வுள்ள சினிமாவின் மூலம் பல லட்சங்களை, தங்களது வாழ்வை கட்டமைத்தவர்கள், வேண்டும் என்றே இந்த அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தனர்.

எனினும், கடந்த சில நாட்களாக, நடிகையர் ஒன்றன் பின் ஒருவராக, இந்த எழுதப்படாத விதியை உடைத்தனர். சோனம் கபூர், அலியா பட் ஆகியோர் அண்மைகால நிகழ்வுகளை கண்டனம் செய்தனர். இப்போது தீபிகா படுகோனே போராட்டக்களத்தில் குதித்தார்.

படுகோனே ஜே.என்.யூ-வில் ஒரு நட்சத்திரமாக இருக்கவில்லை. அவர் ஒரு மைய நபராகவும் பங்கு வகிக்கவில்லை. அங்கு அவர் எந்த உரையும் ஆற்றவில்லை. அவர் அங்கே இருந்தார், அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வன்முறைக்கு எதிராக நகரங்கள் தோறும் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்று மக்கள் கவலைகளை வெளிப்படுத்தியது போலவே தமது வேதனையை வெளிப்படுத்தவே அவர் விரும்பினார் என்று அவரது குழுவைச் சேர்ந்தவர் ஒருவர் கூறி இருக்கிறார்.

பெரும்பாலான திரைக்கலைஞர்களை விடவும், தமக்கு எதிராக என்ன மாதிரியெல்லாம் அவதூறுகள் கட்டவிழ்த்து விடப்படும் என்பது தீபிகா படுகோனேவுக்குத் தெரியும். பத்மாவத் திரைப்படத்தில் நடித்ததற்காக 2017-ம் ஆண்டு ஒரு பா.ஜ. க தலைவர் ஒருவர் தீபிகாவின் தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயித்தார். கர்னி சேனா என்ற அமைப்பு, அவரது மூக்கை அறுக்க விரும்பியது.

சொந்த அனுபவம் இல்லாவிட்டாலும்கூட, பாலிவுட் நடிகையர்களுக்கு, எதிர் படைகளின் முகாம்களில் இருந்து தாக்குதல்கள் நிகழும் அபாயம் இருக்கிறது என்பது நன்றாகத் தெரியும். ஒரு மணி நேரத்துக்கு நீங்கள் வெறுமன பாஸ்கரின் டைம்லைனை படித்தீர்கள் என்றால், சமூக வலைத்தளத்துக்குள் எப்போதும் பிரவேசிக்கக் கூடாது என்ற நிலைக்கு உங்களைத் தள்ளிவிடும் வகையில் உங்கள் வயிறு கலங்கி விடும்.
இன்னும், சோனம் கபூர், அலியா பட் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் அபாயத்தை உணர்ந்தே இருக்கின்றனர். அவர்களின் சக ஆண் நடிகர்களை எது தடுக்கிறது. கபூர்கள், கான்கள், பச்சன்கள் எல்லாம் அதீத சக்தியை கொண்டவர்கள். சில அபாயங்களுக்காக தூரமாக ஓடுகின்றனரா?

இது யாருடைய வழக்கமும் இல்லை. ஒரு அரசியல் நிலை எடுப்பதால், அதனால் ஏற்படும் இழப்பை கதாநாயகர்கள் தாங்கிக் கொள்வதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஷாரூக்கான், அமீர் கான் இருவரும், நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதைப் பற்றிப் பேசியபோது பா.ஜ.க தலைவர்கள் உள்ளிட்டோர் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினர். இதனால், Ae Dil Hai Mushkil திரைப்படம் வெளியானபோது, மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சியினர் மற்றும் கரன் ஜோகார் இடையே, அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

ஒரு ஜனநாயகத்தில், ஒரு பொது வெளியில் இயங்கும் நபர் தொடர்ந்து முழுவதுமாக அரசியலற்று இருக்க உரிமை கொண்டவரா என்பதை விவாதிக்க முடியும். எனினும், அந்த விருப்பம் கேள்விக்குறியது.
இன்னும், ஒரு தொழிலில் அங்கே அளவீடுகள் எப்படியும் அவர்களுக்கு எதிராக சாய்ந்திருக்கிறது. இந்த பாலிவுட்டின் கதாநாயகிகள், எழுந்து நின்று எண்ணப்படுவர்களாக இருக்கிறார்கள்.

பெண்களுக்கு அங்கு குறைவாகவே தரப்படுகிறது. பாலிவுட்டில் அவர்களின் நடிப்பு வாழ்க்கை காலம் மிகவும் குறைவு. உபயோகித்த வேகத்தில் அதிகமாக தூக்கியெறியப்படுகின்றனர். சில கதாநாயகிகள், தங்கள் தோள்களில் திரைப்படத்தை தாங்கி இருக்கிறார்கள். தவிர, அத்தகைய படங்கள் அவர்களுக்காக எழுதப்பட்ட அரிதாக அவர்கள் பங்கு பெறுவதன் காரணமாக அவ்வாறு தாங்குகின்றனர். பெரும்பாலான முதன்மையான திரைப்படங்களில் எல்லாம் அனைத்து முன்னணி கதாநாயகிகளுக்கும் ஒரு அழகான முகம், திரையில் தோற்றம் அனைத்தும் தேவைப்படுகிறது.

அபாயமான வெறுப்பு நிறைந்த ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மோசமான ஆபத்து நிறைந்த வெறுப்புள்ள தொழிலில், திரைப்படங்களில் இருந்து அரசியல் சாகசவாத த்தில் ஈடுபட்டனர் என்பதை சுட்டிக்காட்டி பெண்கள் எளிதாக நீக்கப்படக் கூடும். அரசியல் நிலை காரணமாக, வேலையை இழந்தது பற்றி உண்மையில் பாஸ்கர் பேசினார்.

ரசிகர்களில் கூட, ஆண்களை விடவும், பெண்கள் ஒரு கருத்தைக் கொண்டிருப்பது மிகவும் சிக்கலானதுதான். தீவிரமான விஷயங்களில் ஆண்கள் வெளிப்படையாக ஆர்வம் கொண்டிருக்க முடியும். ஆனால், ஒரு பெண் ஒரு அழகான பாடலுக்கு நடனம் ஆடுவது எப்படி சிரமமோ பெண்களின் பரிவு என்பது tukde tukde gang உடன் தொடர்புடையது.

தவிர, பெண்களுக்கு எதிரான தாக்குதல் என்பது ஆண்களுக்கு எதிரான தாக்குதல்களை விடவும் மோசமானதாகவும் விரும்பத்தகாததாகவும் இருக்கிறது. பெண்களின் கருத்தை பெரிய வரம்பு மீறுதலாக மக்கள் பார்க்கின்றனர். பெண்களின் மனது தங்களை கொதிப்படையச் செய்வதாக கருதுகின்றனர். எனவே, பெண்களை உடல் ரீதியாக குறிவைக்கின்றனர். வெளிப்படையாக பாலியல் ரீதியாக அவர்களை அச்சுறுத்தல் மற்றும் நகைத்தல் என்பது பொதுவாக பெண்களுக்கு எதிரான ஆயுதமாக கையாளப்படுகிறது.

அனுராக் காஸ்யப், இரக்கமற்ற வகையில் நீண்டகாலமாக இப்போதும் கூட தாக்குல் செய்யப்படுவதை ஜாவேத் அக்தரைப் போல எதிர் கொண்டு வருகிறார். ஆனால், அவர்களது சொந்தக்குழுக்களுக்குள் பாஸ்கருக்கு நிகழ்ந்ததைப் போலவோ, அண்மையில் திரை எழுத்தாளர் ராஜ் சாண்டில்யாவுக்கு நிகழ்ந்த து போலவோ அவர்களை மலிவானவர்கள் என்று அழைக்கும் அவ்வாறனவர்கள் இல்லை.

பத்மாவத் குழப்பங்களின் போது கூட, தீபிகா படுகோனேயின் தலை மற்றும் மூக்குதான் பேசப்பட்டது. அவருடன் இணைந்து நடித்த ஆண் நடிகர் ஷாகித் கபூர், ரன்வீர் சிங் பற்றிப் பேசப்படவில்லை.
பாலிவுட் ஆண் நடிகர்கள், அரசியலை முற்றிலுமாக விலக்குங்கள் என்பது போல அல்ல. அக்ஷய் குமாரின் அண்மைகால திரைப்படம், கழிவறைகள் கட்டுவது, வெளிநாட்டு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் வென்றி கொள்வது என தற்செயலாக அரசு முன்னெடுக்க விரும்பும் திட்டங்களைக் கதைக்கருவாகக் கொண்டிருந்தது. இதனால், குமார் மட்டும், அவர் ஒருவர் மட்டும் பிரதமரை சந்தித்து அவரது முதன்மையான புதிய தொடக்கத்தைப் பற்றி பேசினார். (மீண்டும், ஒரு ஆணுக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுக்கப்பட்டது.)

பல முன்னணி கதாநாயகர்கள், இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரியாமல், இது சாத்தியமற்றது என்ற தருணத்தின் போது, பிரதமருடன் சிரித்துக் கொண்டு செஃபிக்காக மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்தனர்.
அமிதாப்பச்சன் பாலிவுட்டில் நீண்டகாலமாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். அரசு விளம்பரங்களிலும் நடித்திருக்கும் நட்சத்திரம் அவர். தங்களது சொந்த மக்களுக்கு எதிராக அரசு திரும்புவதாகத் தெரிந்தபோதும், அவர் உறுதியான அமைதியுடன் இருக்கிறார்.

இந்த நட்சத்திரங்கள் உயர்த்திப் பிடிக்கும் கோரிக்கைகள் ஈணு இணையற்றது. ஏதோ ஒரு காரணத்துக்கு, அதற்கு சல்மான் பாய், தமது நீல நிற பிரேஸ்லெட் உடன் தன் கரங்களை உயர்த்துவார். அமிதாப், தமது கானக்குரலில் பெருந்தன்மையை வெளிப்படுத்துவார். ஷாருக் கான், தற்காலிகமான ஒரு மனசோர்வை ஒரு அழகியலோடு வெளிப்படுத்துவார். இதன் விளைவாக நூறு புத்திசாலித்தனமான தலையங்கங்கள் எழுதப்படும். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் பேசுவது ஓரங்கட்டப்படக்கூடாது.
இந்த நட்சத்திரங்கள் எல்லாம், தங்களின் தங்களுக்கு இருக்கும் பெரும் சக்தி குறித்து நன்றாக உணர்ந்திருக்கின்றனர். அதே நேரத்தில் தங்களுக்கு பெரும் கடமை வந்திருப்பதை கண்கொண்டு பார்க்கக்கூடாது என்பதைவும் அவர்கள் விருப்பமாகக் கொண்டிருக்கின்றனர்.

பாலிவுட்டுக்கு வெளியில் கூட, சி.ஏ.ஏ-என்.ஆர்.சி க்கு எதிரான போராட்டங்களில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஷாகீன் பக்கின் பெருமைக் கொள்ளத்தக்க பெண்கள், மின்னும், மனதைக் கவரும் உதாரணங்கள். ஒருவேளை ஹீரோக்கள் என்ற வரையறையை மாற்றி எழுத வேண்டிய காலகட்டம்இதுவாக இருக்கலாம். உத்வேகத்துக்காக, ஒற்றுமைக்காக நாம் யாரைப் பார்க்கின்றோமோ அவர்களை மாற்றுவோம். இப்போதைக்கு, ஆளுகின்ற நட்சத்திரங்களை விடவும், பாலிவுட்டின் பெண்கள் வீரம் செறிந்த நாயகர்கள் என்பதை நிரூபிக்கின்றனர்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

தமிழில்; கே.பாலசுப்பிரமணி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close