டெல்லி வெளியேற்றம்: 1889 மற்றும் 1900 ஆண்டுகளிடம் இருந்து நாம் கற்க மறந்தது என்ன?

1900த்தின் துவக்கத்தில் கான்பூர் நகரில் உள்ள நவாப்கஞ்ச் என்ற இடத்தில் பிளேக் தொற்றுநோயை இந்திய நாடு பார்த்தது. அதுவே புதிய தொற்றுநோய் சட்டம் 1897 உருவாவதற்கு...

கடந்த காலத்திலும், தற்போதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்த்தால், செயல்களும், தடைகளும் நேர்மமையான காரணத்தினாலும், போதிய அறிவியல் கூற்றுகளாலுமே எடுக்கப்பட்டதாக இருப்பதே அடிப்படை உண்மை எனினும் அவற்றால் ஒரு பலுனும் இல்லை. யார் அவற்றை பின்பற்றினார்களோ, அவர்களே அவற்றை ஒட்டுமொத்தமாக மறுக்கிறார்கள்.

அபிமன்யு திவாரி, கட்டுரையாளர்.

1900த்தின் துவக்கத்தில் கான்பூர் நகரில் உள்ள நவாப்கஞ்ச் என்ற இடத்தில் பிளேக் தொற்றுநோயை இந்திய நாடு பார்த்தது. அதுவே புதிய தொற்றுநோய் சட்டம் 1897 உருவாவதற்கு காரணமாக அமைந்தது. குறிப்பிட்ட அதிகாரப்பூர்வமான குழுக்கள் சிறப்பு முகாம்களில் தொற்று உள்ளவர்களை பிரித்து வைத்திருந்தனர். அந்த நேரத்தில் வேகமாக பரவும் பிளேக்கிற்கும் எலி செல்லுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியாமல் இருந்தது. பிளேக் காற்றின் மூலம் பரவக்கூடிய நோய் என்று அழைக்கப்பட்டது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பரவல் சங்கிலியை உடைப்பதற்காக, அக்குழுக்கள், பிரித்து வைப்பதை தவிர, நகருக்குள் நுழைவதற்கு முன்னர் 48 மணி நேரம் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கினர். பிளேக் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலான வீடுகளில் ஆய்வுகளும் கட்டாயமாக்கப்பட்டது. ஐரோப்பியர்களுக்கு மட்டும் மேற்கூறிய ஏற்பாடுகள் விலக்கு அளித்தது. இந்தியர்கள் மீது இரக்கமற்று நடத்தப்பட்டது. அந்த காலத்தின் பிராந்திய மொழி பத்திரிக்கைகள் அதுகுறித்து எழுதின.

பிளேக்கை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் ஐரோப்பிய மருத்துவர்கள் வடிவமைத்தது. அவர்களுக்கு மிகக்குறைவான அளவே நமது பழக்கவழக்கங்கள், மனநிலை மற்றும் மக்களின் நடத்தைப்பற்றி தெரிந்திருக்கும். அதை நாம் பின்பற்றுவதால்தான் பிளேக்கை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை இவ்வளவு நடவடிக்கைளுக்கு மத்தியிலும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ப்ரயாக் சமச்சார் எழுதியிருந்தது. சிலரின் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரையால் அரசே ஏமாந்துவிட்டது. தவறான வழிகாட்டுதல்களால் சில விதிகளை இயற்றி, மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், அவை நோயைவிட மோசமான விளைவுகளை கொடுத்தது.

கான்பூர் பிளேக் கலவரம் 1900மாவது ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. அதில் பெரிய வன்முறை வெடித்தது. அது மாநிலத்தின் மற்ற பகுதிகளில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது பிளேக் குறித்த தீர்மானங்களை சரியான முறையில் மறு வடிவமைப்பு செய்வதற்கும் வழிவகுத்தது. அது அந்த நேரத்தில் இருந்த உத்ரபிரசேத அரசின் அலுவலக அறிக்கையிலும் இணைக்கப்பட்டிருந்தது. மக்களை எடுத்துச்செல்லாத, பிளேக் நிர்வாகத்தின் எந்த நடைமுறையும் வெற்றியடையவில்லை, இந்த பார்வையிலிருந்து, பிளேக் நடவடிக்கைகளில் எந்த முறையும் மதிப்பில்லாததே. ஒருவர் எந்த வர்க்கத்தினரை கையாள்கிறாரோ அவர்களின் மனநிலைக்கு ஏற்ப பாதை வகுக்ககூடியவரே ஒரு வெற்றிகரமான பிளேக் நிர்வாகி ஆவார்.
அந்த நேரத்தில் உள்ளூர் மக்களுக்கும், அரசுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியளவில் வன்முறை வெடித்தது. இறுதியில் சில உள்ளூர் கிராமவாசிகள் கொல்லப்பட்டனர். அதில் கற்ற பாடங்கள் வால்டர்ட் மற்றும் அவரின் இணை ஆசிரியர்கள் எழுதியுள்ள, இந்திய மாநிலங்களில் சுகாதாரம் மற்றும் மருத்துவம் 1850 முதல் 1950 வரை என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கஞ்சம் கலவரமும் கட்டுப்படுத்தப்பட்டது. அது மைசூர் மாநிலத்தில் பிளேக் நிர்வாகத்தில் சில திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. பிளேக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனில், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அரசு உணர்ந்தது. இது நம்பிக்கை மூலமே சாத்தியமானது. தொற்றுகளினால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அதை சமாளிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வைத்தது.

இது புதிய கொரோனா வைரசால், அண்மையில், எதிர்பாராத வகையில் இந்தியாவில் செய்யப்பட்ட ஊரடங்கு, இதன் காரணமாகவே செயல்படுத்தப்பட்டதுபோல் தெரிகிறது. தேசம் முழுவதும் செய்யப்பட்டுள்ள இந்த ஊரடங்கு, மார்ச் 24ம் தேதி பிரதமரால் அறிவிக்கப்பட்டது. 1898 மற்றும் 1900த்தில் ஏற்பட்ட இதற்கு முன்னோடிகளான தீமை விளைவிக்கக்கூடிய இதேபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோம். 1898, 1900, 2020 ஆகிய மூன்று நேரங்களிலும், வரைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆட்சியாளர்களின் நோக்கம் உண்மையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதும், துல்லியமான அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் என்பதும் தெரிகிறது. 1898ல் கஞ்சம் சம்பவம் பிளேக்கால் பாதிக்கப்பட்டவர்களை முறையாக அகற்றாததால் ஏற்பட்ட பிரச்னையால் இருந்தது. 1900ல் சமூகத்தில் இருந்து விலக்கி வைப்பது அல்லது தனிமைப்படுத்தல் என்பதே இப்போது போல் அப்போதும் பிரச்னையாக இருந்தது. துரதிஷ்டவசமாக, பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு வழிமுறைகளுக்கு இடையே உள்ள ஒரே ஒற்றுமை அதை செயல்படுத்துவதில் ஆட்சியாளர்களின் தவறான மேலாண்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே இருந்தது. கடந்த காலத்திலும், தற்போதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்த்தால், செயல்களும், தடைகளும் நேர்மமையான காரணத்தினாலும், போதிய அறிவியல் கூற்றுகளாலுமே எடுக்கப்பட்டதாக இருப்பதே அடிப்படை உண்மை எனினும் அவற்றால் ஒரு பலுனும் இல்லை. யார் அவற்றை பின்பற்றினார்களோ, அவர்களே அவற்றை ஒட்டுமொத்தமாக மறுக்கிறார்கள்.

2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரியளவில் நகரங்களில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் வெளியேற்றத்தை கொடுத்துள்ளது. அது பெருநகரங்களில் வசித்துவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தங்கள் வீடுகளை நோக்கி நடக்கவைத்துள்ளது. கோவாவில் பால், மருந்து உள்ளிட்ட அத்யாவசிய தேவைக்கான கடைகள் கூட நிர்வாகத்துக்கு தெரிந்தே திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் உள்ள போன்கைகான் என்ற மாவட்டத்தில் வன்முறை கூட ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. அங்கு போலீசார் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை இருந்தது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஏற்பட்ட சம்வபவத்திற்கும், இப்போது ஏற்பட்டுள்ள நிலைக்கும் இருக்கும் பொதுவான விஷயம் என்னவெனில், ஆட்சியில் உள்ளவர்களின் இயலாமையினாலும், இந்த நடவடிக்கைகளை யார் மேல் திணிக்கப்படவேண்டும் என்பதிலும் உள்ளது.
சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் நாட்டின் இயலாமையையே தெளிவாக காட்டுகிறது.

சமூக இடைவெளியை உடைக்கும் வகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவதை தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது மற்றும் வைரஸ் பரவுவதை கண்காணிக்கவுமே செய்யப்பட்டது. ஆனால் தற்போது வைரஸ் கிராமத்திற்கும் சென்றுவிட்டது என்பதே கலையளிப்பதாக உள்ளது. அங்கு நமது சுகாதார நிலை எவ்வளவு பலவீனம் என்பது நாம் அறிந்ததே.

தொற்றுநோயின் துவக்க காலத்தில், அனைத்து வர்க்கத்தையும் சேர்ந்த, பல லட்சம் பேரை உலகம் முழுவதில் இருந்தும் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இது கொள்கை வகுப்பவர்களுக்கு பாதை வகுக்க ஒரு சிறிய கணக்குதான், நாட்டில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுமே ஸ்தம்பித்துவிட்டது. பல லட்சம் தினக்கூலிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என எண்ணுகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு பெரிய நகரங்களில் சமூக பாதுகாப்பு இல்லாதபோது அவர்கள் என்ன செய்வார்கள்?

இந்த ஊரடங்கு மற்றும் அது உருவாக்கிய மனிதாபிமான பிரச்னைகள் அனைத்தும் உதவாது. ஆனால் ஒரு ஆச்சர்யத்தை உருவாக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், கடந்த கால காலனி ஆதிக்கவாதிகள்போல் சாமானிய மக்களிடம் இருந்து தொடர்பை துண்டித்துக்கொண்டார்களா? என்ற ஐயத்தையே ஏற்படுத்துகிறது.

இக்கட்டுரையை எழுதிய அபிமன்யூ திவாரி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close