சுஹாஸ் பல்ஷிகர்
டெல்லியில் ஆம்ஆத்மியின் வெற்றி மன அமைதியை கொடுக்கிறது. டெல்லியின் வெற்றி தொடர வேண்டும்.
டெல்லி தேர்தல் முடிவுகள் சற்று மனநிம்மதியை தருகிறது. வாக்காளர்கள் இந்த தேர்தலை, இந்தியா – பாகிஸ்தான் மோதலாக அல்லாமல், வெறும் சட்டமன்ற தேர்தலாக மட்டுமே பார்த்துள்ளனர். அவர்கள் பாஜகவுடன், இந்தியாவை சமமாக பார்க்க மறுக்கின்றனர். அவர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்ற கூட்டத்தினராக ஆம் ஆத்மி வாக்காளர்கள் இல்லையென்பது மேலும் ஆறுதலாக உள்ளது. பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் மோசமான பக்கத்தை காட்டும் திறன் உள்ளதாக தேர்தல் உள்ளது. அவர்கள் வாக்காளர்களை தங்கள் கெட்டசெயல்களுக்கு துணைபோக நிர்பந்தப்படுத்தி வாக்குபெறமுடியும் என்ற நம்பிக்கையையும் காட்டுகிறது. டெல்லி தேர்தல் இந்தப்பழக்கத்தை சிறிதளவு மறைத்திருக்கிறது. ஆனால், முழுமையாக மறைத்திருக்கிறதா?
புற அழுத்தத்துக்கு நிதியமைச்சர் இணங்காதது ஓர் ஆறுதல்!
டெல்லி தேர்தலை பொறுத்தவரையில் மூன்று விஷயங் களை நாம் உற்றுநோக்க வேண்டும். தேசிய அரசியலும் கலந்த ஒரு தேர்தல், ஒரு யூனியன் பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தல், தேர்தெடுக்கப்ட்ட அரசு சட்ட விதிகளால் கட்டுப்படுத்தப்படும். ஆனால் பாஜக இந்த தேர்தலுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்தது. அதனாலேயே பாஜகவின் தோல்வி அதிகம் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. வாக்கு வங்கி அதிகரிப்பு மற்றும் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோல்வி போன்ற காரணங்களை கூறினாலும், பாஜக தோற்றுவிட்டது. ஆம்ஆத்மி வெற்றியை அழகாக தட்டிச்சென்றுவிட்டது. பாஜகவுக்கு தேசிய அளவிலான தலைமை இருந்தும், மாநில தேர்தல்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது குறித்து உணரவேண்டும். வெறும் கூச்சல்களால் மட்டுமே தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதையும் பாஜக உணரவேண்டும். இத்தேர்தல் இந்திய அளவில் ஒரு அசாதரணமான சூழலில் நடந்துள்ளது. அதன் வெளிப்பாடுகளை பார்க்கையில், கடந்த 5 ஆண்டுகளில் ஆம்ஆத்மியின் சாதனைகளை மட்டும் வைத்து பார்க்க முடியாது. டெல்லி தொடர்பான விஷயங்களில் மட்டுமே அடைந்த வீழ்ச்சியை மட்டும் வைத்து இத்தேர்தலை நாம் பார்க்க முடியாது. தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கையில், தவிர்க்க முடியாத சில விஷயங்கள் குறித்து விவாதிக்கொண்டே இருக்கிறோம். அந்த தவிர்க்க முடியாத விவாதங்கள் தான் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமாக உள்ளது. அதன் மூலமே தேர்தல் முடிவுகள் ஒருதலைபட்சமாக இல்லை என்பதை காட்டுகிறது. அடிக்கடி உண்மை நிலை விவாதிக்கப்படுகிறதோ, அதுவே உண்மை நிலவரமாகிவிடுகிறது. இதுவே பாஜகவிற்கு எந்த நிலை எடுக்கலாம் என்பதற்கு உதவுகிறது. தவிர்க்க முடியாத விவாதங்களை யார், எப்படி கையாண்டார்கள் என்பதை பொறுத்து தேர்தல் முடிவுகள் அமைகின்றன. இது ஒட்டுமொத்த இந்தியாவின் முடிவு என்று கூறமுடியாது. ஆனால், வினோதமான வகையில், இந்தியாவின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை.
ஆம் ஆத்மியின் வெற்றி உண்மையில் அதன் திறமைக்கு கிடைத்த வெற்றியே ஆகும். அரசின் செயல்பாடுகள் மட்டுமின்றி, ஆட்சியில் இருக்கும் கட்சியின் செயல் திறனையும் வைத்தே வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், ஜேஎன்யு மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், பாஜக முக்கிய தலைவர்கள் நஞ்சூட்டுவதன் பின்னணியில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. மதம், இனவாத பிரிவினையை தூண்டி வாக்காளர்களை மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. வாக்காளர்களுக்கு அரசின் செயல்திறன் மற்றும் பிரிவினை, விரோதம் ஆகியவற்றை ஏற்படுத்த அழைப்புவிடுக்கும் அநாகரீக கூட்டம் என்ற இரண்டு தேர்வுகளே இருந்தன. ஆனால், வாக்காளர்கள் விரோதத்தை தூண்டுபவர்களை ஆதரிக்கவில்லை. உண்மையில் அவர்கள் செயல்திறனாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்காக அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
பிரச்சாரத்தில் பாஜக தொடர்ந்து, குடியுரிமை திருத்தச்சட்டம், ஷாஹின் பாக் போராட்டங்கள் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றில் ஆம்ஆத்மியின் நிலைப்பாடு குறித்து கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், கெஜ்ரிவால் புத்திசாலித்தனமாக அந்தப்பொறியில் சிக்கவில்லை. இது கெஜ்ரிவாலை தேர்தல் தளத்தில் தக்கவைத்துக்கொள்ள உதவியது. ஆனால் இது நம்முள் இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. உண்மையில் இந்த பிரச்னைகளில் கெஜ்ரிவாலின் நிலைப்பாடுதான் என்ன? அது நமக்கு உண்மையிலேயே தெரியாது. தேர்தலுக்குப்பின் பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருக்கலாம். தற்போது கேள்வி என்னவெனில், உண்மையிலேயே அவர் பிரசாரத்தின்போது போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலைப்பாடை கொண்டிருந்தார் என்றால், வாக்காளர்கள் அப்போதும் ஆம்ஆத்மிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்களா? கெஜிரிவாலின் நிலைப்பாட்டில் தெளிவின்மை இருந்ததால், வாக்காளர்கள் அவருக்கு வாக்களித்தார்களா அல்லது மோடியின் மீதான கருத்து காரணமாக வாக்களித்தார்களா? தேசிய அடையாளம் மற்றும் தேசியவாதம் போன்ற கடினமான பிரச்னைகளில் எந்த நிலைப்பாட்டையும் எடுப்பதை மாநிலக்கட்சிகள் தவிர்க்க வேண்டும். அது அவர்களுக்கு மாநில தேர்தல் ஆதாயத்திற்கு உதவும். இந்த அணுகுமுறை மாநில கட்சிகளுக்கு, மாநில அளவில் வெற்றிபெறுவதற்கு உதவும். பாஜகவுக்கு தேசியளவில் வெற்றியை எளிதாக்கும். இது மாநில மற்றும் தேசிய தேர்தலுக்கென பிரித்துக்கொள்ளும் பட்டியல் கிடையாது. அளவிலும் உள்ள பிரச்னைகளை பிரித்துக்கொண்டு அரசியல் செய்வது கிடையாது.
பாஜகவால் உருவாக்கப்பட்ட சிக்கலான பிரச்னைகள் குறித்து அமைதி காப்பதில் மட்டுமல்ல, டெல்லி தேர்தல், ஒரு நல்ல முதலமைச்சர் வேட்பாளர் எப்படி உருவாகிறார் என்பதையும் கோடிட்டு காட்டுகிறது. ஹனுமன் ஸ்தோத்திரங்களை ஒப்புவிப்பதன் மூலம், அவரது பக்தியை கெஜ்ரிவால் வெளிப்படுத்தவில்லை. எதிர்கால அரசியல்வாதிகளுக்கு புதிய பரிசோதனைகளை வைக்கிறார். கெஜ்ரிவாலோ அல்லது வேறு ஒரு அரசியல் தலைவரோ அவர்களின் மதம் தொடர்பான மற்றும் ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து யாரும் எரிச்சலடைய முடியாது. ஆனால் அதை பொதுவான ஒழுக்கமாக மாற்றும்போதுதான், ஒரு பொது சேவை செய்யக்கூடிய நபர், பொது இடத்தில் மறைமுகமாக எதை மாற்ற விரும்புகிறார் என்ற கேள்வி எழுகிறது. இது பாஜவின் இந்துத்துவத்தை வலியுறுத்துவதாகவே உள்ளது.
பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் - அத்தியாயம் 2
ஆம்ஆத்மியின் வெற்றி ஒரு சாளரத்தை திறந்துள்ளது. அதன்மூலம், தூய காற்று வரட்டும். அது உண்மையானதாக இருக்கட்டும். பாஜகவின் தோல்வி அது பிரிவினைக்கு துணை நிற்பதுதான் காரணமா? பாஜகாவுக்கான மாற்று மென்மையான பாஜகவா?
டெல்லி தேர்தல் முடிவுகள் மூலம் முதல் கேள்விக்கு உடன்பாடான பதில் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த கேள்விக்கு அவ்வாறான பதில் கிடைக்கிறது. இதனால்தான் டெல்லி தேர்தல் முடிவுகள் ஒரு முரண்பாட்டை உருவாக்குகிறது. இது பாஜகவை ஒதுக்கி, அதன் எதிராளிகளுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருக்கிறது. உண்மையிலேயே எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள கட்சிகள் பாஜகவின் சவால்விடுகிறது. பாஜக மற்றும் அதன் எதிரணிகளுக்கு இடையேயான போட்டி நடுநிலையாக உள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது. அதில் பாஜக எந்தபுறத்தில் உள்ளது என்ற சந்தேகம் உள்ளது. இதை நுணுக்கமாக படிப்பதற்கு பதில், டெல்லி தேர்தல் அதை புரிந்துகொள்வதற்கு சிறிய படியாக உள்ளது. தற்போது பாஜகவின் கை ஓங்கியுள்ளது.
தமிழில் : R.பிரியதர்சினி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.